உப்பு கறி

தேதி: May 15, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மட்டன் - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
மிளகாய் வற்றல் - 10
வெந்தயம் - கால் தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
பூண்டு - 50 கிராம்
பட்டை - 2 துண்டு
கொத்தமல்லி - 2 கொத்து
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - 3/4 தேக்கரண்டி


 

மிளகாய் வற்றலை சிறு சிறுத் துண்டுகளாக கிள்ளி வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை இரண்டிரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மட்டனை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
குக்கரில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிள்ளி வைத்திருக்கும் மிளகாய் வற்றலை போட்டு வதக்கவும். அதில் 2 சிட்டிகை உப்பு போட்டு சிவக்கும் வரை வதக்கவும்.
அதில் சின்ன வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் வதக்கிய பின்னர் பூண்டை போட்டு 3 நிமிடம் வதக்கவும்.
அதனுடன் சுத்தம் செய்த கறியை போட்டு 2 நிமிடம் வதக்கி விடவும்.
அதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி மூடி வெயிட் போட்டு 5 விசில் வரும் வரை வேக விடவும். 5 விசில் வந்ததும் தீயை குறைத்து வைத்து 3 நிமிடம் வைத்திருக்கவும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, சீரகம், வெந்தயம், கறிவெப்பிலை போட்டு தாளிக்கவும்.
அடுப்பை குறைத்து வைத்து வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் கறியை போடவும். அதில் மஞ்சள் தூள், 3/4 தேக்கரண்டி உப்பு போட்டு கிளறி விடவும்.
கலவை நன்கு சுண்டி கெட்டியாக ஆனதும் இறக்கி வைத்து விடவும்.
பரிமாறும் போது மேலே கொத்தமல்லி தூவி பரிமாறவும். இந்த சுவையான குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக வழங்கியவர் திருமதி. நீலா ரமேஷ் அவர்கள்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் நீலா எப்படி இருக்கீங்க நலமா ?உங்களுடைய குறிப்பு பார்க்க ரொம்ப நல்லா இருக்கு

ஹாய் உங்கள் குறிப்பு பார்க்கும்போதே செய்து பார்க்க தோன்றுகின்றது.
ரொம்ப சிம்பிளான குறிப்பு.நா ஊறுகின்றது.
நிச்சயம் அடுத்து மட்டன் வாங்கினால் இந்த குறிப்பை தான் செய்வேன்.செய்து பார்த்துட்டு மீண்டும் வருகிறேன்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அருமையான குறிப்பு
பார்க்கும் போதே செய்யணும் போல இருக்கு
கறியில் இதுவரை வெந்தயம் சேர்த்ததே இல்லை
கட்டாயம் செய்துபார்கிறேன்
எல்லாரும் செய்ய கூடிய அளவில் தந்தற்க்கு நன்றி
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஹாய் நீலா உங்கள் உப்பு கறி செய்தாச்சு ரொம்ப நல்லா இருந்தது

அன்புடன்
நஸ்ரின் கனி