friends,சப்பாத்தி எப்படி சாப்ட்டா

யாராவது சப்பாத்தி எப்படி சாப்ட்டா (soft)செய்வதுன்னு சொல்லுங்கப்பா. எனக்கு எப்பவும் குழந்தைகள் கடிக்கவே கஷ்ட்டப்படர அளவுக்கு ஹார்டா (hard) வருது.அதோட, யு.ஸ்.- ல், என்த ப்ரான்ட் கோதுமை மாவில், செய்தால் நன்றாக வரும் என்றும் சொல்லுங்கப்பா. உங்கள், பதிலுக்காக வெயிட் பண்ணிக்கொண்டிருக்கிரேன்.

ஹாய் ப்ரியா, எப்படி இருகீங்க? மாவு பிசையும் போது warm water use பன்னுங்க.பால் அல்லது தயிர் ஒரு spoon சேர்த்துக்குட்டாலும் softa வரும்.
நான் இங்கே Aashirvadh aata use பன்னுவேன்.அல்லது Sujatha Brand நல்ல இருக்கும்.Softa வரை Chapathiya ஒரு Hot Pack ல போட்டு வெச்சிருங்க.மறு நாள் வரை softa இருக்கும்.என்னோட Frisbee Chappathiya softa மாத்த இப்படி தான் செஞ்சேன். :) செஞ்சு பார்த்து சொல்லுங்க

அன்புடன்
அர்ச்சனா

Archana Radhakrishnan

உங்களுக்குமா எனக்கும் இதே problem
நேற்று பூரி செய்தேன் கடிக்கவே முடியவில்லை
நான் gold medal whole wheat flour உபயோக படுத்தினேன்
சப்பாத்திக்கும் இதே கொடுமை தான்
பாவம் என் கணவர்!!
யாராவது எனக்கும் priyaakkum ஹெல்ப் பண்ணுங்க

என்றும் அன்புடன்,
கவிதா

நான் இருக்கும் இடத்தில இந்த பிராண்ட்ஸ் கிடைப்பது இல்லை
என் என்றால் இங்கு இந்தியன் ஸ்டோர்ஸ் இல்லை
chinese மார்க்கெட் மட்டுமே உள்ளது
ப்ளீஸ் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க

என்றும் அன்புடன்,
கவிதா

kavitha,i use gold medal whole wheat flour or pillsbury whole wheat flour.I use to prepare chappathi dough in this way...give a try..
take 1 cup of flour,add salt,little butter or oil&mix it well.1 கப் மாவுக்கு 1/4 கப் தண்ணீரை சூடுபடுத்தி அதை மாவில் கொஞ்சம் கொஞ்சமாக சுற்றி ஊற்றி கரண்டியின் பின்பக்கத்தை வைத்து கிண்டி மூடி விடவும்(as we do for iddiyappam flour)..after 5 min make it as a fine dough If needed jus spray some more water,keep it for minimum 1/2 hr &make chapathis(follow this way in using any brand wheat flour it'll make soft chapathis)
Bye

Kalai

ஓ மிகவும் நன்றி கலா
ட்ரை செய்து விட்டு சொல்கிறேன்
உடம்பு எப்படி இருக்கிறது
நல்லா சாப்பிடுங்க
வாக்கிங் போறீங்களா?
உடம்பை பாத்துகோங்க

டியர் பிரியா,
உங்களுக்கு ஓகே வா?
நாம ரெண்டு பேரும் ட்ரை பண்ணுவோமா?
ட்ரை பண்ணிட்டு எழுதுவோம்

என்றும் அன்புடன்,
கவிதா

எனக்கும் இந்த prob இருந்தது ஆனால் இப்போ பரவாஇல்லை(ஆஹா நானே கண்திருஷ்டி வைத்துவிட்டேனே)என்னுடைய tips என்னவென்றால்.மாவு பிசைந்து1/2 மணி நேரம் ஊறவைத்து.சாப்பத்தி,பூரி தேய்த்து, உடனே சுட்டுவிடவேண்டும்.காயவைக்ககூடாது.அந்த ஈரபதத்திலே நன்றாக உப்பி வரும்.try செய்துவிட்டு சொல்லுங்கள்.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

சப்பாத்தி மிருதுவா வர மாவு பிசையும் போது வெதுவெதுப்பான தண்ணி ஊற்றி நல்லா மாவு மிருதுவா வரும் வரை பிசையனும்.குழந்தைகளுக்கு செய்வதா இருந்தா பால் நிறைய(தண்ணி விடாம பால் மட்டும் சேர்த்தும் செய்யலாம்) விட்டு மாவு பிசைங்க.நல்லா மிருதுவா வரும்.
1 கப் மாவுக்கு 2 ஸ்பூன் தயிர் சேர்த்து மாவு பிசைந்தாலும் நன்நாக வரும்.
சோயா மாவு 2-3 ஸ்பூன் சேர்த்துக்கலாம்.(புரோட்டீன் கிடைக்கும்)

மாவு பிசைந்து குறைந்தது 30 நிமிடம் கழித்து சப்பாத்தி சுடவும். மாவு பிசைந்த பின் காற்று படாமல் இருக்கமாக மூடி வைக்கவும்.வெள்ளை துணியை நனைத்து பிழிந்து மாவு மேல போட்டு பின் மூடி வைத்தால் மாவு காயாமல் இருக்கும்.

சப்பாத்தி தேய்க்கும் போது மிகவும் மெலிதாகவோ அல்லது மொத்தமாகவோ தேய்க்க கூடாது.

தவா சூடான பின் சப்பாத்தி போடவும்.கல்லு சூடு மீடியமா வைத்து சுடுங்க.
சப்பாத்தி சுடும் போது தோசைகல்லில போட்டு 10 - 15 நொடிகளில் திருப்பி போட்டு மீண்டும் 10 நொடி கழித்து திருப்பி போட்ட பின் உப்ப ஆரம்பிக்கும்.அப்போ துணி கொண்டு லேசாக அழுத்தினால் நன்றாக பூரி போல் உப்பும்.அழுத்தும் போது கவனமாக செய்யவும்.ஓட்டை விழுந்தால் உப்பாது.சூடான காற்று கைகளில் படாதவாறு கவனமாக செய்யவும்.அடிக்கடி திருப்பி போட்டுகிட்டே இருந்தாலும் நல்லா உப்பாது.

இல்லாவிடில் சப்பாத்தி ஒவ்வொரு பக்கமும் ஒரு முறை திருப்பி போட்டு பின் நேரடியாக அடுப்பில் போட்டு எடுத்தாலும் நன்கு உப்பி வரும்.4 நொடிகளில் ரெடியாகும்.அடுப்பில் காட்டும் போது ஒவ்வொரு பக்கமும் 2-3 நொடி காட்டினால் போதும்.இல்லாவிடில் தீஞ்சு போகும். இது மிகவும் எளிதான முறை.2-3 சப்பாத்தி போட்டா எப்படி செய்யறதுனு உங்களுக்கே புரிஞ்சிடும்.

சப்பாத்தி சுட்ட பின் விரும்பினால் அதில் நெய், பட்டர், எண்ணெய் ஏதாவது ஒன்றை தடவி வைக்கலாம்.சுடும் போது தேவையில்லை.
ஒவ்வொரு சப்பாத்தியும் சுட்ட பின் மூடி வைக்கவும். காற்று படாதவாறு சப்பாத்தியை மூடி வைத்தால் அடுத்த நாளும் மிருதுவாகவே இருக்கும்.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

hi friends, archana,rizwana,kala and divya arun, ரொம்ப்ப thanks paa.நான் இந்த முறைகளில் ட்ரை செய்து விட்டு சொல்கிரேன்.உடனே, பதில் போட்டதர்க்கு மிக்க நன்றிப்பா எல்லாருக்கும்.
கவிதா, நாம ட்ரை பாண்ணிவிட்டு சொல்லுவோம்பா, நமக்கு எப்படி வந்ததுன்னு.இங்கு ஆஷிர்வாத் மாவு கிடைக்கிரது.பார்த்துவிட்டு சொல்கிரேன்.

hi friends!iam newly joined this.thanks 4r ur idea 4r soft chappathi
that s very useful 4 me also-jas

hello friends....
i have newly joined,very useful tips,thanks a lot,it helps me tooo...

Express Yourself .....

மேலும் சில பதிவுகள்