கம்ப்யூட்டர் நீண்ட நாட்கள் உழைக்க சில டிப்ஸ்

கம்ப்யூட்டரில் சிக்கல் வருவதற்கு முன்பே, கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய வழிகளின் மூலம் சிக்கல்கள் நேராதவாறு பராமரிக்கலாம்.

கம்ப்யூட்டர்களை சீரான இடைவெளியில் ஸ்கேன் செய்யுங்கள்
வாரம் ஒரு முறை ஸ்கேன் டிஸ்க் கொண்டு கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்வதால் ஹார்டு டிஸ்கில் உள்ள பிழைகள் சரி செய்யப்படுகிறது

அப்டேட்களுடன் கூடிய ஆன்ட்டிவைரஸ் மென்பொருளை இன்ஸ்டால் செய்யுங்கள்
எந்த வைரஸ் ஒழிப்பு மென்பொருட்களை நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வாங்கி இன்ஸ்டால் செய்ய வேண்டும். அதேபோல் வைரஸ் ஸ்கேனிங் நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொள்வதும் அவசியம்.
சில வைரஸ் ஒழிப்பு மென்பொருட்கள் ஆன்லைனிலேயே கிடைக்கும். ஆனால் இவற்றை டவுன்லோடு செய்யும்போது அதிக எச்சரிக்கை தேவை. ஏனெனில் இந்த மென்பொருள்களே ஒரு வைரஸ் பரப்பும் உத்தியாக இருந்து வருகின்றன.

ஃபயர்வால் இன்ஸ்டால் செய்யுங்கள்
இணையதளங்களுக்கு அடிக்கடி செல்லும் பழக்கமுடையவரானால், ஃபயர்வால் இயக்குவது மிகவும் அவசியம். அதிகாரப்பூர்வமற்ற, தேவையற்ற விஷயங்கள் உங்கள் கம்ப்யூட்டர்களை ஊடுருவதிலிருந்து ஃபயர்வால் தடுக்கும். .இந்த வசதியை, Start=> programs=> accessories=> Systemtools=> Security center சென்று இயக்கலாம்.
டீஃப்ராக் செய்யவும்
டீஃப்ராக்மென்டேஷன் என்பது நம் கம்ப்யூட்டரின் ஹார்டு டிஸ்கை ஒழுங்கமைக்கும் செயல்பாடு. அதாவது, நிறைய புரோகிராம்களை இன்ஸ்டால் . இதனால் கம்ப்யூட்டரின் வேகம் அதிகரிப்பதோடு, தேவையற்றவை தவிர்க்கப்படும். நம் இயக்கத்துக்கு தகுந்தாற்போல் இந்த வசதியை இயக்கலாம்.

டிஸ்க்கை சுத்தம் செய்யுங்கள்
உங்கள் கம்ப்யூட்டரின் செயல்திறனைத் துரிதப்படுத்த, டிஸ்க் க்ளீன் அப் மிகவும் அவசியம். நாம் ஏற்கனவே நீக்கி விட்ட கோப்புகளின் மீதங்களையும் இது முற்றிலும் நீக்கிவிடும்.

இணையதள டவுன்லோடுகளை குறையுங்கள்
இணையதளங்களிலிருந்து இலவச மென்பொருள் பலவற்றை டவுன்லோடு செய்வோம். குறிப்பாக அதிகாரபூர்வமற்ற இசை இணைய தளங்களுக்கு சென்று பாடல்களை டவுன்லோடு செய்வோம். இவற்றிலெல்லாம் கம்ப்யூட்டரை இயங்க விடாமல் செய்யும் திங்கிழைக்கும் மென்பொருட்கள் இருக்கும். எனவே குறைந்த அளவில் டவுன்லோடுகளை வைத்துக் கொள்வது நலம்.

பயன்படுத்தாத புரோகிராம் களை ரத்து செய்யுங்கள்
இனிமேல் இந்த புரோகிராம் தேவையில்லை என்ற நிலை ஏற்படும்போது, கன்ட்ரோல் பேனலில் உள்ள Add/remove programs பயன்படுத்தி அதனை நீக்கி விடுங்கள். இதனால் டிஸ்கில் அதிக இடம் கிடைக்கும், கம்ப்யூட்டரின் செயல்திறன் அதிகரிக்கும்.

கம்ப்யூட்டரை சுத்தம் செய்யுங்கள்
கம்ப்யூட்டரின் உட்பகுதிகளில் தூசு தங்கி விடாமல் இருக்க, வாரம் ஒரு முறை துணியால் துடைத்து தூசுகளை அகற்றுங்கள்.

தோழியர்களே இப்படி நீங்களும் உங்களுக்கு தெரிந்த டிப்ஸ்களை பதிவு செய்யுங்கள் அனைவருக்கும் பயன்படும்

எல்லோருக்கும் பயனுள்ள தகவல். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.uk5mca

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ரொம்ப நன்றி யோகராணி மேடம்
மேலும் சில டிப்ஸ் இன்டர்நெட் ப்ரௌசெரில் கீழ்கண்ட shortcut keys உபயோகபடுத்தலாம்

*எப்5 (F5) – பார்த்துக் கொண்டிருக்கும் இணைய தளத்தை மீண்டும் புதுப்பித்துப் பார்க்க

* பேக் ஸ்பேஸ் (backspace ) – சற்று முன் பார்த்த இணையப் பக்கத்தை மீண்டும் பெற

* alt +home – பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கத்தின் ஹோம் பேஜ் சொல்ல.

* ctrl+N புதிய பிரவுசர் விண்டோவினைத் திறந்திட.

* F11 இணையப் பக்கத்தினை மானிட்டரின் முழுத் திரையில் பார்த்திடவும் பின் மீண்டும் பிரவுசர் கண்ட்ரோல் பார்களுடன் பார்த்திடவும் இது வழி தருகிறது.

* Ctrl+P – பார்த்துக் கொண்டிருக்கும் முழுப் பக்கத்தினையும் பிரிண்டருக்கு அனுப்புவதற்கான முதல் செயல்பாட்டினை மேற்கொள்கிறது.

* Ctrl+H – நாம் மேற்கொண்ட பிரவுசிங் தளங்களைப் பார்வையிட.

* Ctrl+W அப்போது பார்த்துக் கொண்டிருக்கும் பிரவுசிங் விண்டோவினை மூட.

* Esc – பிரவுசிங் செய்து கொண்டிருக்கும் எந்தப் பக்கத்தின் செயல்பாட்டினையும் நிறுத்த.

* Ctrl+Enter – தளத்தின் பெயரை மட்டும் அடித்த நிலையில் இந்த கீகளைப் பயன்படுத்தினால் முழு முகவரி டைப் தானாக அமைந்திடும். www மற்றும் “.com” பெயருடன் சேர்க்கப்படும்.

ட்ரை செய்து பாருங்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

நல்ல முயற்சி சகோதரி
தானறிந்ததை பிறருக்கும் கொடுத்து வாழவைக்கும் நல்ல மனதும் பக்குவமும் உங்களுக்குள்ளது.
உங்களது அனைத்து தகவல்களையும் ட்ரை பண்ணி பார்த்தேன். வெற்றியும் கண்டேன்.

என்னிடம் நிறைய புகைப்படங்கள் கணினியில் உள்ளது .(500 கும் மேல்) அதை பல வருடங்கள் பாதுகாக்க சிறப்பான வழி கூறுங்கள். அதே போல் வீடியோ கிளிப்பிங்கும் உள்ளது.
தெரிந்தால் சொல்லுங்களேன்.நன்றி.
அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

யோகராணி மேடம்
மிகவும் நன்றி ஏதோ எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.short cut keys உங்களுக்கு உபயோகமாக இருந்ததா?எப்போதும் use செய்யுங்கள் மறக்காமல் இருக்கும்
உங்களது போட்டோ மற்றும் வீடியோ கிளிப்புகளை நீண்ட நாள் பாதுகாக்க வேண்டும் என்றால் நீங்கள் அவற்றை CD அல்லது DVD (DVD'ஸ் CD'ஸ் ஐ விட மும்மடங்கு ஸ்டோரிங் capacity கொண்டது ). நீங்கள் external hard டிரைவ் (pendrive ,hard டிஸ்க்) வாங்கி backup copy எடுத்துக்கொள்ளலாம் .
நீங்கள் ஸ்டோர் செய்யும் போது போட்டோக்களை jpeg format இல் பதிவு செய்யுங்கள் அதே போல் வீடியோ கிளிப்புகளை '.mov ' அல்லது '.avi ' format இல் பதிவு செய்யுங்கள்
நீங்கள் டிஜிட்டல் காமெராவில் இருந்து கிளிப்புக்களை வைத்து இருந்தால் நீங்கள் உபயோகபடுத்தும் software இல் சப்போர்ட் செய்யும் format இல் பதிவு செய்யலாம்
நீண்ட நாள் கம்ப்யூட்டர் இல் பாதுகாப்பது கொஞ்சம் ரிஸ்க் தான் .அதனால் backup copy எடுத்து வைத்து கொள்வது நல்லது

நீங்கள் cd அல்லது dvd எடுக்க வேண்டுமானால் dvd burner option உங்கள் கணினியில் இருக்கும் .அதில் குறிப்பிட பட்டிருக்கும் முறையில்,முதலில் empty cd அல்லது dvd ஐ பிளேயர் இல் நுழைத்து நீங்கள் தேவையானவற்றை உங்களது சிஸ்டம் டிரைவ் இல் இருந்து "add " option மூலமாக சேர்த்து "burn " option கொண்டு copy செய்து கொள்ளலாம்
pendrive அல்லது external hard disk வாங்கி உபயோக படுத்தினால் copy அண்ட் paste
method உபயோக படுத்தலாம்
சில கணினி வார்த்தைகளுக்கு சரியான தமிழ் வார்த்தை கொண்டு அர்த்தம் சொன்னால் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் மன்னிக்கவும்

ட்ரை செய்யுங்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

தகவலுக்கு நன்றி கவிதா. CD,DVD யில் கொப்பி பண்ணி வைப்பதுதான் நல்லது என்று நினைக்கின்றேன்.
அப்படியே செய்யலாம் என நினைக்கின்றேன்.
மற்றும் இன்னொரு கேள்வி முடிந்தால் பதில் தாருங்கள்.

எனது கணினியில் சில நண்பர்கள் தேவையில்லாத வெப்சைட்டுக்களை பார்க்கின்றனர் அதை பார்க்காமல் தடைசெய்ய ஏதாவது வழியுண்டா

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அன்புள்ள யோகராணி மேடம்,
கோப்பி செய்துவிடுவதே சிறந்த முறை
இது அனைவரும் எதிர்கொள்ளும் கேள்வி
எனக்கு தெரிந்த வழியை சொல்கிறேன்
நீங்கள் கீழே உள்ள வழிகளை முயற்சி செய்யுங்கள் நீங்கள் தடை செய்ய விரும்பும் தளங்களை நீங்கள் அறிந்து இருக்க வேண்டும்

1 Internet explorer ஐ லோட் செய்யுங்கள்
2. Tools ஐ கிளிக் செய்யுங்கள்
3. அதில் உள்ள Internet ஒப்டிஒன்ஸ் ஐ கிளிக் செய்யுங்கள்
4. Privacy tab ஐ கிளிக் செய்யுங்கள்
5. Privacy window ஓபன் செய்து ,Sites ஐ கிளிக் செய்யுங்கள்
6. நீங்கள் தடை செய்ய நினைக்கும் தளத்தின் பெயரை டைப் செய்து OK வை கிளிக் செய்யுங்கள்

இந்த முறையில் ஒரு தளத்தை மட்டுமே தடை செய்ய முடியும் நீங்கள் நிறைய தளங்களை தடை செய்ய வேண்டுமானால் நீங்கள் Parental control software களை வாங்கி உபயோக படுத்த வேண்டும்
கூகுளில்internet filter freeware list என்று டைப் செய்யுங்கள் உங்களுக்கு பொருத்தமான software ஐ உங்கள் தேவைக்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம் இல்லையென்றால் உங்கள் தேவை என்ன என்பதை தெளிவாக சொல்லுங்கள் எனக்கு தெரிந்தால் சொல்கிறேன்

முயற்சி செய்யுங்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

உடனே பதில் தந்தமைக்கு நன்றி கவிதா.
நீங்கள் சொன்ன முறைப்படி try பண்றேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

இந்த டிப்ஸ் நம் அனைவருக்கும் உதவும் என்று நினைக்கிறேன்
உங்களுக்கு தெரிந்தவற்றை அனைவரும் பகிர்ந்து கொள்ளுங்கள்
1. உங்களது லேப்டாப் ஐ defragment செய்யுங்கள் இது உங்களது பாட்டரியை நீண்ட நாள் உழைக்க செய்யும்

2. உங்களது ஸ்க்ரீனை டிம் செய்யுங்கள் உங்களது டிம் option ஐ மிக சன்னமாக மாற்றுங்கள்

3 .தேவை இல்லாத ப்ரோக்ராம்களை உங்களது background இல் ஓட விடுவதை தவிர்த்து விடுங்கள் ஏன் எனில் இதனால் cpu லோட் அதிகமாகி லேப்டாப் சிக்கிரம் வலுவிழக்கும்

4. தேவை இல்லாத பொது உங்களது ஹார்ட் டிரைவ்,மௌஸ்,charger , WiFi போன்றவற்றை கழட்டி வையுங்கள் அல்லது ஷட் டௌன் செய்து வையுங்க

5 .உங்களது RAM capacity ஐ அதிமாக மாற்றுங்கள் அல்லது அதற்கு ஏற்ற வரு உங்களது storage இருக்கட்டும்

6 .cd அல்லது dvd களை ரன் செய்வதை விட ஹார்ட் டிரைவ்களை உபோயோகம் செய்யுங்கள் ஏன் என்றால் அவை ஸ்பின் செய்து நேரத்தையும்,செயல் திறனையும் குறைக்கும்

7.பாட்டரி contacts களை சுத்தமாகவும்,சிக்கல் இல்லாமலும் வைத்து இருங்கள்

8.உங்களது பாட்டரிகளை அடிக்கடி சார்ஜ் செய்து உபயோகியுங்கள் உபயோகம் இல்லாத பாட்டரிகள் சீக்கிரம் செயல் இழக்கும்

9. உங்களது லேப்டாப் ஐ Hibernate செய்யுங்கள் standby வேண்டாமே..ஏன் என்றால் உங்களுடைய தகவல்கள் சேமிக்கப்பட்டு இருக்கும் அதே சமயம் தானாக ஷட் டௌனும் ஆகும்

10.உங்களது operating temperature ஐ குளிர்ச்சியாக வையுங்கள்

11. உங்களது power options ஐ கவனியுங்கள்
– ‘Power Options’ ஐ உங்களது windows control panel இல் செலக்ட் செய்து பவர் usage ஐ optimize செய்யுங்க

source :laptopmag .com

என்றும் அன்புடன்,
கவிதா

மேலும் சில பதிவுகள்