கரு வளரும் கதை

அறுசுவை நேயர்களே ! நீங்கள் புதிதாக கர்ப்பம் தரித்தவரா ? அல்லது கர்ப்பம் தரிக்க முயற்சி செய்கிரிர்களா? உங்களுக்கு பலதரப்பட்ட சந்தேகங்கள் இருக்கும் .அந்த சந்தேகங்களுக்கு இன்று விளக்கமான தெளிவான பதில்கள் .சில இணையதளங்களின் உதவியுடன் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

1 முதல் 4 வாரம் வரை கருவின் வளர்ச்சி :
சினையுற்ற கருமுட்டைகள் வளரத் தொடங்குகின்றன .அதனை சுற்றி தண்ணீரால் சூழப்பட்ட ஒரு இறுக்கமான உறை இருக்கும் .அந்த உறை முழுக்க நீர்மத்தால் நிரப்ப தொடங்கும். இந்த உறைக்கு அம்னியோடிக் சேக் என்று பெயர் .வளருகின்ற கருவுக்கு இந்த உறை குஷன் போல இருக்கும் .நச்சுக்கொடி வளருகிறது .இதனை பிளசண்டா என்று சொல்கிறோம் .இந்த நச்சுகொடிதான் தாயிக்கும் சேயிக்கும் இடையே பாலமாக செயல்படுகிறது .அதாவது குழந்தைக்கு தேவையான சத்து பொருட்களை தாயிடமிருந்து சேயிக்கு கொண்டு செல்கிறது .அதுபோல சேயிடமிருந்து வேண்டாத கழிவுகளை தாய்க்கு கடத்தி வெளியே அனுப்பும் வேலையை செய்கிறது .பிளசண்டா உருண்டையான குழாய் போல காணபடுகிறது .

முகம் தோன்றுவதற்கான அறிகுறிகள் தென்படும் .முதல் கட்டமாக கண்களுக்காக இரண்டு பெரிய கருப்பு வளையம் உருவாகும் .வாய் ,கீழ்த்தாடை ,தொண்டை வளரத தொடங்கும் .ரத்த செல்கள் குறிப்பிட்ட வடிவத்தை அடைய தொடங்கி ரத்தஓட்டம் தொடங்கும்.

முதல் மாதத்தின் முடிவில் உங்கள் குழந்தை வெறும் 1 /4 இஞ்ச நீளம் மட்டுமே இருக்கும் .அதாவது ஒரு நெல்லின் அளவை விட சிறியதாக இருக்கும்

முதல் வாரம் மற்றும் இரண்டாவது வாரம் :
இந்த வாரத்தில் உங்கள் குழந்தை ஒரு கனவாகவே இருக்கும் .அதாவது கருவுற்று இருக்கிறிர்களா? இல்லையா ?என்பதை உறுதியாக சொல்ல முடியாது .டாக்டரிடம் போனால் ,கடந்த மாத விலக்கு முடிந்த நாட்களில் இருந்து தற்போது எத்தனை நாட்கள் தள்ளிப் போய் இருக்கிறது ? என்று கணக்கிடுவார்.ஆனால் கருத்தரித்து இருக்கிறிர்களா ?அல்லது வேறு பிரச்சனையால் மாதவிலக்கு தள்ளிப் போகிறதா?என்பதை டாக்டரால் உறுதியாக கணிக்க முடியாது .தொடக்கத்தில் புது உயிராக உருவாகும் 20 பெண் கரு உயிரணுக்கள் முதிர்ச்சி அடைய தொடங்குவதோடு ஏற்கனவே சொன்ன அம்னியோடிக் சேக் என்ற நீர்ம பைகளில் சென்று சேர தொடங்கும்.இப்போது இந்த நீர்ம பைகளை பாலிக்லஸ்(follicles )என்று அழைக்கப்படுகிறது .இந்த பாலிக்லஸ்களின் ஒன்று முதிர்ச்சி அடைந்து ஒரு கரு முட்டையை வெளியிடும் .அந்த கருமுட்டை பலோபியன் குழாய் வழியாக கிழ நோக்கி சென்று கருவுருதளுக்காக காத்திருக்கும் .இவை அனைத்தும் அடுத்த மாத விலக்கு தொடங்குவதற்கு 14 நாட்களுக்கு முன்பே நடந்து முடிந்து விடும் . இதுதான் கருவுருதலுக்கு ஏற்ற காலம்.

முதிர்ச்சி அடைந்த கரு உயிரணு விடுவிக்கப்பட்ட நிலையில் ஒரு கருமுட்டை கருவுருதலுக்கு 12 முதல் 24 மணி நேரம் வரை மட்டும் போதும் .இப்போது கருவுரவில்லைஎன்றால் கவலைப்பட வேண்டாம் .ஒவ்வொரு மாதத்திலும் கருவுருவவதர்க்கு 20 % வாய்ப்பு மட்டுமே உள்ளது

இந்த வாரத்துக்கான டிப்ஸ் :

இந்த நேரத்தில் நீங்கள் ஒரு நல்ல மகப்பேறு மருத்துவரை போய் பார்க்க வேண்டியது அவசியம் .இதனை கருவுருதலுக்கு முந்தய விசிட் என்று சொல்லலாம் .இந்த விசிடிங் பொது மரபியல் வியாதிகள் ,சுற்றுசுழல் மாசுபாடுகள் ,வாழ்க்கை முறையில் மாற்றம் போன்றவற்றால் ஏற்படும் ஆபத்துக்களை முன்குட்டியே கண்டுபிடித்து விட முடியும் ஆதலால் ஆரோக்கியமான கருவுறுதல் மற்றும் குழந்தையை உறுதி செய்ய முடியும் .முக்கியமாக தினம் தோறும் ௦.4 மில்லி கிராம் முதல் 400 மில்லி கிராம் வரை பாலிக் அமிலம் உட்கொள்ளவேண்டும் .கருதேரிப்பதர்க்கு முன்பே பாலிக் அமிலம் எடுத்துக்கொண்டால் குழந்தைக்கு ஏற்படும் ஸ்பின பைபிடா
போன்ற நரம்பு குழாய் குறைப்பாடு வருவதை தடுக்க முடியும் .

3 வது வாரம் :
உங்களுடைய கருமுட்டையும் ,உங்கள் பார்ட்னரின் விந்தணுவும் வெற்றிகரமாக ஒன்று சேரும் பட்சத்தில் முதிர்வுறாத
கருவுயிர் உருவாக தொடங்கும் .இந்த கருவுயிர் ஒரு குண்டூசி முனையின் அளவுதான் இருக்கும் .இதனை கரு அல்லது குழந்தையின் தோற்றத்துடன்
ஒப்பிட முடியாது .100 செல்கள் அதிவேகமாக பல்கி பெருகும்
இந்த செல்களின் வெளிப்புற அடுக்கு தான் பிற்காலத்தில் நஞ்சுக்கொடியாக மாறும் .உட்புற அடுக்கு கருமுளை ஆகும் .
இந்த காலக் கட்டத்தில் உடலின் வெளிப்புறத்தில் எந்தவிதமான மாற்றமும் தென்படாது .அப்படி மற்றம் தென்படவேண்டும் என்று நினைப்பது அதிகபட்சம் ஆகும் .ஏனெனில் நீங்கள் மாத விலக்கு வரும் வாய்ப்பு இன்னும் தவறிவிடவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் .

இந்த வாரத்திற்கான டிப்ஸ் :

வீட்டில் இருந்தபடியே கர்ப்பம் தரித்திருக்கிரோமா? இல்லையா? என்பதினை சிறுநீர் பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம் .அல்லது மருத்துவமனைக்கு சென்று ரத்த பரிசோதனை எடுக்க வேண்டும் .வீட்டிலேயே சோதனை செய்வதனாலும் சரி ,ஆய்வகத்தில் சோதனை செய்வதனாலும் சரி ,அனைத்து வழிகாட்டு முறைகளையும்ஒழுங்காக பின்பற்ற வேண்டும்.பயன்படுத்துகின்ற அனைத்து கருவிகளும் சுத்தமாக வைத்து கொள்ளவேண்டும் .

4 வது வாரம் :
உங்களுடைய குழந்தை இப்போது மிகசிறியதகவே இருக்கும் . அளவில் சொல்லவேண்டும் என்றால் ௦.014 இஞ்ச் ௦.04 இஞ்ச் நீளம் இருக்கும் .கருவின் ஆதி உரு (embryo ) இரண்டாவது வாரத்தில் இருந்த நிலையை விட்டு வெகு வேகமாக வளர தொடங்கும் ,அதாவது 150 செல்கள் வரை பெருகும் .சிறுநீர்க் குழாய்வழியாக குழந்தை தேவையான சத்துக்களை பெற்று வேகமாக வளர தொடங்கும் .குழந்தையின் உடலில் இருந்து வேண்டாத பொருட்கள் அனைத்தும் அதே வழியாக வெளியே கொண்டு செல்ல படும் .ஆதி உருவின் அடுக்குகள் உறுப்பிற்கு தகுந்தார் போல் சிறப்பு மாற்றங்களை பெற ஆரம்பிக்கும்.அதில் வெளிப்புற அடுக்கு தான் நரம்பு மண்டலமாகவும் ,தோல் ,முடியாக மாறும் .உட்புற அடுக்கில் ஜீரண உறுப்புகளும் ,சுவாச உறுப்புகளும் தோன்றும் .நடுவில் உள்ள அடுக்கில் இருந்து தான் பெரும்பாலும் முக்கிய உறுப்புகள் தோன்றும் .மண்டை ஓடு,எலும்பு ,தசைகள், குருத்தெலும்புகள் ,செக்ஸ் உறுப்புகள் போன்றவை அவற்றில் அடங்கும் .

இந்த வாரத்தில் கூட உங்களுக்கு மாத விலக்கு வர வாய்பிருக்கிறது .அப்படி வரவில்லை என்றால் நீங்கள் கர்ப்பம் அடைந்திருக்கிரிர்கள் என்பதனை முத்த அறிகுறியாக எடுத்துகொள்ளலாம் .உங்களுடைய கருப்பையில் ஆதி உரு மிக சிறிய புள்ளி போல தென்படுவதை பார்க்கலாம் .ஆனால் கருத்தரித்த தற்கான எந்தவித அறிகுறியும் உங்களிடம் காணமுடியாது .ஆனால் கருவையும் அதை சுற்றி திரவத்தையும் கொண்ட பை ,திரவம் மற்றும் பிளசண்டா ஆகியவற்றை நிரம்பத் தொடங்கும் .இந்த நீர்மங்கள் மூலம் சிசுவுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் சத்து பொருட்கள் கொண்டு வரப்படும்.

இந்த வாரத்திற்கான டிப்ஸ் :
ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட முயற்சி செயுங்கள் .(அறுசுவை) பரிந்துரைக்க பட்ட பட்டியலில் இருக்கும் சத்துணவுகளை அவசியம் சாப்பிடவேண்டும் .ஒரு நாளைக்கு 6 முதல் 8 அவுன்ஸ் கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.அதற்காக நீங்கள் 2 பேருக்கும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இப்போதைக்கு கிடையாது.நீங்கள் சாதாரணமாக 300 கலோரி சத்துள்ள உணவை சாப்பிட்டால் போதும் .ஆரம்பத்தில் ஏற்படும் தலைசுற்றல் ,வாந்தி காரணமாக கொஞ்சமாகத்தான் சாப்பிட முடியும் .இதற்காக கவலைவேண்டாம் ,நீங்கள் முன்பே சரியான முறையில் சாப்பிட்டு வந்திருக்கிரிர்கள் என்றால் உங்களுக்கு குழந்தைக்கு என்ன தேவையோ அது தாரளமாக கிடைக்கும் .

(தொடரும்)

ஹாய் லுதா.. நல்ல தலைப்பு.. உண்மையாலுமே இது நெறைய பேருக்கு பயன்படுறதா இருக்கும். பலரது சந்தேகத்த தீர்க்க உதவும் ;-)

உங்கள் பத்தி சோல்லுங்களேன் லுதா ;-) உங்க பிரியாணினா எனக்கு ரொம்ப பிடிக்கும் சாப்ட வீட்டுக்கு வர தான் கேட்டேன் ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹலோ ரம்யா ....முதலில் வாழ்த்துக்கு நன்றி .
என்னை பற்றி சொலனும்னா ......ஹ்ம்ம்ம் .என் பெயர் லூதா..என் கணவர் பெயர் மொகமது யூனுஸ் .எனக்கு திருமணம் முடிந்து 6 வருடம் ஆகிறது . 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர் .நான் திருச்சியில் 2000 -2003 வருடம் b. c . a (computer application )படித்துள்ளேன் .முதல் முன்று வருடம் சவூதி அரேபியாவில் இருந்தேன் .இப்போ இரண்டரை வருடமாக எகிப்தில் வாழ்கிறேன் .சொந்த ஊரு விருத்தாசலம் .பாண்டிசேரிக்கு மருமகள் . வேலைக்கு செல்லவில்லை வீட்டில் தான் உள்ளேன் .அப்பாடா.....இது தான் என் கதை சுருக்கம் . உங்கள் கதை சுருக்கத்தை கேட்க ஆவலாய் ஓடோடி வந்தேன் .....ரம்யமான ....ரம்யா .அப்புறம் பிரியாணி ரெடி .......பிரியாணி ரெடி.........

லுதா யூனுஸ்
நல்ல பதிவு போட்டு இருக்கீங்க. இது முதல்முறை ப்ரக்னன்ட் ஆகுர பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அதற்கு முதலில் நன்றி.
அப்புறம் உங்க சுய கதை சுருக்கம் நன்றாக இருந்தது. ரம்யா எங்க போயிடீங்க சீக்கிரம் வாங்க உங்க சொந்த கதையை போடுங்க வாங்க.
லூதா இன்னும் மற்ற விவரங்களையும் எந்த மாதிரி உணவுகள் பயன்படுத்தலம். எது AVOID பண்ணலாம்னு விரிவாக போடலாம். கர்ப்பிணி பெண்களின் பல கேள்விகலுக்கு இதில் பதில் கிடைக்கும்னு நினைக்கிறேன்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

ஹாய் லூதா
Assalamu alaikum நல்லா இருக்கிங்களா, நீங்க திருச்சியா அட நான் கூட திருச்சிதாங்க, நானும் BCA தான் நீங்க எங்கே படித்தீர்கள் என்று தெரிந்துக்கொள்ளலாமா. நான் Jamal Mohammed college ல 2001- 2004.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

ஹாய் பாத்திமா .நலமா ? உங்கள் பாராட்டுக்கு நன்றி .எனக்கு தெரிந்த அனைத்தும் பதில்களும் இதில் இடம் பெறும்.
வா அலைக்கும் சலாம் ரிஸ்வானா .நான் படித்தது அய்மான் மகளிர் கல்லூரி,கே .கே. நகர் . திருச்சி.

அறுசுவையில் பதிவுகள் கொடுப்போருக்கும், புதிதாய் இணைந்தவர்களுக்குமான பொதுவான வேண்டுகோள் இது.

"பிற தளங்களில் வெளியான கட்டுரைகளை இங்கே அப்படியே வெளியிடக்கூடாது"

இந்த ஒரு வரியை மன்றத்தில் நான் நூறு முறையாவது சொல்லி இருப்பேன். அறுசுவை விதிகளிலும் அவை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தும் மீண்டும் மீண்டும் இதே தவறை பலரும் தொடர்கின்றார்கள் என்பது வருத்தத்தை தருகின்றது. தவறு செய்பவர்கள் இரண்டு விதமான விளக்கங்களை தருகின்றார்கள். ஒன்று, நான் புதிதாய் இணைந்துள்ளேன், எனக்கு இந்த விதிகள் தெரியாது என்பது. மற்றொன்று, இது இணையத்தில் இருந்து எடுத்ததுதான், இங்குள்ள பலருக்கும் பயன்படவேண்டும் என்று கொடுத்தேன் என்பது.

இந்த இரண்டு காரணங்களையும் என்னால் ஏற்க முடியாது. எந்த ஒரு தளத்திலும், அதுவும் குறிப்பாக மன்றத்தில் (Forum) பதிவுகள் கொடுக்கும் முன்பு, மன்ற விதிகளை கண்டிப்பாக படித்து தெரிந்துகொள்ள வேண்டும். அந்த தளத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளவை எவை, அனுமதிக்கப்படாதவை எவை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதன்பிறகே பதிவுகள் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே விளக்கங்கள் கொடுப்பது என்பது நிர்வாகத்தால் இயலாத விசயம். அதற்காகத்தான் எல்லா தளங்களிலும் நிபந்தனைகளிலும், மன்ற விதிகளிலும் இவற்றை தெரிவித்துவிடுகின்றார்கள். அறுசுவையிலும் அவை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தயவுசெய்து இனி யாரும் 'எனக்கு விதிகள் தெரியாது' என்று குறிப்பிட வேண்டாம்.

இரண்டாவது காரணமாகிய, 'எல்லோருக்கும் பயன்பட வேண்டும் என்று கொடுத்தோம்' என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இணையத்தில் உள்ளவை அனைத்துமே எதாவது ஒரு வகையில் பயன்படக்கூடிய தகவல்கள்தான். அதற்காக மற்ற தளங்களில் உள்ளதை அப்படியே எடுத்து இங்கே வெளியிட்டுவிடலாமா?

நீங்கள் படித்து அறிந்த தகவல்களை உங்களுடைய சொந்த நடையில், கட்டுரையாக வடிவமைத்து வெளியிடுவது தவறல்ல. எல்லோருமே எதாவது ஒரு ஊடகத்தில் இருந்துதான் தகவல்களை, செய்திகளை பெறுகின்றோம். ஆனால், பிறருடைய கட்டுரைகளை அப்படியே எடுத்து தன்னுடையதாக வெளியிடுவது ஏற்புடைய செயல் அல்ல. அந்த கட்டுரைக்காக அதன் உரிமையாளர் எத்தனை நேரம் செலவு செய்திருப்பார், எவ்வளவு உழைத்திருப்பார் என்பதை உணரவேண்டும். நம்முடைய படைப்பை மற்றவர்கள் காப்பி செய்தால், அதன் வலி எப்படி இருக்குமோ அதே வலிதான் அவர்களுக்கும் இருக்கும்.

எனவே இந்த காப்பி, பேஸ்ட் விசயங்களுக்கு அறுசுவையில் என்றுமே அனுமதி கிடையாது. முடிந்தால், நீங்கள் படித்த விசயங்களை, அறிந்த விசயங்களை உங்கள் சொந்த நடையில் கட்டுரைகளாக வடித்து, இங்கே வெளியிடுங்கள். பிற தளங்களில் உள்ளவற்றை அப்படியே எடுத்து வெளியிட்டு, மற்றவர்களுக்கு பயன்படட்டும் என்ற காரணங்கள் கொடுக்க வேண்டாம். அவை காப்பிரைட் விதிகளுக்கு உட்பட்டவையாக இருந்தால், சட்ட ரீதியாகவும் பிரச்சனைகளை கொண்டு வரும். இதனால் நாங்கள் பாதிக்கப்படுவோம் என்பதால், இந்த விசயத்தில் பாரபட்சம் இன்றி, சற்று கடுமையாகவே இதுவரை நடந்து வருகின்றோம்.

மேலே உள்ள கட்டுரை http://www.eegarai.net/-f14/-t1007.htm என்ற தளத்தில் இருந்து அப்படியே எடுக்கப்பட்டுள்ளது. இதனை நீக்குவதை தவிர வேறு வழியில்லை.

ஹாய் லுதா..

நன்றி.. நான் ரம்யா.. அம்மா, அப்பா .. இரண்டு அக்கா.. இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.. நான் தான் கடைசி. நான் எம் எஸ் ( அப்பேரல் பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்) படித்துள்ளேன். சொந்த ஊர் ஈரோடு. தற்சமயம் திருப்பூர். அட்மின் மேனேஜராக ஒரு ஐ எஸ் ஒ கம்பெனியில் பணிபுரிகிறேன்.. வேறு தகவல் ஏதும் வேணுமா... லுதா ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சாரி அட்மின் அண்ணா .இது நீங்க சொன்ன தளத்தில் இருந்து எடுக்கவில்லை.2005 வருடம் நான் கர்பமாக இருக்கும் போது எனது நண்பி நிஷா இதை எனக்கு பிரிண்ட் அவுட் எடுத்து பரிசாக வழக்கினால் .அந்த புக் இப்போ தான் என்னிடம் கிடைத்தது .அதை நம் அறுசுவை நேயர்களுக்காக அவர்களின் உதவிக்காக கொடுப்போம் என்று நினைத்தேன் .மற்றபடி வேறு எந்தநோக்கமும் இல்லை .அதற்காக என்னை மன்னியுங்கள் .sorry ....admin ...anna

பிற ஊடகங்களில் உள்ள தகவல்களை அப்படியே எடுத்து வெளியிடும் முன்பு சில விசயங்களை கவனத்தில் கொள்ளவும்.

1. அந்த தகவலை இங்கே அவசியம் தெரிவிக்க வேண்டும் என்ற நிலை வந்தால் மட்டுமே தெரிவிக்கவும். எதாவது ஒரு டாபிக்கில் பேசிக் கொண்டிருக்கும்போது அது குறித்த தகவல் ஏதேனும் புத்தகங்களில் இருந்தால், அவற்றை அப்படியே எடுத்து தெரிவிக்கும் நிலை ஏற்பட்டால், அதனை தெரிவிக்கலாம். அப்படி தெரிவிக்கும்போது, எந்த புத்தகத்தில் இருந்து எடுத்தீர்கள் என்பதை தெரிவித்து, அவர்களுக்கு ஒரு வார்த்தை நன்றி என்று தெரிவிக்க வேண்டும். அல்லது ஆதாரம் (source:) என்று குறிப்பிட்டு அந்த புத்தகத்தின் பெயரை குறிப்பிட வேண்டும்.

2. இணையத்தில், ஒரு தளத்தில் உள்ளவற்றை அப்படியே எடுத்து மற்றொரு தளத்தில் வெளியிட வேண்டிய அவசியமே இல்லை. அப்படி ஒரு தகவலை தெரிவிக்க வேண்டிய நிலை வந்தால், அந்த இணையத்தள முகவரியை அல்லது அந்த பக்கத்திற்கான முகவரியை இங்கே கொடுக்கலாம். அறுசுவையை பார்ப்பவர்களால் அந்த இணையத்தளத்தையும் கண்டிப்பாக பார்க்க முடியும். மற்ற தளங்களில் உள்ள தகவல்களை அங்கே சென்று பார்ப்பதுதான் முறையான செயல். இதில் கடினம் எதுவும் கிடையாது. மாறாக அவர்களின் படைப்பை நமது தளத்தில் கொடுத்தோமென்றால், அவர்களின் உழைப்பை திருடுவதாகத்தான் அர்த்தம். இது சட்டரீதியாக தவறான செயல்.

3. விதிகளின்படி சரி என்பதற்காக, நாளை எல்லோரும் படித்த புத்தகங்களில் உள்ள தகவல்களையெல்லாம் எடுத்துப் போட்டு, கடைசியில் சிறியதாக நன்றி என்று போட்டுவிட வேண்டாம். :-) நான் குறிப்பிட்டுள்ளதுபோல், அவசியம் என்று இருந்தால் ஒழிய, மற்ற ஊடகங்களில் வெளியானவற்றை இங்கே வெளியிட வேண்டாம். அதேபோல் பிற தளங்களுக்கான லிங்க்ஸ் கொடுக்கும்போது அவை அவசியமானதாக இருந்தால் தவிர, கொடுக்க வேண்டாம். மற்ற தளங்களுக்கான லிங்க்ஸ் கொடுப்பதில் நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன. சிலர் தளத்திற்கு இலவச விளம்பரம் போல், இங்கே இவை பற்றின தகவல் கிடைக்கும் என்றெல்லாம் கொடுப்பார்கள். அப்படி கொடுக்கப்படும் பதிவுகள் உடனே நீக்கப்படும்.

சகோதரி Lutha அவர்களுக்கு,

மற்றவர்களுக்கு பயன்படவே நீங்கள் இதனை கொடுத்துள்ளீர்கள் என்றும், இதில் வேறு உள்நோக்கம் இல்லை என்பதையும் நான் அறிவேன். ஆனால், இது போன்ற பதிவுகள் தவறானவை, காப்பிரைட் பிரச்சனைகளை தரக்கூடியவை என்பதால், நிர்வாகத் தரப்பு விளக்கத்தை நான் கொடுத்துள்ளேன். இந்த தவறுகள் அடிக்கடி நடக்கக்கூடியவை. அதனால், உங்கள் மீது எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. இது உங்கள் ஒருவருக்காக மட்டும் கொடுத்த பதிவு அல்ல. அப்படி ஒரு தோற்றம் வந்துவிடக்கூடாது என்பதால் தான், அனைத்து உறுப்பினர்களுக்கும் என்று மேலே சொல்லி இருந்தேன்.

உங்கள் பதிவில் சில இணையத்தளங்களின் உதவியோடு இந்த தகவலை தெரிவிப்பதாக கொடுத்திருந்தீர்கள். அதற்கு பதில் நீங்கள் எடுத்த புத்தகத்தின் பெயரைக் குறிப்பிட்டு இருந்தால், நன்றாக இருந்திருக்கும். நான் குறிப்பிட்டு உள்ள தளத்தில் இதே விபரங்கள் அப்படியே இருக்கின்றன. ஒருவேளை அவர்கள் அந்த புத்தகத்தில் இருந்து காப்பி செய்திருக்கலாம். எதுவாயினும், அறுசுவையில் அந்த தவறுகள் இடம்பெற வேண்டாம் என்பது எனது பணிவான வேண்டுகோள்.

அட்மின் அண்ணா மீண்டும் ஒரு முறை மன்னிக்கவும் ."ஊடகம் என்று தெரிவித்ததற்கு" நான் சொன்னதின் அர்த்தம்
அந்த புக் யில் வந்த அனைத்தும் உண்மையான செய்திகளா? இல்லையா? என்பதினை சில இணையதளத்தின் மூலம் தெளிவு செய்தது கொண்டு .வெளியிட்டேன் .இது 2005 தினகரன் வெளியிட்ட மருத்துவ குறிப்பின் பிரிண்ட் அவுட் தான் . விளக்கம் தராமைக்கு முதலில் மன்னிக்கவும் .இதில் உள்ள எதையுமே நான் கட் ,கோப்பி செய வில்லை .

மேலும் சில பதிவுகள்