பழமொழிகளின அர்த்தம் சொல்லுங்க....;o)

இப்போ புதுமையா பழமையை பத்தி பேசலாமே...

நிறைய பழமொழிகள் பத்தி கேள்விபட்டு இருப்போம். அதோடு உன்மையான அர்த்தம் தெரியாமலே பயன்படுத்துவோம்ல... உன்மையான அர்த்தம் என்னென்னனு தெரிஞ்சவங்க சொல்லாமே. நானே ஆரம்பிக்கறேன்

* அடிதடி உதவுரமாரி அண்ணந்தம்பி உதவ மாட்டாங்க...
வழக்கத்துலே நாம அண்ணா தம்பியை தான் நினைக்றோம்.ஆனா உன்மையில்... இறைவனுடைய "திருவடி" உதவுவதை போல வேறொன்றும் உதவாது என்பது தான் பொருள்.
ம்ம்ம்ம் ஆர்ம்பிங்க.....

கடைதேங்காயை எடுத்து
வழிப்பிள்ளையாருக்கு உடைத்தானாம்.
ஈகை ஒரு மனிதனுக்கு சிறப்பைத் தரும். ஒருவன் தனது வருவாயில் ஒரு சிறு பகுதியைசேமிப்பது எப்படி நல்லதோ,அதுபோலவே ஒரு பகுதியை தர்மம்செய்வதும் நல்லது.அதுவும் நம்முடைய சுய வருவாயில் செய்யப்பட்ட வேண்டும். அடுத்தவன் பொருளை எடுத்து மற்றவருக்கு தருவது தானம் ஆகாது.இந்த கருத்தை தான் இப்பழமொழி உனர்த்துகிறது.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

எவனொ வைச்சானாம் தோப்பு இதமா அடிச்சிதாம் காத்து !!!

இழவுகாத்த கிளி போல

கிளி இழவம் மரத்தில் இழவம் பஞ்சுப் பழம் பழுக்கும் வரைகாத்திருக்குமாம், ஆனால் இழவம் பஞ்சுப் பழம் பழுத்தவுடன் வெடித்துப் பறந்துவிடும். கிளி சாப்பிட இழவம் பஞ்சுப் பழம் கிடைக்காது. எவ்வளவு நேரம் கடந்தாலும் கிடைக்காத பொருளுக்காக காத்திருப்பதை இவ்வாரு கூருவார்கள்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

வெட்டி ஜம்பம் விளக்கெண்ணைக்கு கேடு ;
பணம் படைத்தவர்களின் முன் சிலர் போட்டியிட்டு நாங்களும் பண்ணுவோம்ல மாதிரி செலவு செய்யறதுதான். எப்படினா... கஞ்சியை வீட்டுக்குள் குடித்துவிட்டு.. வெளியே வந்து வாழை இலையில் விளக்கெண்ணையை தடவி.. (பார்ப்பவர்கள் நெய்யினால் ஆன உணவுகள் என்று நினைக்கும்படி ;) ) அனைவரும் பார்க்கும்படி வீசுவார்களாம்... அதான் எண்ணைக்கு கேடு ;-) ( என்ன ஒரு புத்திசாலித்தனம் like vadivel ;-) )

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

யோகராணி... நீங்க சொல்றது எல்லாம் நல்லா இருக்கு பா. ;-) கலக்குங்க

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இன்னும் நெறையா பழமொழிகள் பத்தி தெரிஞ்கலாம்னு நெனச்சேன் அப்டியே ப்ரேக் போட்டுடீங்களே ;-(

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்யா வாழ்த்துக்கள். உங்கள் இழைகள் எல்லாமே நன்றாக இருக்கின்றன.

“முன் கை நீண்டால்தான் முழங்கை நீளும்”

சிலர் அடுத்தவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் மற்றவர்கள் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களுக்கு இந்தப் பழமொழி.

“மலை முழுங்கி மகாதேவனுக்கு கதவு ஒரு அப்பளம்”

1. சிலர் எந்த வேலையையும் எளிதாக செய்வர்.
2. லஞ்சம் வாங்குபவருக்கும் இந்தப் பழமொழி ஒத்துப் போகும்.
அன்புடன்
ஜே மாமி

நன்றி மாமி.. இதுலே நீங்க பதிவு போடுவிங்கனு எதிர்பாக்குல.. உங்கள மாரி இருக்க பெரியவங்க ஆதரவுலதான் ஏதோ நாங்க தலைப்பு பொட்றோம் மாமி. பழமொழிக்கு நன்றி.. இதை நான் இப்போ தான் கேள்வி படறேன் ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை,
பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை.
உண்மையை பேசுவதால் அழிந்தவர்களும் இல்லை. பொய் பேசுவதால் வாழ்ந்தவர்களும் இல்லை. உண்மையே என்றும் நிலையான வாழ்வை தரும்.

வாய் சர்க்கரை, கை கருணைக்கிழங்கு.
சிலர் இனிக்க இனிக்க பேசுவார்கள் ஆனால் உதவி செய்ய ஒருபோதும் முன் வர மாட்டார்கள்

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

கழுதைக்குத் தெரியுமா கர்ப்பூர வாசனை_

கற்பூரம் என்பது மணத்தில் மட்டுமன்றி, அதிகளவில் மருத்துவ குணமும் உடையது. இந்து சமயத்தவர்கள் பூஜை அறையிலும் பயன் படுத்துவார்கள். இது ஒரு இயற்கையின் அருட்கொடை. கர்ப்பூரமானது Cinnamomum camphora எனும் தாவரத்திலிருந்து பெறப்படுகின்றது. இம்மரத்தின் இலை, தண்டு, பட்டை, வேர் என்று முழுமரமும் மருத்துவத்தில் பயனுள்ளது. இதன் பயனையே இப்பழமொழியில் வாசனை என்று குறிப்பிடுகின்றார்கள். கழுதை இம்மரத்தின் இலையை உணவாகக் கொள்ளும் போது அதற்குத் தெரியாது கர்ப்பூரத்தின் உயர்வான மகிமையும் அதன் பயனும். கழுதைக்கு இது ஒரு சாதாரன ஒரு இலையாகவே தெரியும்.
நாம் பல காரியங்களை தெரியாமலே செய்கின்றோம், நாம் செய்யும் காரியங்களின் உயர்வு அல்லது மகிமை எங்களுக்கு எல்லா நேரத்திலும் தெரிவதில்லை. அதனால் தான் பயன் அறிந்தவர்கள் எம்மைப் பார்த்து கழுதைக்கு தெரியுமா கர்ப்பூர வாசனை என்பார்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேலும் சில பதிவுகள்