ஆட்டு ஈரல் கிரேவி

தேதி: May 11, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (18 votes)

 

ஆட்டு ஈரல் - கால் கிலோ
வெங்காயம் - இரண்டு (பெரியது)
தக்காளி - 1 1/2 + பாதி (பெரியது)
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
தனியா தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி (தேவைக்கு)
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி (பட்டை, ஏலம், கிராம்பு)
பச்சைமிளகாய் - ஒன்று


 

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஈரலில் மேலிருக்கும் மெல்லிய தோலை அகற்றி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி அதில் உப்பு, சிறிது வினிகர் சேர்த்து இரண்டு நிமிடம் ஊற வைத்து நன்கு கழுவி தண்ணீரை வடிகட்டவும்.
வாயகன்ற வாணலி ஒன்றில் ஒரு மேசைகரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
லேசாக இஞ்சி பூண்டு விழுது நிறம் மாறியதும் பொடியாக நறுக்கின வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கின ஒன்றரை தக்காளியை சேர்த்து கிளறவும், மீதி உள்ள பாதி தக்காளியை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வைக்கவும்.
தக்காளி வதங்கியதும் சுத்தம் செய்து தண்ணீர் வடித்து வைத்துள்ள ஈரலை சேர்க்கவும். ஈரல் சேர்த்ததும் ஒரு நிமிடம் நன்கு ஒரு சேர கிளறவும்.
மசாலா வகைகள் (மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, கரம்மசாலா) அனைத்தையும் சேர்த்து நன்கு பிரட்டி இரண்டு நிமிடம் முடி போட்டு சிம்மில் வைக்கவும்.
கடைசியாக அரைத்து வைத்துள்ள தக்காளி மற்றும் மீதமுள்ள எண்ணெயை சேர்த்து நன்கு கிளறவும்.
தீயின் அளவை குறைத்து வைத்து மூன்று நிமிடம் கிரேவியை திக்காக விடவும்.அதிக நேரம் வைத்து ஈரலை வேக வைத்தால் ரொம்ப கட்டியாகிடும்.
சுவையான ஆட்டு ஈரல் கிரேவி ரெடி. அறுசுவையில் 600க்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகள் மற்றும் பயனுள்ள வீட்டு உபயோகக் குறிப்புகள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள திருமதி. ஜலீலா அவர்கள் நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள குறிப்பு இது. இந்த குறிப்பினை அவர் நான்கு ஐந்து முறை செய்து பார்த்து அனைவருக்கும் பிடித்திருந்ததால் இதை நம்முடனும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சவுதியில் இதை காலை உணவாக ப்ரெட்டில் வைத்து சாப்பிடுவார்கள். நாம் ப்ளையின் சாதம், மோர்குழம்புடன் (அ) சாம்பார் இவற்றுடன் தொட்டுக் கொள்ள செய்யலாம்.
ரொட்டி, சப்பாத்தி, பரோட்டாவிற்கும் பொருந்தும். கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது. பிள்ளை பெறும் நேரத்திலும், பிள்ளை பெற்றதும் குறையும் இரத்தத்தின் அளவை அதிகப்படுத்தும்.
இதை சுட்டு சாப்பிட்டால் ரொம்ப நன்றாக இருக்கும். சீக்கிரம் வெந்துவிடும், ஆகையால் கரியை தீமூட்டி எல்லாம் சுட தேவையில்லை. அப்படியே மிளகுதூள் உப்பு தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு கம்பியில் கோர்த்து கேஸ் அடுப்பிலேயே சுடலாம்.
இந்த ஈரலை பல வகையாக செய்யலாம். கீரைசோறு என்னும் ஸ்பேர் பாட்ஸ் ரைஸும் தயாரிக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் அக்கா எப்படி இருக்கீங்க. வீட்டில் அனைவரும் நலமா.நல்ல ரெசிப்பி கொடுத்து இருக்கீங்க. செய்து பார்த்துட்டு சொல்கிறேன்.

அன்புடன் கதீஜா.

kadai eppadi akka samaikanum.help me akka

ஜலீலா மேடம்,உங்க கோழி ஈரல் டீப் ஃப்ரை இன்று செய்தேன்...சிம்பிள்&சூப்பர்..அங்கு பதிவு போட ஓபன் பன்னிபார்த்தா இங்க ஆட்டு ஈரல் குறிப்பு(அதான் இங்கேயே சொல்லிட்டேன்)..ஆட்டு ஈரல் வாங்கியதும் செய்துவிடுவேன்
ஓரு சந்தேகம் ஈரல் உடம்புகு சூடுனு பக்கத்துல இருகுறவங்க சொன்னாங்க..எனக்கு இப்போ 7மாதம் அதான் இது அடிக்கடி சாப்பிடலாமானு சொல்லுங்களேன் மேடம்..

Kalai

கதிஜா நல்ல இருக்கிறேன், உங்கள் பிள்ளைகள் நலமா?
ஞாபகம்வைத்து விசாரித்தமைக்கு மிக்க நன்றி.

உங்கள்
ஜலீலா

Jaleelakamal

அன்பு சஹ்லா காடை செய்யும் போது சொல்கிறேன். இங்கு அறுசுவையில் தேடி பாருங்கள் கிடைக்கும்/
வனிதா பகுதியில் பதில் சொன்னேன், ஒன்றும் உங்கள் பதிலை காணுமே..

என்றும் உங்கள்
ஜலீலா

Jaleelakamal

அன்பு கலா கோழி ஈரல் சூடு தான் ஆனால் சூடான அயிட்டம் சாப்பிடும் போது தயிர் சாதம், மோர் குழம்பு என்றூ.
அதுக்கு தோதுவாக கூலான ஆகாரம் சேர்த்து கொள்ளனும்.

இது ஆட்டு ஈரல் இது சூடு கிடையாது நீங்கள் தாராளமாக இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து சாப்பிடலாம்.

இதை கூட நான் கோழி ஈரலுக்கு சொன்னது போல் செய்து சாப்பிடலாம் , கூட்டாக செய்தால் சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்.
என்றும் உங்கள்
ஜலீலா

Jaleelakamal

enge erukunu solluga akka plz

அருமையாக இருக்கு.படங்கள் தெளிவாக இருக்கு.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி ஆசியா

Jaleelakamal

dear akka,

en peru priya. enakku samakka theriyadu nan samayal kattu pakkam kuda ponathila. nan thirumanan agi last three montha thani veedu vantirukken. en kanavar samayal taste pappar nan kulambi poi ninen ippo unga samayal book padici samaci nan expect ayiten en kanavar sonnaru thanks akka. Ungalu thanks solla than nan register pannen. unagalukku romba romba nantri

entrum ungal samayalai pinparri thirumana valkaiyai thuvangavirukkum ungal thangai.
priya

http://www.marchofdimes.com/aboutus/681_1152.asp

There is some concern about consuming liver during pregnancy. Liver is a good source of protein and is rich in certain vitamins and minerals. These include the B vitamin folic acid (which helps prevent certain birth defects), iron (which helps prevent anemia) and vitamin A (needed for normal fetal growth and development). However, in the case of vitamin A, liver may contain too much of a good thing.

Some studies suggest that high doses of vitamin A may cause birth defects. A 1995 study found that women who took more than 10,000 IU (international units) of vitamin A daily in the first two months of pregnancy had more than double the risk of having a baby with birth defects (6). More than 10,000 IU of vitamin A is nearly four times the Institute of Medicine’s Recommended Dietary Allowance (RDA) of 2,565 IU for pregnant women (7). Other studies have suggested that doses under 30,000 IU daily probably do not cause birth defects, but the lowest dose that may cause birth defects is unknown (8).

The body is able to make its own vitamin A, when needed, from substances such as beta carotene, which is found in yellow and green vegetables. This raw material for the vitamin is considered completely safe and healthy during pregnancy. However, much of the vitamin A we consume is the preformed vitamin (retinol) which, in excessive amounts, may cause birth defects. Preformed vitamin A is found in many vitamin supplements and some foods, including meats, eggs, dairy products and fortified breakfast cereals.

Liver is the only food that provides very high amounts of vitamin A. The amount of vitamin A found in liver varies. For example, a 3-ounce serving of beef liver may contain 27,000 IU and chicken liver, 12,000 IU (8). A pregnant woman who eats liver regularly may consume enough vitamin A to pose a risk to her baby.

Though it is not proven that eating liver causes birth defects, the safest approach is for pregnant women to minimize their consumption of liver. A pregnant woman also should be sure that her multivitamin or prenatal supplement contains no more than 5,000 IU (international units) of preformed vitamin A (some prenatal vitamins contain no preformed vitamin A, substituting beta-carotene or omitting vitamin A entirely), and she should not take any vitamin A supplements beyond that amount (9).

i tried the receipe with chicken liver and that came out awesome.

பிரியா செல்வம்
என் குறிப்புகளை பார்த்து நீங்க எக்ஸ்பேட் ஆனது குறித்து.கேட்கவே ரொம்ப சந்தோஷ்மா இருக்கு

ஜலீலா

Jaleelakamal

ஈரல் கிரேவி செய்து பார்த்து பின்னுட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி ஜீபா
ஜலீலா

Jaleelakamal

அருமை

sench saptinga la illa padichathu arumaya? ennna naan seyalam nu erukkan pa

மலிக்கா ஆட்டு ஈரல் கிரேவி கண்டிப்பாக செய்து பாருங்கள், மிக அருமையாக இருக்கும்.

Jaleelakamal