மாரடைப்பு - ஒரு குறிப்பு

அறுசுவை தோழிகளுக்கு ....

இன்று எங்கு திரும்பினாலும் மாரடைப்பு பற்றி கேள்விப்பட்டும், நேரில் பார்த்துக்கொண்டும் இருகிறோம்.. நான் சில இனைய தளத்தில் கண்டதை இங்கு பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன்.

அறிகுறி :

* இடது பக்கம் மட்டுமே வலி ஏற்படும் என்று இல்லாமல் நெஞ்சின் நடுப்பகுதி, முதுகு பகுதி,தோள் பட்டை என எங்கு என்று உணர முடியாத படி வ்லி
* உடல் விறுவிறுப்பாதல்
* அதிக வியர்வை
* சிலருக்கு தலைவலி என அறிகுறி மாறுபடும்.

யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் வலி ஏற்படின்:

யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் வலி ஏற்படின் மிகுதியாக இருமி, மூச்சை நன்றாக இழுத்து விட வேண்டும். இருமும் போது இதய குழாய்கள் விரிவடைவதுடன், மூச்சை நன்றாக இழுத்து விடுவதால் இரத்தம் சீராக உள்ளே சென்று வர உதவுகிறது.இதை முதலுதவியாக தொடர்ந்து செய்து உடனே மருத்துவரை அணுக வேண்டும். உடல் மிகவும் அதிரும்படியாக நடக்கவோ, வாகனம் ஓட்டவோ கூடாது.

வராமல் தடுப்பது எப்படி:

மாரடைப்பு ஒரு பரம்பரை வியாதியும் கூட. எனவே நம்மால் முடிந்த அளவு நம்மையும், நம்மைச் சார்ந்தவரையும் நாம் தான் காத்துக் கொள்ள வேண்டும்.

* நடை பயிற்சி
* உடல் பயிற்சி
* சத்தான,முறையான உணவு முறைகள்.
* காய்கறி மற்றும் பழங்கள்.
* சாப்பிட்ட உடன் இளஞ்சூட்டில் தண்ணீர்,இது கொழுப்பு சேர்வதை தடுக்க உதவும்.

மேலும்,

கீழே கூறபடும் எளிய மருத்துவ முறை மாரடைப்பு வருவதை பெரிதும் தடுக்க உதவுகிறது
* எலுமிச்சைச் சாறு - 1 கப்
* இஞ்சிச் - சாறு - 1 கப்
* பூண்டுச் சாறு - 1 கப்
* ஆப்பிள் சிடர் வினிகர் - 1 கப் ( ஆர்கானிக்) கீழே பொருட்கள் படிந்து இருக்கும் பராக்(Bragg ) சிறந்த பிராண்ட்

மேலே கூறிய நான்கு சாறுகளையும் சேர்த்து இளஞ்சூட்டில் சுமார் 1/2 மணி நேரம் கொதிக்கவிடவும். மூன்று கப் அளவு ஆனதும் சூடு தணியும் வரை காத்திருந்து அதில் ஒரு கப் சுத்தமான தேன் சேர்க்கவும்.இந்த கலவையை ஒரு பாட்டிலில் நன்றாக மூடி வைக்கவும்

தினமும் காலை உணவிற்கு முன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு குடிக்கவும். இதய அறுவை சிகிச்சையே தேவைப்படாது.
கண்டிப்பாக முற்சிக்கவும்.

நன்றி !!!

நலமா ரம்யா? ரொம்ப நல்ல தகவல் சொல்லி இருக்கீங்க. நன்றி. நிச்சயம் இந்த தகவல்களை என் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் பகிர்ந்து கொள்வேன். வருமுன் காப்பதே சிறந்தது. அப்பா எப்போதுமே சாப்பிட உடனே வெந்நீர் குடிப்பாங்க ரம்யா. நடைபயிற்சியே மாரடைப்பை தடுக்க நல்லதொரு வழி.

நன்றி

நான் நலம். நீங்க நலமா...? நல்லது.. என்னோட அப்பாக்கு எதிர்பாக்காதபடி மாரடைப்பு வந்து ரொம்பவே சிரமபட்டுட்டோம். இத்தனைக்கும் அவர் கராத்தாவில் பிளாக் பெல்ட் ஹ்ம்ம்ம்.. பை பாஸ் சர்ஜரி கூட செய்தோம் பா.. adhaan...

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

உங்களுடைய இந்த நல்ல எண்ணத்தை பாராட்டுறேன் ரம்யா. நம்ம அப்பாவுக்கு நடந்தது வேற யாருக்கும் நடக்க கூடாதுன்னு நினைக்கிறீங்கள் சோ குட். அப்பாவுக்கு இப்ப பரவாயில்லையா ரம்யா?

இப்போ பரவால பா.. அவருக்கு 62.. சோ.. கொஞ்சம் சோர்ந்து இருக்கறாரு. அவ்ளோதான். மத்தபடி நல்லா இருக்காரு.நன்றி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹாய் ரம்யா..
ரொம்ப நன்றிங்க... என்னோட அப்பாக்கும் 2 வருஷம் முன்னாடி மாரடைப்பு வந்தது..இப்போ தொடர்ந்து மாத்திரை சாப்டுட்டு இருகார்... நடை பயிற்சி ரொம்ப நல்லது... வெயிட் போடாம பாத்துக்கனும்னு டாக்டர் சொல்லி இருக்கார்...நீங்க சொன்ன டிப்ஸ் எங்க அப்பாக்கு கண்டிப்பா use ஆகும்..மறுபடியும் ரொம்ப நன்றிங்க ரம்யா...

SaranyaBoopathi

ஹாய் ரம்யா,
மிகவும் பயனுள்ள தலைப்பு போட்டு இருக்கிங்க. என் அப்பாவுக்கும் 2 முறை மாரடைப்பு வந்து விட்டது. ஆனால் வாய கட்டு படுத்த மாட்டாங்க. எல்லாம் இறைவன் எண்ணப்படி நடக்கும்னு சொல்லிடுவாங்க.
உங்களுடைய இந்த டிப்ஸ் கு ரொம்ப நன்றி பா. கட்டாயம் அப்பாவ முயற்சி பண்ண சொல்றேன்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

ஆப்பிள் வினிகர் என்னது ரெடிமேடா கடையில் கிடைகுமா?

all is well

டியர் ரம்யா மிக,மிக பயனுள்ள தகவல்.இன்று உலகில் அதிகமானேர் மாரடைப்பு,இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளினால் பாத்க்கப்படுகின்றனர்.என் சித்தப்பாவும் திடீரென் மாரடைப்பினால் இறந்துவிடார்.கண்டிபாக உங்களின் இந்த தகவல் இதை படிகும் அனைவரும் பயனைடைவர்.தகவலுக்கு நன்றி.

சரண்யா,பாத்திமா,சுந்தரமதி,எரிக்( இது தான் உங்க பேரா?;-) ).. ரொம்ப நன்றி ங்க ...
ஆமாம்.. ஆப்பிள் வினிகர் எல்லா கடைலேயும் கிடைக்கும் மதி.. main a dept store le...

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இந்த லேகியம் கடந்த 6 மாதமாக நாங்கள் செய்து சாப்பிட்டு வருகிறோம். நன்றாக உடம்பு பிரிஸ்க்காகவும் இருக்கெறது.இந்த குறிப்பை நான் அறுசுவையில் போட விரும்பினேன் அப்போது வலைத்தளம் புதியதாகுவதற்கு வேலைகள் நடந்ததால் போட முடியவில்லை. நல்ல பயனுள்ள மருந்து. எல்லாரும் செய்து பார்க்கவும்.நன்றி ரம்யா அவர்களே!

விசுவாசத்தினாலே எல்லாம் கூடும்

மேலும் சில பதிவுகள்