தில் கீரை வடை

தேதி: May 22, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

கடலைப் பருப்பு - ஒரு கப்
உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
பெருங்காயம் - ஒரு பின்ச்
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 3
இஞ்சி - 1 " துண்டு
தில் கீரை - அரை கட்டு
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரித்தெடுக்க


 

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இரண்டு வகை பருப்புகளை ஒன்றாக போட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
கிரைண்டரில் முதலில் பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயம் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதில் ஊற வைத்த பருப்புகளைப் போட்டு கொரகொரப்பாக வடைக்கு அரைப்பது போல் அரைக்கவும். இதனுடன் மிளகாய் தூளையும் கலக்கவும். வெங்காயம் மற்றும் கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கின வெங்காயம் மற்றும் கீரையை பருப்பு கலவையுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கலந்து வடைகளாக தட்டவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டி வைத்திருக்கும் வடைகளை போட்டு தீயை மிதமாக வைத்து பொரித்து எடுக்கவும்.
சுவையான தில் கீரை வடை ரெடி. இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. இந்திரா அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

I have bought a new Pigeon Induction stove last week. I have one doubt about this. I cook only stainless steel vessels ? or which type vessels will cook, likely Pressure cooker, Aluminium Kadai Etc., Reply please anna.

indtakshan Sttvil aluminiyam,kaappr baattam kaappr paaththiram allathu aluminiya kukkar ubayookkikk kUdAthu.I am using induction stove.
இன்ட்டக்ஷன் ஸ்ட்ட்வில் அலுமினியம்,காப்ப்ர் பாட்டம் காப்ப்ர் பாத்திரம் அல்லது அலுமினிய குக்கர் உபயோக்கிக்க் கூடாது

Induction stove மின்சாரத்தை பயன்படுத்தி மின் காந்த அலைகளை உருவாக்குகின்றது. அவை இரும்பு போன்ற காந்தத்தால் கவரக்கூடிய உலோகத்தால் ஆன சாதனங்களுடன் வினைபுரியும் போது வெப்பம் உண்டாகின்றது. அந்த வெப்பம் உள்ளிருக்கும் பொருளையும் சூடுபடுத்துகின்றது. இதுதான் induction stove ன் mechanism.

Magnetic induction நடைபெற வேண்டுமென்றால், நீங்கள் உபயோகிக்கும் பாத்திரம், காந்த ஈர்ப்பு உடைய பாத்திரமாக இருக்க வேண்டும். இதற்கு இரும்பு வகை (iron/steel) பாத்திரங்களையே உபயோகப்படுத்த வேண்டும். மற்ற பாத்திரங்கள் சூடாகாது. நீங்கள் ஸ்டவ் வாங்கும்போது கொடுக்கப்படும் கையேட்டிலேயே, எந்த வகை பாத்திரங்கள் உபயோகப்படுத்தலாம் என்பது போன்ற விபரங்கள் இருக்கும்.

இது எந்த கீரை என் தெரியவில்லை இந்திரா..நல்ல சத்தான சுவையான குறிப்பு..
வேறு பெயர் என்ன என சொல்லுங்கள்
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இந்திரா நல்ல சத்தான குறிப்பு. வாழ்த்துக்கள். நான் சிரியாவில் இந்த கீரை வாங்கி இருக்கேன்... இங்க நம்ம ஊரில் கிடைக்குதா??? சோம்பு கீரை தானே இது?? எனக்கு அங்கே ஒருவர் உருளைகிழங்கோடு சேர்த்து சமைக்கும் குறிப்பு ஒன்றின் போது அறிமுகபடுத்தியது. இங்கே என்ன சொல்வார்கள் என்று தெரியல. தெரிஞ்சா சொல்லுங்க முயற்சி செய்து பார்க்கிறேன், பார்க்கவே சாப்பிடனும் போல் இருக்கு. மிக்க நன்றி. :)

இளவரசி dill leaves சோம்பு கீரை தான் என்று நினைக்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

டியர் இளவரசி,
தில் கீரை லுலுவில் கிடைக்கும். வனிதா சொன்னது சரியே. அதனை சோம்புக் கீரை என்றும் சொல்வார்கள். இந்த கீரையைப் பார்த்தாலே சாப்பிடணும் போல் தோன்றும். என் வட இந்திய தோழியிடம் கேட்டு இந்த வடை செய்ய கற்றுக் கொண்டேன். லுலுவில் கீரை இருக்கும் இடத்தில் போய் பாருங்கள். நிச்சயமாக கிடைக்கும்.
டியர் வனிதா ,
பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. நீங்க சொன்னது சரியே. சிலர் இதை சோம்பு கீரை என்றும் சொல்வார்கள். எனக்கு நம்ம ஊரில் எங்கு கிடைக்கும் என்று தெரியவில்லை. மன்னிக்கவும். ஆனால் பெங்களூரில் கிடைப்பதாக கேள்விபட்டேன். நீங்கள் சொன்னது போல் உருளைக் கிழங்கிலும் பொரியல் பண்ணலாம்.

Save the Energy for the future generation