பழமொழிகளின அர்த்தம் சொல்லுங்க....;o)

இப்போ புதுமையா பழமையை பத்தி பேசலாமே...

நிறைய பழமொழிகள் பத்தி கேள்விபட்டு இருப்போம். அதோடு உன்மையான அர்த்தம் தெரியாமலே பயன்படுத்துவோம்ல... உன்மையான அர்த்தம் என்னென்னனு தெரிஞ்சவங்க சொல்லாமே. நானே ஆரம்பிக்கறேன்

* அடிதடி உதவுரமாரி அண்ணந்தம்பி உதவ மாட்டாங்க...
வழக்கத்துலே நாம அண்ணா தம்பியை தான் நினைக்றோம்.ஆனா உன்மையில்... இறைவனுடைய "திருவடி" உதவுவதை போல வேறொன்றும் உதவாது என்பது தான் பொருள்.
ம்ம்ம்ம் ஆர்ம்பிங்க.....

ஹை, ரம்யா, இது எனக்கு தெரின்தது.

"சினக்கும்போது அறுத்தகாதை சிரிக்கும்போது ஒட்டமுடியுமா"
அதாவது,கோபப்படும்போது, காதை அறுத்துவிட்டு, கோபம்போனவுடன், ஒட்டினால் ஒட்டுமோ? ஒட்டாது.தெளிவாகச்சொன்னால், நீ கோபப்படும்போது நாங்க கேட்டுக்கணும்,உனக்கு கோபம் சரியானவுடன், நாங்க, எல்லாத்த்யும் மறந்துட்டு, சிரிக்கணுமோ?
இத அப்பப்போ கணவனிடம் சொல்ல உதவும்.இத அப்பப்போ கணவனிடம் சொல்ல உதவும்.(ஏதோ, எல்லார்க்கும் என்னால் முடிந்தது, ம்ம்)ரம்யா, தெரின்து வெச்சுக்கோங்க(விளையாட்டாகத்தான் பா)

ஹாய் ப்ரியா.. அதெல்லாம் ஒன்னுமில்ல .. எனக்கு விளையாட்டுனா ரொம்ப பிடிக்கும். சோ கவலபடாதிங்க.. ;-)..மைன்டுல வெச்சுக்றேன் நல்ல பழமொழி.. நன்றி...

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அடுத்தது,
"எப்பவும் உள்ளது, எடைக்கே தலைக்கொஸரம்"
அதாவது,கை நம்மிடம் எப்பொவும் உள்ள ஒன்று, அதை, இடையிடையே, தலைக்கு தலையணைக்கு பதிலாக வைத்து துங்குவோம் இல்லயா,அதுபோல. (எ.கா.)யாராவது கால்வலி எப்படி இருக்குன்னு கேட்டால் அப்பப்பவரும், என்பதற்கு,'அத ஏன் கேக்கர?எப்பவும் உள்ளது, எடைக்கே தலைக்கொஸரம்' என்று சொல்லலாம்.
(சரி சரி, யாரும் அடிக்கவராதிங்க.).

நன்றி ப்ரியா ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அடை மழை விட்டாலும் செடி மழை விடவில்லை.

அதாவது வீட்டுக்குள்ளே சண்ட வரது ஜகஜம் ;-)
அத பார்த்து வருத்தப்படுபவர்களும் இருப்பார்கள், ரசிப்பவர்களும் இருப்பார்கள்.. ஒருவழியா சண்ட முடுஞ்சு நம்ம ஆளு சமாதானமா போவாரு.. அப்போ தான் சண்டய ரசிக்கிற இந்த நல்லவரு.. இன்னும் கொஞ்சம் உசுபேத்தி திரும்ப சண்டய ஆரம்பிக்க ட்ட்ட்ட்ட்ரை பண்ணுவாரு .. ;-) இதுதான்.. இருக்கிறவன் சும்மா இருந்தாலும் இப்படி சில ஆளு இருக்கற்ததான் இந்த பழமொழி சொல்றது

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நிறை குடம் ததும்பாது. குறை குடம் கூத்தாடும்.
ஒருவன் கல்வி கேள்விகளில் யாவற்றையும் அறிந்தவனாக இருப்பின் அவன் அமைதி காப்பான். { நம்ம Tips ரம்யாவை போல ;-) }
எதையும் அறை குறையாக கற்றவன் தான் தான் மேதாவி என்பதை போல பாவனை செய்வான்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

ஹாய் ரம்யா

சுவரஸ்யமாக போய் கொண்டிருக்கிறது நீங்கள் ஆரம்பித்த தலைப்பு.

பழமொழி:

ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்து.

ஆனால் இந்த பழமொழிக்கு அர்த்தம், ஆயிரம் தடவை போய் சொல்லி (உறவினர்கள் வரவேண்டும் என்பற்காக) ஒரு கல்யாணத்தை நடத்து என்பதே ஆகும்.

அய்யோ.. ஃபாத்தி,.....ஹ்ம்ம்ம் ஒ கே... என்னெவோ என்ன பத்தி சொல்லிட்டே இருக்கீங்க.. ஒரு நாள் ஃபீல் பண்ண போறீங்க ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வாவ்.. அமுதா.. நல்ல பழமொழி.. ஆனா இப்போ தான் எனக்கு அர்த்தம் தெரியும்.. நம்ம மக்கள் அடிகடி பயன்படுத்துற டயலாக் தான இது ;-)
நன்றி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

hai ramya

r u in online now?

மேலும் சில பதிவுகள்