ஜீரா ஆலு

தேதி: May 3, 2010

பரிமாறும் அளவு: 3 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (3 votes)

 

உருளைகிழங்கு - 1/4 கிலோ
வெங்காயம் - 100 கிராம்
பச்சைமிளகாய் - 2
ஜீரகம் - 1 தேக்கரண்டி
கடுகு - சிறிது
மஞ்சள் தூள் - சிறிது
இஞ்சி,பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
கொத்தமல்லி தூள் - 1/2 தேக்கரண்டி
ஜீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
வத்தல் தூள் - 1 தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி இலை - தேவைக்கு
எண்ணெய் - தாளிப்புக்கு


 

முதலில் உருளைகிழங்கை முக்கால் வேக்காடாக வேகவைத்து சிறியதாக நறுக்கிக்கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

பின் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும். ஜீரகம் போட்டு வதக்கி, வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

நன்கு வதங்கியதும் இஞ்சி,பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

பின் ஒரு பவுளில் மஞ்சள் தூள்,வத்தல் தூள், கொத்தமல்லி தூள், ஜீரகத்தூள்,உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கலக்கி வதக்கியதில் ஊற்றவும்.

நன்கு மசாலா வாசனை போனதும் வேகவைத்த உருளை கிழங்கை சேர்த்து நன்கு கிளறி தீயை குறைத்து வைத்து 5 நிமிடம் வேகவிடவும்.

பின் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.

இது தயிர்,சாதம், பரோட்டா, நாண், பூரி உடன் சாப்பிட ஏற்றது


மேலும் சில குறிப்புகள்


Comments

கதீஜா மேடம்,
இந்த ஜீரா ஆலூ ஹோடெல்லில் மட்டும் தான் சாப்பிட்டு இருக்கேன்
இப்போ நீங்க சொல்லிடீங்களா?
எப்படி நீங்க மட்டும் இப்படி ரூம் போட்டு யோசிக்கிறீங்க?
சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்
கண்டிப்பா ட்ரை பண்றேன்

என்றும் அன்புடன்,
கவிதா

ஹாய் கவிதா மேடம் எல்லாம் வேண்டாம்ப்பா கதீஜான்னே சொல்லுங்க. இந்த ஜீரா ஆலு எனக்கு ரெம்ப பிடிக்கும்.ரூம் போட்டுலாம் யோசிகலைப்பா. இந்த ரெசிப்பிக்கு ஒரு கதையே உண்டு. போன வருஷம் நான் என் பொண்ணை உண்டாகி இருந்தப்ப எதுவுமே சாப்பிட பிடிக்காது ஒரே வாமிட்னு கிடந்தேன். வெளியில் சாப்பிடவும் பிடிக்காது அப்புறம் ஒரு நாள் என் ஹஸ்கிட்ட நல்ல காரமா சாப்பிட ஆசையா இருக்குன்னு சொன்னேன். ஒரு நார்த் இந்தியன் ரெஸ்டாரண்டுக்கு கூட்டிட்டு போனாங்க. அங்க ஆர்டர் பண்ணினதில் எனக்கு இந்த ஜீரா ஆலு ரெம்ப பிடிச்சு போய்ட்டு. ஹோட்டல் வைத்திருப்பவர் ஹஸ்ஸுக்கு தெரிந்தவங்க அதனால நான் இந்த ரெசிபி கேட்டு வீட்டில் வந்து செய்தேன். அன்னைல இருந்து தொடர்ந்து ஒரு வாரம் எனக்கு இந்த ஜீரா ஆலுவும், தயிர் சாதமும் தான் லஞ்சுக்கு அவ்வளவு பிடிச்சிட்டு. அடுத்த 6 மாசம் வரைக்கும் நான் இந்த ஜீரா ஆலு பக்கம் திருப்பி பார்பேனாக்கும். இப்ப இந்த ரெசிபி நியாபகம் வந்தது அதனால கொடுத்தேன்.ட்ரை செய்துட்டு சொல்லுங்க.

அன்புடன் கதீஜா.

கண்டிப்பாக வெள்ளி கிழமை செய்யலாம் என்று இருக்கேன்
உங்களுக்கும் ஒரு மகள் இருக்காங்களா?
நானும் இந்த ஜீரா ஆலூவை என் கணவருடன் டெல்ஹியில் இருந்தபோது விரும்பி சாப்பிட்டு இருக்கேன்
இப்போ உங்களாலே செய்ய தெரிஞ்சுகிட்டேன் தேங்க்ஸ்

என்றும் அன்புடன்,
கவிதா

இன்று ஜீரா ஆலு செய்தேன் நன்றாக இருந்தது
என்னோட mexican neighbour சமைக்கும் போது வாசனை நல்லா இருக்குனு சொன்னாங்க
taste பண்ணிட்டு கொஞ்சம் கேட்டு வாங்கிட்டு போய்ட்டாங்க
ரொம்ப சந்தோஷமா இருந்தது என் கணவரும் விரும்பி சாப்பிட்டார்
மகளுக்கு கொஞ்சம் பரவாயில்லை வாந்தி நின்னு போயிடுத்து
நிறைய ரெசிபீஸ் கொடுங்க கதீஜா

என்றும் அன்புடன்,
கவிதா

ஹாய் கவிதா எப்படி இருக்கீங்க.பொண்ணு நல்லா இருக்காளா? சாரிப்பா இதை இப்ப தான் கவனித்தேன். அம்மா ஊரில் இல்லை அதனால பசங்க கூட ரெம்பவே பிஸி. ஜீரா ஆலு செய்தீங்களா. நன்றாக இருந்ததா செய்து பார்த்து பின்னூட்டம் தந்ததுக்கு நன்றி. உங்க ஹஸ்ஸும் விரும்பி சாப்பிட்டாங்களா நல்லது உங்க நெய்பருக்கும் செய்து கொடுத்து வாங்கிட்டும் போனாங்கன்னு கேட்டு ரெம்ப சந்தோஷம். நான் குறிப்பு கொடுத்தாலும் அதனை முறைபடி செய்து டேஸ்டாக வருவது உங்க சாமர்த்தியம் தான். முதல் தடவை செய்யும் போதே எல்லாருக்கும் சரியாக அமையாது.அதனால உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

கவிதா அந்த நார்த் இந்தியன் ரெஸ்டாரண்டில் சொன்னார்கள் வெந்தயக்கீரை சிறிது சேர்த்தால் மணமும்,சுவையும் ரெம்ப நல்லா இருக்கும்னு சொன்னாங்க. எனக்கு அங்கே அது கிடைக்காது அதனால் அதை சேர்க்கவில்லை. உங்களுக்கு காய்ந்த வெந்தயக்கீரை கிடைத்தால் தாளிக்கும் சமயம் மசாலா சேர்க்கும் முன்னாடி சேர்த்து செய்து பாருங்க.

மகளுக்கு பரவாயில்லையா நல்லது வாந்தி நின்னுட்டுனா சாப்பாடு நல்லா கொடுங்க சரியாகிடுவா.

கண்டிப்பா எனக்கு தெரிந்த குறிப்புகளை கொடுப்பேன் நேரம் தான் போதவில்லை பிள்ளைங்களை வைத்துக்கொண்டு.அதனால் நேரம் கிடைக்கும் போது குறிப்புகள் அனுப்புவேன்.

அன்புடன் கதீஜா.

ஹலோ மேடம்
உங்களுடைய பாராட்டுக்கு நன்றி
எனக்கு இங்கே பிரஷ் வெந்தய கீரை கிடைக்கும் இங்கு farmers மார்க்கெட் உள்ளது அங்கே எல்லா காய்கள் ,கீரை,பழம்,sprouts ,தேன்,தயிர்,முட்டை,மட்டன் எல்லாம் கிடைக்கிறது
நானும் என் வீட்டின் முன் பகுதியில் தொட்டி வைத்து வளர்க்கிறேன்
கண்டிப்பாக அதையும் சேர்த்து செய்து பார்க்கிறேன்
பிள்ளைகள் அப்படி தான் இருப்பார்கள்
என் மகளுக்கு பரவாயில்லை கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறாள்

என்றும் அன்புடன்,
கவிதா

பராவயில்லையே நீங்கள் வீட்டிலும் வளர்கிறீங்களா.அப்படி என்றால் அதை சேர்த்தே செய்யுங்கள் உடம்புக்கும் ரெம்ப நல்லது அதன் மணமும் நல்லா இருக்கும்.

பொண்ணு நல்லா இருக்கான்னு கேட்டு சந்தோஷம்.

அன்புடன் கதீஜா.

கதீஜா அக்கா அஸ்ஸலாமு அழைக்கும் நல்லா இருக்கீங்களா உங்க ஜீரா ஆலு செய்தேன் நன்றாக இருந்தது

வலைக்குமுஸ்ஸலாம் nasreengani . செய்து பார்த்து பின்னூட்டம் தந்ததுக்கு நன்றி.

அன்புடன் கதீஜா.