பாதித்த சம்பவம்

சமீபத்தில் ,கேட்டறிந்த ஒரு அதிர்ச்சியான சம்பவம் மூன்று தினங்களுக்கு முன் நான் கேள்விபட்டதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு பள்ளி செல்லும் பட்டு ரோஜா(4 வயது),இரண்டு மூன்று நாட்களாக காய்ச்சலால் பள்ளி செல்லவில்லை.நான்காவது நாளாக முழுதும் உடம்பு சரியாகாமல் பள்ளிக்கு போனது…அந்த குழந்தையின் இடத்திலிருந்து தனியார் பஸ்ஸில் பள்ளி செல்ல குறைந்தது ஒரு மணிநேரம் ஆகும்.

அன்று பஸ்ஸில் ஏறியவுடன் அது சோர்வினால் உறங்கிவிட்டதுபோல.
இறங்கும்போது யாரும் அதை கவனிக்கவில்லை.

பஸ் டிரைவரும் கவனிக்காமல் பஸ்ஸை கொண்டு ஷெட்டில் விட்டு பூட்டி விட்டு சென்றுவிட்டார்….

பள்ளி முடிந்ததும் அந்த குழந்தை வேறோரு பஸ்ஸீல் வீட்டுக்கு செல்லும்.
அந்த பள்ளியில்தான் அந்த குழந்தையின் அண்ணா படிக்கிறான்..பாவம் அவனும் கவனிக்கவில்லை..

மதியம் 12 மணிக்கு பள்ளியிலிருந்து வந்த வேறொரு பஸ்ஸில் தன் குழந்தையை காணாமல்,அந்த குழந்தையின் அம்மா பள்ளிக்கு போன் செய்ய
அங்கு அவர்கள் பள்ளிக்கு இன்றும் அவள் வரவில்லையென நினைத்தோம் என சொல்லி..பிறகு விஷயம் புரிந்து அந்த குறிப்பிட்ட பூட்டப்பட்ட பஸ்ஸை தேடி பார்த்தபோது அங்கே….கண்ட காட்சி….மிகவும் துயரமானது…:(

பூட்டப்பட்ட பஸ்ஸில் இருந்து காற்றோட்டம் ஏதுமின்றி,அதிக வெப்பத்தினாலும்,பயத்தினாலும்…அழுதழுது வாந்தியெடுத்து அது இறந்திருக்கும் சோகம் தெரிந்தது..:(

அந்தஓட்டுனர் கைது செய்யப்பட்டாலும்…அந்த விதியின் கோரப்பிடியில் சிக்கிய அந்த பிஞ்சு ரோஜாவின் மரணம்…..ஜீரணிக்கமுடியாதது :(

மரணத்தில் கொடியது குழந்தைகளின் மரணம்….!அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையவும் ஹாஸ்பிடலில் இருக்கும் அந்த தாயின் உடல்நிலை,மனநிலைக்காகவும் இறைவனை வேண்டிகொள்வோம்.

இது கேள்விப்பட்டு 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது..

இருந்தாலும் இதில் போடுவதன்மூலம் பெற்றோர்களின் முன்னெச்சரிக்கை கூடும் என்றுதான் போடுகிறேன்..இனி ஒரு பிஞ்சும் பாதிக்கப்படக்கூடாது இதுபொன்ற நிகழ்வுகளால் என்றுதான்...!

10 நாட்களுக்கு முன் (14 ஜுன்) ,arabnews ல வெளியான செய்தி மறுபடியும் மனதை கலங்கடித்தது.

5 வயதே நிரம்பிய குழந்தை ஃபரிடா ஹாரிஸ் ,சவூதியில் இருக்கும் International Indian school ல படித்த குழந்தை,ப்ரைவேட் வேனில் வரும்போதுபள்ளியின் வாசலில் வேன் நின்றபின்,அனைவரையும் இறக்கிவிட்டு ஏதோ கவனக்குறைவால்/அஜாக்கிரதையால் ஒரு குழந்தையை மட்டும் விட்டு விட்டு வேனை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்..:(

அதேவேனில் பயணம் செய்த அந்த குழந்தையின் அக்காவும் கூட வேனை விட்டு இறங்கி சென்றுவிட்டது..

புது டிரைவர் என்பதால் ஒரு ஒரு பிரிவாக வகுப்பில் கொண்டு சென்று விடும்போது இந்த குழந்தை ஏற்கனவே இறங்கிவிட்டது என நினைத்திருக்கிறார்.

பிறகு குழந்தை பள்ளி கேட் அருகே என்றவுடன் யாராவது கவனித்து காப்பாற்றமாட்டார்களா என்று போராடி போதுமான ஆக்சிஜன் கிடைக்காததாலும்,அதிக வெப்பத்தினாலும் இறந்துவிட்டது.

பள்ளி வாசலின் மெயின் கேட்டாக இருந்திருந்தால் யாராவது கவனித்திருப்பார்களோ என்னவோ.பக்க வாசல் கேட் என்பதால் யாருமே கவனிக்கவில்லை என்பதுதான் வருந்ததக்கது…

மதியம் வந்து பார்த்தபோது அந்த டிரைவர் விஷயத்தை மற்றோரு நண்பனிடம் சொல்லிவிட்டு ஓடியதாகவும் ,பிறகு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் முன்பு அது இறந்துவிட்டது என்பதும் தெரிந்து மற்ற குழந்தைகளும்,ஆசிரியர்களும் அதிர்ச்சியில் உறைந்துபோய் விட்டார்கள்..:(

குழந்தைகளை புதிதாக அனுப்பும்போது அதுவும் பிரைவேட் வேனில் அனுப்பும்போது நன்றாக தெரிந்த டிரைவருடன் அனுப்ப முயற்சிக்கலாம்.

ஆசிரியரிடமும் நான் என் குழந்தை absent என்றால் உங்களுக்கு கண்டிப்பாக உடனே தெரியப்படுத்துவேன் .அப்படி தெரியப்படுத்தாமல்,என் குழந்தை வரத்தவறினால் உடனே தயவு செய்து தெரியப்படுத்துங்கள் என ஆசிரியரிடம் சொல்லிவைக்க முயற்சிக்கலாம்.

ஆசிரியர்களும் வகுப்புக்கு போனவுடன் ஒரு 10 நிமிடங்கள் எடுத்துகொண்டு யார் absent என பார்த்து விசாரிக்கலாம்.எப்படியும் ஒரு சில குழந்தைகள்தானே வராமல் இருக்கப்போகிறது….அதை விசாரிக்க அதிக நேரவிரயம் ஆகப்போவதில்லை…

இவளும் உன்னுடன் பஸ்ஸில் இன்று வந்தாலா….என்று..

இந்த குழந்தையின் விஷயத்தில் முக்கிய முழுக்காரணம் டிரைவரின் கவனைக்குறைவுதான்..அதையும் மீறி

வகுப்பில் ஆசிரியை அவள் சகோதரியிடம் விசாரித்து கேட்டிருந்தால் கூட ஓரளவுக்கு காப்பாற்றியிருக்க வாய்ப்பிருக்கிறது…….

இருந்தாலும் விதியின் கோரப்பிடிக்குள் பிஞ்சுகள் மாட்டிகொள்வது பொறுக்கமுடியாத வேதனையாகத்தான் இருக்கிறது

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

என் கனவர் வழக்கமாக செல்லும் ஓர் கடை சென்ற வாரம் பூட்டி இருந்தது.இன்று எதர்ச்சியாக அந்த கடைக்கு என் கனவர் சென்றார். கடந்த வாரம் ஒருமுறை வந்தேன் கடை பூட்டி இருந்தது என்றும் கேட்டார்.
அதற்கு அக்கடைக்காரரின் பதிலை கேட்டு என் கனவர் மனம் மிகவும் படபடத்தது.
கடைக்காரர் தன் 3வயது மகன் இறந்து விட்டதாக கூறினார். அதற்கான காரணத்தை கேட்டதும் மனம் பதறுகிறது தோழிகளே..
அவர் மகனுக்கு காலையில் வாந்தி மற்றும் வயிற்று போக்கு இருந்திருக்கிறது.
ஒரு சின்ன கிளீனிக்கு அழைத்து சென்று இருக்கிறார்.டாக்டர் பையனை பரிசோதனை செய்து வேறு மருத்துவமனை செல்லுமாறு பரிந்துரை செய்துள்ளார்.
அவர் வேறு மருத்துவமனை சென்றுள்ளார்.அங்கு டாக்டர் 12மணிக்கு வருவார் என்று சொல்லி இருக்கின்றார்கள்.12மணி வரை காத்திருக்க டாக்டர் வரவில்லை. அங்கு வேலை செய்யும் நபரிடம் கேட்க டாக்டர் மாலை4மணிக்கு வருவார் என்றுகூற இவர் வீடு வந்து திரும்ப 4மணியளவில் மருத்துவமனை சென்றார். மீண்டும் அதே நபர் உன்னிடம் டாக்டர்4மணிக்கு வருவார் என்று நான் சொல்லவில்லை. டாக்டர் 8மணிக்கவருவார் என்று கூற இவர்8 மணிக்கு சென்றும் டாக்டர் வரவில்லை. அதே நபரிடம் கேட்க அவர் 9மணிக்கு வருவார் வேண்டும் என்றால் காத்திரு இல்லை கிளம்பு என்று அலட்சியமாக கூறி உள்ளார்.
அந்த நபர் இரவு 8.30மணிக்கு சென்னையில் ஒரு பிரபல மருத்துவமனை அழைத்து சென்று சேர்த்துள்ளார்.
டாக்டர் 35,000 செலவு ஆகும் இல்லையானால் உயிர் காப்பாற்ற கடினம் என்றார். சிகிச்சை அளியுங்கள் நான் பணம் கட்டி விடுகிறேன் என்று அந்த அப்பா சொல்ல.டாக்டர் உள்ளே சென்று கலந்து பேசி பத்து நிமிடம் கழித்து50,000 தருவாய் என்றால் உயிர் காப்பாற்ற முடியும் என்று சொல்லி இருக்கிறார். அவர் இப்போது சற்று நேரம் முன் 35,000 என்று கூறினேர்களே என்று கேட்க 50,000கட்ட வேண்டும் இல்லை என்றால் டிஸ்சார்ஜ் பன்னிட்டு போ என்று அலட்சியமாக பதில் சொல்ல...அவர் மனம் உடைந்து நள்ளிரவில் வேறு ஒரு மருத்துவமனை சென்றுள்ளார்..
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அந்த சிறுவன்..
பெற்றோர்களே சிறு வயிற்றுவலி,வாந்தி என்று ஏதோ ஒரு கிளீனிக், மருத்துவமனை செவ்வாமல் நம்பிக்கையான மருத்துவமனை செல்லுங்கள்.
இது அனைவருக்கும் ஒரு பாடம்..

மேலும் சில பதிவுகள்