பேப்பர் பூ ஜாடி செய்வது எப்படி? பாகம் - 2

தேதி: May 20, 2010

5
Average: 4.2 (15 votes)

 

விருப்பப்பட்ட நிறங்களில் கலர் பேப்பர் - A4 சைஸ்
ஒரு கத்தி

 

இப்போது மூன்றாவது சுற்றை படத்தில் உள்ளது போல் சேர்க்க வேண்டும். இதற்கும் 30 பேப்பர் தேவைப்படும்.
அடுத்து நான்காவது சுற்றில் 30 பேப்பர் கோர்த்த பின்பு, ஒவ்வொரு ஐந்து பேப்பருக்கும் அடுத்து இருக்கும் ஒரு பேப்பரை எடுத்து விட்டு நீலநிற பேப்பரை சேர்க்கவும்.
இப்போது ஐந்தாவது சுற்று. இதிலும் 30 பேப்பர் கோர்த்த பின்பு ஒவ்வொரு நான்கு பேப்பருக்கும் அடுத்து 2 பேப்பரை எடுத்து விட்டு நீலநிற பேப்பரை சேர்க்கவும்.
எட்டு சுற்று வரை 30 பேப்பரை கொண்டு சேர்த்து முடிக்கவும். நீலநிற பேப்பரை V வடிவில் சேர்க்கவும். எட்டாம் சுற்றுவரை படத்தில் இருப்பது போல் சேர்த்து கொள்ளவும்.
அடுத்து 12 சுற்று வரை 30 பேப்பர் சேர்க்கவும். இதில் நீல நிற பேப்பரை V வடிவில் தலைக்கீழாக சேர்த்தால் ஒரு டைமண்ட் வடிவம் கிடைக்கும். பிறகு 13-வது சுற்று முழுவதும் வெள்ளை பேப்பரை சேர்க்கவும்.
இப்போது 14வது சுற்றில் பேப்பரை வைக்கும்பொழுது 5,4,3,2,1 என்ற கணக்கில் சேர்க்கவும். இதுப்போல் 5 முறை வரும். இடையே டிசைன் வைப்பதாக இருந்தால் படத்தில் உள்ளது போல் வைக்கவும்.
எல்லா வெள்ளை பேப்பரையும் சுற்றி நீலநிற பேப்பரை கொண்டு பார்டர் போன்று அமைக்கவும்.
இப்போது அடிப்பக்கத்தில் சிறிய வட்ட வடிவ அட்டையை ஒட்டலாம். அல்லது இந்த முக்கோணங்களை கொண்டு படத்தில் உள்ளது போல் சிறியதாக செய்து உள்ளே வைக்கவும்.
15 சுற்றுக்கு மேல் இருக்கும் பேப்பரை மெதுவாக வெளிப்புறமாக சாய்த்து விடவும். Golden Venture முறையில் செய்யப்படும் அழகிய பூ ஜாடி தயார். திருமதி. ரேணுகா அவர்கள் இந்த பேப்பர் பூ ஜாடி செய்முறையை அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரேணுகா, சூப்பர். ஆனால் தொடக்கத்தில் எப்படி பேப்பரை மடிப்பது என்று விளங்கவில்லை.
vaany

ரேணு... சூப்பர். வாணி சொன்னது போல் எனக்கும் இன்னும் தெளிவா புரியல... முயர்சி செய்து பார்த்தா கண்டு பிடிச்சுடலாம். செய்து பார்க்கிறேன் ரேணு கண்டிப்பா. அழகான படைப்பு... பேப்பர் போல தெரியவே இல்லை. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரேணுகா மேடம்,
முதல் சுற்றில் காகிதத்தை எப்படி மடிக்கணும்?
கொஞ்சம் சொல்லவும்
மற்றபடி மிகவும் நல்ல குறிப்பு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

palaiya jeens pant & tee shatr vaithu bag thaikka sollitharavum

அழகாக இருக்கிறது ரேணு. எதிர்பார்த்தேன். ;)

உங்கள் வண்ணத்துப்பூச்சியும் (கேஸ்கட் வால் ஹேங்கிங் ) அழகு. அதற்கான குறிப்பும் கொடுக்கலாமே! ;)

‍- இமா க்றிஸ்

இது பேப்பராப்பா? சூப்பராயிருக்கு.ஆனா பேப்பர் போல்டு பன்னுரது எப்பிடிபா கொஞம் விளக்குங்கல் ப்ளீஸ்.[வனிதா மாதிரி ஆள்ன்னு எங்கலை நினைச்சிட்டீங்கலா பா அவங்க யுனிவர்சிட்டி னாங்க நர்சரி தான் பா கொஞ்ஜம் விளக்குங்க பா அரட்டை அடிச்சிட்டேனோ எஸ்கேப்]

all is well

சாரி பா இதோட பாகம் 1 பார்க்கமல் பொட்ட பதிவு இது

all is well

ரேணுகா ரொம்ப அழகான கிராப்ட் இது. வெறும் பேப்பர வைச்சு அதுக்கு அழகான உருவம் கொடுத்து செஞ்சு காண்பிச்சிருக்கீங்க சூப்பர் ரேணுகா. 525 பேப்பர் பயன்படுத்தி செய்யறதுக்கு நிறைய நாள் தேவைப்பட்டிருக்கும் இல்லையா.

hi
this flower vase using paper is very nice.
i used to see all the handicrafts, but to do it i had to buy one or
the other things.
but this one using only the paper is gr8.
i have started doing it. am in the 4th round , now waiting to buy the colour sheets.
thnx very much for this wonderful craft.
will msg again when i finish it

வாணி நன்றிப்பா, நான் அனுப்பியதை பாகம் 1 பாகம் 2 பிரித்து போட்டு இருக்காங்க.
பாகம் 1 பாருங்க ஒரு முறை மடித்து பார்த்தால் புரியும்.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

வனி எப்படி இருக்கீங்க?பாகம் 1 பார்த்து முயற்சி செய்து பாருங்க,கண்டிப்பா வரும்.
நன்றி வனி

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

கவிதா எப்படி இருக்கீங்க?மடிப்பது பற்றி பாகம் 1ல் பாருங்க.நிச்சயம் புரியும்
உங்கள் வாழ்த்துக்கு நன்றிப்பா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

வித்யா துணியை வைத்து எனக்கு எம்பிராயிடரி தான் போட தெரியும்.
வேற தெரியாது,சாரிப்பா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

இமா நலமா? எனக்கு தெரியும் நீங்கள் எதிர்பார்ப்பீங்கன்னு நான் எதிர்பார்த்தேன்:)
கொடுக்கிறேன் இமா ஆனால் இப்ப இல்லை.எனக்கு உடல் நலமில்லை அதனால்
எந்த வேலையும் இல்லாமல் இருக்கேன்.2 வாரம் கழித்து தருகிறேன்.இல்லையென்றால் இனி செப்டம்பரில் தான்.பூக்கள் கூட செய்த அனுப்ப நினைத்தேன் ஆனால் வெயிட் பன்னுங்க. என்னிடம் கொஞ்ச நாள் எதும் எதிர்பார்க்காதீங்க.:(

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

மதி எப்படி இருக்கீங்க? அப்பாடா பாகம் 1 கண்டு பிடிச்சீங்களா?தேக்யூ செய்து பாருங்க

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

வினோஜா ரெம்ப நன்றிப்பா.ஒரு நாளில் செய்திடலாம்.முதல் தடவை செய்யும் போது பேப்பர் மடிக்க கை வேகம் பத்தாது.செய்ய செய்ய வந்திடும். 45 நிமிடத்தில் 100 பேப்பர் மடிக்க முடியும் வேகமாக மடித்தால்.நான் டிவி பார்க்க போது,பிரி டைம் கூட மடிச்சுகிட்டு தான் இருப்பேன்.
அதனால் எனக்கு தெரிவதில்லை.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

லாவன்யா கேட்கவே சந்தோசமா இருக்கு நீங்க தொடங்கியதில்.நன்றிப்பா கட்டாயம் செய்து பார்த்து சொல்லுங்க.எனக்கும் கிராப்ட் செய்ய பொருள் வாங்கவோ தேடவோ பிடிக்காது.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரொம்ப பொறுமை வேணும் போல இது செய்ய. வெகு நேர்த்தியா செய்து இருக்கீங்க ரேணுகா. நானும் முயற்சித்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன். இன்னைல இருந்தே செய்ய ஆரம்பிக்க போறேன். நான் இதுப்போலவே பேப்பர்ல செய்த் வாத்து ஒன்னு எங்கயோ பார்த்து இருக்கேன். இப்ப அதபத்தி ஒரு ஐடியா கிடைச்சிருக்கு. முதலில் உங்க பூ ஜாடி செய்து பார்த்துட்டு அடுத்து அதையும் முயற்சிக்கனும். நன்றி ரேணுகா

இதுக்கெல்லாம் மகா பொறுமை வேணும்,சூப்பராக இருக்கு.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

hi i have started doing this flower vase.
i am doing the sixth round of papers.
still the whole thing is flat .... the shape is circular like what u have shown in the 4th round...
is it correct.
can u tell me when it will take the shape of the vase?
or am i doing anything wrong....
pls tell me what to do

உங்களது படைப்பு மிகவும் அழகாக உள்ளது...ஆனால் எப்படி ஆரம்பிப்பது என்பது புரியவில்லை..எனக்கு உதவுங்களேன்....

என்றும் அன்புடன்...ரம்யா.G

இதன் முதல் பாகத்தை இந்த லிங்கில் பாருங்க http://www.arusuvai.com/tamil/node/15022

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta