ப்ளீஸ்...... யாரவது உதவி பண்ணுங்களேன்

என் அம்மாவுகு பல்லில் ஓட்டை இருந்தது அது மிகவும் வேதனையாக இருந்தது கொதி வலி தாங்க முடியாமல் இருந்தார் அப்புறம் அதை வைத்தியரிடம் கொண்டு சென்று அடைத்துவிட்டொம் அப்புறம் என் அம்மாவுக்கு அடைத்த பல் திரும்பவும் கொதிக்கின்றது இதுக்கு வீட்டு வைத்தியம் சொல்லுங்கலேன்.

நான் அழகு குறிப்பில் பல கேள்விகள் கெட்டிருந்தேன் ஆனால் அதட்கு எந்த பதிலும் வரவில்லை மிகவும் வேதனையாக இருந்தது ஒவ்வொரு நாலும் பதிலை எதிர் பார்த்து ஏமாந்தேன் இதுக்காவது பதில் குடுங்கலேன் ப்ளீஸ்

நன்றி நண்பர்களே

பல் வலிக்கு சில வீட்டு வைத்தியம் உள்ளது

பூண்டு,கல் உப்பு:
பூண்டை கல் உப்போடு சேர்த்து வலி இருக்கும் இடத்தில மேல் வைத்து இருந்தால் பாக்டீரியா infection குறையும்

வெங்காயம்:
பச்சை வெங்காயத்தை மெல்ல கடித்து அதன் சாறு பல் மேல் படுவது போல செய்தாலும் வலி குறையும்

அருகம் புல்:
அருகம் புல்லை மென்று சாப்பிட்டாலும் டசின் குறைந்து பல் பலம் பெரும்

எலுமிச்சை சாறு,கல் உப்பு :
எலுமிச்சை சாறில் கல் உப்பு சேர்த்து கொண்டு வாய் கொப்பளிக்கலாம்

கிராம்பு எண்ணெய்:

கிராம்பு எண்ணெயை பல் மீது விட்டாலும் வலிகுறையும்இது தவிர உணவில் சர்க்கரை அளவை குறைக்கவும்கால்சியம்,ப்ரோடீன் உள்ள உணவுகளை சாப்பிடவும்
பல் வலி மட்டுமே குறையும் நீங்கள் கண்டிப்பாக dentist ஐ பார்க்கவும்
தீராத பிரச்னை என்றால் root canal போல பல சிகிச்சை உண்டு அதுதான் நிரந்தர நிவாரணம் தரும்

என்றும் அன்புடன்,
கவிதா

Hi uk5mca. How are you? Root canal means what? please explain me about this detail? I'm also having dental problem.
Actually, what's ur name?

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

பல் வலி திரும்ப வந்தால் மருத்துவரிடம் போய் ரூட் கனால் செய்து விடுங்கள்.ஆனால் நல்ல பல் மருத்துவரிடம் காண்பிப்பது அவசியம்..பல்லை பொறுத்தவரை வீட்டு வைத்தியம் செய்து கொண்டிருப்பது தீர்வு தராது.
பல்லில் குழி விழுந்தால் முதல் கட்டமாக அதை அடைப்பார்கள்..இருந்தும் வலி என்றால் சிலர் பல்லிலுள்ள வேர்களை அகற்றி விடுவார்கள்.பின் வலி சுத்தமாக இருக்காது..
இது ஃபாதிமாவுக்கு... ரூட் கனால் என்றால் " பல்லை கொல்வது" என்று கூட சொல்லலாம்..முன்ப் உ பறித்து வீசப்படும் பற்கள் இன்றும் வாயினுள் காக்கப் படுகிறது...நிஜ வேரை நீக்கி செயற்கை வேர்களை பொறுத்தி விடுவார்கள்...
அதன் பின் பல்லுக்கு பெரிதாக பலம் இருக்காது எதையாவது7 கடிணமாக கடித்தால் உடைந்து விடும் என்பதால் பல்லை லேசாக செதுக்கி அதன் மேல் க்ரவுனிங் எனப்படும் கேப்பை போடுவார்கள்...பின் பல் பலமாகிவிடும்.
கேட்கும்பொழுது பெரிய விஷயம் என்றாலும் இன்று பல்மருத்துவம் வெகுவாக வளர்ந்து விட்டது./.இரண்டே சிட்டிங்கில் எளிதாக வேலை முடியும்
இன்று வலியில்லாமல் தான் பெரும்பாலும் செய்கிறார்கள்.பல்லுக்கு என்ன கேடு வந்தாலும் தாமதிக்காமல் போனால் பல்லை காப்பாற்றலாம் ..வைத்திருக்க அது கூடிக் கொண்டே போகும் பிறகு பல்லை இழக்க வேண்டி வரும்
போகும் பொழுது கைய்யால் செய்து கொண்டிருக்கும் மருத்துவரிடம் போகாமல் காசு செலவானாலும் மெஷின் கொண்டு செய்யும் மருத்துவரிடம் போகவும்.

Root Canal is the best way

hi baminy
நானும் 10 வருடங்களுக்கு முன்பு RCT எடுத்துக்கொண்டேன்.இது வரை எனக்கு அந்த பல்லில் வேறு பிரச்சனை இல்லை.அதனால் தைரியமாக உங்கள் அம்மாவையும் இந்த சிகிச்சை எடுக்க சொல்லுங்கள்.

loved to be loved

என் பெயர் கவிதா
என் paati இந்த சிகிச்சை தான் செய்து கொண்டார் இப்போது எந்த வலியும் இல்லை அதனாலேயே கொஞ்சம் அனுபவம் ...
முதலில் dentist பாதிக்கப்பட்ட பல்லை மரத்து போக செய்வார் பின்பு rubber dental dam என்ற ரப்பர் வஸ்துவை வைப்பார் பின்பு உங்களது பல் அளவை அளந்து பார்ப்பார் துல்லியமாக அளக்க x-rays அல்லது electronic imaging devices கொண்டு பார்ப்பார்.பின்பு பல்லை சுத்தபடுத்தி
gutta பெர்ச என்ற flexible plastic material கொண்டு ஒரு temporary filling போடுவார் ,அதன் பின்பு crown அல்லது permanent filling போடுவார் உங்களது infection ஐ பொறுத்தே treatment செய்ய முடியும்.

இந்த தளத்தில் உள்ள வீடியோவை பாருங்கள் http://www.metacafe.com/watch/1759080/root_canal_treatment_procedure_mumbai_india/

என்றும் அன்புடன்,
கவிதா

Root canal panna appuram evalo days pain irukum...eppo sari aagum...yarukadhu anubavam irundha sollunga pls...

ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் என்று தெரிகிறது. இப்போ எத்தனை நாட்கள்?

பெய்ன் கில்லர் மாத்திரைகள் கொடுத்திருப்பார்கள் இல்லையா? அவற்றை மறக்காமல் எடுங்கள். வலி நிற்கிற வரை அழுத்திக் கடிக்கும் உணவுகளைத் தவிருங்கள். தினமும் இரண்டு முறை பல் துலக்குங்கள். பல் துலக்கிய பின் பசை முழுவதும் போக வேண்டும் என்று நன்கு அலம்பாமல் ஓரளவு அலம்பிவிட்டு பற்பசையின் தன்மை வாயில் மீதி இருக்க விட்டுவிடலாம். அந்த உணர்வு வலியைச் சற்றுக் குறைத்துக் காட்டும். விரும்பினால் ஒரு கராம்பை வாயில் போட்டு சிறிது மென்று உமிழ்ந்து வைத்திருங்கள். (ஆனால் உங்கள் நா உண்ணும் உணவின் சுவை உணரக் கஷ்டப்படும்.)

எந்த உடல் உபாதைக்கும் ஒரு சிறந்த மருந்து, சிந்தனையை வேறு பக்கம் திருப்புவது. எப்போழும் மூளையை பிஸியாக வைத்துக் கொள்ளுங்கள்.

‍- இமா க்றிஸ்

3 natkal aagiradhu amma...innum vali kuraiyavillai...na ippo 9 months pregnant ah irukuradhala pain killer tablet adhigama edukuradhu illa...day time la neenga solra mathery ennoda mind a busy ah vatchukuren...nit mattum tablet eduthukuren....
Andha vali mattum illamal enaku moochu pudipu vandhuruchu adhuvum enna romba kasta paduthudhu amma....night time ennala sariya thoongavey mudiyala...moochu vida romba kasta paduren...

முதுகுப் பிடிப்பு - டாக்டர்ட்ட காட்டினீங்களா? சிம்பிளான விஷயம்தான். ஆனால் அதற்கு ஈடு கொடுக்குமாப் போல உடலைப் பயன்படுத்தும் போது வேறு எங்காவது பிடித்துக் கொள்ளலாம். இப்போது உறக்கம் அவசியம். மாத்திரைகள் - மருத்துவர்கள் கர்ப்பம் என்பதைக் கருத்தில் கொண்டே தான் தருவார்கள். எடுப்பது பற்றிப் பயம் வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்