சுக்கா சப்பாத்தி

சுக்கா சப்பாத்தி (without oil) எப்படி பண்ணுவது ? யாராவது சொல்லுங்கலளேன்..

சப்பாத்தி மாவு நன்கு மிருதுவா பிசைங்க.சப்பாத்தி போடறதுக்கு குறைந்தபடசம் 30 நிமிஷத்துக்கு முன்னே மாவு பிசைந்து வைங்க.காலைல சப்பாத்தி போட சிலர் முதல் நாள் இரவே மாவு பிசைந்து ஃபிரிஜ்ஜில் வைச்சிடுவாங்க.அதுவும் நல்லா வரும்.காலை அவசரத்துல மாவு பிசையற டென்ஷன் இல்ல.

சப்பாத்தி ஒவ்வொரு பக்கமும் ஒரு முறை திருப்பி போட்டு(bubbles வரும் போது திருப்பி போடனும்) பின் நேரடியாக அடுப்பில் போட்டு எடுத்தால் நன்கு உப்பி வரும்.4 நொடிகளில் ரெடியாகும்.அடுப்பில் காட்டும் போது ஒவ்வொரு பக்கமும் 2-3 நொடி காட்டினால் போதும்.இல்லாவிடில் தீஞ்சு போகும். தனலில் காட்டும் போது தனலை கொஞ்சம் அதிகமா வைக்கனும்.சிம்மில் இருந்தா ஓரங்கள் சரியா வேகாது. இது மிகவும் எளிதான முறை.ஒரு முறை செய்து பார்த்தா பழகிடும்.இடுக்கி உபயோகிக்கும் போது கவனமா இருங்க.இல்லாட்டி இடுக்கி பட்டு ஓட்டை விழுந்தா சரியா உப்பாது.

ஒவ்வொரு சப்பாத்தியும் சுட்ட பின் hot boxல் மூடி வைக்கவும். காற்று படாதவாறு சப்பாத்தியை மூடி வைத்தால் அடுத்த நாளும் மிருதுவாகவே இருக்கும்.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

மேலும் சில பதிவுகள்