குழிப்பணியாரம் ( ஆப்ப மாவு)

தேதி: May 31, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (3 votes)

 

ஆப்ப மாவு - ஒரு கிண்ணம்
தோசை மாவு - 3/4 கிண்ணம்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
தாளிக்க:
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - ஒரு தேக்கரண்டி


 

வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையானவைகளையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
இரண்டு மாவையும் ஒன்றாக ஒரு கிண்ணத்தில் ஊற்றி வதக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் கலவையை போட்டு நன்றாக கலக்கவும்.
குழிசட்டியை அடுப்பில் வைத்து குழியின் பாதிக்கு எண்ணெய் ஊற்றி ஒரு சின்னகரண்டியால் ஒரு கரண்டி மாவை ஊற்றவும். பணியாரம் ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபக்கம் வேக வைக்கவும்.
சுவையான குழிப்பணியாரம் ரெடி. தேங்காய் சட்னி, வெங்காய சட்னி, கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

என் இந்த குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு மிக்க நன்றி

Save the Energy for the future generation

நானும் இதுமாதிரி செய்வேன் பா.ஆனால் இனிப்பு சேர்ப்பேன் பா

அன்பு sahla,
ஒரே மாவில் இரண்டு விதமாக செய்யும் போது நமக்கு வேலை குறைவு. சாப்பிடுபவர்களுக்கு புதியதாகவும் இருக்கும்.

Save the Energy for the future generation