திருக்கை மீன் வறுவல்

தேதி: May 4, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (4 votes)

 

திருக்கை மீன் - கால் கிலோ
பூண்டு - 10 பல்
சின்ன வெங்காயம் - 10
மிளகாய் தூள் - முக்கால் மேசைக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல் - ஒரு மேசைக்கரண்டி
கல் உப்பு - அரை மேசைக்கரண்டி
எண்ணெய் - கால் கப்


 

மீனை சுத்தம் செய்து கழுவி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பூண்டை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்.
முதலில் அம்மியில் தேங்காயை வைத்து அரைத்து விட்டு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு வைத்து அரைக்கவும். அதனுடன் சோம்பு வைத்து ஒரு முறை அரைத்த பின்னர் பூண்டு, சின்ன வெங்காயம் வைத்து லேசாக தண்ணீர் தெளித்து அரைத்து எடுக்கவும்.
அரைத்த விழுதை மீனுடன் போட்டு நன்கு சேரும் படி பிரட்டி 10 நிமிடம் ஊற வைக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி பிரட்டி வைத்திருக்கும் மீனை 5 அல்லது 6 துண்டுகள் போட்டு வறுக்கவும்.
2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் 4 நிமிடம் கழித்து எடுக்கவும்.
சுவையான திருக்கை மீன் வறுவல் ரெடி. இந்த குறிப்பினை நமக்கு செய்து காட்டியவர் திருமதி. மலர்கொடி யுவராஜன் அவர்கள். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் மலர் இந்த குறிப்பை பார்க்கும் போதே சுவையாக இருக்கும் என்று தெரிகிறது. அம்மியில் வைத்து அரைத்து செய்து சாப்பிட ஆசை நேரம் கிடைக்கும் போது செய்து விட்டு சொல்கிறேன்.

அன்புடன் கதீஜா.

திருக்கை மீன் எப்படி இருக்கும்,வேரு மீனில் செய்யலாமா

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

மலர்கொடி
அம்மி, மன்சட்டி, இரும்பு தோசைக்கல் ம்ம்ம்ம்ம்ம் :-P

shariz

திருக்கை மீன் என்றால் sting ray

மலர்கொடி, திருக்கைமீன் என்றால் என்ன? மீன் சட்டி , அம்மி இதையெல்லாம் பார்க்கும் போது சாப்பிட இன்னும் நிறைய ஆசையாக இருக்கிறது. ஆமா, இந்த சட்டியெல்லாம் எங்கேக் கிடைக்கிறது?பார்க்கவே அழகாக இருக்கிறது

Save the Energy for the future generation