பழமொழிகளின அர்த்தம் சொல்லுங்க....;o)

இப்போ புதுமையா பழமையை பத்தி பேசலாமே...

நிறைய பழமொழிகள் பத்தி கேள்விபட்டு இருப்போம். அதோடு உன்மையான அர்த்தம் தெரியாமலே பயன்படுத்துவோம்ல... உன்மையான அர்த்தம் என்னென்னனு தெரிஞ்சவங்க சொல்லாமே. நானே ஆரம்பிக்கறேன்

* அடிதடி உதவுரமாரி அண்ணந்தம்பி உதவ மாட்டாங்க...
வழக்கத்துலே நாம அண்ணா தம்பியை தான் நினைக்றோம்.ஆனா உன்மையில்... இறைவனுடைய "திருவடி" உதவுவதை போல வேறொன்றும் உதவாது என்பது தான் பொருள்.
ம்ம்ம்ம் ஆர்ம்பிங்க.....

ரம்யா... "கழுதைக்கு தெரியுமா கர்பூர வாசனை"னு மட்டும் இப்போ எனக்கு தெரிஞ்ச அர்த்தம் சொல்றேன்... கர்பூர மரத்தோட இலை, பட்டை எல்லாமே மருத்துவ தன்மை உள்ளதாம்... ஆனா அந்த இலையை சாப்பிடும் கழுதைக்கு அதெல்லாம் தெரியாதாம். அதான் நம்ம செய்யும் காரியத்தின் நல்லதை தெரியாதவங்களை அப்படி சொல்றாங்களாம். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உண்மையாகவே யானையும் அல்ல பூனையும் அல்ல

ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால் பூநெய்க்கு ஒரு காலம் வரும்.

ஆ என்றால் பசு.. எப்படி சமநிலத்தில் வசிக்கும் மக்களுக்கு பிழைப்பு நடத்த பசுவின் நெய்யின் (பால்) துணை உள்ளதோ அது போல மலைவாழ் மக்களுக்கும் பூவின் நெய்யின் (தேன்) துணை உள்ளது போல இறைவனின் படைப்பு. இவர்கள் வாழ காலமும், வ்ழியும் இருப்பதை போல மலைவாழ் மக்களும் குறைந்தவர்கள் அல்ல, அவர்கள் வாழவும் காலமும் வ்ழியும் உள்ளது என்றே பொருள்.

நன்றி வனி.. எப்பிடியோ கேட்டு புடிச்சிட்டீங்க போல.. ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அறுக்க தெரியாதவனுக்கு 58 அருவாளாம். அதாவது
வேலை அதிகம் தெரியாது ஆனால் அவனுடையா சவடலுக்கு பஞ்சம் இருக்காது எப்படி என்றால்,
ஒரு அருவாளால் வேலை செய்ய மாட்டானாம் 58 அருவாள் கொடுத்தால் அவனால் செய்யமுடியுமாம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

காலம் போகும் வார்த்தை நிற்கும்.
ஒருவரை பார்த்து கோபத்தின் காரணமாக தகாத வார்த்தை எதும் கூறிவிட்டால் எத்தனை காலம் ஆனாலும் அது மனதில் தைத்த ஆணியாக நிற்கும்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

"ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தாள் தான் பிள்ளை தானே வளரும்" அதாவது மனைவி கர்ப்பமாக இருக்கும் போது மனைவியை (ஊரார் பொண்ணு ) அவளை நல்லா கவனிச்சுகிட்டா அவள் வயித்துல இருக்குற அவனோட பிள்ளை (தன் பிள்ளை) தானே வளரும்.

Keep smiling....

நல்ல தலைப்பு தான். பல பழ மொழிகளுக்கு இப்ப தான் அர்த்தம் புரியுது.
யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்.
என்பதை மாத்தி புரிஞ்சுகிட்டு இருக்கேன்.
"ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தாள் தான் பிள்ளை தானே வளரும்"
தானம் தர்மம் அதிகம் செய்யனும் அப்பதான் நம்ம குழந்தைகள் நல்லா இருக்கும் என்பது தான் பொருள்னு சொல்லுவாங்க

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

"ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்" இப்படி தானே நாம சொல்றோம் ஆனா உண்மையில அது என்னன்னா "ஆயிரம் வேரை கொண்டவன் அரை வைத்தியன்" எவன் ஒருவன் தன்னிடம் ஆயிரம் வேரை கொண்டுள்ளானோ அவன் தான் அரை வைத்தியன்னு பொருள்

Keep smiling....

நீங்க சொன்னது கூட இருக்கலாம் fathima mam ஒரு பழமொழி இரண்டு அர்த்தங்கள்

Keep smiling....

Aroul ....

ஆமாம்.. நானும் நீங்க சொன்ன பழமொழிகளின் அர்த்ததை கேட்டு இருக்கிறேன். நன்றி ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நன்றி ;-) பாத்திமா அவர்களே

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்