மூடநம்பிக்கை பத்தி பேசலாமா?

இப்போது நாம மூடநம்பிக்கை பத்தி பேசலாமா?

வீட்டுல பெரியவங்க எதுக்கெடுத்தாலும் அத பண்ணாத இத பண்ணாதனு சொல்லுவாங்க.. ஆனா அதுக்கு உண்மையாலுமே அறிவியல் ரீதியா காரணம் இருக்கும். நம்ம மக்கள் கேக்கமாட்டாங்கனு அதுக்கு ஒரு கதை கட்டி விட்டுருப்பாங்க. அத பத்தி தான் இப்போ பேசப் போறோம்.

நெலவு மேல கால வெக்காத ( எங்க அம்மா அடிக்கடி சொல்றது, நான் அடிக்கடி செய்றது ;-) ):

அந்த காலத்து வீடுகளை பாத்தீங்கனா நுழைவாசல் ரொம்ப சின்னதா இருக்கும். அப்போ நெலவுலே கால வெச்சு உள்ளே போனா மண்ட டமால்னு இடிக்கும். நம்ம சொன்னா கேக்ற ஆளா? சோ... நெலவு வெக்கும் போது கொஞ்சம் காசு போட்டு கட்டி லட்சுமி ஆக்கியாச்சு. இப்போ சாமி ஆச்சே. அதனால காலை பவ்யமா தாண்டி உள்ளே போகா ஆரம்பிச்சாங்க. அதுவே இப்போ வழக்கமாகி போச்சு. இப்போ எவ்வளவோ முன்னேறி சூப்பரா பெரிய வாசல் வெச்சாலும் நாம நெலவு தாண்டி பொறோம், நெலுவு மேல நிக்கறது இல்ல... இது சொன்னாலும் எங்க அம்மா கேக்றது இல்ல.. எல்லாம் செரி ஆனாலும்னு இழுக்கறாங்க ;-)

இனி நீங்களும் உங்களுக்கு தெரிஞ்சத சொல்லலாமே .....

அட இத பாருங்க பா முதல்ல .... ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

பாத்தாச்சு mam great topic அதான் எதை பற்றி சொல்லலாம்ன்னு think பண்ணின்னு இருக்கேன்

Keep smiling....

வீட்டுல மூலைலே உக்காராதனு சொல்லுவாங்க.. உக்காந்தா வீட்டுக்கு ஆகாம போய்டும்னுமாம். ;-)

உண்மையா... காரணம் என்னன்னா....நம்ம வீட்டுலே பயன்படுத்துற மின்விசிறி, மின்விளக்கு, தொலைக்காட்சி போன்ற அனைத்து மின்சார தொடர்பான பொருட்கள் வேலை செய்யும் போது குறிபிட்ட ஒரு ஆற்றலை வெளிவிடும் என படித்துள்ளோம். அவ்வித ஆற்றல்கள் வெளியெ செல்ல முற்படும் போது நேரிடையாக செல்லாமல் வீட்டு சுவரில் படிந்து படிந்து செல்லும்.. அப்போது சுவரின் மூலையில் சிறிது தங்கி செல்லும் (வசதியாய் "ட" வடிவில் மூலை இருப்பதால்) எனவே அங்கு அமர்ந்தால் கெட்ட காற்று (ஆற்றல்) என்பதால் உடல் உஷ்ணம், தலை வலி, சோர்வு மேலும் பல ஏற்பட வாய்ப்பு உள்ளது.. இது தான் உண்மையான அறிவியல் காரணம். ஆனால் நாம் வேறுவிதமாக கூறுகிறோம்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நாம பிறந்தது முதல் இறக்கும் வரை மூடநம்மிக்கையுடனே தான் வாழ்ந்துட்டு இருக்கோம். குழந்தை பிறந்ததும் கொடி சுத்தி பிறந்துடுச்சுனா மாமனுக்கு ஆகாதுன்னு சொல்றதுல ஆரம்பிச்சு ஒருவன் சனிக்கிழமை அன்று இறந்தால் சனி பிணம் தனியா போகாதுன்னு சொல்ற வரைக்கும் மூடநம்பிக்கையுடனே தான் வாழ்க்கை நடத்துறோம். ரம்யா நீங்க சொல்வது போல எல்லாதுக்குமே ஒரு அறிவியல் ரீதியான விளக்கங்கள் இருக்கும் அத சொன்னா யாரு கேட்பாங்கன்னு தான் இப்படி அதுல ஒரு ட்விஸ்ட்ட வச்சிட்டாங்க நம்ம பெரியவங்க.
ஒற்றைகாலில் நின்னா தரித்திரம் வந்து சேரும்னு சொல்லுவாங்க, அதுக்கு உண்மையான காரணம் ஒற்றைகாலில் நின்னால் நமது உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இரத்த ஓட்டம் சரியாக இருந்தால் தான் உறுப்புகள் சரியாக இயங்கும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும். எப்போதுமே நிக்கும் போது நமது உடலின் எடையை இரு கால்களும் சமமாக தாங்கி நிற்க வேண்டும்.
இப்படி இன்னும் பல..........

ரம்யா மூலையில உட்கார கூடாதுன்னு சொல்றதுக்கு இது தான் காரணமா?

ஆமாம் லட்சுமி.. நீங்கள் சொல்வதை போல நாம் மூடநம்பிக்கை உடன் தான் வாழ வேண்டி உள்ளது. என்ன தான் அறிவியல் காரணம் கூறினாலும் சில நேரங்களில் நாமும் அதை பின்பற்ற வேண்டிய நிலையில் உள்ளோம். இல்லயா ?

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இரவு நேரத்தில் குப்பை கொட்டக்கூடாது :

அந்த காலத்தில் மின்சாரம் இல்லாத காரணத்தினால் அரிக்கேன் மற்றும் அகல் விளக்கு பயன்படுத்தி வந்தார்கள். இரவு நேரத்தில் குப்பை கொட்டினால் இருட்டில் தேவையான பொருள் ஏதும் குப்பையில் கலந்து போக வாய்ப்புள்ளது.. எனவே விடிந்ததும் நன்றாக குப்பை கூடையை பார்த்து விட்டு கொட்டுவார்கள். மின்சாரம் சவுரியாமாக பயன்படுத்தும் இந்த காலத்திலும் அதையே நம் மக்கள் பின்பற்றுகிறார்கள். இரவில் நகம் வெட்ட கூடாது, தலை வார கூடாது, ஊசி வாங்க கூடாது என்பதற்கும் இதுவே காராணம்.. உணவு பொருளில் இவைகள் தெரியாமல் கலந்து விட்டால் ஆபத்து இல்லயா அதான்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஆடியில் கணவன் மனைவி சேரக் கூடாது:
ஆடி மாதம் திருமணம் வைத்தாலும், கணவன் மனைவி சேர்ந்தாலும் ஆகாது என்பார்கள். உண்மையான காரணம் என்னவென்றால் ஆடியில் சேர்ந்தால் அடுத்த ஒரு வருடத்தில் குழந்தை ஆடி மாத சமயத்தில் பிறக்க வேண்டிய சூழல் உருவாகம். அந்த காலத்தில் எல்லாம் நவீன மருந்துகள் இல்லை. வெயிலின் தாக்கம் அதிகம். மின்சாரம் கூட இருக்காது. அம்மை வியாதி, சூடு போன்றவற்றை பச்சிளங்குழந்தையால் தாங்க முடியாது. அதனால் தான் அவ்வாறு பிரித்து வைக்கின்றனர். ஆடியில் பிறக்கும் குழந்தை வருங்காலத்தில் திருடனாக மாறும் எனக் கூறுவதும் இதனை தடுக்கத் தான்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நண்பர்களே.

நான் சென்ற வருடம் விடுமுறைக்கு இந்தியா போனேன். எங்க வீட்டுக்குப் பக்கத்துல நண்பரின் வீடு. மிகவும் அழகாய் இருந்தது. அழைத்தார்கள். போய் பார்த்தேன். மகிழ்ச்சி.குறுகிய காலத்தில் நல்ல வீடு. உழைப்பைப் பாராட்டியே ஆக வேண்டும். அதே போல இந்த ஆண்டும் சென்றேன். சாலையின் ஓரத்தில் தான் அவர்கள் வீடு என்பதால் வழக்கம் போல திரும்பிப் பார்த்தேன். ஒரு பகுதி இடிக்கப் பட்டிருந்தது. எனக்கு வியப்பு. என்னடா அடுத்த ஓர் ஆண்டில் வீட்டினை பெரித்தாக்குகிறார்களே என்று. அழைத்தார்கள் சென்றேன். பேசினேன். மனதிற்குள் நானே நினைத்துக் கொண்டேன். நல்லா சம்பாத்தியம் கிடைக்கிறது என்று. வீட்டிற்க்கு வந்து அம்மாவிடம் கேட்டேன். பக்கத்து வீடு இப்பதானே கட்டினாங்க ஏன் உடைக்கிறாங்க என்று. அம்மா சொன்னாங்க.. நீ வேற டா. அந்த வீட்டு அக்கா மாடி படில இருந்து விழுந்திட்டாங்களாம்.அப்பறம் ஜோசியம் பார்த்தாங்களாம். வீடு வாஸ்து படி கட்டவில்லையாம். அதான் இடிச்சிட்டு மாத்தி கட்டுறாங்க என்று.

வாஸ்து பார்ப்பது மூடநம்பிக்கையா? இதைப்பற்றி உங்களின் கருத்து என்ன.?

ஜேசுதாசன்.
-----------------------------------------------------------------
வாழ்க்கையில் சில நேரங்களில் நமக்கு கிடைக்கும் நண்பர்கள் கூட நம் வாழ்க்கையை நல்ல வழியில் திசை திருப்பமுடியும்....

ஒரு சின்ன திருத்தம் ஆடி மாதத்தில் சேர்ந்தால் சித்திரையில் பிள்ளை பிறக்கும் என்று தான் கேள்விப்பட்டுள்ளேன், அப்போது தான் வெளியிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனால் தான் புது தம்பதியர்களை பிரித்து வைக்கிறார்கள். எல்லாத்துக்குமே ஒரு scientifical reason இருக்கு.

ஆடி மாதம் கர்ப்பம் தரித்து விட்டால் சித்திரையில் குழந்தை பிறக்கும். கொடும் கோடையின் வெப்பத்தை பச்சிளம் சிசு தாங்கிக் கொள்ள சிரமப்படும். மேலும் உஷ்ண நோய்கள் பரவும் காலம் வேறு. அதனால்தான் ஆடியில் தம்பதியினர் சேரக்கூடாது என்று முன்னோர்கள் சொன்னார்கள்.

சஷ்டி விரதம் இதன் பின்னும் ஒரு ரகசியம் உண்டு. தீபாவளி முடிந்ததும் சஷ்டி விரதம் ஆரம்பிக்கும். தீபாவளிக்கு எண்ணெய் பலகாரங்களும் இனிப்புகளும் அதிகம் சாப்பிட்டு வயிறு ஒரு வழியாகி இருக்கும். அதை சரிகட்டவே ஆறுநாள் சஷ்டி விரதம். வயிற்றுக்கும் நல்ல ஓய்வு கிடைக்கும். குடல் சுத்தமாகும்.

கார்த்திகை மாதம் வாசலில் விளக்கு வைப்பதன் ரகசியம். கார்த்திகை மாதம் பூச்சிகள் அதிகமாக வரும். பூச்சிகள் இரவில் எப்போதும் வெளிச்சத்தை தேடி வரும். அப்படி வரும் பூச்சிகள் வீட்டினுள் நுழைவதைத் தடுக்கவே அந்த ஒருமாத காலமும் வாசலில் ஒரு விளக்கை ஏற்றி வைக்க சொன்னார்கள். பூச்சிகள் அந்த விளக்கையே சுற்றி மடிந்து விடும். ஆனால் சும்மா சொன்னா நம்ம மக்கல் கேட்க மாட்டாங்கன்னுதான் கார்த்திகை தீபம்னு கடவுளோடு தொடர்பு படுத்தி சொன்னாங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்