தேதி: June 3, 2010
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - ஒரு மேசைக்கரண்டி
நல்லெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
பெருங்காய தூள் - ஒரு பின்ச்
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்

வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெயை ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.

கடைசியில் மிளகாய் தூள், பெருங்காய தூள் சேர்த்து கிளறி இறக்கவும்

ஆறிய பின் வதக்கிய பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும். அரைத்த சட்னியை வேறு பாத்திரத்திற்கு மாற்றி உப்பு சேர்த்து கலக்கி அதில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து ஊற்றவும். வெங்காய சட்னி ரெடி.

Comments
அட்மினுக்கு நன்றி.
என் இந்த குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு மிக்க நன்றி.
Save the Energy for the future generation
Hi , this is nimmi. Na
Hi ,
this is nimmi. Na ungaloeda chutney try seide romba supera irunduchu, thanks for ur recipe.
ஹாய் நிம்மி
ஹாய் நிம்மி,
உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.
Save the Energy for the future generation
Indra, Super chuttney
Indra,
Super chuttney
இந்திரா
ரொம்ப அருமையா இருந்தது இந்திரா வெங்காய சட்னி... தோசை கூடா சூப்பரா இருந்தது. மிக்க நன்றி.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
இந்திரா அக்கா
இந்திரா அக்கா எப்படி இருக்கீங்க. உங்களைப் பார்க்கவே முடியல.
இன்னிக்கு வெங்காயச் சட்னி செய்தேன். ரொம்ப நல்லா இருந்துச்சு. அவரும் விரும்பி சாப்பிட்டார். நன்றி அக்கா!
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
இந்திரா
இன்று உங்களின் வெங்காய சட்னி செய்தேன் நன்றாக இருந்தது. நானும் தோசைக்கு தான் செய்தேன். காம்பினேஷன் நன்றாக இருந்தது. நன்றி.
அன்புடன்
மகேஸ்வரி