hotel - chennai

ஹாய் ,
எல்லோரும் எப்படி இருக்கீங்க? அடுத்த மாதம் நான் என் குடும்பத்துடன் சென்னையை சுற்றி பார்க்க வருகிறேன். எனக்கு இரண்டு நாளைக்கு (4th& 5th June) தங்குவதற்கு ஹோட்டல் தேவை. என்னுடைய பட்ஜெட் (RS1000-2000. தயவு செய்து எனக்கு யாராவது நல்ல/ சுத்தமான/AC உள்ள ஹோட்டல் ரெகமென்ட் பண்ணுங்களேன் ... முடிந்தால் இன்றைக்கே பதில் அனுப்பவும்...

நன்றி.
அன்புடன்,
நளினி குமரா
மலேசியா

சென்னையில் இல்லாத ஹோட்டலா? எங்கு தங்கப் போகின்றீர்கள் என்று தெரிந்தால் எழுதலாம்.

http://www.hotelsinchennaimadras.com/budget-hotels/index.html
மேடம் நீங்க இந்த தளத்தில் எல்லா விஷயமும் பாக்கலாம் ட்ரை பண்ணுங்க
கூடுமானவரை இந்த தளத்தில் உள்ள ஹோடேல்களிலே டூர் packages உண்டு
ஆன்லைன்ல பதிவு பண்ணாலே போதும் எர்போர்டில் pickup பண்ணுவாங்க சென்னை சென்றால் மாம்பலம் போய் ஷாப்பிங் மட்டும் பண்ண மறக்காதீங்க cash கொஞ்சம் வச்சுகோங்க platformல கூட சூப்பர் items கிடைக்கும்

என்றும் அன்புடன்,
கவிதா

Hotel Mount Heera
No-287, M.K.N.Road , Alandur , Chennai - 600016 India
இந்த ஹோட்டல் எப்படி...? சுத்தமா இருக்குமா... நல்ல ஹோட்டெலா ... விசாரித்து சொல்ல முடியுமா..

அன்புடன்,
நளினி குமரா

ஹாய் கவிதா,
நன்றி.

அன்புடன்,
நளினி குமரா

chennaila appadi yenna irukku suthi parka...

வாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

உங்கள் பட்ஜெட்டில் தங்குவதற்கு ஹோட்டல் சிங்கப்பூர் -எக்மோரில் உள்ளது,பக்கத்தில் ஹோட்டல் சரவணபவன்,தங்குமிடத்தில் இருந்தே சைடில் ஒரு கதவை திறந்தால் சாப்பிட சரவணபவன் மிக்க வசதி.சிங்கப்பூர் ஹோட்டலில் சென்னையை சுற்றி பார்க்க நம் பட்ஜெட்டிற்கு தகுந்தபடி கார் அரேஞ் செய்து தருவங்க,ஊரையும் சுற்றி பார்த்து விடலாம்.நாங்கள் 3 நாள் தங்கி சென்னையை சுற்றி பார்த்தோம்,நல்ல வசதியாக இருந்தது.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நான் தமிழ் நாட்டை சுத்திப் பார்க்க வருகிறேன்.. சென்னை மட்டும் அல்ல. என் உறவினர் மூலமாக வண்டி ஏற்பாடு செய்தேன்....குவாலிஸ் வண்டிக்கு 1600 ரூபாய் கொடுக்கலாமா 1 நாளைக்கு... டீசல் என்னுடைய செலவாம். விலை எப்படி.. யாராவது சொல்லுங்களேன்...

அன்புடன்,
நளினி குமரா

மேலும் சில பதிவுகள்