தேதி: May 29, 2010
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
நீரிழிவு நோய்க்கும், சிறுநீரக கல்லுக்கும் வாழைப்பூ சிறந்த மருந்து. வாழைப்பூ மாதவிடாய் பிரச்சினைக்கும் சிறந்த மருந்து. இந்த வாழைப்பூத் துவையலில் துவர்ப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, காரம் என்ற ஐச்சுவை உள்ளது. எளிமையாக செய்யக்கூடிய இந்த துவையல் குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக வழங்கியவர் திருமதி. இளவரசி அவர்கள்.
வாழைப்பூ - ஒன்று
புளி - எலுமிச்சையளவு
கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
உளுத்தம்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 3
தேங்காய் - ஒரு கைப்பிடி
எண்ணெய் - வதக்க
தாளிக்க:
கடுகு, கறிவேப்பிலை
மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வாழைப்பூவை கழுவிவிட்டு, நடுவில் உள்ள காம்பு பகுதியை நீக்கி சுத்தம் செய்த பின் பொடியாக நறுக்கி, மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல் மூன்றையும் போட்டு சிவக்க வறுத்து எடுத்து கொள்ளவும்.

பின்பு அதே வாணலியில் வாழைப்பூவை போட்டு நன்றாக வதக்கி விட்டு லேசாக தண்ணீர் தெளித்து கிளறி நன்கு சுருளும் வரை வதக்கி அதோடு தேங்காய் துருவலையும் போட்டு வதக்கி எடுக்கவும்.

வதக்கிய வாழைப்பூவுடன் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், புளி, உப்பு சேர்த்து அரைக்கவும்.

பின்னர் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். சுவை உள்ள வாழைப்புத்துவையல் ரெடி. இதை சூடான சாதத்தில் நெய்/நல்லெண்ணெய் விட்டு சாப்பிடலாம். தயிர்சாதத்திற்கும் தொட்டு கொள்ளலாம்..

Comments
அன்பு இளவரசி, உங்க வாழைப்பூ
அன்பு இளவரசி,
உங்க வாழைப்பூ துவையல் நல்ல சத்தான உணவு. செய்து பார்க்க ஆசை தான். ஆனால் வாழைப்பூ வாங்குவதில் தான் சிக்கல். ஒரு முறை இங்கே வாங்கி ஒரே கசப்பு. வாழைப்பூவில் எது நல்லது என்று எப்படி தெரிந்தது கொள்ள முடியும் ? தெரிந்தால் சொல்லுங்களேன்
Save the Energy for the future generation
வாழைப்பூ துவையல்
இதுவரை கேள்விபட்டதே இல்லை.அருமையாக இருக்கு.ஊருக்கு போனால் செய்து பார்க்கனும்.மிக ஆரோக்கியமான குறிப்பு.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
நன்றி அட்மின்,இந்திரா,ஆசியா
என் குறிப்பை வெளியிட்ட அட்மின் நண்பர்களுக்கு நன்றி.
இந்திரா,இந்த பூ என் தோட்டத்தில் விளைந்தது.லேசான கசப்பு இருந்தது...ஆனால் இங்கு கடைகளில் வாங்கும் பூ மிகவும் கசப்பதாய் தோழிகள் சொன்னார்கள்...நம் ஊரில் உள்ள பூ அந்த அளவு கசப்பு இல்லை..
உப்பு கலந்த மோரிலோ/லைம்ஜுஸ் நீரிலோ ஒரு மணிநேரம் ஊறவைத்துபிழிந்துவிட்டு செய்யலாம்.உள்ளே உள்ள நீக்கவேண்டிய காம்பையும்,பசையாக உள்ள இதழையும் கவனமின்றி ஒன்றிரண்டு நீக்காமல் விட்டாலும் கசப்பு இருக்கும்.உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றிங்க.
ஆசியா நல்லா இருக்கீங்களா?ரொம்ப நாளாச்சு பேசி..!! அம்மா வாழைத்தண்டு,வாழப்பூ இரண்டிலும் இப்படி செய்வாங்க கசப்பு இருக்காது..
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றிங்க
அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
இளவரசி
வாழைப்பூ துவையல் புதுமையா இருக்கு இளவரசி,
இப்படிக்கு
ஜலீலா
Jaleelakamal
இளவரசி
வாழைப்பூ துவையல் புதுமையா இருக்கு இளவரசி,
இப்படிக்கு
ஜலீலா
Jaleelakamal
ஜலீலா மேடம்
நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு..சமீபத்தில்தான் உங்கள் blog பார்த்தேன்..என்னமா கலக்கறீங்க....பாராட்டுக்கள்...!!
உங்கள் ரெசிபி எதுவும் முயற்சி செய்தால் அங்கு வந்து பதிவு போடுகிறேன்.
அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
உதடு காய்ந்து போகிறது ஜலீலா அக்கா!
எனக்கு இந்த சம்மர் வந்தாலே அடிக்கடி உதடு காய்ந்து போய்விடும் நான் அடிக்கடி ஈரம் பண்ணினால் உதடுக்கு மேல் கருப்பாக ஆகிவிடுகிறது. வசெலின் போட்டேன் வெந்தயம் சாப்பிட்டேன் ஆனாலும் மறுபடியும் அப்படியேதான் வருகிறது எதாவது குறிப்பு சொல்லுங்கலேன் ப்ளீஸ்!
விசுவாசத்தினாலே எல்லாம் கூடும்
இளவரசி
இளவரசி... இதுவரை தெரியாத புது விதமான ஆரோக்கியமான குறிப்பு. வாழ்த்துக்கள். நிச்சயம் செய்ய வேணும். செய்துட்டு சொல்றேன். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கிரேஸ் ரவி
கிரேஸ் ரவி, உதடு காய்ந்து போவதற்கு லிப்ஸ்டி கம் லிப் பாம் பயன் படுத்துங்கள்.
டிரைனஸால் வருகிறது, தண்ணீர் அதிகமாக குடிங்க.
தேங்காய் எண்ணை கூட அப்ப அப்ப தடவி கொள்ளலாம்,
பட்டர் தேய்க்கலாம்.
Jaleelakamal
மிக்க நன்றி ஜலீலா அக்கா!
தங்களுடைய உடனடி பதிலுக்கு மிக்க நன்றி நீங்கள் சொன்னதை முயற்சி செய்து பார்கேறேன்அக்கானு சொல்றதுக்கு ஆச்சேபனை இல்லையே?.
விசுவாசத்தினாலே எல்லாம் கூடும்
hi recipekku thanks,ethaundan
hi
recipekku thanks,ethaundan kuruinkai elai serthal suvai athikam
neinka
mannai, Al-madaen bldg-2 ya erukkeriinka
அனுஷா பாஸ்கரன்
அனுஷா,
உங்கள் பதிலை இப்போது தான் பார்க்கிறேன். Doha-ல் தான் இருக்கிறீர்களா? நான் இருப்பது அல்கோரில்.
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
வாழைப்பூ துவையல்
இளவரசி, இப்போதான் வாழைக்கன்று வைத்து இருக்கிறேன். ;) பொத்தி வந்ததும் இங்கு பின்னூட்டம் வரும். ;)
- இமா க்றிஸ்
இளவரசி அவர்களே, இன்றைக்கு
இளவரசி அவர்களே, இன்றைக்கு எங்கள் வீட்டில் வாழைப்பூ துவையல் தான். ரொம்ப நல்ல குறிப்பு. முதல் முறையாக வாழைப்பூவில் துவையல் இன்று செய்தோம். மிகவும் நன்றாக வந்துள்ளது. நன்றி.
இதுவும் கடந்து போகும்.
thanks
yoga thanks for ur feedback
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.