Holidays பிரியறா?...

யாருக்காச்சும் holidays-கு ஊர் சுத்த பிடிக்காம இருக்குமா?... அப்புடி நீங்க போயி சுத்தி பாத்த இடங்கள்,பார்க்க விரும்பற இடங்கள் பத்தி இங்க share பண்ணிகளாமே... (நீங்க சொல்றத வச்சு தான் நா என் அன்பு கணவர் கிட்ட அந்த இடம் நல்லா இருக்குமாம் இந்த இடம் நல்லா இருக்குமாம் நு bit - ah போட்டு கூட்டிடு போக சொல்லனும்...:))

i like Milford sound in NZ which is the best place i have ever seen,

நாங்க last february-ல Coorg போயிருந்தோம்... wooowww.... really very good place... நாங்க போன time கொஞ்சம் வெயில் தான்... இருந்தாலும் நல்லா இருந்துச்சு... அங்க தல காவேரி-கு போயிருந்தோம்... Chance - ye இல்லைங்க... super-aa இருந்துச்சு... time கெடச்சா coorg plan போடுங்க...

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே...
நிம்மதியாக வாழ முயற்சி செய்...
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
Saranya SangeethKumar :)

எனக்கு கர்நாடகா'ல இருக்க சில இடங்கள் ரொம்ப இஷ்டம். அபி ஃபாள்ஸ்(Abbi Falls) (ரொம்ப வருஷம் முன்னாடி போனது, பேரு சரி தான்னு நினைக்கிறேன்) அதை சுற்றி உள்ள இடம் எல்லாமே சில்லுன்னு ரோட்டுல காலை வைக்க முடியாத அளவுக்கு சூப்பரா இருக்கும். அதை தவிற munnar பிடிக்கும். நம்ம ஊருல குற்றாலம், பாபநாசம் தான் எனக்கு பிடிச்ச இடம். அருவியில குளிக்க போகாலன்னாலும் அங்க தங்கி அந்த மலை அழகை பார்த்துட்டே இருக்கலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹி..ஹி.. ஊர் சுத்தறது, சாப்பிடுறது சம்பந்தமா ஒரு டாபிக் இருக்குன்னா, அதுல நம்ம போஸ்டிங்க் இல்லேன்னா எப்படி? :-)

நீங்க கூர்க் போனப்ப வெயிலா? நாங்க போனப்ப சரி மழை. தலைகாவேரிக்கு போற வழியில ஒரு இடத்துல ஆத்து தண்ணி ரோட்டை க்ராஸ் பண்ணுது. அந்த தண்ணீர் மட்டம் திடீர் திடீர்னு மேலே ஏறுமாம். எங்க டாக்சி ட்ரைவர் போறப்பவே, எதிர வண்டியில வர்றவங்க எல்லார்கிட்டேயும் போக முடியுமான்னு கேட்டுக்கிட்டேதான் வந்தாரு. எல்லாரும் தண்ணி குறைச்சலாத்தான் இருக்கு.. போகலாம்ணு சொன்னாங்க.. அந்த இடம் கிட்ட போனப்ப தண்ணி மட்டம் கொஞ்சம் அதிகமாயிருந்துச்சு. ஆனா க்ராஸ் பண்ணிடலாம். ட்ரைவர் கொஞ்சம் தள்ளி காரை நிறுத்திக்கிட்டு "கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி பார்க்கலாம்'னு சொன்னாரு.. என்னடா இப்படி சொல்றாரேன்னு பார்த்தா, அடுத்த சில நிமிசங்கள்ல சரசரன்னு தண்ணி பாஞ்சு வருது. கார் எல்லாம் ஈசியா முழுகிடுற அளவுக்கு தண்ணி ஓடுது.. மலையில இருக்கிற தண்ணி அங்க அங்க இருந்து சேர்ந்து இப்படி திடீர்னு அதிகமா வர்ற ஆரம்பிச்சிடுமாம். அந்த பக்கம் போயிட்டா திரும்ப வர்ற முடியாதாம். நீர்மட்டம் குறைஞ்ச பிறகுதான் வர முடியுமாம். ஒரு சில சமயங்கள்ல ரெண்டு மூணு நாள் ஆயிடுமாம். நல்லவேளைன்னு நினைச்சுக்கிட்டு, காவேரியோட தலையைப் பார்க்காம, கழுத்தை மட்டும் பார்த்துட்டு திரும்பிட்டோம். :-)

மற்றபடி, இடங்கள் எல்லாம் நம்ம கொடைக்கானல், ஊட்டி மாதிரிதான். பார்க்கிற இடங்களை விடுங்க.. சாப்பாட்டு விசயத்துல நமக்குன்னு ஒரு ஸ்பெஷல் அங்க மாட்டுனுச்சு.. அதாங்க கூர்க்ல ரொம்ப ஃபேமஸ்ஸான, அக்கி ரொட்டியும் (அரிசி ரொட்டி) அதுக்கு சைட் டிஷ்ஷா போர்க் கறியும். (பன்றி கறி). அந்த குளிர்ல சுடச்சுட செஞ்சு கொடுத்தாங்க. ஆஹா.. அந்த டேஸ்டுக்காகவே மறுபடியும் கூர்க் போகணும்.. :-) அதுக்கு முன்ன சைனீஸ் ரெஸ்டாரண்ட்ஸ்லதான் பன்றி கறி சாப்பிட்டு இருக்கேன். அது கார சாரம் இல்லாம வித்தியாசமா இருக்கும். இங்க செஞ்சிருந்தது நம்ம வீட்டுல செய்யற மட்டன் கறி மாதிரி, இன்னும் சொல்லணும்னா அதைவிட டேஸ்ட்டா இருந்துச்சு. இதை டைப் பண்றப்பவே நாக்குல எச்சில் ஊறுதுங்க.. (:-0`)

ச்ச...miss பண்ணிடீங்களே admin sir...எங்கள கூட்டிட்டு போன cab driver சொன்னாரு,Jan - Feb is right period to visit coorg-நு... என்னங்க இது... நெறய ஊர்-ல சுத்தி பாக்க இருக்கற இடங்கள் பத்தி தெரிஞ்சுக்களாம்-நு பாத்த topic coorg சுத்தியே வருது... ;-)come on sisters...உங்க ஊர் சுத்துன அனுபவத்த வந்து கொட்டுங்க...

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே...
நிம்மதியாக வாழ முயற்சி செய்...
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
Saranya SangeethKumar :)

நானும் என் கணவரும் 2008ல் வாழ்பாறை சென்றோம்.அப்பா இயற்கை காட்சிகளை காண கண் கோடி வேண்டும்.துபாயில் வெறும் பாலைவனத்தை பார்த்து போரடித்து அங்கே சென்று திரும்பி வர மனமே இல்லை.ஆனால் அங்கே தங்குவதர்க்கு இடம் எல்லாம் இல்லை.ஒரே ஒரு நாள் picnic போல சென்றுவரலாம்.ஊட்டி,கொடைகானல் போல இல்லை ஆனால் மலையை சுற்றி வெறும் tea&coffee estate தான்.என்னால் மறக்க முடியாத சுற்றுலாதளம்.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

அட நம்ம ஊர் பக்கதுல இப்படி ஒரு இடமா... அடுத்த tour-கு plan போட நேரம் வந்தாச்சு போல... Thanks Rizwana...

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே...
நிம்மதியாக வாழ முயற்சி செய்...
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
Saranya SangeethKumar :)

என்னது டூரா, அப்படின்னா...

” நமக்கு அடுப்படியே திருப்பதி, அகமுடையானே குலதெய்வம்” அப்படின்னு சொல்லிட்டு, கம்னு இருக்க வேண்டியதுதான்.))))

அன்புடன்

சீதாலஷ்மி

ரசனையுள்ள ,ரசனை வேண்டும் ஒரு இழை...
உண்மையில் இது போல் இழை போட நானும் நினைத்தேன்...:-)
உங்கள் இழையை பார்த்ததும் நான் நினைத்ததை நீங்கள் செய்திருப்பது மகிழ்ச்சியாக இருந்தது..

எனக்கு பிடிச்ச இடங்கள் நிறைய....எதை சொல்ல எதை விட ..ஆனால் நான்
மிக குறைவான இடங்கள்தான் பார்த்திருக்கிறேன்...

எங்கள் ஊருக்கருகில் இருக்கும் கன்னியாகுமரி கடல் அதைபற்றி நான் சொல்லி தெரியவேண்டியதில்லை..பெரும்பாலும் எல்லாரும் பார்த்திருப்பார்கள்.

குடும்பத்துடன் பார்த்து ரசித்த திப்பரப்பு அருவி,தொட்டிபாலம் சுற்றியுள்ள பசுமை கொஞ்சும் பகுதி...

மாணவர்களை கூட்டி சென்று ரசித்து பார்த்த அதிரம்பள்ளி பால்ஸ்,மைசூர் அரண்மனை,எழில்கொஞ்சும் பிருந்தாவனம் ...

மாணவியாய் கண்டுகளித்த கங்கைகொண்ட சோழபுரம்,பூம்புகார்,குற்றாலம்,ஓகேனக்கல்,தேக்கடி,குமிழி...எல்லாமே அருமை..

ஹனிமூனுக்கு பார்த்து ரசித்த மலேசியாவில் உள்ள லங்காவி,பினாங்,genting island,பத்துகேவ்ஸ்....,பட்டர்ப்ளை பார்க் ...இன்னும் நிறைய ....

நேரமிருக்கும்போது விளக்கமாய் சொல்கிறேன்..ஆமா இந்த கூர்க் எங்கங்க இருக்கு..நிஜமா எனக்கு தெரியல..தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்..:-)

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நான் மிகவும் சிறு வயதில் போய்வந்த சுற்றுலா இடங்கள்
இன்றுகூட என் மனதில் பசுமையாக நினைவில் இருக்கின்றன.
சிறு வயதில் எந்தோழி வீட்டிற்குப்போய்( கல்லிடைக்குறிச்சி)
ஒரு மாதங்கள்தங்கி இருந்தென். தோழியின் தாத்தா பெரிய
அப்பளகடை நடத்தி வந்தார். அப்பளத்திற்கு மிகவும் பேர் பெற்ற
ஊர்தான் கல்லிடை.அவர்கள்வீட்டில் அடிக்கடிடூர் போவார்களாம்.
முதலில் மணிமுத்தாறு என்னுமிடம் கூட்டி போனார்கள்.ரொம்ப
(பயங்கர) அமைதியான இடம்.வாட்டர் ஃபால்ஸ் தான் அங்கு ஸ்பெஷல்
அட்ராக்‌ஷன்.வீட்டில் இருந்தே இட்லி பொடிஎண்ணை,புளிசாதம் தயிர்
சாதம் ,பொரித்த அப்பளாம் என்று கட்டிக்கொண்டு போயிருந்தோம்.
அருவியில் ஆசைதீர அருமையான குளியல்.ஆம்ப்ள்ளைகளுக்கு
தனி அருவி,பெண்பிள்ளைகளுக்கு தனிஅருவி.அருவியில் இருந்து வெளியில்
வரவேமனசு வரலை.வந்ததுமே அப்படி ஒரு பசி வயிற்றை கிள்ள ஆரம்பித்து
விட்டது.பக்கத்தில் ஹோட்டல்களோ வேறு எதுவுமோ கிடையாது.
அதுதெரிந்துதான் வீட்லேந்தே எல்லாம் ரெடியாக கொண்டுவந்திருந்தார்கள்.
வயிறு நிரைய சாப்பிட்டுவிட்டு அதற்கு மேலே இருக்கும் மாஞ்ஞோலை
என்னுமிடம் போனோம். பூரவும் டீ எஸ்டேட்தன். கண்ணை கட்டி இழுக்கும்
பசுமை.பச்சை டீ இலைகளின் வாசம்.போகும்வழி,வரும்வழி பூராவும்
பசுமை நிரம்பியமர்ங்கள் செடிகொடிகளின் கண்கொள்ளாகாட்சிகள்.
இரவு வீடு வந்து படுத்ததுதான் தெரியும்.அடிச்சு போட்டதுபோல அப்படி
ஒரு தூக்கம் வந்தது பாருங்கள்.
அடுத்த நாள் எங்கும் போலை. அந்தஊரில் யார் வீட்டிலுமே பாத்ரூம்
என்று ஒரு ரூம் கிடையவே கிடையாது. அனைவருமே தாமிரபரணி ஆற்றில்
சென்று தான் குளிக்கணும்ஆற்றுக்கு சென்று வருவதே ஒரு பிக்னிக் போய்
வருவது போலதான் இருக்கும்.வீட்டிலிருந்து 1மைல்தூரம் இருக்கும் ஆறு.
தோளில் துண்டு,கையில் சோப் பாக்ஸ், இடுப்பில் குடம் சகிதமாக அனைவரும்
.கிளம்பி விடுகிறார்கள். காலில்செருப்பு கூட போடுவதில்லை.ஊரின் நடுவில் லஷ்மீபதிசாமி கோவில் அதைசுற்றிஉள்ள தெருக்களைஅக்ரஹாரம் என்கிறார்கள்.
தேருக்கள்வழியாக போகும்போது ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஒவ்வொரு
சமையல் வாசனை மூக்கைதுளைக்கும்.தெருக்கள் முடிந்ததும்ஒருசிவன்கோவில்.
அதைதாண்டினால் கன்னடியன் கால்வாய் ஒன்று ஓடுகிறது. ஆனாலும் அனைவரும் ஆற்றை நோக்கியே செல்கிறார்கள்.வாய்க்காலில் இருந்து ஆறு
செல்லும்வழி ஒற்றை அடிப்பாதைதான். இரண்டு பக்கமும்பச்சைபசேலென்று
வெல்வெட் கம்பளம் விரித்தாற்போல நெல்வயயல்கள்.அதுவும் காற்றில் நெல்
வயல்கள் அசையும் அழகை வார்த்தைகளால் சொல்லமுடியாது. நெரில் பார்த்து
புரிந்து கொண்டால் தான் அந்த அழகை ரசிக்க முடியும்.ஆற்றில் குளிப்பதும் ஒரு
ஆனந்தமான அனுபவம்தான்.ஆசை தீர நீச்சல் அடித்து முங்கி,முங்கிகுளித்து
வீடுவர 2மணி நேரமாவது ஆகிவிடும்.வந்ததுமே கமகம என்று மணம் நிரம்பிய
சாப்பாடு.அவர்கள்வீடு கூட்டு குடும்பம். ப்பெரியவர்கள் குறைந்தது15 பெர்களாவது
இருப்பார்களென்று நினைக்கிரேன். சிருவர்கள், குழந்தைகளொருடஜனுக்கு குறைவில்லை. எப்பவுமே ஜே,ஜே என்று கலகலப்பாக இருக்கும். பார்க்கவே
மிகவும் சந்தோஷமாக இருக்கும்.எங்கெங்கு சுற்றுலாகிளம்பினாலும் வீட்டில்
உள்ள அனைவருமே கிளம்புகிறார்கள்.குற்றாலம்,பாவனாசம் அகஸ்தியர்ஃபால்ஸ்
என்று நிரைய இடங்கள் போனோம்.ஒவ்வொரு இடங்களுமே மனதை விட்டு நீங்காதகாட்சிகள்தான். இத்தனை வருடங்களான பிறகும் இப்போ எழுதும்போதும்
அதேசந்தோஷம் மனதில் எட்டி பார்க்கிறது.

மேலும் சில பதிவுகள்