சின்ன சின்ன பதிவுகள்!!!

சின்ன சின்ன பதிவுகள்....

தோழமைகள் அனைவரும் நலமா? புது தலைப்பு... புது பதிவுகள்...

வந்த விஷயத்தை சொல்லிடறேன்... எல்லாருக்கும் மனசுல எதாச்சும் விஷயத்தை பற்றி சொல்ல தோன்றும். ச... இந்த ஒரு விஷயத்துக்கு புது இழை துவக்கினா அட்மின் அண்ணா கம்போட வருவார்'னு தோனுதில்ல???!! ;) அதுக்கு என்று ஒரு புது இழை துவக்காம நீங்க மற்றவரோடு பகிர்ந்து கொள்ள நினைத்த விஷயத்தை இங்கே சொல்லிட்டு போலாமே... படிக்கும் நீங்களும் இங்கே கருத்து சொன்னால் இன்னும் அட்டகாசமா இருக்கும்.

வீடு வீடு... வீடு வாங்கலயோ வீடு!!!

என்ன பார்க்கறீங்க வனிதா ரியல் எஸ்டேட் பண்ண ஆரம்பிச்சுட்டான்னா??? அதான் இல்லை... நான் சிரியா'ல இருக்கும்போது அங்க ஒரு ஆணை பெண் திருமணம் செய்ய அவனுக்கு சொந்தமா வீடு இருக்கணும்'னு அடிப்படை தகுதியாகவே நினைச்சாங்க. அப்போ அது தப்பா தோனுச்சு!!! ச ச... இப்படிலாம் சொன்னா நம்ம ஊருல பாதி பொண்ணுங்களுக்கு கல்யாணமே ஆகாதுன்னு (பல ஆண்கள் வாழ்க்கை தப்பிச்சிருக்கும்). ஆனா இப்போ சென்னை'ல ஒரு இடம் கட்டிடம் இல்லாம தோட்டம் அது இதுன்னு இருப்பதை பார்க்கவே ஆச்சர்யமா இருக்கு... ஆனா அப்படி விட்டு வெச்சிருக்கவன் எவனும் சும்மா விடுறதில்லை... இப்போ வித்தா 1 கோடி இன்னும் 1 வருஷம் போய் வித்தா பல கோடி'னு கோடியில கோட்டை கட்டி தான் விக்காம விட்டு வெச்சிருக்கான் (மக்க இந்த ஒரு விஷயத்துல கணக்குல புலி). இது தேவையா இல்லையா'னு யோசிச்சா ஒரு முடிவுக்கு வரவே முடியல.

அந்த காலத்துல கூட்டு குடும்பம் அதிகமா இருந்தது... நகரத்தில் கூட்டு குடும்பம் பிடிக்கலன்னு ஓடி வந்து ஒண்டு குடித்தனம் இருந்தாங்க. அது ஒன்னும் இல்லைங்க ஒரு வீட்டுக்கு ஒரு வாசல் வெச்சு அது வழியா எல்லாரும் வந்து போனா கூட்டு குடும்பம்!!! அதே வீட்டுக்கு 4 பக்க செவத்துக்கும் 4 வாசல் வெச்சு ஆளுக்கு ஒரு பக்கம் வந்து ஒவ்வொரு ரூமிலும் தனி தனியா குடி இருந்தா ஒண்டு குடித்தனம்!!! கூட்டு குடும்பத்தில் அட்ஜஸ்ட் பண்ணாதவங்க கூட இங்க ஒரே பாத்ரூம், ஒரே குடிதண்ணி குழாய்'னு பல விஷயத்துல விட்டு குடுத்து வாழ்ந்தாங்க. ;)

அப்பரம் காலம் அப்படியே மாறுச்சு... கொஞ்சம் வசதி வந்ததும் தனியா ஒரு வீடு கட்டி குடி போனாங்க. இப்போ ஒண்டு குடித்தனம் படி படியா முன்னேரிடுச்சுப்பா!!! அட ஆமாங்க... நகரம் முழுக்க இப்போ நாகரீக ஒண்டு குடித்தனம் வந்துட்டுது... அதாங்க நம்ம அபார்ட்மென்ட். முன்ன ஒண்டு குடித்தனத்தில் 5, 6 குடும்பம் இருந்தது போய் இப்போ 50, 60 குடும்பம் வாழுது!!! இந்த நவ நாகரீக ஒண்டு குடித்தனத்துல இன்னும் ஒரு ஆச்சர்யம் இருக்கு... அது என்னன்னா இங்க மட்டும் தான் சொந்த வீட்டில் இருக்கவன் கூட மாசா மாசம் வாடகை தருவான். அதுக்கு பேரு மெயின்டனஸ் சார்ஜ். அது எப்படியும் இப்போ குறைந்தது 1000'ல் இருந்து 2000 வரை வருது.

முன்னலாம் நிம்மதியா வீட்டை கட்டி குடி இருந்தாங்க இப்போ அப்படி தனியா வீடு கட்ட முடிஞ்சா அதுக்கு பேரு வில்லா... இங்கிலிபீஸ்'ல சொல்ல நல்லா ஸ்டையிலா தான் இருக்கு. நானும் ஒரு வில்லா வாங்கிட்டேன்'னு நண்பர்களிடம் சொல்ல இன்றும் பல கண்கள் கணவு காணுது. வாங்கினா சந்தோஷம் தான்பா.

முன்ன மாதிரி ஒரு வீடு அதை சுற்றி நிறைய இடம், நல்லா மரம், செடி கொடின்னு வாழ்ந்தா அதுக்கு பேரு இப்போ என்ன தெரியுமா??? "Bungalow". உஷ்!!! சத்தம்... அடுத்தவனுக்கு நிலம் வாங்கி குடுத்து சம்பாதிக்கும் ரியல் எஸ்டேட் ஆட்கள் மட்டும் தான் அதை பற்றி நினைக்கணும்.

எது எப்படியோப்பா... நமக்கும் குந்த குடிசை வேணும்ல.... முந்திக்கங்க.... உங்க கணவு இல்லம் குடி போக!!! ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்ன வெட்டியா பதிவு போட்டுகிட்டு இருக்க'னு யாரோ கம்போட வாராங்க... வனி இப்போ எஸ்கேப்!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கொஞ்சம் கடுமையான குற்றச்சாட்டா இருக்கே..!! புது த்ரெட்டே ஓபன் பண்ணக்கூடாதுன்னு எல்லாம் நான் சொல்லவே இல்லை. அதே மாதிரி அரட்டையும் கூடாதுன்னு நான் சொல்லலை. எல்லாருக்கும் பயனுள்ள மாதிரியான த்ரெட்ஸ் அதிகம் வரணும்னு சொன்னேன். அரட்டை மாதிரியான த்ரெட்ஸ்ஸை கொஞ்சம் குறைச்சுக்கலாம்னு சொன்னேன்.

அதுக்குப் போயி, நான் இந்த டாபிக்ல ஒரு த்ரெட் ஓபன் பண்ணலாம்னு இருக்கேன், உங்க அனுமதி வேணும்னு எனக்கு சிலர் மெயில் அனுப்புறதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்குங்க.. :-) பாட்டுக்குப் பாட்டு த்ரெட்டை முடிச்சு வச்சதை தவிர, வேற எந்த த்ரெட்டையும் நான் இதுவரைக்கும் நீக்கலை. இப்படி இருந்தா நல்லா இருக்கும்னு நிறைய பேர் விருப்பப்பட்ட விசயத்தைத்தான் விதிகளா கொண்டு வந்திருக்கேன். கையில கோல் எடுத்து மிரட்டுற டீச்சர் மாதிரியான ஒரு வடிவத்தை எனக்கு கொடுத்துடாதீங்க. :-) த்ரெட்ஸ் ஓபன் பண்றதெல்லாம் உங்க விருப்பம்தான்.

வனிதா மேடம்!என்ன ஆளையே காணோம்?டூர் போய்டிங்களா? என்ன புயல்மாதுரி கலக்குறன்னு சொன்னிங்க.அவ்ளோதான்.புயல் இப்ப கரையை கடந்துடிச்சி.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அட்மின் அண்ணா என்னை கட்டிபோட்டுடாங்க.நான் என்ன பன்றது?ஆடிய ஆட்டம் என்ன???

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அரட்டை மாதிரியான த்ரெட்ஸ்ஸை கொஞ்சம் குறைச்சுக்கலாம். எல்லாருக்கும் பயனுள்ள மாதிரியான த்ரெட்ஸ் அதிகம் வரணும். அது மட்டும் இல்ல. நிறைய ரிபீடட் த்ரெட்ஸ் இருக்கு. அதையும் கொஞ்சம் சரி பண்ணினா நல்லா இருக்கும்னு நெனக்கிறென். சில சமயங்களில் புதிதாக வந்துகேள்வி கேட்கும் உறுப்பினர்களுக்கு பதில் பெற தாமதம் ஆகின்றது. இப்படி அரட்டை அடிப்பதற்கு பதிலாக உதவி தேடும் புதிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் தெரிந்தால் உதவலாம்.

இது என்னுடைய கருத்து. யாரையும் புண் படுத்தும் நோக்கில் இதை எழுத வில்லை. ப்ளீஸ் ப்ரெண்ட்ஸ் யாரும் தவறாக எண்ண வேண்டாம்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

அண்ணா... நான் என்ன பயனுள்ள பதிவா போட்டுகிட்டு இருக்கேன்... அதான் கம்போட வரீங்கன்னு சொன்னேன். ;) இழை துவக்க இல்லை, சும்மா தம்மான்டு மேட்டருக்கெல்லாம் புது இழை வேண்டாம் என்றே சொன்னேன். :D

அதாருப்பா இங்க வந்து நான் பேசுன மேட்டருக்கு சம்பந்தமே இல்லாம பதிவு போட்டு இருக்கது???!! ;) நம்மை பத்தி தெரியாத புது முகங்களா??? நான் நலமா இருக்கேன்.... பென்ச் மேல ஏத்தினேன்னா உங்களை எல்லாரும் நலம் விசாரிப்பாங்க. பேசின மேட்டரை பத்தி பேசுங்கப்பா....

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா நான் உங்க பதிவை பாக்கலை. என்னோட opinion அட்மின் கிட்ட சொன்னேன்.அவ்வளவு தான். நாங்க லீஸ் வீடு பாக்கவே திண்டாடுறோம். அப்புறம் எங்க இருந்து வில்லா வாங்க. நீங்க பம்பர் ப்ரைஸ் விழுற மாதிரி எதும் லாட்டரி வச்சு இருந்தா சொல்லுங்க வாங்கிகறேன். 50 50 share ok va.

நம்ப ஊர்ல மாத வாடகை கூட குடுக்க முடியாம இன்னும் எவ்ளோவோ குடும்பங்கள் இருக்கு. இப்பலாம் ஒரு வீட்டில் 2, 3 குடித்தனம் இருந்தால் போதும் அடுத்த 2 வருடத்தில் இன்னொரு வீடுக்கு ஓனர் ஆயிடலாம். வாடகை அவ்வளவு கொடுமையா இருக்கு. நாங்களும் ரெண்டல் கேசு தான். இந்த வாடகை கொடுமையை என்னனு சொல்ல? அப்புறம் எங்க இருந்து நம்ப மாதிரி ஆளுங்க . வில்லா வாங்க. போர போக்கை பாத்தா கால் க்ரவுன்ட் கூட வாங்க கஷ்டம் தான்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

பாத்திமா... வாடகைன்னு சொல்லும்போது ஒரு விஷயம் சொல்ல தோனுச்சு.... நான் இருக்கும் இடம் எல்லாம் வாடகை 7000 - 15000 போகுது... மக்கள் இதையும் குடுத்து வர தான் செய்றாங்க. ஆனா எனக்கு என்னவோ இந்த வாடகை பணத்தை லோன்'ஆக கட்டினா அது போல் ஒரு வீடு சொந்தமாகிடும்'னு தோணும். மிஞ்சி போனா கூட ஒரு 2000 லோன் கட்ட வேண்டி வரும்... அதுக்கு கொஞ்சம் சிரமப்பட்டா வீடு சொந்தமாகிடுமே!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சமீபத்தில் ஒரு புத்தகம் படிச்சேன்.... அதில் மனிதன் எத்தனை கெட்டிகாரன்'னு சொல்லும் ஒரு கதை இருந்தது.

மாட்டை கட்டி உழ ஆரம்பித்த ஒரு மனுஷன் மாட்டுக்கு கஷ்டம் தெரியாம இருக்க அது கூட பேசிட்டே வந்தானாம். அப்போ நல்லா உழுது நல்லா பயிறு வந்தா வருவதில் உனக்கு பாதி தருகிறேன்'னு அந்த மாட்டுக்கு சோப் போட்டானாம்.... ;) மாடு "அடடா மனுஷன் எத்தனை நல்லவன்"னு ரொம்ப சந்தோஷ பட்டுச்சாம். உடனே மனுஷன் சொன்னான்... நீ முன்னால் போறதால முன்னால் வருவது உனக்கு, நான் உன் பின்னால் வருவதால் பின்னால் வருவது எனக்கு'னு. மாட்டுக்கு சந்தோஷம் தாங்கல.

அதே மாதிரி பச்சை பசேர்'னு பயிறு வந்துச்சாம்.. மாடு முன்னாடி வந்திருக்க இது நமக்குன்னு பார்த்து ஜொல்லு விட, மனுஷன் இருப்பா பின்னாடி எனக்கு வர வேண்டியது வரட்டும்'னு சொன்னான். கொஞ்ச நாளில் கதிர் வந்து நெல் கட்டி பயிறு காய்ந்து அறுவடை முடிந்தது. மனுஷன் சொன்னான் முன்னாடி வந்த வைக்கோல் உனக்கு, பின்னாடி வந்த நெல் எனக்குன்னு. ஹஹஹா.

மாடு ரொம்ப பீல் பண்ணிட்டுது... அதனால் மனுஷன் சொன்னான்... நீ கவலை படாத இதுலயும் முன்னாடி வருவது உனக்கு பின்னாடி வருவது எனக்குன்னு. வந்துச்சே.... உமியும் தவுடும் மாட்டுக்கு அரிசி மனுஷனுக்கு!!! மாடு இப்பவும் ஏமாத்திட்டானே'னு ரொம்ப பீல் ஆயிட்டுது.

ஒரு முறையாது முன்னாடி எனக்கு பின்னாடி உனக்குன்னு மாடு கேட்டுச்சாம்... மனுஷம் ஒத்துகிட்டு முதல் நாள் பொங்கல் எனக்கு, அடுத்த நாள் பொங்கல் உனக்குன்னு சொன்னானாம்!!! :( பாவம் மாடு கடைசி வரை மனுஷனிடம் ஜெயிக்க முடியல (இது இப்போ நாட்டில் சம்பலத்துக்கு வேலை பார்க்கும் பலரோட நிலை தான்... ;)தனக்கு இது கிடைக்கும் அது கிடைக்கும்'னு ஓடி ஓடி வேலை பார்த்தாலும் கடைசியில் ஒன்னும் கிடைக்காது.).

நம்ம மக்க சாப்பாட்டு விஷயத்துல எம்புட்டு கெட்டி.... அது நம்ம அறுசுவை'ல குவிஞ்சு கிடக்க குறிப்புகளை பார்த்த தெரியுதில்ல.... மாடு தெரியாம வாலாட்டிட்டுது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்