சமச் சீர் கல்வி

அன்புத் தோழிகளுக்கு,

இப்போது தமிழ் நாட்டில் அறிமுகப் படுத்தப் பட இருக்கும் சமச் சீர் கல்வி முறை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

CBSE, Matiruculation, International Schools இவை பற்றி, இவற்றின் சிறப்பம்சங்கள் பற்றி சொல்லுங்கள்.

தோழிகளில் பலர் தமிழ் நாட்டில் படித்து விட்டு இப்போது வெளி நாட்டில் வசித்துக் கொண்டு இருக்கிறீர்கள். அங்கு உள்ள பள்ளிகளின் கல்வித் தரம், இங்கு இந்தியாவிற்கு வரும் போது, இங்கு உள்ள உறவினர்களின் குழந்தைகள் இங்கே படிக்கும் பள்ளிகளின் கல்வித் தரம் பற்றி ஒப்பீடு ஏதும் இருக்கிறதா?

அன்புடன்

சீதாலஷ்மி

அருமையான இழை....இது நீங்கள் போட்டதே தெரியவில்லை...இப்போதுதான் கண்ணில் பட்டது...

சமச்சீர் கல்வியில் எனக்கு உடன்பாடு இருக்கிறது...

ஒரு சாதரண அரசு பள்ளியில் படிக்கும்
மாணவனுக்கு நன்மை:

தாய்மொழியில் குறைந்த பாடத்திட்டங்கள்....கற்பதும் மதிப்பெண் பெறுவதும் எளிமையாய் இருக்கிறது

மெட்ரிக் பள்ளியில் படிக்கும் மாணவனுக்கு நன்மை:

ஆங்கில அறிவு விருத்தியாவதால்,கல்லூரி/வேலை வாய்ப்பு சமயத்தில் திறமையை சரியாக தரமான ஆங்கிலத்தில் தேவைப்படும்போது வெளிக்காண்பிப்பதற்கும்,கற்பதிலும் கடினம் இருப்பதில்லை

மேலும் சாதரண பள்ளியில் உதாரணத்துக்கு ஒரு 10 ஆம் வகுப்பு மாணவன் அறிவியலுக்கு ஒரு புத்தகம்(100பக்கங்கள்) படித்தால் மெட்ரிக் மாணவன் அதே அறிவியலுக்கு 4 புத்தகங்கள் படிக்கிறான்(400 பக்கங்கள்) அதனால் அதிக விஷயங்கள் புரிந்து கொள்ள முடிகிறது.

மத்தியகல்வி திட்டம்(CBSE) படிப்பதால் நன்மை:

மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி அறிவு அதிகமிருப்பதால்..இந்தியாவின் எந்த மாநிலத்திலும் எளிதாக ஒன்றிப்போய் உயர்கல்வி படிக்கவோ/வேலைப்பார்க்கவோ முடியும்....மற்ற மாணவர்களுக்கும் முடியும்...ஆனால் அதில் சிரமமிருக்கும்

மேலும் comprehension/composition போன்ற பலவற்றை மாணவர்கள் தானாக யோசித்து எழுதவும்,பொதுஅறிவு(spellbee quiz) வளர்க்கவும் ஊக்குவிக்கப்படுவதால் அவர்களின் கிரியேட்டிவிட்டி வளர்வதற்கும் அதிகம் வாய்ப்பிருக்கிறது.முக்கியமாய் மனனம் செய்யும் முறையில்லை...

வருகின்ற சமச்சீர்கல்வி....எளிதாக்குவதாக சொல்லி,மெட்ரிக் மற்றும் CBSE
சிறப்பம்சங்களை குறைப்பதற்கு பதிலாய்...அரசு கல்வி முறையில் அந்த சிறப்பம்சங்களையும் சேர்த்துகொண்டால் நல்லது....

ஏனென்றால் எளிமையான கல்வி முக்கியம்....அதே நேரத்தில் தரமான கல்வியும் வேண்டும்.....ஆனால் மூன்றிலுள்ள சிறப்பம்சங்களை ஒரு திட்டத்தில் கொண்டுவரும் வித்தை மிகவும் கடினமான விஷயம்...எனினும் சமச்சீர் கல்வி அந்த கடினமான விஷயத்தை வெற்றிகரமாக செயலாக்கமாக்கும்
என்ற நம்பிக்கை கொஞ்சம் இருக்கிறது..

சொல்வதற்கு நிறைய இருந்தாலும் இப்போதைக்கு இந்த கருத்து மட்டும் சொல்கிறேன்.

நான் இருக்கும் இடத்தில் குழந்தைகளுக்கு cbse syllabusdhaan.

இந்த பாடத்திட்டம் நன்றாக இருக்கிறது..

ஆனால் எனக்கு இங்கிருப்பதைவிட(வெளிநாட்டைவிட ),நம் ஊரில் CBSE படிக்கும் குழந்தைகளுக்கு சிறப்பான கல்விமுறையும்,கற்று கொடுத்தலும் இருப்பதாக நினைக்கிறேன்.
அதனால் நிறைய நண்பர்கள் வேலையை விட்டுவிட்டு குழந்தைகளுக்கு நல்ல கல்வி வேண்டுமென இந்தியாவில் செட்டில் ஆக நினைக்கிறார்கள்.
மேலும் இதை பற்றி விரிவாக பிறகு பதிவு போடுகிறேன்..
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அன்பு இளவரசி,

ரொம்ப neat ஆக இருக்கு உங்க பதிவு.

எங்க வீட்டு குழந்தைகள்(!) இப்போ வேலைக்குப் போயாச்சு. அவங்களை படிக்க வைக்கறப்போ இங்க்லீஷ் மீடியம், தமிழ் மீடியம், மெட்ரிக் இப்படித்தான் பொதுவான வார்த்தைகளில் படிப்பைப் பற்றி சொல்வதுண்டு.

மதுரையில் St.Joseph convent, St.Marys, Sourashtra School, TVS, Seventh Day, Vikasa, இப்படி பள்ளிகள் பற்றி விரல் விட்டு எண்ணி விடலாம். அது அப்ப. பிறகு SBOA, Sivakasi Nadar இப்படி இன்னும் கொஞ்சம் பள்ளிகள். Central School மட்டும்தான் சி.பி.எஸ்.இ. அதைப் பற்றி அவ்வளவா ஒண்ணும் தெரியாது. கவர்ன்மெண்ட் ஊழியர்கள் மாற்றலாகி வந்தால், அவங்க பிள்ளைகளை மட்டும்தான் சேத்துக்குவாங்க அப்படின்னு ஒரு பொதுவான கருத்து.

கற்பிக்கும் முறை பற்றி நீங்களே எல்லாம் எழுதிட்டீங்க. நீங்க சொன்னது மாதிரி, தனியார் பள்ளிகளில் படித்த பெரும்பாலான குழந்தைகள், வெளி உலகத்துக்குப் பரிச்சயம் ஆகிறப்போ தடுமாற்றம் இல்லாம இருக்காங்க. அதே சமயம் தமிழ் மீடியத்தில் நல்ல மார்க், சராசரிக்கும் கொஞ்சம் மேலே இருந்த மாணவர்கள் கூட, கல்லூரிக்கு வந்ததும் பாலன்ஸ் ஆகிறதுக்கு சிரமப் படறாங்க. நான் சொன்னது பெரும்பான்மையானவங்க என்றுதான். விதி விலக்கு இருப்பாங்க.

இங்கிலிஷ் மீடியம் உள்ள தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்தால் (எங்க காலத்தில்) என்ன கமெண்ட் வரும் தெரியுமா? ‘படிக்கிற பிள்ளை எங்கேன்னாலும் படிக்கும், படிக்காத மக்கு, எத்தனை ஃபீஸ் கட்டி படிக்க வச்சாலும் படிப்பு ஏறாது’ நாங்க எல்லாம் எந்த இங்கிலீஷ் மீடியத்துல படிச்சோம்’... இப்படித்தான். இங்கிலீஷ் மீடியத்துல படிப்பு என்பதே ஒரு ஆடம்பர செலவு, வெட்டி பந்தா, பணக்காரர்களுக்கு மட்டும்தான் அது என்கிற மாதிரியான எண்ணம்தான் நிறைய பேருக்கு இருந்தது.

இப்ப நான் சந்திக்கிற இளம் தாய்மார்கள், பள்ளிக்கூடத்தைப் பற்றி பேசறப்போ, கே.ஜி.வகுப்புகளுக்கே ஐம்பதாயிரம், அறுபதாயிரம் கட்டணம் என்று சொல்கிறப்போ எனக்கு தலை சுற்றுது. ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் மாத வருமானத்தையும் பள்ளிக்கூட கட்டணத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கறப்போ, இப்போ மிக மிக அதிகமான கட்டணமாகத்தான் தெரியுது. ஆனா, சும்மா சொல்லக் கூடாது, குழந்தைகள் ரொம்ப துறுதுறுன்னுதான் இருக்காங்க. சென்னையில் நிறைய பள்ளிகளில் கம்ப்யூட்டர் எல்லா குழந்தைகளின் கையிலும் இருக்கு. பாடம் கற்பிக்கும் முறையும் சிறப்பாக இருப்பது தெரியுது.

தனியார் பள்ளிகளையும் அரசாங்கப் பள்ளிகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது எப்போதுமே இருக்கிற ஒரு விஷயம்தான். இதில் சில வருஷங்களுக்கு முன்னால ஒரு கருத்து படிச்சேன். இலவசமாக கிடைக்கும் எந்த ஒன்றும் (அது கல்வி என்றாலும் கூட) தரமாக இருப்பதற்கு உத்தரவாதமில்லை என்று. தனியார் பள்ளிகளில் பணம் வசூலிப்பதால் அவர்கள் பதில் சொல்ல கடமைப் பட்டவர்கள் என்று.

இங்கே சென்னையில், பெரும்பாலான பள்ளிகள் சி.பிஎஸ்.இ திட்டத்தின்படிதான் நடத்துகிறார்கள். அதற்கும் மேலே என்றால், சர்வதேச கல்வித் திட்டம்.

இப்போ சி.பிஎஸ்.இ.ல மார்க் சிஸ்டத்துக்கு பதிலாக, கிரேட் சிஸ்டம் கொண்டு வந்து விட்டதால், மாணவர்களுக்கு ஈடுபாடு குறைந்து விட்டது அப்படின்னு ஒரு கருத்து படிச்சேன்.

இங்கே நிறைய தோழிகள் பள்ளியில் படிக்கும் குழந்தைளின் அம்மாக்கள் இருப்பாங்க. அவங்களோட கருத்துகள் சொன்னால், தெரிந்து கொள்ளலாமேன்னுதான் இந்த இழை தொடங்கினேன்.

இன்னும் மற்றவங்களும் வந்து என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

//இப்போ சி.பிஎஸ்.இ.ல மார்க் சிஸ்டத்துக்கு பதிலாக, கிரேட் சிஸ்டம் கொண்டு வந்து விட்டதால், மாணவர்களுக்கு ஈடுபாடு குறைந்து விட்டது அப்படின்னு ஒரு கருத்து படிச்சேன்//

ஆமாங்க..இப்ப 10 ஆம் வகுப்பு ரிசல்ட்ல எனக்கு தெரிஞ்ச நண்பரோட பெண் 4

பாடத்தில் A1 grade..ஒரு பாடத்தில் மட்டும் 0.5 மார்க் குறைந்ததால
A2...அதனால் மிகவும் வருத்தப்பட்டாள்...0.5 மார்க் குறைவு என்றாலும்

அடுத்த க்ரேடுக்கு தள்ளப்படுவதும்...92-100 வரை எல்லாரும் A1 என்று மார்க்கை

குறிப்பிடாமல் சொல்வது ,மாணவர்களின் உற்சாகம் குறைய நிறைய

வாய்ப்பிருக்கிறது....நமக்கு கல்லூரியில் ஃபர்ஸ்ட் க்ளாஸ்,செகண்ட் க்ளாஸ்

போல்...ஆனால் அங்கு மார்க் (%) குறிப்பிடப்படும் அல்லவா?

//இங்கிலிஷ் மீடியம் உள்ள தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்தால் (எங்க காலத்தில்) என்ன கமெண்ட் வரும் தெரியுமா? ‘படிக்கிற பிள்ளை எங்கேன்னாலும் படிக்கும், படிக்காத மக்கு, எத்தனை ஃபீஸ் கட்டி படிக்க வச்சாலும் படிப்பு ஏறாது’ //

இந்த கருத்தை என் தந்தை சொல்லி அந்த காலத்தில் என்னை தமிழ் மீடியம்தான் படிக்கவைத்தார்...என் தம்பி மெட்ரிகுலேஷனில் படித்தான்..என் மகள் cbse......:-)

மேலும் கருத்துக்களை மற்றுமொருமுறை சொல்கிறேன்.

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

Anbana seethalakshmi vanakkam.

First of all each and every generation have the knowledge
by birth from their parents and forefathers as per the genetic in science
and as per sasthiras I think. So each generation have the knowledge from
their grandforefather> forefather>father>and the child. So comparing the
forefather the grand children have more knowledge than the grandpa because
of the 21st centuries technology development, and other situations around him. But each and every new technology stands on our elders shoulders only.
Now a days we adamantly rejected this and refuse to accept this and even we refuse to recognize their contribution to the society in some fields.
When we go up and up by the ladder but we never think about the ladder and
curse the ladder for our faults.
In olden days in India education is common to everyone
without caste and create and male and female in south india "keelppal
oruvan karpinum marrppal oruvanum avankat paduma " these lines will show
this to the public.
I studied in a convent in tamil medium till 11th std
( S.S.L.C in 1965) > Many of my classmates are e working in out side of India. My dearest friend got Gold medal in M.B.B.S. who studied
in Tamil medium with me till 11th std.
Education is same but the way in which it was given to the children is different types State board, Metric, C.B.S.E According
to the name and change of syllabus some adding and some omission .
Most of the children and the parents of metric and CBSC are feel very shame in talking in Tamil which is their mother tongue particularly in Tamil Nadu only . See the other states.
We know many of the parents send their children for tutorial after the school hours till 9 p.m.. Why cant" they get the education in the
school in where they spend in thousands as fees and donations.
When the school found the children will get low mark
in the school final they will send them mercilessly out of the school
in ninth std. Then only they will the gov.schools and gov.aided schools
for their children. Is it true or not.
The Gov.schools and aided schools are run by the
public money only and the aid of government by the tax from the people. I
I am unable to discuss about this thing more . But one thing one can decide everything by himself without anyones support when he got the
education through his mother tongue
The government equalize the lessons in all cadre
and never do harm to metric . CBSC is entirely if different.
Thanks , I will see you latter.

Anbudan poongothai.

The

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

அன்பு பூங்கோதை,

உங்க கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

நீங்க நிறைய விஷயம் எழுதறீங்க, ஆனா, அதை தமிழில் எழுதினால், இன்னும் நிறைய பேர் படிப்பாங்க, பதில் சொல்லுவாங்க. நீங்களே சொல்றீங்க, தமிழில் பேசுவதை நிறைய பெற்றோர் அவமானமாக நினைக்கிறாங்க, அது தப்புன்னு. ஆனா இங்கே அறுசுவையில் எல்லோருமே தமிழில் எழுதுவதையும் படிப்பதையும்தான் விரும்பறாங்க. அதுவும் ஏராளமான தோழிகள் வெளி நாட்டில் இருக்காங்க. அவங்களுக்கு தமிழில் எழுதப்பட்ட கருத்துகள் மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. அதனால் மீண்டும் சொல்கிறேன், தயவு செய்து, தமிழில் உங்கள் கருத்துகளைப் பதியுங்கள். இன்னும் நிறைய தோழிகள் அவங்க கருத்துகளை சொல்ல ஆர்வத்துடன் பங்கெடுத்துக்குவாங்க

தாய் மொழியில் கற்பது மிகவும் சிறப்பான விஷயம் என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால், கலைச் சொற்கள் சரியான முறையில் கையாளப்பட வேண்டும்.

அதே போல ஆங்கிலம் கற்பது, அல்லது வேறு மொழிகள் கற்றுத் தேர்வது என்பதைப் பற்றி, உங்கள் கருத்துகளோடு கொஞ்சம் மாறுபடுகிறேன். மற்ற மொழிகள் கற்றுக் கொள்வதனால் இன்னும் அதிகமான திறன் கிடைக்கும் என்றுதான் நினைக்கிறேன். அதனால் தாய்மொழியின் மீதான பிடிப்பு என்பது குறையாது.

அறிவுத்திறன் என்பது கற்றுக் கொள்ள கிடைக்கும் சந்தர்ப்பத்தையும், கற்றுத் தரும் முறையையும், கற்பிப்பவர், கற்றுக் கொள்பவர் போன்ற இன்னும் பல காரணிகளையும் உள்ளடக்கியதுதானே, இதில் பரம்பரை, சாஸ்திரம் என்பது அதிகப் பங்கு வகிக்கிறது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மன்னியுங்கள்.

நீங்க சொன்னதையேதான் நானும் சொல்கிறேன். கான்வெண்டில் இங்கிலீஷ் மீடியத்துக்கும் தமிழ் மீடியத்துக்கும் உள்ள வித்தியாசம், பாடப் புத்தகங்கள் இந்த மீடியத்துக்கு இங்கிலீஷிலும், தமிழ் மீடியத்துக்கு, தமிழிலும் இருக்கும், அவ்வளவுதான். கற்பிக்கும் முறை, ஒவ்வொரு பாடத்துக்கும் ஒதுக்கப் பட்ட நேரம், பாடத்தை நடத்தியபின், மாணவர்களுக்கு அது எந்த அளவுக்குப் புரிந்திருக்கிறது என்று டெஸ்ட் செய்வது, அவங்களை சந்தேகங்கள் கேட்க ஊக்குவிப்பது, தவறு இருந்தால் திருத்துவது, முக்கியமாக லாபரட்டரி வசதிகள் இவையெல்லாம் அரசாங்கப் பள்ளிகளில் கிடைப்பதற்கும், கான்வெண்டில் கிடைப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும் இல்லையா.

சமச் சீர் கல்வி என்பது பாடப் புத்தகங்களில் மட்டும் இல்லாமல், அவற்றை மாணவர்களுக்கு சொல்லித் தருவதிலும் UPGRADITION இருக்குமா என்பதே எனது சந்தேகம். இருக்க வேண்டும் என்பதுதான் எல்லோரும் விரும்புவதும்.

இன்னும் மற்ற தோழிகள், வேறு மாநிலங்களில் உள்ள கல்வி முறை, மற்ற கல்வி முறை, இப்படி நிறைய கோணங்களில் தங்கள் கருத்துகளை சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன். ஒரு சின்ன வேண்டுகோள், அரசியல் கலக்காமல், கருத்துகள் இருக்கணும்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

Dear Seethalakshmi,
Once again with your permission I wrote this letter
in english.
About the PARAMBARAI and SASTRAS nowadays it is called in science as GENETICS. ( marabu kuurugal)
A good teacher and school administration and the parents (childrens)
their cooperation only bring the good result to the school and child.
If the vassal had a hole what ever you put in that all are vain . I donot want discuss in this matter here anymore.
For para 5---In madras all the students 95% those who are convent
going children are going to the famous tutorials and tution masters house.
Why they are going there? Can you give me the answer? Pl. watch the news
items for good facilities given by the convents and other private institutions and give me the answer.
In the Government and Government aided schools they .are giving
coaching classes with meals and other needs . If there is no improvement
in the students performance they are called by the higher officials and
they called for explanations for their work and so many other things,
The teachers are not paid for this. any extra amount. But you are paying huge amount in convent. as fees. Pl kindly never insult the Gov.and Government aided school without knowing fully.

And in the last you mentioned that I mixed politics.Pl. kindly o
point out that place and I will correct myself. Thank you very much
for your reply. And pl. kindly excuse me if I hurt you in any place in my letter. Thank you very much From
Poongothaikannammal.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

சீதா மேடம் நல்ல இழை.

நான் படிச்சதுக்கும் இப்பதுக்குமே நிறைய்அ வித்தியாசம் இருக்கு, நான் B.Sc., Maths ல படிச்சத என் தங்கை இப்ப 12th லயே படிக்கிற அளவுக்கு முன்னேற்றம் இருக்கு.

அரசு பள்ளிகளில் வேலை கிடைச்சா நல்லதுன்னு எல்லாரும் சொல்லுவாங்க, ஏன்னா அங்க தான் வேலை செய்ய வேண்டாமாம், அதையே private schoolன்னா டீச்சர புளிஞ்சு எடுத்துடு வாங்களாம், அதனால தான் கல்வி தரம் கூட அங்க நல்லாருக்குன்னு நினைக்கிறேன்.

இன்னும் நிறைய பெற்றோர்கள், நல்ல ஒழுக்கத்திற்காகவே matriculation schoolக்கு போறாங்க,

Matriculation ல கல்வி மட்டும் இல்லாம வாழ்க்கைக்கு தேவை படற மாதிரி arts & crafts எல்லாம் சொல்லி கொடுக்கிறாங்க, அதனால நாளிக்கு வேலை கிடைக்கலைன்னா கூட கைவசம் ஒரு தொழில் இருக்கும். ஆனாலும் LKG குழந்தையை ஸ்கூல்ல சேர்த்த parents படிச்சிருக்காங்கலான்னு பார்ப்பதும், parents படிக்கலைன்னா சீட் இல்லைன்னு சொல்வதெல்லாம் சரியே இல்லை.

நாம தான் படிக்கலை, நம்ம பிள்ளையாவது படிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்கு எல்லாம் இது பெரிய பிரச்சினை.

அன்புடன்
பவித்ரா

சீதா மேடம்..நான் கூட போன மாதம் கல்வி சம்பந்தபட்ட பகிர்தலுக்காக ஒரு இழை போட்டு இருந்தேன்...
http://arusuvai.com/tamil/node/15546
ஆனால்..பகிர்தல் பெருசா கிடைக்கலை..இந்த இழை மீண்டும் துளிர் விட்டு இருப்பது சந்தோஷமா இருக்கு..
எனக்கும் கூட நிறைய குழப்பங்கள்...சந்தேகங்கள்..இந்த சமச்சீர் கல்வி பற்றி இருக்கு..என் தோழிகள் நிறைய பேர்..போர்டு மாத்தணும் னு வெறுப்பில் பேசுறாங்க..எனக்கு என்னவோ அரசாங்கத்தின் சமச்சீர் கல்வி அவ்வளவு அல்டிமேட் ஆ வரலயோனு தோணுது..

Madurai Always Rocks...

அன்பு பூங்கோதை, பவித்ரா, ஆனந்தி

இப்பதான் இந்த பதிவுகளைப் பார்க்கிறேன். கொஞ்சம் நிதானமாக படிச்சுட்டு, பதிவு போடுகிறேன்.

ஆனந்தி, நீங்க ஒரு 2 நாளைக்கு முன்னால ஏதோ ஒரு இழையில பழைய நல்ல இழைகளை தூசி தட்டி எடுக்கலாமேன்னு சொல்லியிருந்தீங்க. இப்பதான் நேரம் கிடைச்சது. நிறைய நல்ல இழைகள் இருக்கு. இன்னிக்குதான் நானே பார்த்தேன். உங்க ஐடியா நல்லா இருக்கு, அதுதான் சில இழைகளில் பதிவு போட்டேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

சீதா மேடம்...எனக்கும் புரிஞ்சது..ஒருவேளை நீங்க அன்னைக்கு நான் போட்ட பதிவை பார்த்து இருக்கலாம்னு..இந்த அதிரடி இம்பாக்ட் நல்லாவே இருக்கு..நீங்கள் நிதானமா பார்த்துட்டு பதிவு போடுங்கள்..

Madurai Always Rocks...

மேலும் சில பதிவுகள்