oven chicken fry?

அனைவருக்கும் வணக்கம்....நான் அறுசுவையை பல நாளாக பார்த்து வருகிறேன்
நான் us வந்து 8மாதங்கள் ஆகிறது.இங்கு அபார்ட்மென்டில் ஒவென் இருக்கிரது(அது என்ன ஒவென் என பேர் தெரியல)மேலேயே stove இருக்கு.ஒவெனை திறந்தால் 2 அடுக்கு இருக்கு....chicken,fish(without oil) அதில் எப்படி பொரிப்பது,எவ்வளவு நேரம் முற்சூடு செஇயனும், எவ்வளவு நேரம் அதில் வைதிருக்கனும்னு சொல்லுவேங்கலா தோழிகளே....I tried twice but it is taking more time and not coming good.Iam doing it in aluminium foil tray..is it ok...
Pls clear my doubt frns

pls help me friends..

ஒவனில் ப்ரீ ஹீட் செய்ய ( it takes almost 10 minutes to preheat. But you can pre heat your oven more than that ) ஒரு ஆப்ஸன் இருக்குமே. அதை பிரஸ் பண்ணி விடுங்கள். காஸ் அவன் என்றால் 370 இல் வைத்து பேக் செய்யவும். எலட்ரிக் எனில் ஹீட் குறைய வைக்கலாம். நான் கிட்டத்தட்ட 1 மணி நேரம் ஒவனில் வைப்பேன். ஒவனில் வைக்கும் முன்பு சிறிது எண்ணெய் பூசி வைக்கவும்.
வாணி

hi hru? howz ur kid(sorry to talk in this ...will talk to u in arattai)

Kalai

hello vany
romba thanks replyku.preheat option edhum illai,Broil nu irukku adhuva... degree starts from 200(200,250,300....upto 500) will it become crispy when keeping for 1hr...pls tell me this also

hi
it is conventional oven..
if you don't have preheat option means you can choose minimum temperature to preheat.don't choose broiler.
below this main chamber, you can see another compartment,it is meant for broiler.ithule thaan broiler option use pannanum

saisri, do not select broil. Broil means cooking fish and meat in less than 10 minutes. For baking set the temperature at a very low setting. Keep the chicken pieces inside and after 30 minutes flip it over and bake for another 30 minutes or so. I always bake for an hour and get very soft & tender chicken. Always keep an eye while baking some thing in the oven. Do not leave it unattended. I think this will help you.

vaany

சாய்ஸ்ரீ,
bake செட்டிங்கில் தேவையான வெப்பத்தைத் தெரிவு செய்து ஆன் பண்ணி விடுங்க. மேலே (செட்டிங் ஸ்விட்ச் பக்கத்தில்) சிவப்பு லைட் ஒன்று பத்தும். அது ஆஃப் ஆகினால் முற்சூடு ஆகிவிட்டது. இது பொதுவாக எல்லா கிச்சன் ரேஞ்சுக்கும் பொருந்தும்.

மேலே ஸ்டவ்வுக்குப் பின்னால் ஆவி வெளியேற என்று ஒரு இடைவெளி இருக்கிறதா? இருந்தால் ஒவன் பாவனையில் இருக்கும் போது அந்த இடைவெளி மேல் பாத்திரம் எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் சொல்லும் 'broil' grill ஆக இருக்கும் என்று நினைக்கிறேன். நிச்சயம் தெரியவில்லை. உங்கள் ஒவனில் பேக் செட்டிங் தனியாக broil தனியாக இருக்கிறதா? (sanpass விபரம் சொல்லி உதவி இருக்கிறார், பாருங்கள்.)

//ஒவனை திறந்தால் 2 அடுக்கு இருக்கு// இந்த வலைத்தட்டுக்களை இடம் மாற்றி வைக்கலாம். பேக் / ரோஸ்ட் செய்வதாக இருந்தால் ஓவன் நடுவில் தட்டை வைத்து சமைக்கும் பொருளை வைக்க வேண்டும்.

//aluminium foil tray // போதும் என்று தோன்றவில்லை. இங்கு ஒவனில் உள்ள baking / rosting tray -ல் foil போட்டுத் தான் சமைக்கிறோம்.
//chicken,fish(without oil)// தட்டில் ஃபாயில் போட்டாலும் அதில் எண்ணெய் பூசி விட்டு வைத்தால் ஒட்டாமல் முழுத் துண்டாக எடுக்க வரும்.

சமைப்பதற்கு உங்களுக்குப் பிடித்த விதமாக (குறிப்பு நீங்கள்தான் தேடிப் பார்க்க வேண்டும். நான் சாப்பிடுவது இல்லை, அதானால் என்னால் உதவ முடியாது.) ;) மீனையோ கோழியையோ தயார் செய்து கொள்ளுங்கள். ஊற விடுங்கள். கோழி.. அப்படியே இரவு ஃப்ரிஜ்ஜில் வைத்து இருந்தால் சுவை பிடித்துக் கொள்ளும்.

சமைக்கும் நேரம்... துண்டுகளின் அளவு, குளிராக இருக்கிறதா என்பதைப் பொறுத்தது. (மீனை விடக் கோழி அதிக நேரம் எடுக்கும். வாணி சொல்லி இருக்கிறாங்க, பாருங்க.) உள்ளே வைத்து ஒரு பதினைந்து / இருபது நிமிடம் ஆனதன் பின் ட்ரேயை வெளியே எடுத்து முன் பின்னாக திருப்பி வையுங்கள். அப்படியே ஒவ்வொரு துண்டாகத் திருப்பிப் போட்டு வையுங்கள். இன்னொரு பதினைந்து / இருபது நிமிடம் கழித்து எடுத்துப் பாருங்கள். தட்டின் நடுவில் உள்ள துண்டை கத்தியால் பிரித்துப் பாருங்கள். வெந்து இருக்கிறதா என்று தெரியும். இல்லாவிட்டால் மேலும் சில நிமிடங்கள் விட வேண்டும். சிலருக்கு வெந்து இருந்தால் போதும். சிலருக்கு முறுகலாக வேண்டும். இனி உங்களுக்குப் பிடித்த பதத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

//will it become crispy when keeping...// வெளியே க்ரிஸ்ப் ஆக வர வேண்டும் என்றால்... வைக்குமுன் துண்டுகளில் எண்ணெய் தடவி வையுங்கள். க்ரிஸ்ப் ஆக வரும். இதற்கென அதிக நேரம் விட்டால் வரண்டு விடும்.

‍- இமா க்றிஸ்

vany madam..
romba thankspa badhil sonnadhukku...kandippa neenga sonnamadhiri chicken try panren...fishukum evlo neram prehaeat panni evlo time set panni vaikanumnu solveengalapa...

santhi madam,
thanks for ur help...neenga broilerla try pannirukeengala.adhu eppadi pannanumnu sollamudiyumapa..

Imma madam...
ungalukkum romba thankspa,medhuva,romba porumaiya,type panni enakku badhil sonnadhukku...kandippa neenga sonna tips ellam follow panren,seiythu paththutu eppadi vandhadhunu solren..once again thank u so much.

மேலும் சில பதிவுகள்