மாம்பழ புளிச்சேரி

தேதி: June 3, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மாம்பழம் - 1
தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 3 பற்கள்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி.
தயிர் - ஒரு கப்
வெல்லம் - சுண்டைக்காய் அளவு
உப்பு - தேவைக்கு
தாளிக்க
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு


 

மாம்பழத்தை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவல், பூண்டு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்திருக்கும் பொருட்களைப் போட்டு தாளித்து அரைத்து வைத்திருக்கும் மசாலாவை ஊற்றி மஞ்சள் தூள் சேர்க்கவும்.
பிறகு வெல்லம் மற்றும் மாம்பழத்தையும் போட்டு தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
மாம்பழம் வெந்தவுடன் தயிரை கலக்கி ஊற்றவும்.
உடனே அடுப்பை நிறுத்தி விடவும். சுவையான மாம்பழ புளிச்சேரி ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

என் இந்த குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு மிக்க நன்றி.

Save the Energy for the future generation

ஹாய் இந்திரா சூப்பர் குறிப்பு இது.மாம்பழபுளிசேரி எனக்கு மிகவும் பிடிக்கும்.எ கல்லூரி படிக்கும் சமயம் கேரளா friend செய்து எடுத்திட்டு வருவாள். ரெம்ப நல்லா இருக்கும்.இதை பார்த்த உடனே சாப்பிடனும்னு ஆசையாக இருக்கு.கண்டிப்பாக செய்து பார்த்து பதிவு பண்றேன்.

அன்பு எரிக்,
எல்லாமே உங்களுக்கு பிடித்ததாகவே உள்ளது. ரொம்ப மகிழ்ச்சி. இப்ப மாம்பழ சீசன் . செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள். ரொம்ப சுலபமும் கூட.

Save the Energy for the future generation

இந்திரா மாழ்பழ சீசனுக்கு ஏத்த குறிப்பா தான் கொடுத்து இருக்கீங்க. இது சாதத்துல போட்டு சாப்பிடற குழம்பு மாதிரியா, இல்ல சைட் டிஷ்ஷா எனக்கு டவுட். அப்புறம் எந்த மாதிரியான மாம்பழத்துல இந்த புளிச்சேரி செய்யலாம்.

வர்ஷினி, இது சாதத்தில் விட்டு சாப்பிடும் குழம்பு. கொஞ்சம் புளிப்பு மாங்காயாக இருந்தால் புளிசேரி புளிப்பும், இனிப்புமாக நன்றாக இருக்கும்

Save the Energy for the future generation

இந்திரா அக்கா நேற்று எங்க வீட்டில் மாம்பழ புளிசேரி தான், நல்லா இருந்தது. என் ஃபேவரைட் லிஸ்டில் போட்டாச்சு. நன்றி!

தினமும் புதுசு புதுசா கலக்கறீங்க, உங்க வீட்டில் வந்து டேரா போட போகிறேன்!

அன்பு மாலி,
புளிசேரி நன்றாக இருந்ததா? மிக்க நன்றி.
கட்டாயமாக வந்து டோரா போடு. எனக்கு வீட்டில் யாராவது இருந்தால் ரொம்ப பிடிக்கும். ஒரு சுற்று குண்டாக்கி அனுப்புகிறேன்.

Save the Energy for the future generation

இந்திரா அக்கா நேற்றுதான் மாம்பழ புளிசேரி பண்ண முடிந்தது.ரியலி நைஸ்.செப்டம்பரில் துபாய்க்கு நாங்களும் ஸிப்ட் பன்றோம்.வரும் வாரம் நான் ஊருக்கு கிளம்றேன்.