தேதி: May 20, 2010
Golden Venture Folding: இது origami ல் ஒரு வகைதான். இதில் சிறிய முக்கோணங்களாக வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட பேப்பர்ஸ் கொண்டு செய்யப்படும் கிராப்ட் ஒர்க். ஒரு செவ்வக பேப்பரை முக்கோணமாக மடித்து செய்யப்படும் இந்த கலைக்கு பெயர் Golden Venture Folding. ஒரு உருவம் கொடுக்க 200 லிருந்து 500 வரையிலான பேப்பர் தேவைப்படும். திருமதி. ரேணுகா அவர்கள் இந்த பேப்பர் பூ ஜாடி செய்முறையை அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார்.
விருப்பப்பட்ட நிறங்களில் கலர் பேப்பர் - A4 சைஸ்
ஒரு கத்தி
பேப்பர் பூ ஜாடி செய்ய தேவையானப் பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பேப்பரை இரண்டாக நறுக்கவும். அந்த பாதி பேப்பரை மீண்டும் இரண்டாக நறுக்கவும். இதேப் போல் நான்கு முறை நறுக்கினால் 2 சிறிய செவ்வக வடிவம் கிடைக்கும். ஒரு A4 சைஸ் பேப்பரில் 32 துண்டுகள் கொண்டு வரலாம்.

ஒரு செவ்வக வடிவ பேப்பரை எடுத்து முதலில் மேலிருந்து கீழாக இரண்டாக மடிக்கவும். மீண்டும் இடமிருந்து வலமாக ஒரு முறை மடிக்கவும்.

இடமிருந்து வலமாக மடித்ததை விரித்தால் நடுவில் ஒரு கோடு தெரியும். அதை மையமாக வைத்து இரண்டு முனையையும் முக்கோணமாக மடிக்கவும்.

முக்கோணமாக மடித்த பிறகு அப்படியே திருப்பவும். இப்பொழுது முக்கோணத்திற்கு கீழ் சிறிதளவு பேப்பர் தெரியும், அதன் ஓரங்களை மடித்து மேல் புறமாக மடிக்கவும். இனி இடமிருந்து வலமாக மடித்தால் ஒரு அரை முக்கோணம் கிடைக்கும். இது தான் முறை. இதே போல் எல்லா பேப்பரையும் மடித்து வைத்துக் கொள்ளவும்.

மடித்து வைத்திருக்கும் பேப்பரில் ஒரு புறம் இரண்டு கூர்மையான பகுதிகளாகவும், மற்றொரு புறம் இரு ஹோல்ஸ் இருப்பது போல் இருக்கும். முதல் முக்கோணத்தில் தெரியும் ஹோல்ஸில் இரண்டாவது முக்கோணத்தின் கூர்மையான பகுதியை இணைக்க வேண்டும்.

இதே போல் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இணைத்து வைத்து கொண்டு வேண்டிய பொழுது உபயோகித்து கொள்ளலாம்.

முதல் முக்கோணத்தின் பின்னால் இரண்டு முக்கோணங்களை சேர்க்க வேண்டும். ஒரு ஹோலில் ஒரு கூர்மையான பகுதி மட்டும் சேர்க்கவும். இதுதான் சேர்க்கும் முறை.

இதே முறையில் அடுத்தடுத்து இணைக்கவும். முதல் வரிசையில் 30 வைக்கவும். இரண்டாவது வரிசையில் 30 வைக்கவும். (30 + 30 = 60)

இது முதல் அடிப்பாகம். இது எளிதில் கலைந்து விடும் என்பதால் கவனமாக வைக்கவும். 3 வது சுற்று வந்தால் இறுகி விடும்.

Comments
பூ ஜாடி முதல் பாகம்
வாணி, வனிதா, கவிதா, சுந்தரமதி பூ ஜாடியில் முதல் பாகம் இதில் இருக்கிறது.
thank u
thank u madam
என்றும் அன்புடன்,
கவிதா
ரேணுகா, பூ ஜாடி
ரேணுகா ரொமப் அருமை உங்கள் பொருமைய இந்த பூ ஜாடி காண்பிக்கிறது.
இது போல் கொஞ்சம் நாட்கள் முன் வெஸ்ட் ஜோன் முத்தினாவில் ஒரு சேல்ஸ் லேடி, வித வித்மாக வாத்து போல் இன்னும் பல டிசைன்களில் பேனா , பென்சில் வைக்கும் ஸ்டாண்ட் போன்றவை பார்க்க அவ்வளவு அருமை, அவர்கள் வெரும் நியுஸ் பேப்பரில் தான் செய்து வைத்து இருந்தார்கள்.
இதெல்லாம் பொருமை உடையவர்கள் தான் செய்வார்கள் என்றூ நினைத்தேன்.
நல்ல டைம் எடுத்து அழகாக நேர்த்தியாக செய்து இருக்கீங்க.
என்றும் உங்கள்
ஜலீலா
Jaleelakamal
ஜலிலா அக்கா என் பொறுமை உங்களுக்கு புரியுது
ஜலிலா அக்கா நலமா? என் பொறுமை உங்களுக்கு புரியுது. எங்க வீட்ல எல்லாரும் எனக்கு பொறுமை இல்லைன்னு சொல்றாங்க:(
நானும் அண்ணபறவை,ஸ்டாண்ட் எல்லாம் செய்து வைத்துள்ளேன்.ஆனால் நீயுஸ் பேப்பரில் இல்லை
முதல் முறை கற்று கொள்ளும் போது நியூஸ் பேப்பர் தான்.
ஊருக்கு போயி நிறையா செய்யலாம் என்று ஒரு ஐடியா இருக்கு பார்ப்போம்
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
ஹலோ செல்லம் Hello Dear
ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta
poo jaadi
Hi,
i like all ur paper art works. i tried to do it but i can't. in poo jaadi, the joining part (ie the 9th step ) which is second from the last im not able to join it. it comes different from that of your picture. please show me the step or tell me one more time. im waiting for your reply.
thanks,
priya