உதடு மற்றும் பற்கள் அழகு

உதடு பற்கள்Beauty tips

உதடு மற்றும் பற்கள்

இந்த வாரம் உதடுகள், பற்களின் பராமரிப்பையும், சிறப்பாக அவற்றை அழகுப் படுத்திக் கொள்வதையும் பார்ப்போம். உதடுகளை இதழ்கள்னு பூவோட சம்பந்தப்படுத்தி சொல்லும்போதே அது எவ்வளவு மென்மையான பகுதின்னு நமக்கு தெரியும். நம்ம உடம்பில் வேர்க்காத பகுதி உதடுகள்தான். உதடுகளுக்கு என்ன பெரிய கவனிப்பு தேவை, சும்மா வெடிப்புக்கு வேசலின் தடவினா போதாதான்னு கேட்கலாம். ஆனால் முகம் அழகாய் தெரிய உதடுகளின் வனப்பும் ஒரு முக்கிய காரணம். தனித்தனியா முகத்தில் ஒவ்வொரு பார்ட்ஸையும் கவனிக்க நம்மால முடியுமான்னு தோணும். தனித்தனியா கவனிக்க தேவையே இல்லை. நம்ம தினசரி வேலைகளிலேயே உதடுகளை பராமரிச்சுக்கறதுக்கான வழிகளும் இருக்கு.

காலையில் பல் விளக்குவதற்கு முன்பு டூத் பிரஷைக் கொண்டு, லேசாக உதடுகளை தடவி விட்டால் போதும். உதட்டில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி வழவழப்பாக இருக்கும். அதேபோல் முகத்துக்கு ஸ்க்ரப்பிங் பண்ணும்போது கடைசியாக உதடுகளில் ஒரு முறை தேய்த்தால் போதும். நல்ல தரமான லிப்ஸ்டிக், லிப் கிளாஸ் உபயோகித்தால் உதடுகள் நிறம் எப்போதும் மாறாமல் இருக்கும். ஏற்கனவே கறுத்துப் போன உதடுகளுக்கு க்ளிசரின் (ப்ளெயின் க்ளிசரினைக் கேட்டு வாங்குங்கள். லிப் க்ளாஸ் அல்ல) தினமும் தடவினால் கறுப்பு நீங்கி நல்ல நிறம் கிடைக்கும். பன்னீர் ரோஜாவின் சாறு அல்லது பன்னீரும் கூட நல்ல நிறம் கொடுக்கும். ஆனால் பிறவியிலேயே கருமை நிறத்தில் இருக்கும் உதடுகளுக்கு லிப்ஸ்டிக் மட்டும்தான் சரியான சாய்ஸ். அதிக வேசலின், லிப்க்ளாஸ் உபயோகம் கூட உதடுகளை கறுப்படைய வைக்கும். இயற்கையான தயிர், பாலாடை கூட வேசலினுக்கு பதிலா உபயோகிக்கலாம்.

உதடு மட்டும் அழகா இருந்தால் நிச்சயம் போதாது. பற்களும் அழகாக, சுத்தமாக இருப்பது அவசியம். அழகான இதழ்கள் விரித்து நாம் சிரிக்கும் சிரிப்பை இன்னும் வசீகரமாக காட்ட பற்களின் பராமரிப்பு மிகவும் அவசியம். தினமும் பல்துலக்குவதோடு Floss செய்வதும் அவசியம். பற்களை வருடத்திற்கு ஒரு முறையேனும் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 30 வயதிற்கு பிறகு பற்களின் இடையே இடைவெளி தோன்ற ஆரம்பிக்கும். எப்போதும் பல் துலக்கிய பிறகு பற்களை இரண்டு விரல்களால் கீழ்ப்புறமாக (விசில் அடிப்பது போல கைவிரல்களை வைத்துக் கொண்டு) ஈறுகளில் விரல் பட அழுத்தி விடுவது அவசியம். இதனால இடைவெளி ஏற்படாமல் ஓரளவு பாதுகாக்கலாம். அதோடு கால்ஷிய சத்துக்களை தேவையான அளவு எடுத்துக் கொள்வதும் பற்களை இடைவெளியிலிருந்து காப்பாற்றும்.

Teeth care

இடைவெளி ஏற்பட்டதும், உடனே கால்சியம் மாத்திரகளை எடுத்துக் கொள்வதால் இதனை சரி செய்துவிட முடியாது. கால்சிய சத்து நமக்கு உடம்பில் ஒரே நாளில் ஏற்படும் விஷயமல்ல. அதற்கு நீண்ட நாட்கள் ஆகும். எனவே வரும் முன் காப்பதே சிறந்தது. வாரம் ஒரு முறை எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து பற்களை விளக்கினால் பல் பளிச்சென்று ஆகும். அடிக்கடி ஒயிட்டனிங் ட்ரீட்மெண்ட் செய்து கொள்வதைக் காட்டிலும், காப்பி, டீ அதிகம் குடிக்காமல், அப்படியே குடித்தாலும் வாயை ஒவ்வொரு உணவுக்கு பின்னும் கொப்பளித்தாலே பற்கள் கறை பிடிக்காமல் பளிச்சென்று இருக்கும். பல் இடுக்கில் உணவுத்துகள்கள் மாட்டிக் கொண்டால் எக்காரணம் கொண்டும் டூத் பிக், சேப்டி பின் என்று உபயோகிக்காமல் முடிந்த வரை Floss உபயோகித்து நீக்க வேண்டும். இடைவெளி ஏற்படாமல் இருக்க நல்ல தரமான, மெலிதான Floss உபயோகிக்க வேண்டும். மேலும் ஒயிட்டனிங் ட்ரீட்மெண்ட் அடிக்கடி செய்வதால் பல் கூச்சம் ஏற்படும். எனவேதான் அதனை அடிக்கடி செய்து கொள்ளக்கூடாது. டூத் பிரஷ் 3 மாதத்துக்கு ஒரு முறை புதிதாக மாற்ற வேண்டும்.

ஈறுகளில் ரத்தம் வடிவது, வாய் துர்நாற்றம் போன்றவற்றிற்கும் மருத்துவரை அணுகுவதே சிறந்தது. பல சமயங்களில் வாய் துர்நாற்றத்திற்கு வயிற்றில் ஏற்படும் அல்சரும் கூட காரணமாக இருக்கும். ரூட் கேனால் ட்ரீட்மெண்ட் அல்லது புதிதாக பல் பொருத்தும்போதோ முடிந்த வரை பல் கேப்பை(cap) நமது மற்ற பல்லின் நிறத்திற்கு சரியாக பொருந்துமாறு தேர்ந்தெடுத்து அதனையே பொறுத்த வேண்டுமென்று பல் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளலாம். சில்வர், கோல்ட் என்று தனியாக தெரிவதைவிட இப்படி செராமிக்கில் பல் நிறத்துக்கே கேப் போட்டுக் கொண்டால் வித்தியாசம் தெரியாது. பற்களை அழகுப் படுத்திக் கொள்வதைவிட மிகவும் முக்கியமான ஒரு விஷயம் வாய்துர்நாற்றத்தை தடுப்பது. ஏனெனில் பலருக்கு தனது வாய் துர்நாற்றமடிக்கிறதா இல்லையா என்றே தெரியாமல் இருக்கும். இவர்கள் தானாக செக் செய்து கொள்வதைக் காட்டிலும் ( தானாக கண்டுபிடிக்க தெரியாமல் இருப்பவர்கள்) குடும்ப உறுப்பினர்கள், வாழ்க்கைத் துணை போன்றவர்களிடம் கேட்பது நல்லது. இதற்காக வெட்கப்பட்டுக் கொண்டு இருந்தால் நமக்கு தெரியாமல் அடுத்தவர் நம்மைக் கிண்டல் செய்ய நாமே காரணமாகி விடுவோம்.

வெளியில் அழகு படுத்திக் கொள்வதைக் காட்டிலும், துர்நாற்றம் இல்லாமல் சுத்தமாக இருப்பதே அவசியம். சாப்பிட்ட பிறகு கிராம்பு மெல்வது கூட நல்ல பலனைத் தரும். அதிக சூடான, குளிச்சியான பொருட்களை பல்லில் படாமல் சாப்பிடுவதும் நல்லது. எலுமிச்சை, ஆரஞ்சு ஜூஸ், ஆபிள் சிடார் வினிகர் போன்றவற்றை கூட ஸ்ட்ரா கொண்டு பல்லில் படாமல் குடித்தால் பற்கள் பாதுகாக்கப்படும். இப்போது பிரஷ்ஷிலேயே டங்க் க்ளீனர் வைத்து வந்திருக்கிறது. அதனைக் கொண்டே ஈறுகளையும் மசாஜ் செய்து விட முடியும். இரவு உறங்கும் முன் பல் துலக்கும் பழக்கம் குழந்தைகளாக இருக்கும்போதே பழக்கிவிட வேண்டும். மவுத்வாஷ் உபயோகிப்பதைக் காட்டிலும் தினமும் இரு வேளை பிரஷ் கொண்டு பல் துலக்குவதே சிறந்தது.

Lips

இப்போது அழகுப்படுத்திக் கொள்வது எப்படி என்று பார்ப்போம். உதடுகளுக்கு என்று தனி கவனம் கொடுத்து மேக்கப் போடும் நாட்களில், எக்காரணம் கொண்டும் கண்ணிற்கு அதிக மேக்கப்பை போட்டு விடாதீர்கள். அது மேக்கப்பை கெடுத்துவிடும். உதடுகளுக்கு மேக்கப் போடுவது சுலபமாக செய்யக் கூடிய விஷயமாக இருக்க வேண்டும். மேக்கப் போடும்போது முகத்துக்கு போடும் மாய்ச்சுரைசிங் க்ரீம் மற்றும் பவுண்டேஷனை உதடுகளுக்கும் லேசாக தடவி, பிறகு லிப்ஸ்டிக் போட்டால் நீண்ட நேரம் லிப்ஸ்டிக் கலையாமல் இருக்கும். லிப் ஷேப்பை மாற்றுகிறேனென்று, லிப் பென்சில் கொண்டு கோடு வரைவதற்கு முன்பு அது நீண்ட நேரம் தாக்கு பிடிக்குமா என்று தெரிந்து கொள்ளுங்கள். அப்படி நீண்ட நேரம் இல்லாத லிப் பென்சிலாக இருந்தால் உதடுகளின் உள்ளே அல்லது வெளியே உள்ள லிப்ஸ்டிக் மட்டும் தெரிந்து முகத்தை அசிங்கமாக காட்டி விடும்.

உதடுகள் பெரிதாக உள்ளவர்கள் லிப் பென்சில் கொண்டு உதடுகளை சின்னதாக்கி காட்டும்போது, முடிந்த வரை கீழ்ப்பக்க உதட்டினையே குறைத்துக் காட்டுமாறு லைன் வரையுங்கள். மேல் பக்கம் வேர்வை அதிகம் வரும் இடம். அதனால அளவை குறைத்துக் காட்ட மேல் பக்கத்தை காட்டிலும் கீழ் பக்கமே லைன் இருக்க வேண்டும். முதலில் லிப் பென்சில் கொண்டு ஷேப் வரைந்த பிறகு, லிப்ஸ்டிக் போடுங்கள். இப்போது லாங்க் ஸ்டே லிப்ஸ்டிக்குகள் பல நிறங்களிலும், தன்மையிலும் கிடைப்பதால் லிப்ஸ்டிக் போடும் முன்பு உதடுகளுக்கு பவுடர் அடிக்க தேவையில்லை. லாங்க் ஸ்டே உபயோகிக்காதவர்கள் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் உதடுகளில் இருக்க ஒரு முறை பவுடர், பிறகு லிப்ஸ்டிக், பிறகு மேலே ஒரு பவுடர் கோட்டிங், பிறகு லிப்ஸ்டிக் என்று மூன்று கோட்டிங் வரை கொடுக்கலாம். இதுவும் நீண்ட நேரம் லிப்ஸ்டிக்கை அழியாமல் வைத்திருக்கும்.

Lipsticks

லிப்ஸ்டிக் போட்ட பிறகு அதிகம் எண்ணெய் பதார்த்தங்களை சாப்பிடாமல் இருப்பதும் லிப்ஸ்டிக்கை கரையாமல் வைத்திருக்கும். லிப்ஸ்டிக் போட்டு 1 அல்லது 2 நிமிடங்கள் கழித்து லிப்கிளாஸ் போட்டால் நன்றாக ஸ்மூத்தாக இருக்கும். சின்னதாக இருக்கும் உதடுகளை பெரிதாக காட்ட லிப் பென்சில் உபயோகித்து ஷேப் மாறுவதைக் காட்டிலும் ப்ளம்ப்பி லுக் தரும் லிப் ஸ்டிக்குகள் உபயோகிக்கலாம். இந்த வகை லிப் ஸ்டிக்குகள் உதடுகளை கொஞ்சம் பெரிதாக்கி காட்டும். லிப் லைனர் டார்க் கலரிலும், லிப் ஸ்டிக் அதைவிட கொஞ்சம் லைட்டான கலரிலும் உபயோகிப்பது அழகான லுக்கைத் தரும். ஆனால் இதையே மாற்றி லிப் லைனர் லைட் கலரிலும், லிப் ஸ்டிக் டார்க் கலரிலும் போட்டால் நன்றாக இருக்காது. லிப்ஸ்டிக் போட்டதே தெரியக்கூடாது, ஆனால் அந்த லுக் மட்டும் வேணும்னு நினைக்கறவங்க கூடுமானவரை Matt Finish வகை லிப்ஸ்டிக்குகளை உபயோகிக்கலாம். Gloss வெரைட்டி சின்ன வயதுக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். லிப்ஸ்டிக் ஷேடு பற்றி அறிய ஏற்கனவே மன்றத்தில் இருக்கும் என்னுடைய" இந்திய முகங்களுக்கேற்ற மேக்கப் ப்ராடக்ட்ஸ் என்ற பதிவினை பாருங்கள். கொஞ்சம் மாடர்ன் மற்றும் பெப்பி லுக்கிற்கு லிப்ஸ்டிக், லிப் லைனர் இரண்டுமே ஒரே நிறத்தில் Matt finish ல் போட்டால் பார்க்க நேச்சுரலாக இருக்கும். சிம்ரன், கேத்தரீனா கைஃப் போன்றவர்கள் இந்த வகை டெக்னிக்கில் லிப்ஸ்டிக் அப்ளை செய்திருப்பார்கள். ஆனால் லிப் க்ளாஸ் போடாமல் இருந்தால்தான் இந்த லுக் வரும்.

அடுத்த வாரம் அடுத்த பாகம்

Comments

டியர் தேவா மேடம் மிக்க நன்றி நீங்கள் உடன் பதில் தந்ததில் மிகவும் மகிழ்ச்சி.நான் 2 நாள்களில் ஊருக்கு செல்ல இருப்பதால் ஏற்கனவே உங்களின் பயனுள்ள குறிப்பில் உள்ள பொடியை பற்றிய குறீப்பை குறித்து வைத்துள்ளேன்.கண்டிப்பாக அவளுக்கும் கொடுத்து பாலொ பண்ண சொல்ரேன்.உங்களின் வேலைகளிற்கு இடையில் எனக்கு உடன் பதில் தந்ததற்கு மிக்க நன்றி தேவா.

hai susri,
i'm new to this site.Natural things will help to remove the unwanted hair.refer the book ''palakia porul alakia mugam'' by rajam murali(vikatan prasuram).

அன்புடன்
அஜந்தா

Fadeout பத்தி தெரிஞ்சுக்க www.fadeout.com பாருங்க. எந்த தயிரில் வேண்டுமானாலும் பேஸ் பேக் போடலாம். ஃபேஸ் பேக்கிற்கு கடலைமாவு, எலுமிச்சை சாறு, சந்தனம்,தயிர், பன்னீர் கூட போதும்.

அந்த லிங்க் பார்த்தேன்... நல்லா க்ளியரா இருக்கு... நன்றி.....

வித்யா பிரவீன்குமார்... :)

what is a good product for hair shining n face shinning n hair remover dont tell waxer

தோல் நிறம் சில இடங்களில் மட்டும் வேறு நிறத்தில் இருக்கிறது... தயிர் கலந்த பேஸ் பேக் போடுகிறேன்... இதோடு Fadeout-Night Cream ரெகுலராக உபயோகிக்கலாமா...? அல்லது fadeout cream-Original உபயோகிக்கலாமா....?
மேலும் இந்த க்ரீம் எங்கு கிடைக்கும் என்றும் சொல்லுங்களேன்... இந்தியாவில் கிடைப்பதில்லை...இங்கு சவுதியிலும் இல்லை....

வித்யா பிரவீன்குமார்... :)

this is a good information for everybody and also myself.

நண்பனே! நாளைய மழை அறியும் எறும்பாய் இரு..
நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும் காளானை இராதே!

தேவா மேடம்... நான் எபிலேட்டர் ட்ரை செய்யலாம் என்று, முதன்முதலாக ஒரு Braun Silk Epil Xlle எபிலேட்டர் வாங்கி உபயோகம் செய்தேன்... ஆனால் எனக்கு திருப்தியாகவே இல்லை... முடி வேரிலிருந்து வராதது போல் இருக்கிறது... நன்றாக தெரிகிறது... வேக்சிங் செய்தால் கூட இப்படி தெரியாது... க்ளீனாக இருக்கும்... User Manual பார்த்துத்தான் உபயோகம் செய்தேன்... நான் சரியாக உபயோகிக்கவில்லையா... இல்லை அப்படித்தான் இருக்குமா என்று குழப்பம் எனக்கு.... காசை வீணடித்து விட்டேனோ என்ற கவலை வேறு.... அதை எப்படி உபயோகிக்கனும் என்று சொல்லுங்களேன்.....

வித்யா பிரவீன்குமார்... :)

ப்ளீஸ் அடுத்த முறை இயன்றவரை கேள்வியை தமிழில் பதிக்க பாருங்கள்.Dont tell னு சொன்னா ஏதோ ஆர்டர் போடற மிரட்டற எபெக்ட் வருது :-). ஹேர் ரிமூவிங் பத்தி இந்த பகுதியில் எழுதி இருக்கேன். பாருங்க.
http://www.arusuvai.com/tamil/node/9059

முகத்தில் ஷைனிங்னா மேக்கப்பில் இலுமினேட்டர் உபயோகியுங்கள். இதனைப் பற்றி ஆயில் மேக்கப் என்ற பதிவில் தெளிவாக ஸ்டெப் பை ஸ்டெப்பாக மன்றத்தில் அழகுக்குறிப்புகள் பகுதியில் குறிப்பிட்டு இருக்கேன். தேடிப் பாருங்க. இதுவாக இருக்கலாம். http://www.arusuvai.com/tamil/node/9148
முடிக்கு இப்போது பேர்ல் பினிஷ், டயமண்ட் பினிஷ் என்று பல ரகங்களில் பாலிஷ் க்ரீம்கள் சலோன்களில் கிடைக்கிறது. ஹேர் சலோனில் கேட்டுப் பாருங்கள். System Professional Brand ல் கிடைக்கும்.

பேட் அவுட் ஆன்லைனில் கிடைக்கலாம். www.fadeout.com ல் பாருங்க. ஒரிஜினல் எப்பவும் நல்லா இருக்கும். கிடைக்காட்டி தெரியப்படுத்துங்க.

நன்றி தேவா மேடம்... பேட் அவுட் வெப்சைட்ல ஆன்லைனில் வாங்கும் முறை இல்லை.... வேற எங்க கிடைக்கும்னு சொன்னீங்க-னா உபயோகமா இருக்கும்.... நான் இங்க சவுதி அரேபியாவில் ஒரு கடையில் இருந்ததுனு வாங்கிட்டேன்... அப்புறம் வெப்சைட்டில் பார்த்தால் இரண்டும் வித்தியாசமா இருக்கு... நான் வாங்கினது டூப்ளிகேட் போல இருக்கு.... :( அதான் உங்கள கேட்டா நம்பி எங்க வாங்கலாம்னு சொல்லுங்க மேடம்...

நான் எபிலேட்டர் பத்தி கீழேயே ஒரு கேள்வி பதிவு பண்ணி இருக்கேன்... உங்களுக்கு நேரம் இருந்தால் பதில் சொல்லுங்களேன்....

வித்யா பிரவீன்குமார்... :)

iam watching this site for very long time. really i like it. just amazing.

எபிலேட்டர் உபயோகித்து முடி எடுப்பது நிச்சயம் முழுமையாகத்தான் இருக்கும். எனக்கென்னவோ நீங்கள் சரியான முறையில் உபயோகிக்கவில்லையோ என்றுதான் தோன்றுகிறது. வேரிலிருந்து முடிகளை அகற்றுவதை நாம் எளிதாக உணரமுடியும். அகற்றிய முடிகளை எபிலேட்டரிலிருந்து நீக்கும்போதும் இதனைப் பார்க்கலாம். முடி எடுக்கும் இடத்தில் பவுடர் தடவி, முடி வளர்ச்சிக்கு எதிர் திசையில் எபிலேட்டரை உபயோகியுங்கள். சில சமயம் எபிலேட்டரை திருப்பி பிடித்திருப்பதாலும் கூட முடி சரியாக வராமல் போகலாம். ஏற்கனவே எடுத்த முடியினை பிரஷ் கொண்டு எபிலேட்டரிலிருந்து நீக்குங்கள்.ஹெட் சரியாக பொருந்தி உள்ளதா என்று பாருங்கள். இதெல்லாம் செய்தும் சரியாக வரவில்லையென்றால் தயாரிப்பு கம்பெனியை அணுகுங்கள். குறைபாடுள்ள மிஷினாகவும் இருக்கலாம்.
வெப்சைட்டில் இருப்பது போல பேட் அவுட் இல்லாமல் இருப்பதற்கு ஓல்ட் ஸ்டாக்காக இருப்பது கூட காரணமாக இருக்கலாம். எக்ஸ்பயரி டேட் பாருங்கள். நான் இன்னும் ஆன்லைனில் கிடைப்பதைப் பற்றி பார்க்கவில்லை. பார்த்தவுடன் இங்கே சொல்கிறேன்.

dear deva,
this is the first time am entering this site.its very informative.thanks a lot.can u clear my doubt? i am having darkness(but no hair) in the place of moustache(between nose and upperlip).plz give me some tips which i can try in the home.
waiting for ur reply.

dear deva,
this is the first time am entering this site.its very informative.thanks a lot.can u clear my doubt? i am having darkness(but no hair) in the place of moustache(between nose and upperlip).plz give me some tips which i can try in the home.
waiting for ur reply.

Hi Mam, I'm the new joiner for this site.
my marriage held on 6th February, so i want clear my face without pimples. recentrly i try facial, but its not suited for my skin. it reacts more than before. pls suggest me without any cream for clearing my face or reducing pimples.

REALLY NICE TAMIL WEB,ANY ME TOO NEW HERE,IF U INTRESTED WE CAN BE FRIEND.IF CAN PLS WRITE UR EMAIL ADD NEXT TIME.

THANKS

Hi Deva,
I m a member for last 2 years.
But i was only browsing d recipies.
Today i was reading all ur posts and i was stunned.
Really very very useful and good Tips.
One good thing is all the items dat u have mentioned would be easily accessable.
Thanks for the valuable suggestions.
Reagrds,
Gaya3

Hi Deva,
I m a member for last 2 years.
But i was only browsing d recipies.
Today i was reading all ur posts and i was stunned.
Really very very useful and good Tips.
One good thing is all the items dat u have mentioned would be easily accessable.
Thanks for the valuable suggestions.
Reagrds,
Gaya3

நம் உதடுகளை அழகாக வைத்திருப்பது மிக முக்கியமான ஒன்றாகும் முக அழகின் முழுமையை வெளிப்படுத்துவதில் கண்களுக்கு இணையாக உதடுகளுக்கும் முக்கியத்துவம் உண்டு.உடலிலுள்ள சருமம் 25 நாட்களுக்கொரு முறை வெளித்தோலை உதிர்க்கிறது.அதுவே உதடுகளில் உள்ள சருமம் உதிர பல நாட்கள் ஆகும். சரியான பராமரிப்பு இல்லாததால்தான் உதடுகள் தோலுரிந்தும், வறண்டும் காணப்படுகின்றன. உதடுகளைப் பராமரிக்க சில ஆலோசனைகள்
தினசரி பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் மென்மையாக மாறும்.
வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை ரோஜா போல மென்மையாக மாறும்.
உதடுகளைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அது தவிர்க்கப்படவேண்டிய பழக்கம். அதனால் உதடுகள் வறண்டு போகவும், நிறம் மாறி அசிங்கமாகக் காட்சியளிக்கவும் கூடும்.எனவே இது தவிர்க்கப்பட வேண்டும்.
மற்றவர்கள் உபயோகிக்கும் லிப்ஸ்டிக்குகளைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அதனால் தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.
இப்போது மேட் பினிஷ் லிப்ஸ்டிக்குகள் மிகவும் பிரபலம். அவற்றில் ஈரப்பதம் குறைவு என்பதால்உதடுகளில் உள்ள இயற்கையான எண்ணெய்களை அழித்து விடும். எனவே அவற்றை எப்போதாவதுதான் உபயோகிக்க வேண்டும்.
தரமானதாக இல்லாத பட்சத்தில் தினசரி லிப்ஸ்டிக் உபயோகிப்பதால் உதடுகள் கருத்தும், வறண்டும் போகக் கூடும். எனவே தரமான லிப்ஸ்டிக்குகளாகப் பார்த்து உபயோகிக்க வேண்டும்.
லிப்ஸ்டிக் போட உபயோகிக்கும் பிரஷ்ஷை உடனுக்குடன் சுத்தப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மறுபடி அதைஉபயோகிக்கும்போது தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக உதடுகளில் உள்ள லிப்ஸ்டிக்கை சுத்தமாக அகற்றி விட வேண்டியது மிகமுக்கியம்.
லிப்ஸ்டிக்கை நேரடியாக அப்படியே தடவக்கூடாது. அது உதடுகளின் முழுமையான அழகை வெளிப்படுத்தாது. எனவே லிப் பிரஷ்ஷின் உதவியாலேயே லிப்ஸ்டிக் போட வேண்டும்.
முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை அழகு பெறும்.
தினமும் நெய் அல்லது வெண்ணெயை உதடுகளில் தடவி வர, அவற்றில் உள்ள வெடிப்புகள் நீங்கி, உதடுகள் வழவழப்பாகும்.
முட்டையின் வெள்ளைக் கருவோடு அரை ஸ்பூன் பாதாம் பவுடரைக் கலந்து, அத்துடன் கொஞ்சம் பாலாடையையும் சேர்த்து உதடுகளில் தடவி வர, வறண்ட உதடுகள் குணமாகும். இரண்டு டீஸ்பூன் ஆலிவ் என்ணெயுடன் இரண்டு கிராம்தேன் மெழுகும், பன்னீரும்கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை சிவப்பாகவும், மென்மையாகவும் மாறும்.
கொத்தமல்லிச் சாற்றை உதடுகளில் தினமும் தடவி வந்தால் அவை இயற்கையிலேயேசிவப்பு நிறத்தைப் பெறும்.
உதடுகளில் தடவிய லிப்ஸ்டிக்கை நீக்க பேஸ் வாஷ் அல்லது தேங்காய் என்ணெயை உபயோகிக்கலாம்.
லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பாக உதடுகளில் ஐஸ் கட்டிகளை ஒற்றி எடுத்தால், லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.
உடல்நலக் கோளாறுகள் இருந்தாலும் உதடுகள் பொலிவிழந்து காணப்படும். உதாரணத்திற்கு வைட்டமின் பி குறைபாடு உள்ளவர்களுக்கு உதடுகளின் ஓரங்களில் புண்கள் மாதிரி காணப்படும். அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டாலே உதடுகள் சரியாகிவிடும்.
உதடுகளுக்கு மேக்அப் போடும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் : முதலில் பவுண்டேஷன் தடவிவிட்டுப் பிறகு லிப்ஸ்டிக் போட்டால் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.
லிப்ஸ்டிக் உபயோகித்துப் பழக்கமில்லாதவர்கள் லிப் சால்வ் உபயோகிக்கலாம். அதே மாதிரி பல வண்ண நிறங்களில் இப்போது வாசலின் வந்துள்ளது. அதையும் உபயோகிக்கலாம்.
லிப்ஸ்டிக் உபயோகிக்காமல் நேரடியாக லிப் கிளாஸ் தடவிக் கொள்ளும் பழக்கம் சிலருக்கு உண்டு. இது தவிர்க்கப்பட வேண்டிய விஷயம். லிப்ஸ்டிக்கின் மேல்தான் லிப் கிளாஸ் தடவப்பட வேண்டும்.
லிப் பேஸ் தடவிவிட்டு அதன் மேல் லிப்ஸ்டிக் தடவினாலும் லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும். இவ்வாறு செய்து வந்தால் உதடுகள் எப்பொழுதும் அழகாக இருக்கும்.

அனிதாசரவணன்

very thanks.

தங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி.

ஹாய் ரேகா கார்த்தி, உங்களுக்கு இருக்கும் பிரச்சணை போக நல்ல ஸ்கின் லைட்டனிங் க்ரீமை உபயோகியுங்கள். மேக்கப் போடும்போது அந்த இடங்களுக்கு அதிகமான பவுண்டேஷன் போடுங்கள். அப்போதுதான் காம்பாக்ட் அடித்தப் பிறகு ஈவனாக இருக்கும். தயிர் கலந்த பேக்கினை தினமும் உபயோகித்து வந்தால் சருமம் நனறாக ஒரே நிறத்தில் இருக்கும்.

dear deva...mam..
ungal tips excellent..
enaku oru favour..
i am a bit fat..
enaku chudithar stitching shops inga sariya ila elamae enum ena gunda kamikuduthu ...chennaila stitching shop nala shop sollunga ...
reply plz..

நான் தற்போது சென்னையில் இல்லை. ஆனால் சென்னை செல்லும்போது ஒவ்வொரு முறையும் என்ன வகை சுடிதார் தைக்க விரும்புகிறேனோ அதைப் பொறுத்து டெய்லரிங் ஷாப்பும் மாறும். நார்த் இண்டியன் மாடல்கள் என்றால் ராயப்பேட்டையிலிருந்து நுங்கப்பாக்கம் செல்லும் வழியில் உள்ள சூப்பர் மார்கெட்டின்(விதான் அல்லது நில்கிரீஸ்னு நினைக்கிறேன்) மாடியில் ஒரு நார்த் இண்டியன் லேடியிடம் கொடுப்பேன். அவருடைய பிட்டிங்கும் ஸ்டைலும் அத்தனை அழகு. நிறைய பேர் டாப்ஸை உயரத்துக்கு ஏற்றவாறு தைக்க மாட்டார்கள். இவர் தைப்பதில் எந்த குறையையுமே சொல்ல முடியாது. ஆனால் கொஞ்சம் சார்ஜ் அதிகம். மற்றவர்களைவிட ஸ்டைலிஷாக தைப்பதில் இவர் பெஸ்ட். இவர் தைக்கும் சுடிதார் நல்ல வடிவுடன் இருக்கும். மேலும் இவரிடம் தைக்க வருபவர்கள் முக்கால்வாசி நார்த் இண்டியன், மார்வாடி பெண்கள். அதனால் குண்டான உடம்பையும் அடக்கமாக தெரியும்படி சுடிதார் தைப்பதற்கு இவர் ஏற்றவர். முகவரி என்னிடம் இப்போது இல்லை.

அடுத்து சாதாரண அதிக விலையில்லாத துணிகளாக இருந்தால் லக்‌ஷ்மி என்ற லேடியிடம் திநகரில் கொடுப்பேன். இவர் கடை மிகவும் சிறிய அளவில் ஆரம்கேவி எதிரில் இருக்கிறது. சாரிக்கு பிளவுஸ் தைப்பதில் இவரை அடிச்சுக்க ஆளில்லை. இந்த முறை பிளவுஸ் அளவு கொடுக்காமல் என் சுடிதாரை வைத்தே இவர் தைத்துக் கொடுத்த கட்டோரி பிளவுஸ் அத்தனை சரியான பிட்டிங்குடன் இருந்தது. அரை மணி நேரத்தில் ஒரு பிளாக் பிளவுஸை தைத்து கொடுத்தார். பிறகு அதனைப் போட்டுப் பார்த்து, எனது பட்டுப்புடவை பிளவுஸ்களை தைக்கக் கொடுத்தேன். இது தவிர பவுண்டன் பிளாசாவில் ஒரு கடையில் தைக்கக் கொடுப்பேன். இங்கே எனக்குப் பிடித்த விஷயம் சல்வார் டாப்ஸை மிகவும் அழகான பிட்டிங்குடன் தைத்துக் கொடுப்பதுதான். நாம் என்ன ஸ்டரக்சரோ அது மாதிரி தைப்பார்கள். இது பவுண்டன் பிளாசாவில் பின்புறமாக உள்ள பானிப்பூரி, இனிப்புகள் விற்கும் கடையின் வரிசையில் இருக்கிறது. கணவனும் மனைவியுமாக தைப்பார்கள். இவர்களும் நார்த் இண்டியன் என்று நினைக்கிறேன். இவர்களிடத்தில் இதுவரை அதிக விலையுள்ள சுடிதார்களைக் கொடுத்ததில்லை. காட்டன், போத்தீஸ், நல்லி போன்ற கடைகளில் வாங்கும் சுடிதார் செட்களை மட்டுமே கொடுத்துள்ளேன்.நான் இங்கே சென்று சில வருடங்களாகிவிட்டது. இந்த கேள்விக்கு என்னைவிட வனிதா போன்ற சென்னைவாசிகள் மிகச்சரியான பதில் அளிப்பார்கள்.

மிக்க நன்றி தேவா மேடம் ...
நான் அறுசுவைக்கு நியூ ...உங்கள் டிப்ஸ் எச்செல்லேன்ட் ...
கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக படித்து கொண்டு இருகிறேன் ..
உங்கள் நேரத்தை எனக்க காக ஸ்பென்ட் பண்ணுனதில் நன்றிகள் மீண்டும் ..

சமீபத்திய பதிவில் உங்க பதிவை பார்த்தேன். இருக்கீங்களா? எனக்கு ஒரு சந்தேகம்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய் சுகந்தி,ஏப்படி இருக்கீங்க? அறுசுவையை தினமும் பார்வையிட்டுக் கொண்டுதான் இருப்பேன். எழுத மட்டும்தான் நேரமில்லாமல் இருந்தேன். லஞ்ச் டைமில் எப்பவும் பார்ப்பேன். சந்தேகமே வேணாம். போன வாரம் நானேதான் பதிவு போட்டிருக்கேன்.

நீங்க பதில் சொன்னதில் ரொம்ப சந்தோசம்.....சந்தோசம் தாங்கல :-)

எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்க, நான் டெய்லி லிப் ஸ்டிக் போடும் பழக்கம் இல்லாதவள், வெளியே போகும் போது போடுவேன். ஆனா போட்ட மாதிரியே இருப்பது இல்லை. எங்க ஆபீஸ் ல ஒரு பொண்ணு போட்டுட்டு வருவா, நல்லா ஷைன் ஹா, ரொம்ப அருமையா இருக்கும். evening வரைக்கும் அப்படியே இருக்கு.

என் லிப்ஸ் சீக்கரம் வறண்டு விடுது. நான் branded தான் வாங்கறேன். லிப் ஸ்டிக் மட்டும் தனியா போடா கூடாதா? அதனுடன் வேறு ஏதாவது போடணுமா?

நான் எங்கே தப்பு பண்றேன்? ஒருவேள டெய்லி யும் போட்டா சரி ஆகுமா? டெய்லி யும் போடலாமா?கொஞ்சம் சொல்லுங்களேன்.ப்ளீஸ்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நீங்கள் லிப்ஸ்டிக் மிக அதிக நேரம் உதட்டில் கலையாமல் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் லாங்க் ஸ்டே லிப்ஸ்டிக் உபயோகியுங்கள். ரெவ்லானில் கலர் ஸ்டே லிப்ஸ்டிக்கின் பின்புறமே லிப் கிளாசும் இருக்கும். லிப் பென்சிலால் லிப் ஓரங்களில் வரைந்து பிறகு லிப்ஸ் ஸ்டிக்கினை இடைப்பட்ட பகுதியில் தடவுங்கள். லாங்க் ஸ்டே போடும்போது எக்காரணம் கொண்டும், கொஞ்ச லிப்ஸ்டிக் போட்டுவிட்டு, லிப்ஸை சேர்த்து வைத்து அழுத்தி லிப்ஸ்டிக்கை பரவ விடாதீங்கள். உதடுகளை பிரித்தாற்போல வைத்து லிப்ஸ்டிக்கை ஒரு இடம் விடாமல் தடவி உலரவிடுங்கள். பிறகு அதன் மேல் பிரஷ் கொண்டு லிப்கிளாஸை தடவுங்கள். உங்கள் லிப்ஸும் பள பளவென்று நீண்ட நேரம் இருக்கும். எண்ணெய் பொருட்கள் சாப்பிட்டால் மட்டுமே லிப்ஸ்டிக் கலையும்.