தேதி: June 1, 2010
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
அரிசி மாவு - முக்கால் டம்ளர்
முட்டை - ஐந்து
சீனி - ஒரு டம்ளர்
நெய் - 2 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி - அரை தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி
முதலில் மேற்சொன்ன தேவையான பொருட்கள் அனைத்தையும் தயார் நிலையில் வைக்கவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி பீட்டரால் நன்கு நுரை பொங்க அடிக்கவும்.

அதன் பின் உப்பு மற்றும் சீனியை சேர்த்து மேலும் நன்கு சீனி கரையும்படி ஐந்து நிமிடங்கள் அடிக்கவும்.

பின்பு அடித்துக் கொண்டே அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து அடிக்கவும், கடைசியில் ஏலக்காய் பொடியையும் சேர்த்து நன்கு ஒன்று சேரும் வரை அடிக்கவும்.

அடுப்பில் தம் போடும் ப்ளேட்டை வைத்து அதன் மேல் ஒரு நாண்ஸ்டிக் பாத்திரத்தை வைத்து அதில் நெய் ஊற்றி சிம்மிலேயே நன்கு சூடு வர செய்யவும். சூடு ஏறியதும் அதில் இந்த கலவையை ஊற்றவும்.

அதன் பின்னர் ஸ்டீம் வெளியாகாத வண்ணம் மூடியை மூடி விடவும்.

சரியாக முக்கால் மணி நேரம் சென்ற பின் மூடியை திறந்து பார்த்தால் மேலே மட்டும் வெள்ளையாக இருக்கும். எனவே பாத்திரத்தை எடுத்து தளர்த்தி விட்டால் ஓரமெல்லாம் ஒட்டாமல் இருக்கும்.

பின்பு அதை ஒரு தட்டில் கவிழ்த்து பின்பு அதே பாத்திரத்தில் மேல் பாகம் அடியிலும், அடிபாகம் மேலும் இருக்குமாறு வைத்து மறுபடியும் மூடி போட்டு அதே தனலில் 10 - 15 நிமிடம் வரை வைக்கவும்.

15 நிமிடம் கழித்த பிறகு எடுத்து உடனே கவிழ்த்தால் அழகாக இருபக்கமும் கேக் சிவந்து இருக்கும்.

உடனே துண்டுகள் போட்டு பரிமாறலாம். மிகவும் மிருதுவாக இருக்கும். சாப்பிடவும் நல்ல சுவையாக இருக்கும். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Comments
அப்சரா
சூப்பர் அப்சரா... செய்துட்டு வரேன் இருங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
அப்சரா தம் கேக்
எப்படி இருக்கீங்க? கேக் பார்க்கவே நாவுருது. அடியில தம் போடும் ப்ளேட் இல்ல என்கிட்ட அதுக்கு பதிலா என்ன பயன்படுத்தலாம்.முதல் பக்கத்தில் உங்க குறிப்ப பார்த்து எவ்வளாவு நாள் ஆகுது ஏன் அப்சரா இப்பலாம் குறிப்பு கொடுக்குறது இல்ல ரொம்ப பிஸியா இருக்கீங்களா?
அப்சரா, தம் கேக் பார்க்கவே
அப்சரா,
தம் கேக் பார்க்கவே அழகாக இருக்கிறது. சாப்பிட வேண்டும் போல் உள்ளது. சூப்பர்.ரொம்ப நாட்களாக இந்த பக்கமே காணவில்லை.? தோழிக்கு வீடு கிடைத்ததா?
Save the Energy for the future generation
அப்சரா..அசத்தல்
நலமா?ரொம்ப நாளாச்சு உங்ககிட்ட பேசி...
கேக் சூப்பர்ங்க..நானும் மைதாவுக்கு பதிலா அரிசிமாவுல வித்தியாசமா முயற்சி பண்ணி பார்க்கணும்னு ஆசைபட்டேன்..பட் இதுவரை முயற்சி பண்ணலை...
உங்க குறிப்பு பார்த்தவுடன் செய்ய தோணுது..
அப்சரா..வழக்கமா செய்யும் டெம்பரேச்சர்,டைமில ஒவனில் செய்யலாமா?
இல்ல இந்த முறையில மட்டும்தான் ட்ரை பண்ணிருக்கீங்களா?
ஓவனில் செய்யணும்னா...மத்த கேக் செய்ய ஆகும் நேரம்தான் ஆகுமான்னு சொல்லுங்களேன்.
அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
supercake
அப்சரா, பார்க்கவே சூப்பரா இருக்கு.இந்த வாரம் செய்து பார்த்துவிட்டு சொல்கிரேன்.
apsera, ungalludaiya dam
apsera, ungalludaiya dam cake super. nan yappa cake seithalum thinji than varum. this time i"ll try this method.
shagila
please help
ப்ளீஸ் எனக்கு அறுசுவை பகுதியல் நான் கேட்க்கும் கேள்விக்கு நீங்கள் அனுப்பும் பதிலை பார்ப்பது என்று எனக்கு தெரிய வில்லை
அப்சரா
நல்ல குறிப்பு. எனக்கும் இந்த தம் ப்ளேட் தெரியவில்லை. நான் பேக் பண்ணிப் பார்க்கிறேன்.
- இமா க்றிஸ்
அப்சரா
அப்சரா, அருமை. அழகா செய்து அசத்தி விட்டீர்கள். தெளிவான படங்கள்.
வாணி
பாக்கவே அழகு!
ஹாய் அப்சரா ஈஸி தம் கேக் பார்க்கவே அழகா இருக்கு! வாழ்த்துக்கள்:-)
இடியப்பம் மாவில் செய்யலாமா? தம் ப்ளேட் இல்லாமல் செய்யமுடியுமா?
தம் ப்ளேட் என்னிடம் இல்லை.சந்தேகத்தை தெளிவு படுத்தவும்.
நன்றி.
அன்புடன்,
ஜாஸ்மின்.
தம் கேக்
ரொமப் நல்ல இருக்கு அப்சாரா
ஜலீலா
Jaleelakamal
cake
cake is very good.but how to make tham.
hai appufar
how to write my favorite notes.reply soon.
ஹாய் அப்சாரா
இந்த கேக் சூப்பர் பா.
அப்சாரா
நீங்க மயிலாடுதுறை பக்கம் கிளியனூரா அப்சாரா.துபையில் எங்க இருக்கீங்க?
அப்சாரா
ஹாய் அப்சாரா
உங்க கேக் பாக்க ரெம்ப நல்லா இருக்கு.
தம் பிளேட்னா என்ன? எங்க கிடைக்கும்?
sankari
வனி,காயத்ரி,இளவரசி,இந்திரா...
முதலில் தாமதமா பதில் சொன்னதற்க்காக தோழிகள் மன்னிக்கவும்.
என் சிஸ்டம் சரியாக வொர்க் ஆகவில்லை.எனவே முடியும்போதே வர முடிகின்றது.
வனி எப்படி இருக்கீங்க..?குட்டீஸ் நலமா...?
ம்ம்ம் சீக்கிரம் செய்து பார்த்துட்டு சொல்லுங்க.
மிக்க நன்றி வனி.
காயத்ரி எப்படி இருக்கீங்க...?
தம் ப்ளேட் இல்லன்னா பரவாயில்லை.இரும்பு தோசைகல் இருந்தால் அதை வைத்து இதேபோல் தம் போட்டு பாருங்கள்.நன்றாக வரும்.
பின்னூட்டத்திற்க்கு மிக்க நன்றி காயத்ரி.
இந்திரா நலமாக இருக்கின்றீர்களா....?
இன்னும் என் தோழி அதிக வாடகையில் தான் இருக்கின்றார்கள்.
பின்னூட்டத்திற்க்கு மிக்க நன்றி இந்திரா.
இளவரசி நலமாக இருக்கின்றீர்களா...?
ஆமாம் பேசி ரொம்ப நாளாச்சு.
இது பாட்டி காலத்தில் நெருப்பு அடுப்பில் செய்யும் முறை இளவரசி.
நானும் மைதாவில் தான் மைக்ரோவேவில் செய்து பார்த்துள்ளேன்.
எனது நெருங்கிய தோழி (அவர் பெயர் மிர்ஃபா...)அதை ஏன் கேஸ் அடுப்பிலேயே செய்து பார்க்க கூடாது என்று எண்ணி செய்து பார்த்து சூப்பராக வரவே....எனக்கு தெரியபடுத்தினார்கள்.
அதன் பின் நானும் அவரையே செய்ய சொல்லி அருகில் இருந்து எடுத்த படம் தான் இது.மிகவும் நன்றாக வந்தது.சிறிது நேரத்தில் கேக் காலியாகி விட்டது.
குழந்தைகள் அவ்வளவு விரும்பி சாப்பிட்டார்கள்.
எனவே...,இந்த முறையே சுலபமாக தெரிகின்றது.வேணுமானால் மைக்ரோவேவில் முயன்று பாருங்கள்.
பின்னூட்டத்திற்க்கு மிக்க நன்றி இளவரசி.
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
please help arusuvai makkaley
ஹாய் அப்சரா நீங்க சொன்ன கேக் செய்தேன் நன்றாக இருந்தது என்றார்கள் என் தோழிகள் எனக்கு உடம்பு வெயிட் போடு து அதனால் நான் சென்வேஜ்ஜி சாப்பிடுகிறேன் தினமும் பிரட் வாங்கிவர முடிய வில்லை அதனால் எனக்கு பிரட் எப்படி செய்வது என்று சொல்லுகள் ப்ளீஸ் என்னிடம் மைக்ரோவேவ் - பிர்ஜிட்றாய் உள்ளது. நான் 3 சந்தேகம் அனுப்பினேன் எனக்கு பதில் எங்கு பார்ப்பது என்று தெரியவில்லை நான் புதிய உறுப்பினர் என்னுடைய பகுதிக்கும் சென்று பார்த்தேன் அனால் தெரியவில்லை.
நான் படித்ததில் எவ்வளவோ நல்லது நடகின்றது அறுசுவை பகுதியல் எனக்கு ஒரு முக்கியமான ஹெல்ப் பண்ணுவாங்கள அறுசுவை மக்கள் எனது தம்பி B E (ECE ) படித்துள்ளான் இரண்டு வருடமாக வேலை தேடியும் கிடைக்கவில்லை அவன் சென்னை இல் உள்ளான் உங்களுக்கு தெரிந்த அல்லது உங்கள் கணவருக்கு தெரிந்த கம்பனில் வேலை இருந்த சொல்லுகள் ப்ளீஸ் sumithaganesh@gmail.com
தஸ்னீம், ஷாலி
தஸ்னீம் ரொம்ப நன்றி பின்னூட்டம் தந்ததற்க்கு.
செய்து பார்த்துட்டு சொல்லுங்க.
பின்னூட்டத்திற்க்கு மிக்க நன்றி ஷாலி.
சுமிதா,அதற்க்கான வழி இப்போது இல்லை எங்கே பதிவு போட்டோமோ அங்கேயே போய் பார்த்து கொள்ள வேண்டியதுதான்.
இமா எப்படி இருக்கீங்க...?
பின்னூட்டத்திற்க்கு மிக்க நன்றி.
தங்கள் பின்னூட்டத்திற்க்கு மிக்க நன்றி வாணி.
ஜாஸ்மின் நீங்கள் நி்ச்சயம் இடியாப்பமாவிலும் செய்யலாம்.
நன்றாகவே வரும்.இரும்பு அல்லது இந்தாலியன் தோசை கல்லில் வைத்தும் தம் போடலாம்.
ஜலீலா மேடம் தங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி.
ராதா...,தங்கள் பின்னூட்டத்திற்க்கு மிக்க நன்றி.
நான் தெளிவாகவே இதில் செய்முறையை கொடுத்துள்ளேன் என்றே நினைக்கி்றேன்.எது புரியவில்லை என்று சொன்னால் நான் தெளிவுபடுத்துகின்றேன்.
சஹ்லா பின்னூட்டத்திற்க்கு மிகவும் நன்றி.
நான் மயிலாடுதுறை பக்கம் தான்.கிளியனூரில் எனது நாத்தினார் இருக்கின்றார்.
எங்கள் ஊர் நீலவேலி அடுத்து வேலம்புதுக்குடி.
நீங்கள் எந்த ஊர் என்று சொல்லவும்.நான் al-nahda வில் இருந்துகொண்டு இருக்கின்றேன்.(சஹாரா செண்ட்டர் பக்கம்)
ஷங்கரி..,தங்கள் பின்னூட்டத்திற்க்கு மிக்க நன்றி.
இது சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும்.இரும்பு,அலுமினிய பாத்திர கடைகளில் கிடைக்கும்.
என்றும் அன்புடன்,
அப்சரா.
மிகவும் சந்தோஷம்.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
தலைப்பு கொடுத்தல்
தயவுசெய்து தலைப்பினை சுருக்கமாக கொடுக்கவும். ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைவெளி விடவும்.
அப்சரா..
அப்சரா..
பாக்க ரொம்ப அழகா இருக்கு.. ;-) நானெல்லாம் செஞ்சா பாக்கவும் சரி சாப்பிட்டாலும் சரி படு கேவலமாத்தான் இருக்கும்... சரி.. வாய்ப்ப உருவாக்கி செஞ்சு பாக்றேன். கஷ்ட காலம்... ஹ்ம்ம்ம்ம்
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
its really superb
its really superb
நன்றி அப்சரா
ரொம்ப நன்றி அப்சரா உங்க வேலைகளுக்கு இடையில் வந்து பதில் சொன்னதுக்கு. செய்து பார்த்துட்டு சொல்றேன்.
அப்சரா
அப்சரா... உங்க குறிப்பை செய்யாம விடுவேனோ?? செய்துட்டேன். நான் இதுவரை அரிசி மாவில் செய்ய முடியும்'னு யோசிச்சது கூட இல்லை. தோசை கல்லில் தான் தம் போட்டேன். ரொம்ப நல்லா வந்துச்சுங்க. மிக்க நன்றி.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நன்றி தோழிகளே...,
பின்னூட்டம் தந்ததற்க்கு மிகவும் நன்றி கமலி.
என்ன ரம்யா இப்படி சொல்லிட்டீங்க.செய்து பாருங்க.நிச்சயம் சூப்பரா செய்வீங்க.எனக்கு ஒரு பீஸ் பார்ஸல் சரியா....
வனி...,உடனே செய்து பார்த்து பின்னூட்டம் தந்துட்டீங்க.ரொம்ப சந்தோஷம் வனி.நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும்.
காயத்ரி நன்றி எல்லாம் எதற்க்கு நமக்குள்.செய்து பார்த்துட்டு சொல்லுங்க சரியா.
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
அப்சரா..
அப்சரா..
பார்சல் வேற வேணுமா ;-) .. ஒகே கண்டிப்பா அனுபீட்டா போச்சு..
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
அருமை
சூப்பராக இருக்கு.தம்மடை,தம்ரூட் ரவை எல்லாம் சேர்த்து செய்வங்களே எப்படி செய்வதுன்னு தெரியுமா அப்சரா,தெரிந்தால் சொல்லவும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
ஆசியா மேடம்,
ஆசியா மேடம் நலமாக இருக்கின்றீர்களா...?
தங்கள் பின்னூட்டத்தை தாமதமாக கவனித்ததற்க்கு மன்னிக்கவும்.
நிச்சயம் தம்ரூட் கேக்கின் செய்முறையை ஒரு நாள் செய்து அனுப்புகிறேன்.
என் மனதில் அந்த எண்ணம் ரொம்ப நாளாக இருந்து வருகின்றது.
கருத்துக்கு நன்றி ஆசியா மேடம்.
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
absera mam, nan satharana
absera mam,
nan satharana cake four oven moolum seium boadhu nanraga theenthuvidum. ana niga addupilleyee seithirukiradu migavum arumai athillum intha cake paekum boothe vaiil yessil vooruthu. kandippa nan intha model seithu parthu vittu solleren .miam miam miam.
shagila
ஷாலி
ஷாலி நலமா..?தங்கள் பின்னூட்டத்திற்க்கு மிகவும் நன்றிங்க.
நிச்சயம் செய்து பாருங்க.மிகவும் சுலபமாக இருக்கும்.
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
nandri
ஹை , நான் நேற்று இதை செய்தேன்.
சுலபம் மற்றும் ருசி.அம்மா மற்றும் அப்பா மிகவும் பிடித்தது.
மிகவும் நன்றி,
Hai..
nan arusuvai ku puthusu... intha cake pakka super a irukku.. itha oven la eppadi seirathu..enga veetu oven la LOW,MED LOW,MED,MED HIGH,HIGH nu mode irukku.. entha mode la evvalavu time set pannanum... nan ithu varaikkum cake pannathu illa.. so pls guide me...
Anbudan,
Naveena.
hai, Naan pudhu member
hai,
Naan pudhu member unga cake super naan etha basmathi rice la try pannalama?nalla varuma konjam sollunga.
super cake
அப்சரா,
இதோ இப்ப தான் கேக்கை செய்து முடித்தேன்.நல்லா வந்து இருக்கு.என்னவர் வந்து ருசி பார்க்க வேண்டியது தான் பாக்கி.சரி நான் கேக்கை சாப்பிடனும் டைம் ஆய்டுச்சி பை.........
வாழ்க வளமுடன்,
பானு அரசு.
hello apsara mam
how are you,your recipe is superb, please tell me if you know any other cake recipes that can be used for birthday function and that has to be made in stove, because i dont have oven.. my brothers birthday is coming so please give your suggestions
Dear Madam
நீங்கள் சொன்ன மாதிரி தன் நான் செய்தேன். ஆனால் அளவு மட்டும் குறைத்துக்கொண்டேன்.
அரிசி மாவு - அரை டம்ளர்
முட்டை - மூன்று
சீனி - ஒரு டம்ளர்
நெய் - 2 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி - அரை தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி
soft a cake மாதிரி வரல. அப்பம்/பனியாரம் மாதிரி, ஜவ்வுனு இருந்ததே, அது ஏன் மேடம், என்னுடைய அளவு முறைகளில் எதுவும் தவறா? எனக்கு விளக்கம் கொடுத்து என் தவறை சரி செய்யுங்கள்.
God is great
காவ்யா
ஹாய் காவ்யா...,நீங்கள் சொல்வது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது.
அளவு சரியில்லை என்றாலோ.... அடிக்கும் பதம் சரியில்லை என்றாலோ.... சாஃப்ட் கம்மியாக இருக்குமே தவிர ஜவ்வுமாதிரி ஆகாது.
என்னை கேட்டால் நீங்கள் பயன்படுத்திய அரிசி மாவு சரியில்லை என்றே நினைக்கிறேன்.சில நேரங்களில் வெறும் அரிசி மாவு பாக்கெட் வாங்கும் போது இது போன்ற சொதப்பல்கள் ஏற்பட வய்ப்பு உண்டு.ஏன் சொல்கிறேன் என்றால் இங்கு நான் சமீபத்தில் வாங்கிய அரிசி மாவு பாக்கெட் இப்படிதான் ஆச்சு.அரிசி மாவு மாதிரியே இல்லை.ஒரு மாதிரி கலந்தால் வழு வழுப்பாக இருந்தது.
எனவே தான் சொல்கிறேன்.தவறு அரிசி மாவாக இருக்க கூடும் என்று.
இடியாப்பம் செய்ய வைத்திருக்கும் மாவிருந்தால் அதில் செய்யுங்கள்.நன்றாக வரும்.மற்றபடி வேறு ஏதும் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை(சொதப்பியவுடன் என் பேரை சொல்லி திட்டவில்லையே.... நான் பாவம்ங்க....)
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
Dear Appufar Madam
பதில் கொடுத்ததற்கு மிக்க நன்றி மேடம். நீங்கள் சொன்ன மாதிரி வேறு அரிசி மாவில் செய்து பார்க்கிறேன். அப்பறம் இன்னொரு தவரு செய்து வீட்டேன். பீட்டர் உபயோக படுத்தவில்லை. என்னிடம் இல்லை.அதற்கு பதில் மிக்சியில் அடித்தேன். பீட்டர் எங்கே கிடைக்கும்?
God is great
காவ்யா...,
ஹாய் காவ்யா நலமா...?எதற்க்கு நன்றி எல்லாம் சொல்றீங்க?
பீட்டர் எல்லாம் மிக்ஸி ,கிரண்டர்,இது போன்ற கிச்சன் சம்பந்தபட்ட எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் நிச்சயம் கிடைக்கும் பா.....
மிக்ஸியில் அடிப்பதில் என்ன ஆகும் என்றால் சூடு ஏறிவிடும்.அதான் மிக பெரிய பிரச்சனை.முடிந்த போது இந்த முறையில் முயன்று பாருங்கள்.
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
hi
pls tell me how to make normal oven
Dear Apsara madam
நான் நலம். நீங்கள் நலமா? இன்னொரு தடவை சரியாக செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்.
God is great