அறுபதாம் கல்யாணம்.
தோழிகள் அனைவரும் வாங்க....நான் என் அப்பா அம்மாவுக்கு அறுபதாம் கல்யாணம் செய்துவைக்கனும்னு ஆசை படறேன்....அப்பாவுக்கு 60 வயசு ஆரம்பிக்கும் போது செய்யனுமா,இல்லை 60 வயசு முடியும் போது செய்யனுமா சொல்லுங்கள்...
யாரெல்லாம் உங்க அப்பா அம்மாவுக்கு இந்த அழகான கல்யாணத்த செய்து வச்சுருக்கீங்க, வ்ந்து உங்க அனுபவத்தை சொல்லுங்கப்பா
நான் எதாவது ஒரு ஆதரவற்றோர் ஆசிரமத்திற்க்கு சென்று அங்கு இருக்கிறவங்களுக்கு முடிந்த உதவிகள் செய்யலாம்னு நினைக்கிறேன்...இல்லை கண்டிப்பா எதாவது கோவில்ல போய்தான் செய்யனுமா சொல்லுங்கள்...
கல்யாணமாம் கல்யாணம்..அப்பா
கல்யாணமாம் கல்யாணம்..அப்பா அம்மாவுக்கு கல்யாணம்...
Kalai
அறுபதாம் கல்யாணம்
ஹாய் கலா, முதலில் உங்க அப்பா, அம்மாவுக்கு என்னோட வாழ்த்துக்கள். சஷ்டியப்த பூர்த்தி (60ம் கல்யாணம்) , 60வது வருடம் முடிந்து 61 ஆம் வருடம் பிறக்கும்போதுதான் செய்வாங்க ( ஆங்கில காலண்டர்படி அல்ல). ஏனென்றால் 60 வருடம் கழித்துதான்,அவர் பிறந்த போது நவக்கிரகங்கள் அவரது ஜாதகத்தில் எந்த இடங்களில் இருந்ததோ அதே இடத்தில் மீண்டும் வருமாம். அதனால் அப்பாவின் ஜென்ம நட்சத்திர நாளில் 60 ஆம் கல்யாணத்தை நடத்த வேண்டும். என் அக்காவும்,தம்பியும் வர முடியாமல் போனதால் நான் மட்டும்தான் என் அப்பா, அம்மாவுக்கு அரேஞ்ச் பண்ணேன். அதனால் கொஞ்சம் விஷயம் தெரியும். ஆனால் ஒவ்வொரு குடும்ப வழக்கமும் மாறுபட்டு இருக்கும். நாங்க கோவிலில்தான் நடத்தினோம். எனக்கும் முதல்ல இதைப் பற்றி ஒண்ணும் தெரியாததால கோவிலில் இருக்கும் குருக்களிடம்தான் கேட்டேன். அவரே வீட்டுக்கு வந்து நாள் குறிச்சு எல்லா ப்ரோசீஜரும் சொன்னார். கல்யாணத்தில் புரோகிதமும் அவரேதான் செஞ்சார். நீங்க முதல்ல உங்க அப்பாவின் நட்சத்திரபடி என்னைக்கு பிறந்த நாள் வருதுன்னு தெரிஞ்சுக்கிட்டு அன்னைக்குதான் நடத்தணும். ஆங்கில வருடத்தை பார்க்காமல் பஞ்சாங்கம் பார்த்து, இந்த நாளில்தான் 60ம் கல்யாணத்தை நடத்த வேண்டும் என்று சொன்னார்கள். முக்கியமாக 60 ஆம் கல்யாணம் நடத்துவது அவர்களோட சந்ததியினரின் நன்மைக்காகத்தான்னு சொன்னாங்க. இது அவங்க பிள்ளைகளோட கடமையும் கூடன்னு சொன்னாங்க.
சாப்பாடு நீங்க எங்க வேணாலும் அரேஞ்ச் பண்ணிக்கலாம். கல்யாணத்தை கோவிலில் முடிச்சுட்டு, ஆதரவற்றோர் இல்லத்துக்கு போய் உதவிகள் செஞ்சுக்கலாமே. திருக்கடையூரில் 60 ஆம் கல்யாணம் செய்வது மிகவும் விசேஷம்னு சொல்வாங்க. கல்யாணத்துக்கு என்னென்ன செய்வோமோ அதே மாதிரி பட்டுப் புடவை, தாலி, பட்டு வேஷ்டி, சட்டை எல்லாம் பிள்ளைகள்தான் வாங்கணும். சிம்பிளாகவும் செய்யலாம் அல்லது கோவிலில் முழு பூஜை செய்து அவர்களுக்கு நலுங்கு, அபிஷேகம் செய்து முறையாகவும் செய்யலாம். அன்று கல்யாணத்திற்கு வந்தவர்கள் கல்யாணம் முடிந்ததும், மணமக்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொள்வது முறை. அவர்களுக்கு சின்ன கிப்ட்(குங்குமச்சிமிழ், ஜாக்கெட் துணி) வாங்கி பழம், தாம்பூலம் வைத்து கொடுக்கலாம்.
ஹாய் கலா
உங்க அப்பா, அம்மாவுக்கு என்னோட வாழ்த்துக்கள்.
இந்த function பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என் வாழ்த்துகளை தெரிவிச்சிக்கிறேன்.
பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த கொடையாளன்.
கலா...
கலா...உங்க அப்பா,அம்மாக்கு வாழ்த்துக்கள். ஆசரமத்தில் நடத்தனும்னு நீங்க நினைக்றது பாராட்டுதலுக்குரியது. தேவா அவர்கள் கூறியது போல கோவிலில் முடித்துவிட்டு ...ஆசரமத்தில் தொடரலாம் என்பது எனது கருத்து.
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
Mrs. Kala,
எந்த வயதில், செய்ய வேண்டுமென்று தெரியல.
என் மாமனார் மாமியாருக்கு அறுபதாம் கல்யாணம் 2007ம் ஆண்டு திருக்கடையூர்ல் நடத்தினோம், அவர்க்ளுக்கு 3 மகன்கள், 3 மகள்கள், அன்று பட்டு வேஷ்டி, பட்டு சேலை, செயின், மாலை, பழம், மற்றும் அனைத்து கல்யாணத்துக்கு தேவையான பொருட்களும், நாங்க (மகன்கள்)வாங்கினோம், ஆனால், திருமாங்கல்யம், என் நாத்தனார்கள், வாங்கினார்கள், என் மாமனார், எங்க எல்லோருக்கும், பட்டு வேஷ்டி, பட்டு சேலை,வாங்கி கொடுத்தார்.
மதுரையிலுள்ள, எங்க ஜோசியருக்கு, தெரிந்த, ப்ரோகிதர், கோவிலில் தயார் செய்திருந்தார், கல்யாணம் சிறப்பாக நடந்தது, எல்லோரும் ஆஷிர்வாதம் பெற்றோம், மறக்க முடியாத நிகழ்ச்சி,
அறுபதாம் கல்யாணம்
தேவா மேடம்
ரொம்ப நன்றி..தெரியாத பல விஷயங்களை சொன்னதற்க்கு.இதை வைத்து எப்படி செய்வதுனு 1 ஐடியா வந்துருச்சு..உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
Kalai
ஃபாத்திமா,ரம்யா..
ஃபாத்திமா,ரம்யா..
உங்கள் இருவருடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா..
ரம்யா சீக்கிரமா நீங்களும் கல்யாண சாப்பாடு போடுங்க..
Kalai
அறுபதாம் கல்யாணம்
ஹலோ மனோபாரதி
நலமா? உங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொண்டதற்க்கு மிக்க நன்றிகள்...இதெல்லாம் படிச்சா உடனே செய்யனும்னு தோனுது...சீக்கிரம் செய்த்துட்டு வந்து நானும் என் அனுபவங்களை சொல்வேன்..
Kalai