தேதி: May 17, 2010
கூட்டாஞ்சோறு பகுதியின் மூலம் தனது குறிப்புகளை கொடுத்து கொண்டிருக்கும் திருமதி. வனிதாவில்வாரணிமுருகன் அவர்கள், இந்த குஷன் செய்முறையை அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார்.
சாட்டின் துணி
ஊசி, நூல்
பஞ்சு
ஸ்கேல், மார்க்கர்
பெரிய ஊசி மற்றும் 2 பட்டன்கள்
சாட்டின் துணியை தேவையான அளவில் வெட்டி எடுத்துக் கொள்ளவும். (படத்தில் காட்டியிருப்பது அரை மீட்டர் துணியின் அளவு). அதன் உட்பகுதியில் நான்கு பக்கமும் ஒரு இன்ச் முதல் 1 1/2 இன்ச் அளவு இடைவெளி விட்டு கோடு போட்டுக் கொள்ளவும்.

துணியின் நடுப்பகுதியை நீளவாக்கில் சமமான அளவில் மூன்று பாகமாக பிரிக்கவும்.

பிரித்த மூன்று பகுதியில் நடுப்பகுதியை விட்டு விட்டு மீதம் இருக்கும் இரண்டு பாகத்திலும் அரை இன்ச் அளவில் கோடுகள் வரைந்து கட்டங்கள் வரையவும். வரைந்த கட்டங்களில் ஒரு கட்டம் விட்டு ஒன்று என்ற கணக்கில் குறுக்கே கோடு வரையவும். (அரை மீட்டர் துணியில் 12 வரிகள் வரும்)

முதல் 6 வரிகள்('\') தொடர்ச்சியாகவும், அடுத்த 6 வரிகள்('X') ஒரு வரி விட்டு ஒன்றாகவும் வரையவும். இது போல் இரண்டு பாகம் முழுவதும் வரைந்து கொள்ளவும்.

படத்தில் காட்டியுள்ளது போல் ஒவ்வொரு குறுக்கு கோட்டின் முனைகளை சேர்த்தது போல் முடிச்சு போடவும். இதுப்போல் அனைத்து குறுக்கு கோட்டையும் ஊசி நூல் கொண்டு இணைத்து முடிக்கவும்.

தைத்து முடித்தப் பின்பு வெளிப்பக்கம் படத்தில் உள்ளது போல் சுருக்கம் வந்திருக்கும்.

இப்போது துணியை சேர்த்து தையல் போடவும். பின் மேல் பகுதியை ஊசி நூல் கொண்டு சேர்த்து நன்றாக தைக்கவும்.

நடுவே பஞ்சை ஒரே சீராக அடைத்து மறு முனையும் சேர்த்து தைக்கவும். இரண்டு பக்க முனைகளையும் இணைக்கும்படி பெரிய ஊசி கொண்டு பட்டன் வைத்து ஆப்பிள் வடிவம் வரும்படி தைக்கவும். இப்போது அழகான வட்ட வடிவ குஷன் தயார்.

Comments
வனிதா நன்றாக இருக்கின்றது
வனிதா நன்றாக இருக்கின்றது குசன்.முதலில் என் பாராட்டுகளைப் பிடியுங்கள்,
சமையலில் அசத்திக்கொண்டு இருந்த நீங்கள் இப்போது கை வேலையில் அசத்துறீங்க.
பிள்ளைகளையும் பார்த்து கொண்டு, எப்படி உங்களால் மட்டும் இப்படி முடிகின்றது.
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.தொடர்ந்து உங்கள் கலை வண்ணங்களை எதிர்பார்கின்றேன்.
தொடர்ந்து வருவேன். நீங்களும் வாருங்கள்.
அன்புடன் ராணி
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
வனி
குஷன் சூப்பர்......உங்கள் எல்லா கைவினைகளும்தான்..
ஒவ்வொருமுறையும் பாராட்டி பதிவு போட நினைப்பேன்..வேறு ஏதாவது ஒரு கவன சிதறலில் மறந்துவிடும்.....
பத்திரமா பாத்துக்கங்க...இன்னிக்கி நைட் வந்து சுடலாம்னு இருக்கேன்...
அட்ரசுதான் கைவசமிருக்கே...அதனால..:-
தொடரட்டும் உங்கள் அசத்தல்
அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
superb
cushion arumai pictures & notes nandraha ulladhu
kavitha
ரொம்ப அழகாக இருக்கிறது
வாழ்த்துக்கள்
செயல்முறை தெளிவாக இருக்கிறது
என்றும் அன்புடன்,
கவிதா
கண்ணாடி போட்டுப் பாராட்டுகிறேன்
கண்ணாடி எல்லாம் போட்டுப் பார்த்துப் பாராட்டுகிறேன் இம்முறை. ;)
அழகு குஷன் வ . னி . தா. ;))
- இமா க்றிஸ்
ஹலோ வனிதா
ஹலோ வனிதா, உங்களுக்கு இது தான் எனது முதல் பின்னூட்டம். குஷனை பார்த்தவுடன் நிச்சயம் உங்கள் படைப்பு தான் என்று யூகித்தேன்.உங்கள் கைகளை போலவே உங்கள் மெஹன்தியும் அழகு. நீங்கள் செய்து காட்டும் குஷன் படைப்புகளும் அழகு. வாழ்த்துக்கள்.
நன்றி அட்மின்
குறிப்பை வெளியிட்ட அட்மின்'கு மிக்க நன்றி. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
யோகராணி
யோகராணி... மிக்க நன்றி. :) சமையல் இப்போ அடுப்படி பக்கமே போக விடுறதில்லையே... அதான் குழந்தைகள் தூங்கும் நேரம் இப்படி எதாச்சும் செய்துட்டு இருக்கேன். உங்க பின்னூட்டம் தான் முதல்ல படிச்சேன். மிக்க நன்றி.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
இளவரசி
இளவரசி... மிக்க நன்றி. :) அவசியம் சுட்டுட்டு போங்க... அப்படியாது வந்தா சரி. இப்போ மழையா இருக்கு, மழை நின்னதும் வாங்கோ. ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
nasi2008
தோழி... மிக்க நன்றி. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கவிதா (uk5mca)
கவிதா... மிக்க நன்றி. :) இப்போதெல்லாம் அடிக்கடி என் குறிப்புகளில் உங்க பின்னூட்டம் பார்க்க மகிழ்ச்சியா இருக்கு.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
இமா... இமா...
இமா... மிக்க நன்றி. :) நானும் கண்ணாடி போட்டு தேடினேன் பிழை இருக்கோ என்று... கிடைக்கல்ல. ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஹர்ஷா
ஹர்ஷா... மிக்க நன்றி. :) முதல் பின்னூட்டமே மனசில் நிக்கும்படி போட்டிருக்கீங்க.... ஹிஹிஹீ... மிக்க நன்றி கை அழகுன்னு சொன்னதுக்கும் சேர்த்து ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
rounded cushion
hi,
it looking very nice and lovely,colour also eye-catching.
and thank u very much for your explanation and sharing.
can u explain me how to make square and rectangled cushion and how much cloth willbe needed for doing thing. Thank u once again.
chitrasundar
சித்ரா... மிக்க நன்றி. நான் இந்த குஷனுக்கு 1/2 மீட்டர் பயன்படுத்தி இருக்கேன். ஆனால் அளவு நீங்க செய்ய விரும்பும் குஷனின் அளவுக்கு ஏற்ற மாதிரி நீங்க வாங்குங்க. சதுர வடிவ குஷன் குறிப்பும்(http://www.arusuvai.com/tamil/node/14805) முன்பே வெளி ஆகி இருக்கிறது. அது போல் 1/2 மீட்டரில் இரண்டு குஷன் செய்யலாம். சந்தேகம் இருந்தால் கேளுங்கள். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Thank you vanitha.
Thank you vanitha.
வனி
குஷன் மெத்து மெத்துன்னு ரொம்ப நல்ல இருக்கு வனிதா.
ஜலீலா
Jaleelakamal
ஜலீலா
ஜலீலா... மிக்க நன்றி. எப்படி இருக்கிறீங்க? குழந்தைகள் நலம? முன் போல் அடிக்கடி பார்க்க முடியலயே...
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
அன்பு வனிதா, குஷன் சூப்பர்.
அன்பு வனிதா,
குஷன் சூப்பர். கடைகளில் பார்ப்பது போலவே உள்ளது. எங்க அம்மாவிற்கு தையலில் ரொம்ப விருப்பம். அவர்களிடம் காண்பித்து இதுபோல் செய்ய முயற்சிக்கிறேன்
Save the Energy for the future generation
இந்திரா
இந்திரா... மிக்க நன்றி. அவசியம் செய்து பார்த்து சொல்லுங்கள். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Great
Migavum arumai! if possible pl tell us sweater knitting.......... keep up ur good work.
Very nice vanitha
i am new to this site.
ur cushion is very nice. but innum konjam details kudutha nalla irukum vanitha
Do or die
njydelife
தோழி... உங்க பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி. எனக்கு ஸ்வெட்டர் பின்னும் முறை தெரியலங்க... தோழிகள் யாரும் தெரிந்தா கண்டிப்பா சொல்வாங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஜமுனா
மிக்க நன்றி. உங்களை அறுசுவைக்கு வரவேர்க்கிறேன். இன்னும் எது போன்ற டீடைல்ஸ் வேண்டும்?? தெரிந்தால் நிச்சயம் தெளிவுபடுத்துகிறேன்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
thank u vanitha
Thanks vanitha ivvalavu quicka ans varumnu nan expect pannala. enaku 1st, 2nd, 5th,7th and 8th step eduvum sariya puriyala. sorry
Do or die
ஜமுனா
என்னால முடிந்தவரை தெளிவா சொல்ல பார்க்கிறேன்...
1. முதல் ஸ்டெப்பில் துணியின் 4 பக்கமும் ஓரங்களில் 1 இன்ச் அல்லது 1/2 இன்ச் அளவு தைக்க இடைவெளி விட்டு கோடு வரைய சொல்லிருக்கேன்.
2. இரண்டாவது ஸ்டெப்பில் 4 கோட்டுக்கும் நடுவே இருக்கும் பகுதியை மூன்று பாகமாக பிரிக்க சொல்லிருக்கேன். அளவு எடுத்து சரியாக மூன்று பகுதியா பிரித்து இரண்டு கோடு வரைங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஜமுனா
5. ஸ்டெப் 4ல் உள்ளது போல் கோடுகள் வரைந்ததும் ஒவ்வொரு சதுரத்துக்கும் நடுவே உள்ள குருக்கு கோடை எடுங்க. அந்த குறுக்கு கோட்டின் ஒரு முனையில் ஊசியை விட்டு அடுத்த முனையில் எடுங்க. வந்த முனையில் நூலை சுற்றி முடிச்சும் போட்டுடுங்க. துணி சுருங்கினாப்போல வரும். இதே போல் எல்லா சதுரத்தில் உள்ள குறுக்கு கோடுகளையும் முடிச்சு போட்டு வைக்கவும்.
7. எல்லாம் சதுரமும் தைத்து முடிச்ஹ்ச்ஹதும் துணியின் நீள வாட்டில் உள்ள இரண்டு பக்கமும் மிஷினில் சேர்த்து தைங்க. இப்போ ஒரு பாவாடை போல் கிடைக்கும். பின் அதோட குறுக்கு பகுதியை சேர்த்து தைங்க. சுருக்கி பிடிச்சு ஊசியா தைங்க. இப்போ மூன்று பக்கமும் தைத்து முடிச்சு ஒரு பக்கம் மட்டும் தைக்காம இருக்கும்.
8. திறந்து இருக்கும் பக்கம் வழியாக பஞ்ச்ஹை அடைக்கவும். முழுவதும் அடைத்து முடித்ததும் திறந்து இருக்கும் பக்கத்தையும் சேர்த்து ஊசியால் தைக்கவும். தைத்த பின் உங்களுக்கு ஆப்பிள் போல் இருக்காது. அந்த வடிவம் கொடுக்க நடு பகுதி இரண்டையும் பலூனை அழுத்தி செய்வோமே அது போல் அழுத்தி பெரிய ஊசி கொண்டு சேர்த்து தைக்க வேண்டும். அப்படி தைக்கும் போது விரும்பிய பட்டனை சேர்த்து தைத்தால் தைத்த இடம் தெரியாமல் அழகாக முடிக்கலாம்.
புரியுதா??? என்னால முடிஞ்ச மாதிரி தெளிவுபடுத்த முயற்சி செய்தேன்... புரியலன்னா சந்தேகம் கேளுங்க... அவசியம் சொல்றேன்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா
ரொம்ப அழகாக இருக்கிறது வனிதா .உங்கள் திறமையை பார்த்து பலமுறை வியந்திருக்கிறேன் .எல்லாவற்றையும் ரொம்ப அழகா ரசித்து ரசித்து செய்றீங்க .வாழ்த்துக்கள்.
kaminiselvi
ரொம்ப ரொம்ப நன்றி தோழி. உங்க பின்னூட்டம் படித்து ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
uaerhag\
agrer
Pakka
hi cushion is super. Today i'm going to try this.If i have any doubts i will ask you.I did't expect this from you.Keep it up
hi vani
ஹாய் வாணி. நான் லண்டனில் இருகிறேன். ஒரு வருசத்துக்கு முன்னாடி டிவி இல் இதுபோன்று பார்த்தேன் ட்ரை பண்ணினேன் பட் நோ யூஸ். இப்போ சதுர வடிவு குஷியன் செஞ்சுச்டு இருக்கேன். வட்ட வடிவு கொஞ்சம் புரியாத மாதிரி தெரியுது. ஆனாலும் வெரி நைஸ். thank you so much. take care. i think you will reply me. bye bye...................
ALWAYS BE ACTIVE. NOTHING IS IMPOSSIBLE TO DO, SO BE CONFIDENT IN YOUR LIFE.
கீதா
மிக்க நன்றி. சந்தேகம் வந்தா அவசியம் கேளுங்க... நிச்சயம் சொல்றேன். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
பர்வீன் ஹமீத்
மிக்க நன்றி பர்வீன். என்ன புரியலன்னு சொல்லுங்க, எனக்கு தெரிஞ்ச வரை நான் சொல்லி கொடுக்கறேன். ரொம்ப தாமதமா பதில் போடுறேன்... கோவிக்காதீங்க, நான் இப்போ தான் பதிவை பார்க்கிறேன் :(
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ROUND KUSHAN
ஒண்ணுமே புரியல தெளிவா விளக்கவும் .வட்ட வடிவம் எப்படி வந்தது ,
குஷன்
எப்படிசெய்வது.வட்டம்வரவில்லைதெளிவாகவிளக்கவும்.
செண்பகம்
செவ்வக வடிவ துணியை இரண்டு பக்கமும் கட்டி அழுத்தி பிடிச்சா வட்ட வடிவம் தானே வரும்.... அதில் ஏதும் கஷ்டம் இல்லையே. நடுவில் கோடுகளிட்டு முடி போடுவது டிசைன் தர தான். இல்லன்னாலும் இரண்டு பக்கத்தையும் பிடிச்சு கட்டி, உள்ளே பஞ்சு வைத்து அழுத்தி, இரண்டு முனையையும் இணைக்கும் படி உள் பக்கமாக ஊசி கொண்டு இழுத்து தெச்சா ஆப்பிள் வடிவம் தானே வந்துடும். நம்ம சின்ன வயசில் பலூனில் ஆப்பிள் செய்வோமே... அதே முறை தான் இங்கையும். புரிஞ்சுதா? :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஹலோ செல்லம் Hello Dear
ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta