தேதி: May 12, 2010
பரிமாறும் அளவு: 2 குழந்தைகள்
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
அரிசி - 50 மில்லி
நெய் - தாளிப்புக்கு
கருவேப்பிலை - சிறிது
கருவா - 1 துண்டு
ஏலம் - 2
வெங்காயம் - தாளிப்புக்கு
முதலில் அரிசியை சிறிது உப்பு சேர்த்து குக்கரில் குழைய வேக வைத்து கடைந்துக்கொள்லவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி கருவா, ஏலம்,போட்டு வெடித்ததும், வெங்காயம், கருவேப்பிலை போட்டு தாளித்து வேகவைத்த சாதத்தை போட்டு கிளறி 2 நிமிடம் கழித்து இறக்கவும்.
நல்ல சுவையும் மணமும் உள்ள கஞ்சி சோறு தயார். இதை 6 மாதம் முதல் எல்லா வயது குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.
காய்ச்சல் அல்லது உடம்பு சரியில்லாத நேரத்தில் பெரியவர்களும் சாப்பிடலாம்.
இதற்க்கு தொட்டுக்கொள்ள பொட்டுக்கடலை சட்னி பெரியவர்களுக்கு செய்துக்கலாம்.
பெரியவர்களுக்கும், 2 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கும் செய்யும் போது தேங்காய் பால் சாதத்துக்கு தகுந்தது போல் ஊற்றி இறக்கினால் சுவை இன்னும் அதிகமாகும்.
அதாவது 1 கப் அரிசி என்றால் தேங்காய் பால் 1/2 கப் ஊற்றலாம்.
Comments
kavitha
என் பொண்ணுக்காக சொன்னது போல் இருந்தது
கருவா எப்படி இருக்கும்?
சொன்னீங்கன்னா செய்து பார்ப்பேன்
ப்ளீஸ்
என்றும் அன்புடன்,
கவிதா
கருவா - இலவங்கப் பட்டை
லவங்கப்பட்டையை சில ஏரியாக்களில் கருவா என்று சொல்கின்றார்கள்.
kavitha
அட்மின் அவர்களே
மிகவும் நன்றி
என்றும் அன்புடன்,
கவிதா
சீஸனல் கஞ்சி
தேவையானவை: மாங்காய் இஞ்சி - 25 கிராம், பச்சை மிளகு - 10 கிராம், பெருங்காயம் - ஒரு சிட்டிகை, மோர் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு, எலுமிச்சம்பழம் - 1, மல்லித்தழை - சிறிது.
செய்முறை: மாங்காய் இஞ்சியைத் துருவிக்கொள்ளவும். பச்சை மிளகை உதிர்த்துக்கொள்ளவும். கேழ்வரகுக் கூழை முறைப்படி தயார் செய்துகொள்ளவும். அதில் ஒரு கப் எடுத்து, மோர், உப்பு, பெருங்காயம் சேர்க்கவும். அத்துடன் துருவிய இஞ்சி, மிளகு சேர்த்து, எலுமிச்சம்பழச் சாறு, மல்லித்தழை சேர்த்து சாப்பிடவும். மாங்காய் இஞ்சி, பச்சை மிளகு சீஸனில் அடிக்கடி இந்தக் கஞ்சியை செய்து சாப்பிடலாம்.
மேலும் தொடரும் செய்திகள்
புழுங்கலரிசி ஓமக்கஞ்சி
புழுங்கலரிசி லெமன் கஞ்சி
ஓட்ஸ், பால், பழக் கஞ்சி
MADAM MY BABY IS 6MONTH BABY
MADAM MY BABY IS 6MONTH BABY TANKEYOU FOR YOUR RACIP TAHAKYOU MADAM