சில கலர்ஃபுல் பிட்ஸ் இது

சில கலர்ஃபுல் பிட்ஸ் இது...

சிலவற்றிற்கு எதனால் வண்ணங்களுடன் சேர்ந்த பெயர் வந்தது என பார்ப்போம்.

1.பெயர்தான் செங்கடல். நீர் நீலமாகத்தான்இருக்கும். எடாம் என்கிற மலையின் நிழல் இந்தக் கடலில் விழுகிறது. ஹீப்ரு மொழியில் எடாம் என்றால் சிவப்பு. ஆகவே செங்கடல் ஆனது!

2. பாண்டிச்சேரியில் அமைச்சர்களின் கார் நம்பர் பிளேட்கள் சிவப்பு நிறமாக இருக்கும். இது பாண்டிச்சேரி ஸ்பெஷல்!

3.துக்கச் சின்னமாக சீனாவில் வெள்ளை பேட்ஜும், துருக்கியில் நீலமும், எகிப்தில் மஞ்சள் நிறமும் அணிவார்கள்!

4.அனைத்து கலரும் சேர்ந்தால் கறுப்பு. எந்த கலரும் இல்லை என்றால் வெள்ளை. வீடுகளுக்கு வெள்ளை அடித்தால் சூரியவெளிச்சம் சுவரில் பட்டு மிளிரும். இதனால்தான் மின்சாரம் இல்லாத காலத்தில் வீடுகளுக்கு வெள்ளை அடிக்கும் பழக்கம் வந்தது!

5.கடனாளி திவாலாகிவிட்டால் கடன் கொடுத்தவர்களுக்கு அனுப்புவது மஞ்சள் நோட்டீஸ். பிரிட்டிஷ் ஆட்சியில் வாங்கிய கடனைத் திரும்பக் கொடுக்க முடியாதவர்கள் 'நான் திவால் பார்ட்டி' என்று நோட்டீஸ் மூலம் அறிவிக்கும் முறை அமலுக்கு வந்தது. இப்படி நோட்டீஸ் அனுப்புபவரை நீதிமன்றம் இறந்துவிட்டவராகவே கருதும். இப்படி நோட்டீஸ் கொடுத்தவர் 'புதிய வாழ்க்கையை மங்களகரமாகத்துவக்கட்டும்' என்று அப்போது மஞ்சள் கலரைத் தேர்ந்தெடுத்தார்களாம். காலப்போக்கில் அது வெள்ளைஆகி விட்டது!

6.ஜெர்மன் நாட்டின் காதல் தெய்வம் வீனஸ் நீல நிறத்தில்இருக்கும். ஜெர்மனியில் நிர்வாணமாகப் படம் எடுத்தால் அது வீனஸை அவமானப்படுத்துகிற மாதிரி.குற்ற வாளிகளுக்கு ப்ளூ கலர் டிரெஸ் கொடுத்து சிறையில் தள்ளினார்கள். இதனால் அந்த மாதிரிப் படங்களுக்கு 'ப்ளூ ஃபிலிம்' என்று பெயர் வந்ததாம்!

7.காற்று மாசுபாடு மனிதனை மட்டுமல்ல; புராதனச் சின்னங்களையும் பாதிக்கும். 2002-ம் வருடம் தாஜ்மஹாலின் தூண்கள் மஞ்சள் நிறமாக மாறின. அதற்குக் காரணம் காற்று மாசுபாடு என்பதைக் கண்டுபிடித்து, சுற்றி உள்ள அனைத்துத் தொழிற்சாலைகளையும் மூட உத்தரவிட்டார்கள். ரசாயனம் கலந்த களிமண்ணைப் பூசி ட்ரீட்மென்ட் கொடுத்ததால், பழையபடி வெண்மையாக மின்ன ஆரம்பித்தது தாஜ்மஹால்!

8.ஜப்பானில் ஓடும் ரயிலில் இருந்து குதித்து இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த வருடம் மட்டும் இரண்டாயிரம் பேர். 'பிளாட்ஃபார்ம் முனைகளில் நீல கலர் அடிக்கலாம். நீலம் தற்கொலை எண்ணத்தை மாற்றி ஆறுதலும் நிம்மதியும் தரும்' என்கிற விஞ்ஞானிகளின் ஆலோசனையை ஏற்று 29ரயில்வே ஸ்டேஷன்களில் நீல நிறமாக மாற்றிஇருக்கிறது ஜப்பான் அரசு. இந்த கலர் தெரபி வொர்க்-அவுட் ஆகுமா என்று காத்திருக்கிறார்கள்!

9.வண்ணத்துப்பூச்சிகள் எதிரிகளிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள தன் உடம்பின் நிறத்தைத் தற்காப்பாகப் பயன்படுத்துகின்றன. அபோஸ்மேடிசம்' (Aposematism) எனப்படும் முறைப்படி வண்ணங்கள், வாசனைகள், ஒலிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி எதிரியை மயக்கிவிடும்.எதிரி அசந்த நேரத்தில் எஸ்கேப்!

10.அவ்வப்போது நாடாளுமன்றத்தில் 'வெள்ளை அறிக்கை (blank statement) வேண்டும்' என்று யாராவது கேட்பார்கள். 'எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் உள்ளதை உள்ளபடியே தெரிவிப்பது'தான் வெள்ளை அறிக்கை. இந்த
அறிக்கையே இறுதியானது!

இது நான் சில இணைய தளத்தில் படித்தது ;-) .. இது அறுசுவையில் சேர்ந்த போதே நான் அனுப்ப நெனச்சேன் .. ஆனா எப்டினு தெரியாம அட்மின்க்கு அனுப்பிடேன்.. அட்மின் பாபு அவர்கள் டென்ஷன் ஆகி இருப்பாரு ;-)

ரம்யமான..... ரம்யா .என்ன இது! புது டப்பிக்கு(topic )..... புது புது மெசேஜு (messege ) .கலக்குறிங்க ரம்யா .எப்படி டா ரம்யா . கலக்கு மா..... கலக்கு .....

டிப்ஸ் ரம்யா நான் வந்துடேன். எப்படி ரம்யா உங்களால இப்படிலாம்? உண்மையிலேயே நீங்க அறிவு ஜீவி தான். நான் சொன்னத prove பண்ணிடீங்க.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

Hi TR (டிப்ஸ் ரம்யா) நானும் காபி அடிச்சுட்டேன்.
சிவப்பு:
சக்தி, ஆற்றல் மற்றும் வலிமையை குறிக்கும் நிறம் சிவப்பு. புற்று நோயை குணப்படுத்திடவும், புண் மற்றும் காயங்களை ஆற்றிடவும் பெரிதும் உதவுகின்றது இந்நிறம். மேலும் இந்நிறம் குளிர் பாகங்களில் வெப்பத்தை ஏற்படுத்தி உடலில் ஏற்பட்டுள்ள வலியினைக் குறைத்திட உதவிடும். இரத்தம் மற்றும் இரத்த ஓட்டம் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மனச்சோர்வினை நீக்கி தெளிவு அளிக்கும் வலிமை பெற்றது சிவப்பு நிறம்

வெள்ளை:
ஒளிக் கதிர்கள் அனைத்தும் தன்னுள்ளே இருக்கப்பெற்ற நிறம் வெள்ளை. விழிப்பு நிலை ஏற்படுத்தும் வலிமையுடைய நிறமான வெள்ளை, நிலையான அமைதி தந்து ஆறுதல் அளிக்கக் கூடிய வலிமை கொண்டது.

செம்மஞ்சள்:
உடலில் நோய் எதிர்ப்பு மற்றும் ஜீரண சக்தி அதிகரித்திடவும், மார்பு, சிறுநீரகம் சம்பந்தமான நோய்களை குணப்படுத்திடவும் பெரிதும் உதவுகிறது செம்மஞ்சள் நிறம். சிவப்பு நிறத்தைப் போலவே செம்மஞ்சள் நிறத்தையும் அதிக நேரம் உபயோகிக்கக்கூடாது. நரம்புத் தளர்ச்சி உடையவர்கள், உணர்ச்சி வசப்படுபவர்கள் மேல் இந்நிறத்தை உபயோகிப்பதைத் தவிர்த்திடவும்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

டியர்... ஃபாத்திமா..

உங்ககிட்ட இருக்க நல்ல பழக்கமே யாரு ஒருத்தர் தலைப்பு அனுப்பினாலும் அவங்களே அசந்து போற மாரி நீங்க ஒரு தகவலை சொல்லிடுவீங்க.. ;-) குட் குட்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹாய் லுதா.. என்னோட பேருக்கு பொருத்தமா நல்ல அடைமொழி எல்லாம் சேத்து இருக்கீங்க ;-)
நன்றி பா ... ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அப்படி இல்ல. அறுசுவை ல பதிவு போடுறதே இதன் மூலமா மத்தவங்களுகு இந்த விஷயம் தெரியனும்னு தான். அதனால் தான் நம்மால் முடிஞ்சது இந்த மாதிரி சின்ன சின்ன ஹெல்ப்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

ரம்யா நல்ல கலர்புல்லான தலைப்பு தொடக்கி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
அறிவு பூர்வமான தகவல்கள், நாமும் அறிந்து கொள்வதில் சந்தோசம்.எமது பிள்ளைகளுக்கும் பயனுள்ளதாக அமையும்.
மேலும் உங்களுக்கு தெரிந்தவைகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

சிகப்பு நிறம் சில துளிகள்:

1.பழங்கால ரோமானியர்கள் சிகப்பு கொடியை யுத்த சின்னமாக பின்பற்றினார்கள்

2.சிகப்பு நிறத்தை ஸ்டாப் signs ,தீயணைப்பு பகுதிதளிலும்,நிறுத்த பகுதிகளிலும் ஏன் போடுகிறார்கள் தெரியுமா? சிகப்பு நிறம் எளிதில் எல்லோராலும் கண்டுகொள்ள படுவதால் தான்

3.பழங்கால ராஜ வம்ச எகிப்தியர்கள் தங்கள் உடல் முழுதும் சிகப்பு சாயத்தை பூசி கொள்வர் அவர்களை மற்றவர்களிடம் தனித்து காட்டவே இந்த வழக்கம்

4.ரஷ்ய மொழியில் சிகப்பு என்றால் அழகு போல்ஷேவிக்ஸ் சிகப்பு கொடியை தங்கள் சின்னமாக ஏற்று ட்சார் மன்னரை வீழ்த்திய பிறகு சிகப்பு நிறம் கம்யுனிச நிறமாக ஏற்று கொள்ள பட்டது

5.இந்தியாவில் காலாட்படை வீரரை குறிக்க சிகப்பு நிறமே சின்னமாக பின்பற்ற படுகிறது

6.தென் ஆப்பிரிக்காவில் சிகப்பு நிறம் துக்கத்தை குறிக்கும்

7.சிகப்பு பௌவை புதிய காரில் கட்டுவதை நிறைய பேர் வழக்கமாக கொண்டு உள்ளனர்

8.சீனாவில் சிகப்பு நிறம் அதிர்ஷ்டமனதாகவும்,விடுமுறையை குறிக்கவும்,திருமண நிறமாகவும்,கெட்ட சக்திகளை விரட்டவும் உபயோக படுத்துகின்றனர்

9.உலகத்தின் முக்கால்வாசி நாடுகளின் கொடிகளில் சிகப்பு நிறம் உள்ளது

10. "ரெட் shirts " என்ற வீரர்கள் இத்தாலி நாட்டை சேர்ந்த கரிபால்டியின் படையை சேர்ந்தவர்கள் என்பதை குறிப்பர்

சில ஆங்கில phrases :

1.“red-letter day” ==>முக்கிய நிகழ்வு நிகழ்ந்த நாள்

2.To “paint the town red” ==>நகரமே மகிழ்ச்சி கொண்டு இருப்பது

3.To “see red” ==>கோபமாக இருப்பதாய் காட்டுவது

4.“red herring”==>கவனத்தை திசை திருப்பும் பொருள்

5.A “red eye” ==>விடாமல் பயணம் செய்யும் விமானம்

6.If a business is “in the red”==>நஷ்டத்தை நோக்கி போகும் வியாபாரம்

என்றும் அன்புடன்,
கவிதா

நன்றி யோகராணி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

டயர் கவி.. நன்றி... உங்களோட பதியு ரொம்ப நல்லா இருக்கு பா.. ;-)
phrases பத்தி சொல்லி இருக்றது தான் ஹைலேட்டே ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்