தொடரும் விபத்துக்கள்

இன்றைய நாள் ஏர் இந்தியா விமான விபத்துச் செய்தியுடன் விடிந்துள்ளது. :-( ஒவ்வொரு நாளும் தினசரி செய்திகளில் விபத்துச் செய்திகளை படிக்கையில் மனதில் ஆயிரம் கேள்விகள் எழும். மற்ற விபத்துக்களைவிட விமான விபத்து அதிக எண்ண ஓட்டங்களை உருவாக்கும். விமான விபத்தில் உயிர் பிழைப்பது அரிய செயல். இதுபோல் வெடித்துச் சிதறும் விமானத்தில் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகளின் சதவீதம் மிக மிகக் குறைவு.

இந்த விமானத்தில் கிட்டத்திட்ட 19 குழந்தைகள் பயணம் செய்துள்ளனர். இது சிலருக்கு முதலும் கடைசியுமான விமானப் பயணமாக இருந்திருக்கலாம். ஏர்ப்போர்ட் வரும்போது எத்தனை உற்சாகத்துடன் வந்திருப்பார்கள், ப்ளைட் ஏறியதும் என்னவெல்லாம் நினைத்திருப்பார்கள், ப்ளைட்டில் கொடுக்கப்பட்ட உணவை சாப்பிடும்போது என்னவெல்லாம் நினைத்திருப்பார்கள் என்றெல்லாம் யோசிக்கையில் மனது பாரமாகின்றது.

ஒவ்வொரு முறை விமானத்தில் பயணிக்கும்போது, இது விபத்துக்குள்ளானால் என்னவாகும் என்ற எண்ணம் எனக்குள் தோன்றும். இதே எண்ணம் இந்த விமானத்தில் பயணித்த சிலருக்கும் இருந்திருக்கலாம். இறக்கும் தறுவாயில் நாம் நினைத்தது இந்த முறை நடந்துவிட்டதே என்ற விநாடி எண்ணவோட்டம் சிலருக்கு இருந்திருக்கலாம்.

பயணம் செய்வோரின் நிலை இப்படியென்றால், அவர்களை வரவேற்க ஊரில் இருந்து இரவே வாடகைக் காரில் புறப்பட்டு, ஆவலோடு விமான நிலைய வாசலில் காத்திருக்கும் அவர்களின் சொந்த, பந்தங்களின் மனநிலை எப்படி இருக்கும்? எத்தனை மனைவிகள் கணவனைக் காண ஆவலோடு காத்திருந்திருப்பர்? எத்தனை பாட்டிகள் பேரன் பேத்திகளை காண காத்திருந்திருப்பர்?

மனம் கனக்கின்றது. கார் விபத்து, பேருந்து விபத்து, ரயில் விபத்து என்று எத்தனை விபத்துக்களை செய்திகளாகப் படித்தாலும், விமான விபத்து ஏற்படுத்தும் மனத்தாக்கம் மிக மிக அதிகம்.

இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதைத் தவிர வேறெதுவும் நம்மால் செய்ய இயலாது என்ற உண்மை மனதை இன்னும் பாரமாக்குகின்றது. :-(

இது மிகவும் வருந்ததக்க செய்தி. இது மட்டுமில்ல. எல்லோருக்குமே ஒவ்வொரு நாளும் நல்ல படியாய் விடிந்து முடிவதே நிஜமல்ல. நம்பிக்கையே வாழ்வை வழி நடத்திக் கொண்டு இருக்கின்றது. விபத்திற்குள்ளாகியவற்கு அட்மின் அவர்கள் கூறியது போல ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பது தவிர வேறு என்ன செய்ய முடியும். ;-(

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நானும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த விபத்தில் உறவினர்களை இழந்த குடும்பத்தினருக்கு விரைவில் மன ஆறுதலையும், அமைதியையும் தர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.
இவ்வுலகில் பிறந்த அனைவரும் ஒரு நாள் நம்மை படைத்த இறைவனிடம் திரும்ப செல்ல கூடியவர்களாகவே உள்ளோம்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

அட்மின் உங்க பதிவை பார்த்தபின் தான் தினமலர் இணையதளத்தில் பார்த்தேன்.என்ன ஒரு பயங்கர நிகழ்வு.மனது மிகவும் கணக்கிறது.உயிர் துறந்த அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.இப்படி ரொம்ப எளிதா அனுதாபம் தெரிவித்துக்கொள்கிறோம்,ஆனால் அட்மின் சொன்னது போல அந்தந்த குடும்பத்தில் இப்போது மனநிலை எப்படியிருக்கும்? இனி இது போல கோர விபத்துக்கள் நிகழாதிருக்க நம்மால் வேண்டிக்கொள்வதை தவிர என்ன செய்ய முடியும்?

அட்மின் சார்,

நீங்க சொன்னவுடன் இப்போ தான் செய்தி படித்தேன், அய்யோ மனது மிகவும் பாரமாகி விட்டது. ஆனால்,
நீங்கள் சொல்வது போல் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதையும், தவிர ஒன்றும் செய்ய இயலாது. வருத்ததில் அழத் தான் முடிகிறது, இதை படிக்கும் நமக்கே இவ்வளவு அழுகை வருகிறேதே பாவம் அவர்கள் சொந்தங்கள். ...

with love

Iam very sad to heard for that news today morning. My hearty condelence to them and their family.

தற்போதைய செய்திகளின்படி விமானம் தரையிறங்கிய பிறகு ரன்வேயைத் தாண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது என்று தெரிவிக்கின்றனர். இது இன்னும் கொடுமையான விசயம்.

சற்று ஆறுதல் அளிக்கும் செய்தி, இதுவரை 8 பேர் உயிருடன் (பலத்த காயங்களுடன்) மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளோர் இறந்திருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.

நானும் காலையில் எழுந்தவுடன் இந்த செய்தியைதான்..கேட்டேன்...
துக்கம் தொண்டையை அடைக்கிறது.........இது பொய்யாக இருக்ககூடாதா என
மனசு ஆசைப்படுகிறது

போன மாதம் இதே நாள் இதே விமானத்தில்தான் என் கணவரும் இந்தியாவுக்கு துபாய் வழியே வந்தார்....அப்போதும்/எப்போதும் என் மனதிற்குள்ளும் ஒவ்வொருமுறை பயணிக்கும்போதும் ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் என்றுதான் மனது யோசிக்கும்...முக்கியமாய் தரையிறங்கும்போது கண்ணை இறுக மூடிகொண்டு பிரார்த்திப்பேன்

விமானத்தில் இருந்து வெளியில் வரும்போதுதான் ...நம்பிக்கை வரும்....

விரும்பாவிட்டாலும் இந்த எண்ண ஓட்டங்களை தவிர்க்க முடியவில்லை..

நேர்று தற்செயலாக என் மகள் பள்ளியில் english composition about air travel பற்றி ஞாயிறு அன்று எழுத சொல்வார்கள் ஏதாவது டிப்ஸ் கொடுங்கள் என்றாள்..

நானும் சில பாயிண்ட்ஸ் சொல்லிவிட்டு ஆபத்தான நேரத்தில் லைஃப் ஜாக்கேட்
அணிவது பற்றி சொன்னபோது அவ்ள் கண்களில் குளம் கட்டி விட்டது...

அவ்வளவு ஆபத்தானது என்றால் இனிமேல் இங்கேயே இருந்துவிடலாம் அம்மா என்றால்....எனக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது

...உடனே பயப்படாதே அப்படியெல்லாம் ஆகாது எப்பவாது ஒரு முறை அப்படி ஆகும் வாய்ப்பு வந்தால் ஜாக்கிரதையாக இருக்கத்தான் சொன்னேன் என்றேன்..

அதே ஞாபகத்தில் சரியாகவே அவள் தூங்கவில்லை...

காலையில் பார்த்தால் இந்த செய்தி...எத்தனை உயிர்கள்...எத்தனை பிஞ்சு குழந்தைகள்....கடைசி நேரத்தில் என்ன நினைத்தார்களோ..

ஆண்டாண்டு அழுதாலும் மாண்டர் வருவதில்லை என்றாலும்....இதை கேட்டவுடன்...நிஜத்தில் நெஞ்சு பாரமாகிவிட்டது...

அவர்களின் ஆத்மா சாந்தியடையவும்,குடும்பங்களுக்கு மனத்தெம்பும் ஆறுதலும் கிடைக்கவும் பிரார்த்திப்போம்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அட்மின் சார்,
இது மிகவும் கொடுமையான. விபத்து ,என்ன சொல்வது ,ஆத்மாக்கள் சாந்தியடைய ஆண்டவனை பிராத்தனை செய்வோம்.நீங்கள் சொல்லியது போல் நானும் விமான பயணம் செய்யும்போது ,இப்போது விபத்து ஏற்பட்டால் என்ன செய்வது என நினைப்பதுண்டு.நினைக்கும் போதே பயம் நெஞ்சை அடைக்கும்,விபத்து நடந்த போது யார் யார் என்னென்ன நினைத்தார்களோ. தெரியவில்லை ஆண்டவனே.

life is short make it sweet.

விபத்தில் சிக்கிய அனைவரது குடும்பத்தினர்க்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகுக.

‍- இமா க்றிஸ்

இந்த செய்தி எனக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்