தோழிகளே..
நம்ம எல்லாரும் நம்மகிட்ட இருக்க நல்ல குணத்தபத்தியும் கெட்ட குணத்தப்பத்தியும் யோசிச்சு இல்ல யோசிக்காமகூட இருக்கலாம்.. அந்த விஷயம் எதுனு தெரிஞ்சுகிட்டா இனி வர காலத்துல சரி பண்ணிக்கலாம் இல்லயா ?..
அத ஏன் அறுசுவைல சொல்லனும்னு எல்லாரும் நெனைக்கலாம்.. இங்க இருக்க தோழிகள் எல்லாவிதமான பிரச்சனையும் எந்த ஒரு பாகுபாடு, ஒளிவுமறைவும், கூச்சமும் இல்லாம பகிர்ந்துக்கறோம். இந்த விஷயத்தயும் சொல்றதால நமக்கும் கண்டிப்பா எது நம்மகிட்ட இருக்க பிரச்சனைனு தெரியவரும். மற்ற தோழிகள் அத பத்தி விளக்கம் குடுத்து சரி பண்ண வாய்ப்பு இருக்கு..
இதுல பதிவு போடுற ஒவ்வொருத்தரும் அவங்ககிட்ட இருக்கும் நிறை குறைகளை கண்டிப்பா பகிர்ந்து மற்ற தோழிகளின் அறிவுரைய பயன்படித்திக்கலாம்.. நல்ல உறவுகளால அமஞ்சதுதான் குடும்பம் இல்லயா.. ;-)அதுவும் பெண்கள் தான் உறவுகளோட சங்கிலியே... நான் தப்பா ஏதும் சொல்லி இருந்தா மன்னிச்சுடுங்க ... ;-(
நானே என் நிறை குறையை சொல்றேன் ...
நிறை ; நேர்மையா இருப்பேன், அன்பா பழகுவேன். மத்தவங்க நல்லவிதமா மதிக்கரமாரி நடந்துப்பேன் .மத்தவங்க உணர்ச்சிக்கு மதிப்பு கொடுப்பேன் .. நல்ல பொண்ணுதான் ;-)
குறை : அதிகம் கோவப்படுவேன், உணர்ச்சிவசபடவேன் ரோம்பவே..
அவசரகுடுக்கை. யோசிக்காம டக்குனு முடிவு பண்றது(இப்போ எவ்ளோ பரவால ) சோம்பேறி, கொஞ்சம் அசால்ட்டு...
மனசிருந்தா நீங்களும் பகிர்ந்துக்கலாம். இங்கே பதிவா என் குறையை சொன்னதால கண்டிப்பா இன்னும் பொறுப்பா நடந்துப்பேன் ;-)
ஹாய் friends again ramya has
ஹாய் friends
again ramya has started a good topic.
Ramya super. Definitely it will give some messages to us to correct ourself from others.
என்னத்த ரம்யா சொல்ல என்கிட்ட இருக்கிற குறையே சீக்கிரம் மத்தவங்களை நம்பிடுவேன். இதனால் நிறைய ஏமாற்றம் அடைந்து இருக்கிறேன்.
நிறை : adjustable
come on friends, share ur nirai's & kurai's
நன்றி அம்மு ... ;-)
நன்றி அம்மு ... ;-)
அதெல்லாம் நீங்க சரி பண்ணிக்குவீங்க
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
ரம்யா
ரம்யா... நல்ல நல்ல டாப்பிக்கா போகுது!!! என் குறையை மட்டுமே நான் இங்க சொல்ல விரும்பறேன்... என் ப்ளஸ் மற்றவர் பழகி தெரிஞ்சுகிட்டா போதும். ;) குறை... நிறைய இருக்கு... முக்கியமா கோவம், அதுவும் முன் கோபம். அவசரம். அப்பா, அம்மா'னு கூட யோசிக்காம கோச்சுப்பேன், திட்டிடுவேன். தப்புன்னு பல வருஷமா தெரியும்... திருந்த தான் முடியல. ;) அவங்களும் இது இப்படி தான்னு உட்டுட்டாங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஹாய் வனி ..
ஹாய் வனி ..
எப்டி இப்டி.. கரெக்ட்.நிறையை மத்தவங்க தான் சொல்லனும். ஆனா நான் பழகி பாத்துருந்தா நெறையா சொல்லீருப்பேன். ;-) இப்போ தானே அறிமுகம் ;-) ..இப்பவே நீங்க பெரிய சமத்துனு தெரியும்.. உங்க ஐடி இருக்கா.... பழகி பாக்கத்தான் ;-)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
யாரு என்கூட same pinch???
வாழப்பழ சோம்பேறி...வாழப்பழ சோம்பேறி நு சொல்லுவாங்களே... அது நான் தாங்க... தலையும் தலைகாணியும் முட்டுனா போதும் எவ்ளோ நேரம் வேணாலும் தூங்கிட்டே இருப்பேன்... இந்த matter-ல மட்டும் என்ன திருத்திக்கவே முடில... Negative யோசிக்காம எழுதிட்டேன் ஆனா positive எழுத எவ்ளோ யோசிச்சாலும் கிடைக்க மாட்டேங்குதே... Haa.... புடிச்சிட்டேன்... இது என் அன்பு கணவர் சொன்னது... நான் ரொம்ப பொருமை-ங்க... எனக்கு கோபமே வராது... அட,உண்மை தாங்க...நம்புங்க...
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே...
நிம்மதியாக வாழ முயற்சி செய்...
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
Saranya SangeethKumar :)
same pinch saranya
நானும் தான் சரண்யா (same pich dnt touch me) கிடைஞ்சி எடுத்த சோம்பேறி நிறைய நாள் சோம்பேறிதனத்தாலயே சாப்பிட கூட மாட்டேன் சாப்பிட கூட சோம்பேறிங்க நான். ஆமாம் அடுத்தத நீங்க என்னமோ சொல்லி இருக்கீங்களே அது என்னங்க பொருமையா அப்படி என்ன அது எந்த கடையில விக்குது. நான் ரொம்ப கோபபடுவேன். வனிதா மேடம் சொல்ற மாதிரி என்னோட கோபத்துனால அதிகம் பாதிக்கப்பட்டவங்க என் அம்மாவும் அப்பவும் தான். அடுத்தவங்கல சீக்கிரம் நம்பிடுவேன்ங்க அதனால் ஏமாற்றம் அடைஞ்சிருக்கேன் இதெல்லாம் தான் என்னோட குறைகள்.
நிறைகள் சொன்னா, சீக்கிரமா எல்லார்கிட்டையும் பழகிடுவேன். அடுத்தவங்க எண்ணங்களை ரொம்ப மதிப்பேன்.
ஹாய் சரண்யா & லட்சுமி
ஹாய் சரண்யா & லட்சுமி
ரொம்ப நேரம் தூக்கம் ஒரு கெட்ட பழக்கம் இல்ல... ;-( அப்போ அதே கெட்ட பழக்கம் எனக்கும் இருக்கு... ;-(
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
hai ramya
"ரொம்ப நேரம் தூக்கம் ஒரு கெட்ட பழக்கம் இல்ல" இப்படி நீங்க சொல்லும் போதே தெரியுது உங்களுக்கும் அந்த நல்ல பழக்கம் இருக்குன்னு :-) ) வாங்க நீங்களும் எங்க ஜோதில ஐக்கியமாக. தூக்கம் நம் பிறப்புரிமை
hi
ona renda eduththu solla?[ vanitha mem en tamil font cropta akiruchu pa] patiyal potta arusuvai thangathu[ipave kannai kattuthe pa]
all is well
ஹாய் லக்ஷ்மி, சரண்யா....
ஹாய் லக்ஷ்மி, சரண்யா....
same pinch ... நானும் உங்க கேஸ் தான் பா... என்னையும் உங்க ஜோதி ல சேத்துக்கோங்க...அதுவும் லக்ஷ்மி உங்கள மாதிரியே same நானும்...கோவத்துலயும் தூக்கத்துலயும் உங்கள மாதிரி தான்....நிறை..... ரொம்ப யோசிக்கனுங்க..நீங்க பழகி பாத்து தான் சொல்லணும்....
SaranyaBoopathi