எக் நூடுல்ஸ்

தேதி: May 17, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.6 (21 votes)

 

நூடுல்ஸ் - ஒரு பாக்கெட்
நூடுல்ஸ் மசாலா - ஒரு பாக்கெட்
பெரிய வெங்காயம் - 2
காரட் - ஒன்று
பட்டாணி - கால் கப்
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
முட்டை - ஒன்று
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை


 

பெரிய வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். காரட்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும். மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் ஊற்றி பட்டாணியை போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு போட்டு ஒரு நிமிடம் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் வதக்கிய பிறகு தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
அதனுடன் காரட், வேக வைத்த பட்டாணி, நூடுல்ஸ் மசாலா சேர்த்து முக்கால் கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் பிரட்டவும்.
பிறகு நூடுல்ஸை உடைத்து போட்டு காய்கறியுடன் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
நன்கு நூடுல்ஸ் வெந்து தனித்தனியாக பிரிந்து வந்தவுடன் பொரித்து வைத்திருக்கும் முட்டையை சேர்த்து 2 நிமிடம் பிரட்டி விட்டு இறக்கவும்.
சுவையான எக் நூடுல்ஸ் ரெடி. இந்த குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக வழங்கியவர் திருமதி. நூர் நாச்சியார் அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

I LIKE THE METHOD

IT'S VERY NICE DICE,MY CHILDREN'S LIKES IT

IT'S VERY NICE DICE,MY CHILDREN'S LIKES IT

மிச்சம் சூப்பராக இருந்திச்சி!ரொம்ப நன்றி.