என் அன்பு அறுசுவை தோழிகளிடம் கேட்கிறேன் Help Reply Plssssssssssssssss

அன்பு தோழிகளுக்கு வணக்கம்,
என் பெயர் துர்கா நான் மும்பையில் வசிக்கிறேன் நான் ஒரு பிரைவேட் கம்பெனியில் அக்கௌன்டன்ட்டாக பணிபுரிகிறேன் எனக்கு திருமணம் ஆகி இரண்டு வருடம் முடிந்துவிட்டது ஆனால் எனக்கு இன்னும் குழந்தை இல்லை நான் ஏதும் உபயோகிக்கவில்லை,மருந்தும் எடுக்கவில்லை ஆனாலும் இன்னும் குழந்தை இல்லை டாக்டரிடம் போகலாம் என்று நானும் என் விட்டுக்காராரும் முடிவு எடுத்துளோம் என் விட்டுகாராருக்கு குழந்தை என்றால் ரொம்ப ப்ரியம் ஆனால் என்னிடம் ஏதும் சொல்வது இல்லை நானும் அப்படி தான் அவரிடம் ஏதும் சொல்வது இல்லை எனக்கு பிறகு திருமணம் செய்த என் தோழிகளுக்கு குழந்தை உண்டாகிவிட்டது ஆனால் எனக்கு இல்லை என்று மனது மிகவும் கஷ்டமாக இருக்கிறது முதலில் எனக்கு கஷ்டமாக இல்லை ஏன் என்றால் மும்பாயில் 2&3 வருடம் கழித்து தான் குழந்தை பெற்றுகொல்வர்கள் (வேளைக்கு போகும் பெண்கள் மட்டும் ) எனக்கும் எதாவது saving செய்த பிறகு குழந்தை பெற்றுகொள்ள நினைத்தேன் February அன்று தான் எங்கள் திருமணம் முடிந்து 2 வருடம் ஆனது அதனால் இன்றுவரை பெரிதாக நினைக்கவில்லை ஆனால் இப்பொழுது யார் பார்த்தாலும் இன்னும் குழந்தை இல்லையா என்று கேட்கிறார்கள் எனது காதல் திருமணம் எனக்கு திருமணம் முடிந்து 7மாதத்தில் என்னை என் மாமியார், நாத்தனார்,கொலந்தானர் வரதட்ச்சனை கேட்டு நள்ளிரவில் என்னை விட்டை விட்டு வேளியே அனுப்பிவிட்டார்கள் எனக்கு ஆதரவாக என் விட்டுக்காரர் இருந்ததால் ஒரு வீடு வாடகை எடுத்து நாங்கள் அங்கு குடிபோனோம் என் விட்டுக்காரர் படிக்கவில்லை நான் B.com முடித்து உள்ளேன் அவர் என்னை விட மிகவும் குறைவான(Rs 3000) சம்பளத்தில் வேலை செய்கிறார் டாக்டரிடம் போகணும் என்றால் குறைந்தது மாதம் 2000 ரூபாய் வேண்டும் அதனால் நான் டாக்டரிடம் போக தள்ளி போட்டேன் இப்பொழுது நான் கொஞ்சம் saving செய்து விட்டேன் என் சம்பளத்தில் தான் வீட்டு வாடகை, லைட் பில் , தண்ணீர் பில் , நான் வேளைக்கு போய்வருகிற செலவு , என் விட்டுக்காரர்
போய்வருகிற செலவு எல்லாம் நான் என் சம்பளத்தில் பார்த்துகொள்கிறேன் நாங்கள் இருவரும் மாதத்தில் 2 முறை தான்
சந்தோசமாக இருக்கிறோம் காரணம் அவருக்கு நைட் shift நான் வீட்டிற்கு வரும் போது அவர் வேலைக்கு போவார்
நான் வேலைக்குபோகும்போது அவர் விட்டிற்கு வருவார் sunday லேட்காதான் வருவார் சில சமயம் மதியம்
வருவார் சில சமயம் சாயங்காலம் வருவார் நான் சாப்பாட்டு ரெடியாக வைத்திருப்பேன் வந்ததும் பிரெஷ் ஆகி சாப்பிட்டு துங்கிவிடுவார் அதனால் நான் ஏதும் தொந்தரவு செய்யமாட்டேன் இப்பொழுது என் விட்டுக்காரர் அம்மா அவரை இரண்டாவது திருமணம் செய்துக்க சொல்கிறார் பழமொழி சொல்வார்கள் கரைபார் கரைத்தால் கல்லும்
கரையும் அதனால் தான் நான் என் அன்பு அறுசுவை தோழிகளிடம் கேட்கிறேன் கரு உருவகிவதற்கு வழி
ஏதும் உண்டா(இயற்கை வழி) இருந்தால் சொலுங்கள் ப்ளீஸ்

durga don't worry ennaku tamil typing theriyathu ennaku maariage mutinthu 5 years achu, no child i am so sad simple advice i am treatment to conceive
but not use sevvalai pallam daily sapptunga, both medicine not help sideeffect only kavalai patathiga manasu nalla iruntha ellama nattakum
by experience, nanum enna mathiri nerriya kasda pattnen mamiyar, natthanar ennaku nallu peru, sollava vendam anndha alavuku
so relax and enjoy your life day by day unka husbend corrcta irudha
yaralayum unnalai unnun seiya mudiyathu tamilil tamil seiyalai soory

சிரித்த முகமும் தெளிவான வார்த்தையும் ஒரு பெண்ணின் அம்சம்

dear Durga, துர்கா இது தீர்க்க கூரிய பிரச்சனை தான். கவலை வேன்டாம். முதலில் இருவரில் யாராவது ஒருவர் ஷிப்ட் மாற்றி கொள்ளுங்கள். ஏன் என்றால் இப்பட் நீங்கள் இருவரும் இருப்பது நாளடைவில் உங்களுக்குல் மனக் கசப்பை ஏற்படுத்தும். சரியான மருத்துவ ஆலோசனை யெ இதற்கு தீர்வு. எதையும் ஆரம்பத்தில் கண்டு பிடித்தால் சரி செய்து விடலாம். இருவரில் யார் மேது பிரச்சனை என தெரியாமல் உங்கள் கணவரின் மறுமணம் பற்றி யோசிப்பது தவறு. நிச்சயமாக உங்கள் கணவருடன் அமர்ந்து என்ன செய்ய என பேசி முடிவு எடுத்து இருவரும் நல்ல மருத்துவரை அணுகுங்கள்.

பெண்மையின் பெருமை தாய்மையில் தான் உள்ளது. அம்மா என்ற வார்தைக்காக நானும் ஏங்கி நிற்கிரேன். நான் இரண்டு குழந்தைகளை பெற்று இறைவனிடம் கொடுத்து விட்டு இழந்து நிற்கிறேன்.

தாமதமானாலும் இறைவன் ஆரோக்கியமான் குழந்தையை உங்களுக்கு அளிப்பான். இது எனது அனுபவத்தால் சொல்கிரென். தவறாக எண்ண வேண்டாம்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

ஹாய் துர்கா...,எப்படி இருக்கீங்க.
உங்கள் பதிவு படித்ததும் எனக்கு கஷ்ட்டமாகி விட்டது.
உங்களுக்கு குழந்தை இன்னும் உண்டாகவில்லை என்பது இல்லை.
அதற்க்கான சரியான முயற்ச்சி செய்யாமல் எதற்க்கு குறைபாடு என்று எடுத்துக் கொண்டீர்கள்.அது தான் எனக்கு வருத்தமாக இருக்கி்ன்றது.
கவலை வேண்டாம் துர்கா....உங்கள் கேள்விக்கான விடை உங்களிடமே இருப்பதாக தான் எனக்கு தெரிகின்றது.
என்ன புரியவில்லையா...?தெளிவாகவும்,விளக்கமாகவுமே சொல்கிறேனே.
சொல்கிறேன் என்று தவறாக எண்ண வேண்டாம்.உங்கள் வாழ்க்கை முறையை சிறிது நாள் மாற்றினால் சரியாக இருக்கும் என தோன்றுகின்றது.
அது என்னவென்றால்....,
உங்கள் இருவரின் வேலைக்கு செல்லும் நேரமும் மாறுபடிகின்றது.எனக்கு தெரிய வேண்டியது நீங்கள் சேவி்ங்க்ஸ்க்காக வேலை செல்வதாக சொல்லி இருக்கின்றீர்கள்.அதன் பிறகு உங்கள் சம்பளத்தில் தான் போக்குவரத்து செலவு மற்றும் இதர செலவுகளை செய்வதாக குறிப்பிட்டு இருக்கின்றீர்கள்.
இப்போது நீங்கள் வேலைக்கு செல்ல வில்லை என்றால் உங்களால் குடும்பம் நடத்த முடியுமா என்று பாருங்கள்.அப்படி முடியுமெனில்...,குழந்தை உண்டாகும் வரை வேலை செல்வதை விட்டு விடுங்கள்.
இந்த காலத்தில் இருவரும் வேலை சென்றால் தான் குடும்பத்தை நல்லபடியாக வழி்நடத்தமுடியும் என்பதை ஒத்துக்கொள்கிறேன்.
அதற்க்காக ஓடி ஓடி காசு சேர்த்து அனுபவிக்க ஒரு குழந்தை வேண்டாமா...?அவர் வரும் நேரம் நீங்கள் கிளம்புவதும்,நீங்கள் வரும் நேரம் அவர் கிளம்புவதும் என்ன வாழ்க்கைங்க...இது.
அப்படியே அவர் வரும் நேரம் நீங்கள் இருந்தால் அவர் தூங்கி விடுகிறார் என்கிறீர்கள்.முதலில் நீங்கள் வீட்டிலேயே இருக்க முயற்ச்சி செய்யுங்கள்.எல்லா நேரமும் அவர் அசந்து போக மாட்டார்.உங்களுக்கு என்று மனம் விட்டு பேச உணர்வுகளை பரிமாறி கொள்ள என்று ஒரு நேரம் ஒதுக்குங்கள்.அவரே சொல்லட்டும் நாமாக சொல்ல கூடாது என்று ஒருவரை ஒருவர் சரியாக மனசை விட்டு பேசி கொள்ளாமலும்,புரிந்துகொள்ளாமலும் இருந்தால் எங்கிருந்து உங்களால் சுமூகமான உடலுறவில் ஈடுபட முடியும்.
நீங்கள் தான் உங்கள் கணவரிடம் பேச ஆரம்பிக்க வேண்டும்.நாள் பூராவும் வேலை வேலை என்று இல்லாமல் ஒரு வாரமோ இல்லை எத்தனை நாள் முடியுமோ லீவ் எடுத்துக் கொண்டு கொஞ்சம் எல்லாவற்றையும் மறந்து சந்தோஷமாக இருவரும் உங்கள் நேரங்களை செலவிடு்ங்கள்.சந்தோஷமாக நல்லபடியாக உறவு கொள்ளுங்கள்.இதெல்லாம் நல்லபடியாக இருந்தும் அப்போது குழந்தை உண்டாகவில்லை என்றால் தான் நீங்கள் கவலபட வேண்டும்.வீணாக உங்களி்ன் இந்த வாழ்க்கை முறையால் உங்கள் மாமியாரின் இந்த எண்ணத்திற்க்கு வித விதைக்கின்றீர்கள்.அதை நிச்சயம் நீங்கள் தான் மாற்ற முயற்ச்சிக்க வேண்டும்.கணவர் மனைவி இடையே நல்ல பேசி கொள்ளலும் இருந்தல் மிக அவசியம்.அது மட்டும் இருந்து விட்டால் எந்த விஷயமும் உங்கள் கணவரை கரைக்க முடியாது அதை நன்கு மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.உங்களுக்கான ஒரு இடத்தை அவர் மனதில் நீங்கள் புகுத்த வேண்டும் என்பது மிக மிக அவசியம்.
அடுத்து எனக்கு தெரிய வேண்டியது உங்கள் மாதவிடாய் காலம் பற்றி.
அது ஒரு பெண்ணுக்கு மிக முக்கியம்.அது மாதாமாதாம் சரியான தேதிகளில் வரவேண்டும்.அது சரியில்லை தள்ளி தள்ளி வருகின்றது என்று இருந்தால் அதை சரி செய்து கொள்ள தகுந்த டாக்டரை அனுகி சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.
அது சரியாக இருப்பின் கவலை வேண்டாம்.தகுந்த உடல் உறவு முதலில் ஈடுபட்ட பின்னர் அடுத்தகட்டத்தை யோசியுங்கள்.மாதவிடாய் முடிந்து தலை குளித்த பின்னர் மறு நாளிலிருந்து பத்து நாட்களுக்குள் கருமுட்டை உருவாகுவதில்லை அதன் பிறகே தயார் நிலையில் இருக்கும் இந்த காலகட்டத்தில் உடல் உறவு மேற்கொண்டால் உங்களுக்கு குழந்தை உண்டாவதற்க்கான வாய்ப்புகள் உள்ளது.(கடவுள் நாடினால்...)
“சரிங்க இப்படியெல்லாம் இருந்தும் மாற்றம் இல்லைங்க”அப்படின்னு சொன்னீங்கன்னா அப்புறம் போய் டாக்டர்ட்ட நீங்கள் இருவரும் டெஸ்ட் செய்து பார்த்து பரிசோதிச்சுக்கங்க.எனக்கென்னமோ நீங்க வேலை வேலை என்று இல்லாமல் நெருக்கமாக உங்களுக்கென்று நேரம் ஒதுக்கினாலே நல்ல படியாக எல்லாம் நடக்க வாய்ப்பு உண்டு என்றே தோன்றுகின்றது.
நான் இவ்வளவு உள் நுழைந்து இந்த விஷயத்தில் சொல்கிறேன் என்று என்னை தவறாக எண்ண வேண்டாம்.எந்த ஒரு பெண்ணுக்கும் வாழ்க்கையின் மிக பெரிய அஸ்திவாரமும்,நம்பிக்கையும் கணவரும் குழந்தையும்தான்.அது சரியாக அமைய வேண்டும்.இல்லையெனில் பணம் இருந்தென்ன வசதி இருந்தென்னங்க.
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. என் மனதில் தோன்றிய கருத்தை சொல்லி இருக்கின்றேன்.தவறாக இருப்பின் என்னை மன்னிக்கவும்.
உங்கள் வாழ்க்கையில் புது மகிழ்ச்சி ஊடுருவ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
கவலை வேண்டாம்.ஆல் தி பெஸ்ட்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

என்னகு கல்யானம் முடிந்து 5 வருசம் ஆகியும் குலந்தை இல்லை, நான் மதுரை என்னகு மிகவும் கவலையாக உள்லது, என்னகு 25 வயது நடகிரது, நான் மிகவும் ஒல்லியாக
உள்ளென், please any advice sister appufar

சிரித்த முகமும் தெளிவான வார்த்தையும் ஒரு பெண்ணின் அம்சம்

Apsara, miga arumaiyaga sonneergal. Neengal sonnathu romba sari.

மிக்க நன்றி

ஹாய் ஜெயந்தி எப்படி இருக்கீங்க..?
சுருக்கமா சொல்லி இருக்கீங்க.பரவாயில்லை.
நீங்களும் உங்கள் கணவரும் இதற்க்கு ஏதும் மருத்துவர் ஆலோசனை பெற்றீர்களா?நீங்கள் ஹவுஸ் வொய்ஃப் தானே...இது எனக்கு தெரியவில்லை.இருப்பினும் சிலவற்றை நீங்கள் கேட்டதற்க்காக சொல்கிறேன்.
எப்போதும் இது போன்ற விஷயத்தில் நம் உடல் நலம் என்பது மிக மிக முக்கியம்.
முதலாவதாக இதில் கவனிக்க வேண்டியது,மாதவிடாய் காலம்.
அது சரியா இருப்பது ஒரு பெண்ணுக்கு ரொம்ப முக்கியம் ஜெயந்தி.
அது மாதா மாதம் சரியான தேதியில் வருதா...?தள்ளி வந்ததுன்னா எத்தனை நாள் தள்ளி வருதுன்னு கவனிக்கனும்.
திருமணத்திற்க்கு முன்பே இந்த பிரச்சனை இருக்குன்னாலும் அதை முதலில் சரி செய்யனும்.(சரியான மருத்துவரிடம்...).
அதுவும் சரியா இருக்கு அப்படின்னா,அடுத்து பார்க்க வேண்டியது தைராய்டு பிராப்ளம் இருக்குதான்னு.ஆனால் உங்கள் உடம்பு ஒல்லியா இருக்குன்னு சொல்லி இருக்கீங்க.தைராய்டு இருந்தா உடம்பு நல்லா வெய்ட் போடும்.ஆனால் ஒரு சிலருக்கு வெய்ட் குறைய வாய்ப்பு இருக்கு.தைராய்டு பிராப்ளம் இருந்தாலும் குழந்தை பேறு தள்ளி போக வாய்ப்புகள் உண்டு.(சிக்கிச்சை பெற்றால் குணமடையும்.பயமுறுத்துவதாக நினைக்க வேண்டாம்)
அடுத்து கர்ப்பபை தாங்குற அளவுக்கு சிலருக்கு போதுமான சத்து இருக்குறது இல்ல.கரு முட்டை உண்டாகி அது விரிவடையும்போது அதை தாங்குற சக்தியை பெற்றிருக்க மாட்டார்கள்.அப்படி உள்ளவர்கள் அதற்க்கான சிக்கிச்சையை நிச்சயம் மேற்கொள்ளனும்.ஊசி,மருந்துன்னு அதன் மூலம் கருவடைய செய்வாங்க.அது நல்லா வளர்ச்சி அடைகின்ற வரைக்கும் ரொம்ப கவனமாக ரெஸ்ட்டா அவங்களை வைத்து கொள்வாங்க.அப்படிதான் அவங்களை குழந்தை பெற செய்ய முடியும்.இது சிலருக்கு நடந்து இருக்கு.
அடுத்து டாக்டர்ட்டன்னு போனீங்கன்னா உங்க கணவரையும் உங்களையும் விந்தணுக்கள் டெஸ்ட் எடுத்து பார்ப்பாங்க.கவுண்டிங் சரியா இருக்கான்னு.அது இதுவரை நீங்க செய்து இருக்கீங்களான்னு தெரியல.இதுல நீங்க என்னன்னு முயற்ச்சி செய்து இருக்கீங்க.என்ன மாதிரி ட்ரீட்மெண்ட் எடுத்து இருக்கீங்கன்னு பாருங்க ஜெயந்தி.
ஆனால் எக்காரணத்தை கொண்டும் மனதைரியத்தையும்,நம்பிக்கையும் கை விட்டுடாதீங்க.எனது மாமியாருக்கு முதல் குழந்தை உருவாகி கலைந்து விட்டதாம்.அதன் காரணம் நான் சொன்னேனே அதே போல் கருவை தாங்க கூடிய சக்தி இல்லை என்பதால் தான்.அப்புறம் ஐந்து வருடம் கழித்து என் கணவரை சுமந்தார்களாம்.அதுவும் ஊசி மருந்து என தகுந்த பாதுகாப்புடன் கவனமாக இருந்து பெற்றார்களாம்.அதன்பிறகு அடுத்தடுத்து என என் மாமியாருக்கு நான்கு குழந்தைகள் ஆயிற்று.அப்படிதான் ஜெயந்தி.
எனவே நம்பிக்கையோடு இருங்கள்.
இன்னொரு விஷயம்,சில சகோதிரிகள் கல்யாண புதிதில் கரு வாகிட கூடாது என்பதற்க்காக மாத்திரை எடுத்து கொள்கிறார்கள். அதுவே சிலருக்கு நாளடைவில் கருவடைய செய்யாமல் போய்விடுகின்றது.அது ரொம்ப பெரிய தப்பு அப்படின்னு பட்டதற்க்கப்புறம் தான் யோசிக்கிறாங்க.
என்னவோ ஜெயந்தி காலம் தாழ்த்தாமல் டாக்டரை கலந்தாலோசித்து என்ன ட்ரீட்மெண்ட் செய்யனுமோ அதை நல்ல படியா செய்யுங்க.அதுக்கு முன்னாடி நான் உங்கள்ட்ட சொல்ல விரும்புவது நீங்களும் உங்கள் கணவரும் நல்ல சந்தோஷமா உடலுறவு கொள்ளுங்கள்.நல்ல புரிந்துகொள்ளலும் வேண்டும்.
மாதவிடாய் முடிந்து தலை குளி்த்த பின் (துர்கா அவர்களுக்கு சொன்னதை படியுங்கள்)அதன்படி நடந்து கொள்ளுங்கள்.
எல்லாம் வல்ல இறைவன் சோதிப்பான்.அது என்றும் நிரந்தரமல்ல.கை விட மாட்டான்.நல் வழி காட்டுவான்.இதுவே வாழ்க்கையின் மிக பெரிய நம்பிக்கை அஸ்திவாரம்.சரியா.....ஜெயந்தி.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

Hi, my Friends

எனது காதல் திருமணம் என்பதால் என் அப்பா அம்மா எனக்கு திருமணம் முடிந்து கையொடு என்னை ஒதிக்கிவிட்டர்கள் என் அம்மா அப்பா கல்யாணம் முடிந்து 3ஆம் மாதம் தாலி கோர்க்கும் போது என் வீட்டிற்க்கு வந்தார்கள் அதன் பிறகு இதுவரை வரவில்லை (அவர்கள் சம்மதத்துடன் தான் திருமணம் முடிந்த்தது) நான் என் அம்மா அப்பா வீட்டிற்க்கு போனாலும் பேசுவதும் இல்லை மரியாதை தருவது இல்லை என் வீட்டுகாரிடம் பேசுவதும் இல்லை என் மாமியார் எதாவது குறை சொன்னால் என் அம்மாவிடம் சொன்னால் நீயே தேர்ந்த்த்தெடுத்த வாழ்க்கை என்று அடிக்கடி வார்த்தைகளால் சுடுகிறார் என் மாமியார் என்னை வீட்டை விட்டு அனுப்பிய பிறகு நானும் என் விட்டுகாரரும் இதுவரை மாமியார் வீட்டிற்கு போகவில்லை (மாமியார் நாத்தானார், கொலன்தனார், மாமனார்) அவர்களிடம் பேசவில்லை, என் மாமியார் எல்லா உறவினர்களிடம் என்னை பற்றி குறை சொல்லிகொண்டு அழுக்கிறாரர், என் மகனை என்னிடம் இருந்து பிரித்துவிட்டால் என்று சொல்கிறார், உறவினர்கள் வீட்டிற்கு வந்து என்னை சில பேர் தீட்டுக்கிறார்கள் , சில பேர் கேள்வி கேட்கிறார்கள் என் வீட்டுகாரிடம் உங்கள் அம்மாவை (நாத்தானார், கொலன்தனார், மாமனார்) பாருங்கள் பேசுங்கள் என்றால் எந்த பெற்ற தாயாவது தன் மகனை நள்ளிரவில் வீட்டை விட்டு அனுப்புவார்களா என்று கேட்க்கிறார் சில சமயம் அழுக்கிறார் அதுமட்டுமில்லை அவர்கள் பற்றி பேச அரம்பித்தால் எங்கள் இருவருக்கும் சண்டை வருகிறது என் மாமனார் அவரையும் வீட்டை விட்டு அனுப்பிவிட்டார்கள் நான் மட்டும் தான் என் மாமனார்விடம் பேசுகிறேன் என் விட்டுக்காரர் பேசுவது இல்லை நான் பேசுவதால் நீ அவரிடம் (மாமனார்விடம்) பேசக்கூடாது என்று எங்கள் இருவருக்கும் சண்டை வருகிறது அதனால் எனக்கு யாரும் இல்லை என்று மிகவும் அழுத்தது உண்டு நான் அனாதை என்று தான் நினைத்தேன் நீங்கள் எனக்கு பதில் அளித்தது பார்த்து இப்போழுது என் அருசுவை தோழிகள் இருக்கிறாரர்கள் என்று ச்ந்தோசமாக உள்ளது .

பதில் அளிக்க தாமதம் ஆனதற்கு வருந்துகிறேன் பதில் அளித்த என் எல்லா தோழிகளுக்கும் மிகவும் நன்றி

உதவுங்கள் தோழிகளே
எனக்கு திருமணமாகி 1 1/2 வருடங்கள் ஆகின்றன குழந்தை இல்லை, எனக்கு periods 28நட்கள் சுழற்சிமுறை கடைசியாக periods வந்தநாள் 17 th Aiprl ஆனால் இந்த மதம் May 15ஆம் தேதி வரவேண்டியது ஆனால் வரவில்லை எனக்கு எந்த அரிகுரியும் இல்லை வந்தி, மயக்கம் இல்லை நான் எப்பொழது Pregnency Test Kit பயன்படுத்த வேண்டும் எனக்கு இன்றுடன் 34கு நாட்கள் ஆகின்றன, Please help me friends,and sisters.
உங்கள் கருத்துக்கள் அற்புதமக இருகின்றன எனகும் உதவுங்கள்

பயப்படாதிங்க. டென்ஷன் வேண்டாம். முதலில் மைன்ட் ரிலாக்ஸா வச்சுக்கங்கப்பா. நல்லதே நடக்கும்னு நம்பிக்கையோட இருங்க. ப்ரெக்னன்சி டெஸ்ட் 38 நாட்கள்ல பண்ணினா ரிசல்ட் நல்லா தெரியும். எதையும் போட்டு மனச குழப்பிக்காதிங்கப்பா. எனக்கு 45 நாட்கள் பிறகு தான் வாமிட், தலைசுற்றல் இருந்துச்சு. ஒரு சிலருக்கு எப்பவும் போல நார்மலா இருப்பங்க. ஆனால் நல்லா தூக்கம் வரும். அதனால் பயப்பட வேணாம். விரைவில் நீங்கள் அழகிய ஆரோக்கியமான குழந்தையை கொஞ்ச எனது வாழ்த்துக்கள்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

மேலும் சில பதிவுகள்