சுலப முறுக்கு

தேதி: May 21, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (34 votes)

 

உளுந்து - ஒரு கப்
அரிசி மாவு - 3 - 3 1/2 கப்
எள் - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரித்தெடுக்க


 

முறுக்கு செய்வதற்கு மேற்சொன்ன பொருட்களை தயார் நிலையில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
உளுந்தை நன்றாக கழுவி ஒன்றுக்கு மூன்று கப் தண்ணீர் விட்டு குக்கரில் 2 விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். (உளுந்து : தண்ணீர் = 1:3). வேக வைத்த உளுந்தை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றினால் உளுந்து நன்றாக மசிந்துவிடும்.
அரைத்த உளுந்து மாவுடன், அரிசி மாவு, எள், சீரகம், வெண்ணெய், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
பிறகு முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். இதில் அரிசி மாவு 3 முதல் 3 1/2 கப் அளவு தேவைப்படும்.
முறுக்கு அச்சில் பிசைந்த மாவை போட்டு முறுக்குக்காக பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் முறுக்கு பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிழிந்த முறுக்கை போட்டு இருப்புறமும் வேக விட்டு எடுக்கவும்.
எளிதில் செய்துவிடக்கூடிய சுலப முறுக்கு ரெடி. இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. இந்திரா அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் இந்திரா எப்படியிருக்கிங்க?.உங்களின் முறுக்கு குறிப்பு பார்க்கவே நல்லாஇருக்கு.என் கணவருக்கு இது ரெம்ப பிடிக்கும்.இதுக்கு புட்டு பண்ணூம்(ரெடிமேட்)அரிசிமாவு பன்படுத்தலாமா. இந்த ச்ந்தேகங்கள்தான் .pls தப்பாக நினைக்க வேண்டாம்.

ஹாய் இந்திரா! முறுக்கு படம் நன்றாக இருக்கின்றது.வாழ்த்துக்கள். மற்றும் உங்களிடம் ஒரு கேள்வி, உளுத்தம் பருப்பை அவித்து அரைக்கும் போது,
நன்றாக அரைக்க வேண்டாம் என்று போட்டுள்ளீர்கள். சொர, சொர என்றிருந்தால் முறுக்கு நன்றாக வருமா?
அல்லது உளுத்தம் பருப்பை நன்றாக அரைக்க வேண்டுமா? pleas பதில் தாருங்கள்.சிரமத்துக்கு மன்னிக்கணும்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

இந்திரா அரிசி மாவை வருக்கவேண்டாமா நெய் வெண்ணய் சேர்க்கலாமா,சொல்லுங்கள்

life is short make it sweet.

very nice recipe .. one doubt pls.. have to soak the urad dal and boil? or wash and boil ?

டியர் எரிக்,
சவுதியில் இந்தியன் பொருட்கள் விற்கும் சூப்பர் மார்க்கெட்டுகளில் சாதரணமாக பச்சரிசி மாவு வைத்திருப்பார்கள். அதை உபயோகப் படுத்தலாம். அல்லது இடியாப்ப மாவு உபயோகப் படுத்தலாம். நான் ஊரிலிருந்து சாதரண பச்சரிசியை மாவாக திரித்து கொண்டு வருவேன். அதை தான் உபயோகப் படுத்தியுள்ளேன்.
டியர் யோகராணி,
உளுந்து ஒரு சுற்று சுற்றினால் நன்றாக அரைந்துவிடும் என்று கூறியுள்ளேன். ஏற்கனவே உளுந்து வெந்திருப்பதால் சீக்கிரமாக மையாக அரைந்துவிடும்.
டியர் கீதா,
வெண்ணெய் உபயோகித்தால் அதன் மணம் முறுக்கு சாப்பிடும் போது நன்றாக இருக்கும்.தனி பச்சரிசி மாவை உபயோகித்தால் போதும். வறுக்கவேண்டாம்.
டியர் நின்சுபாப்பு,
உளுந்தை ஊற வைக்கவேண்டிய அவசியமில்லை. கழுவி உடனடியாக அவித்து விடலாம்.

உங்களுடைய சந்தேகங்களை தீர்த்து வைப்பதில் பெரும் மகிழ்ச்சியே.எந்த சிரமமும் இல்லை. ஒரு சின்ன கப்புக்கு செய்துபாருங்கள்.

Save the Energy for the future generation

நான் இந்த முறுக்கை ட்ரை செய்தேன்
மிகவும் நன்றாக இருக்கிறது
நன்றி இந்திரா மேடம்
நிறைய குறிப்புகளை தாங்க

என்றும் அன்புடன்,
கவிதா

டியர் கவிதா,
முறுக்கு செய்துப் பார்த்து பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி. எனக்கு தெரிந்ததை நிச்சயமாக உங்களுடன் பகிர்ந்துக் கொள்வேன்.

Save the Energy for the future generation

நல்ல சுலபமான குறிப்பு கொடுத்திருக்கீங்க...பாராட்டுக்கள்

நான் இன்னும் சுலபமாக செய்ய 4 பங்கு நிரப்புரா இடியாப்பமாவுடன்
ஒரு பங்குரெடிமேட் மாஷ் டால் சேர்த்து இன்சடன்டாக செய்வேன்...

அதுவும் சுவையாகவும் சுலபமாகவும் இருக்கும்..நீங்க முயற்சி

பண்ணிருக்கீங்களா?
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

உங்கள் முறுக்கு செய்முறை ஈசியாக இருக்கு,நிச்சயம் செய்து பார்க்கணும்.நன்றி.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இந்திரா தோழிக்கு.....முறுக்கு மிகவும் அருமை...நான் இடியப்ப மாவு பயன் படுதுனேன்....நன்றி இது போல் சுலபமாக சமையல் வகைகலை தருமாரு தால்மையுடன் கேகுரேன்

இந்திரா உங்கள் பதிலுக்கு நன்றி.இன்று உங்கள் முறைப்படி முறுக்கு செய்தேன் நன்றாக வந்தது.
எமது வீட்டில் உறைப்பு முறுக்கு பிடிக்கும் என்பதால் சீரகத்துடன் கொஞ்சம் மிளகும் சேர்த்து அரைத்து போட்டேன்.
நன்றாக வந்தது. மேலும் இதுபோல் சிற்றுண்டி வகையான குறிப்புக்கள் எதிர்பாக்கின்றேன்.நன்றி
இளவரசி உங்கள் செய்முறையும் பார்த்தேன்.செய்முறை சுலபம் போல் தெரிகின்றது
ஆனால் "மாஷ் டால்" என்றால் என்ன என விளங்கவில்லை. அது பற்றி சொல்வீர்களா?
அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அன்பு யோகராணி,
மாஷ் டால் என்பது உளுந்து மாவுதான்..அதுவும் இங்கே ரெடிமேடாக கிடைக்கிறது....அதனால் உடனேயே தயார் செய்ய முடியும்..

அன்புடன் இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஹாய் இந்திரா இன்று சாயங்காலம் ஸ்னாக்ஸிற்கு உங்களின் முறுக்கு பண்ணினேன்.இடியாப்ப மாவுதான் சேர்த்து செய்தேன் ரெம்ப சாப்டாக,டேஸ்ட்டும் நல்லா இருக்கு.என் மகனும் விரும்பி சாப்பிடான்.நன்றி.

டியர் இளவரசி,
மாஷ் டால் சேர்த்து செய்ததில்லை. நிரப்புரா இடியாப்பமாவுடன் இதே போல் செய்து உள்ளேன். உங்க மாஷ் டால் சேர்த்து செய்து பார்த்து சொல்கிறேன்.
டியர் ஆசியா ,
உங்களை போன்ற எக்ஸ்பர்ட்டுக்கெல்லாம் இது ரொம்ப சுலபம். செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.
டியர் சமீலா,
உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. நிச்சயமாக எனக்கு தெரிந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்வேன்.
டியர் யோகராணி,
செய்து பார்த்து , நன்றாக வந்ததை குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி. நிச்சயமாக எனக்கு தெரிந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்வேன்.
டியர் எரிக்,
மிக்க நன்றி. என் பையனுக்கும் ரொம்ப பிடிக்கும். ஆதலால் அடிக்கடி செய்வேன்.

Save the Energy for the future generation

Dear indhra madam,
i tried your sulaba muruku.it came out very well.this is the first time i am trying muruku.really it was so superb.my husband said this is the very best muruku i ever had.thankyou so much.keep on your good works.
subha saravanan

அன்பு இந்திரா

இன்றைக்கு இந்த சுலப முறுக்கு செய்தேன். மிகவும் நனறாக இருக்கிறது.

நாங்கள் வழக்கமாக உளுத்தம்பருப்பு வறுத்து, திரித்து, அரிசி மாவுடன் அதைக் கலந்து செய்வோம். அதை விட இந்த முறையில் சுலபமாகவும், சுவையாகவும் இருக்கிறது.

நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

உங்கள் முறுக்கு செய்து பார்த்தேன் . ரொம்ப நன்றாக வந்தது.

இந்திரா,
நேற்று உங்க சுலப முறுக்கு செய்தேன்.ரொம்ப நல்லா இருந்தது.குறிப்புக்கு நன்றி.

இந்திரா சுவையான குறிப்பு, சுலபமான குறிப்பு... சூப்பர்ன்னு வீட்டில் பெயர் வாங்கிட்டேன். மிக்க நன்றி :) அடையார் ஆனந்த பவன் முறுக்கு மாதிரி இருக்குன்னு சொல்லிட்டாங்கப்பா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் இந்திரா

முறுக்கு செய்து பார்த்தேன். சுவை மிக அருமையாக இருந்தது. எங்கள் அனைவருக்கும் பிடித்தது. ஆனால் கொஞ்சம் எண்ணெய் குடித்து விட்டது. எண்ணெய் குடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் எனத் தெரிந்தால் சொல்லுங்களேன் ப்ளீஸ்.

அனிதா

முறுக்கில் எண்ணெய் நிறைய இருந்தால் அதற்கு 2 காரணங்கள் உண்டு .
1 . மாவில் தண்ணீர் அதிகம் கலந்து இருக்க வேண்டும்
2 . மாவில் அதிகம் எண்ணெய் or வெண்ணை சேர்த்திருக்க வேண்டும் .

ஹாய் இந்திரா மேம்...

நீங்க குடுத்துருக்க முறுக்கு பன்னினேன். முதல் முறையா ரொம்ப பயந்துட்டே பன்னினேன். உண்மையாவே ரொம்ப நல்லா வந்துச்சு எனக்கே ஆச்சரியம். நானா இவ்ளோ நல்லா பன்னினேன்னு. ஹாஹாஹா. நல்ல டேஸ்ட்டா இருந்துச்சு. கொஞ்சமா தான் பன்னினேன் பயத்துல. தேங்க்ஸ்ங்க...

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

இதில் வெண்ணை சேர்க்க சொலியிருகீங்க இங்க bread கு தொட்டு சாப்பிடும் வெண்ணை தான் இருக்கு அது தான் நீங்க சொன்னதா அதையே போடலாமா அப்படி இல்லனா எண்ணெய் சேர்க்கலாமா?
கடையில் வாங்கும் அரிசி மாவு தான் என்ட்ட இருக்கு அதையே பயன் படுத்தலாமா இல்லனா நம்ம ஊரு ல மாதிரி machine ல அரச்ச மாவு தா use பண்ணனுமா?

அன்புடன் அபி

அபி எண்ணெய் சூடானதும் மாவில் சேருங்க.. கடை மாவு பயன்படுத்தினதில்ல..

KEEP SMILING ALWAYS :-)

ரொம்ப நன்றி பா... கடை மாவு போட்டு கொஞ்சமா செய்து பார்கிறேன்

அன்புடன் அபி

நான் இதுக்கு முன்னாடி இந்த முறுக்கு செய்திருக்கேன் அருமையா வந்துச்சு, ஆனால் இப்போ வெண்ணை தீர்ந்து விட்டது அதுக்கு பதிலா வேற என்ன பயன்படுத்தினால் முறுக்கு நன்றாக வரும்? யாராவது சொல்லுங்களேன்

--

அன்புடன் அபி

pls clear my doubt

அன்புடன் அபி

நெய் விடலாம்னு நினைக்கிறேன். கொஞ்சமா சேர்த்து செய்து பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றி வனிதா ரொம்ப நேரமா யாருமே பதில் சொல்லல நு பாத்தேன் ரொம்ப நன்றி செய்து பார்கிறேன்

அன்புடன் அபி

நேற்று இந்த முறுக்கு செய்தேன். மிக நன்றாக, கிரிஸ்பி ஆகா , இருந்தது. நன்றி

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

Hai indhira madam.i'm new member of this site.i tried u r recepie strday.it's very tastefull & crispy.nice recepie.thank u .

This too will pass