அந்தரங்க பிரச்சனைகளுக்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கமாக ஆலோசனை

helo everyone, I'm specialist consultant in “Human sexual problems & Infertility.

If you or your friends required Psychological Guidance & Counseling ask them to contact me. Im helping thru online too.
you can reach me at indian.doctor29@gmail.com

அணைத்து விதமான அந்தரங்க பிரச்சனைகளுக்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கமாக ஆலோசனை தருகிறேன். உங்கள் கேள்விகளை ஈமெயில் மூலமோ அல்லது அறுசுவை.காம் மூலமோ கேட்டு பயன்பெறுங்கள்.

மனமும் உடலும் ஆரோக்கியமாக இருக்க மிக முக்கிய பங்கு அந்தரங்கத்திற்கு உண்டு.

---

உங்களது ப்ரொஃபைலில் நீங்கள் கொடுத்துள்ள விபரங்கள் எந்த அளவிற்கு உண்மையானது என்பது எங்களுக்கு தெரியாது. உங்களைப் பற்றி நீங்களாகவே கொடுத்திருக்கும் ஒரு அறிமுகம் அது. அதை மட்டும் நம்பி உங்களிடம் தங்களது பிரச்சனைகளை தெரிவிக்க எல்லோருக்கும் தயக்கம் உள்ளது. நீங்கள் எடுத்துக்கொண்டுள்ளது மிகவும் சென்சிடிவ்வான டாபிக். இது பெண்கள் அதிகம் உலாவரும் தளம். இங்கே நம்பகத்தன்மை மிகவும் அவசியம்.

இது ஒருபுறம் இருக்க, நீங்கள் மேலே கொடுத்திருக்கும் கட்டுரை, இணையத்தில் குறைந்தது 100 தளங்களிலாவது, அடி மாறாமல் அப்படியே இடம் பெற்று இருக்கின்றது. அவை இடம்பெற்றுள்ள தளங்களின் தரத்திற்கு அறுசுவையை குறைத்துக் கொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை.

அடுத்து உங்களது கீழ்க்கண்ட Blog posting ஐ கண்ட பிறகு, உங்களைக் குறித்த எனது அபிப்ராயம் மாறிவிட்டது.

http://pra882502.blogspot.com/2009_10_01_archive.html

இதற்கு மேல் தங்களை அனுமதிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. ஒருவேளை நீங்கள் உண்மையான மருத்துவர்தான் என்றால், உங்களைப் பற்றின தகுந்த ஆதாரங்களை எங்களுக்கு அனுப்பி வைத்து, நாங்கள் அதை உறுதி செய்ய அவகாசம் கொடுக்கவும்.

திரு அட்மின்,
ஒரிஜினல் கூட சொந்த கற்பனையா கலந்து அது என் கண்டு பிடிப்புன்னு எழுதி பெறுவாங்க எனக்கு அவசியம் இல்லை.

நான் படித்தவையும் என்னிடம் உள்ள கைடுல உள்ள தாதான் இங்கு அறியாமைய போக்க மட்டும் பயன்படுத்த படும். எல்லாம் ஏற்கனவே சொல்ல பட்டு இருக்கு இதில் புதுசா சொல்ல ஒன்னும் இல்லை. எத்தன பேருக்கு அது பற்றி பொது அறியுயிற்கு?

மேலும் நன் இங்க இந்த தலைப தொடங்கியதும் நிறையபேரு காண்டக்ட் பண்ணாங்க அவங்களுக்கு ஆலோசனை வழங்கி யுர்க்கேன். ரிசல்ட் 1 month பிறகு reply பண்ண சொல்லி இர்க்கேன் ஒரு சிலருக்கு. அந்த reply உங்களுக்கு forward பண்ணப்படும்.(moreover I’m not collecting anybody personal info.)i'll provide you the feedback then you may verify Personally

i just wish to share the knowledge about it. (Socially I’m doing it thru online only as free)

if you really want to help to ur users then post my mesg. If not for me nothing loss.

நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் தலைப்பில் நிறைய சந்தேகங்கள், பிரச்சனைகள் இங்குள்ள பலருக்கும் உள்ளது என்பது உண்மை. நீங்கள் குறிப்பிட்டு இருப்பதுபோல், உங்கள் பதிவைக் கண்ட பிறகு உங்களிடம் சிலர் ஆலோசனைக்கு தொடர்பு கொண்டு இருக்கலாம். அதை நான் மறுக்கவில்லை.

"நான் மற்றவர்களிடம் எந்த சுய தகவல்களையும் பெறுவதில்லை, வெறும் ஆலோசனை மட்டுமே வழங்குகின்றேன்." என்ற உங்களின் விளக்கம் மட்டும் நீங்கள் நம்பத்தகுந்தவர் என்ற சான்று கொடுத்துவிடாது. நாளை எல்லோருமே தங்களை ஒவ்வொரு துறை சார்ந்த வல்லுநராக அறிமுகப்படுத்திக் கொண்டு, தங்களைத் தொடர்பு கொள்ளச் செய்யலாம். உண்மை என்னவென்பதை உறுதி செய்துகொள்ளாமல், உங்களைப் பற்றி குறை சொல்லவும் எனக்கு விருப்பம் இல்லை.

இதுபோன்ற அந்தரங்கம் சம்பந்தமான தலைப்புகளை தொடங்குவதற்கு முன்பு, எங்களின் அனுமதி பெற்று நீங்கள் தொடங்கி இருக்க வேண்டும். இது விதிமுறைகளில் குறிப்பிடப்படவில்லையென்றாலும், பொதுவாக எல்லோருக்குமே ஒரு சந்தேகம் வரும். இதுபோன்ற தலைப்பு தொடங்கினால் ஏற்றுக்கொள்வார்களா என்று. உங்களுக்கு அப்படி எதுவும் சந்தேகம் வந்ததாக தெரியவில்லை. நீங்களாகவே உங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, அடுத்த நாளே இப்படி ஒரு பதிவையும் கொடுத்து இருக்கின்றீர்கள். ஒரு MD படித்த டாக்டர் இப்படி எழுதுவாரா என்ற சந்தேகம் எங்களுக்கு எழுவது நியாயமானதுதான்.

உங்களை தொடர்பு கொண்டவர்களைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டு இருப்பதால், உங்களின் இந்த பதிவை நீக்கச் சொல்லி என்னைத் தொடர்பு கொண்டவர்களைப் பற்றியும் நான் குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது. நிறைய பேர் இந்த பதிவைக் கண்டு அதிர்ச்சியுற்று எனக்கு மின்னஞ்சல்கள் அனுப்பி உள்ளனர். எனவே இதை மேலும் தொடர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன். உண்மையை உறுதி செய்துகொள்ளாமல் உங்களை சந்தேகப்படவோ, குறை சொல்லவோ இயலாது. உங்கள் ப்ரொஃபைலில் குறிப்பிட்டுள்ள படி, நீங்கள் M.D., PhD செய்துகொண்டிருப்பவர் என்றால், அதற்கான ஆதாரங்களை arusuvaiadmin அட் ஜிமெயில் டாட் காம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். தகவல்களை சரிபார்த்து உறுதி செய்துகொண்ட பின்னர், நல்ல முறையில் இந்த பகுதியை வேறு வடிவில் கொண்டு வரலாம். அதுவரையில் இது சம்பந்தமாக தாங்கள் மேற்கொண்டு பதிவுகள் கொடுக்க வேண்டாம்.

மேலும் சில பதிவுகள்