சுரைக்காய் கபாப்

தேதி: May 10, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.8 (4 votes)

 

சுரைக்காய் துருவியது - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
அரிசி மாவு - 3 தேக்கரண்டி
சோள மாவு - 2 தேக்கரண்டி
ப்ரட் க்ரம்ஸ் - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
சோம்புதூள் - 1 1/2 தேக்கரண்டி
சோயாசாஸ் - கால் தேக்கரண்டி
மல்லிதழை - சிறிதளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

சுரைக்காயை துருவி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், மல்லி, கறிவேப்பிலை இவைகளை கழுவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
துருவிய சுரைக்காயை ஒரு நாண்ஸ்டிக் கடாயில் போட்டு அடுப்பில் வைத்து தண்ணீர் சுண்ட வதக்கி கொள்ளவும்.
சுரைக்காய் வதங்கியதும் எடுத்து விட்டு அதே வாணலியில் நறுக்கின வெங்காயம், மல்லி, கறிவேப்பிலையை போட்டு சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வதக்கிய பொருட்களுடன் எண்ணெய் தவிர்த்து மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து நன்கு பிசையவும்.
வானலியில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும், பிசைந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக்கி அதில் போட்டு பொரித்து எடுக்கவும். உருண்டைகளாக அல்லாமல் நீளவாக்கிலும் போட்டு பொரித்தெடுக்கலாம்.
கெட்செப்புடன் குழந்தைகளுக்கு கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இதில் சிறிது பனீரும் துருவி சேர்த்துக் கொள்ளலாம். இந்த சுவையான குறிப்பினை திருமதி. அப்சரா அவர்கள் செய்து காட்டியுள்ளார். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

டியர் அப்சரா, நேற்று சுரைக்காய் வாங்கி கொண்டுவந்தேன். திருமதி. செண்பகா ஒரு கூட்டு குறிப்பு கொடுத்திருந்தார்கள். அதை செய்து பார்க்க வாங்கினேன். இந்த கபாப்பையும் செய்து பார்த்து பின்னூட்டம் அளிக்கிறேன்.என்ன ஒரு ஒற்றுமை இரண்டு பேரும் ஓரே சமயத்தில் கபாப் சமையல் அனுப்பியுள்ளோம்

Save the Energy for the future generation

சுரைக்காய் கபாப் நல்ல இருக்கு.நான் இதற்கு பின்னூட்டம் கொடுத்த மாதிரி நினைவு,ஒ.கே.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா மேடம் எப்படி இருக்கீங்க...?
பேசி நாளாச்சு.தங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

breadgrams-ium ondraga pisaiya venduma or urundai oriti breadgrams-il pirati oil-il porika venduma? replay me.

ஹாய் அமுதா...,ப்ரட் கிரம்ஸ் எல்லாவற்றுடன் சேர்த்து பிசைந்துதான்
பிறகு எண்ணெயில் பொறிக்க வேண்டும்.தனியே பிரட்ட வேண்டிய அவசியம் இல்லை.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.