சேனைக்கிழங்கு 65

தேதி: May 31, 2010

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (8 votes)

 

தேவையான பொருட்கள்;-
சேனைக்கிழங்கு - 250கிராம்
மசாலா தூள் - 2 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
சோளமாவு - 50கிராம்
எண்ணெய் - வறுக்க தேவையான அளவு


 

செய் முறை;-
சேனைகிழங்கின் மேல்தோலை கத்தியால் சீவிக்கொண்டு தண்ணீரில் ந்ன்கு கழுவிக்கொண்டு சதுரதுண்டுகளாக வெட்டி கொள்ளாவேண்டும்.

வெட்டிய துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு துண்டுகள் முழ்கும் அளவிற்கு நீரை ஊற்றி ஒரு சிட்டிகை உப்பை சேர்த்து முக்கால் பதத்திற்கு வேக விட வேண்டும்.

பின்பு நீரை வடித்து விட்டு வெந்த கிழஙு துண்டுகளின் மேல் மசாலா தூள்,உப்பு,சோளமாவு, அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து பிசறி தேவையானால் கேசரி கலரை சேர்த்து கொள்ளலாம்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணை ஊற்றி சூடானவுடன் கிழங்கு கலவையை உதிராக எண்ணையில் போடு முறுகளக எடுக்க வேண்டும்.


மேலும் சில குறிப்புகள்