Kovam kuzhanthaiya bathikuma?

Nan 1.5 maatham garba maaga ullen... ennakum en kanavarukum karuthu verubaadu vandhal munnai vida athigamaga kovam varugirathu... kanna pinna endru kathukiren...neraiya azhugiren... kuzhanthaiya badhikumo endru bayamagha ullathu..

nan pesurathu kuzhanthaiku kekuma? nan azhuthal athuvum azhuma? athu healthyana happy childa pirakanum... kovathai adaka vazhi sollungal thozhigale

கோவபடுறது உங்களுக்கே நல்லதில்ல... அப்போ எப்படி குழந்தைக்கு நல்லதா இருக்கும்??? இந்த நேரத்தில் உடம்பில் ஏற்பட கூடிய சில மாற்றங்கள், அசவுகிரியங்கள் கோவபட வைக்கும். ஆனா அதுக்காக கத்திகிட்டே இருந்தா குழந்தைக்கு நல்லதில்லை. நீங்க சந்தோஷமா ஆரோக்கியமா இருந்தா தான் குழந்தையும் நல்லா வளரும். உங்க உணர்வுகள் குழந்தைக்கு முக்கியம். அதனால் அந்த குழந்தையின் ஆரோக்கியத்தை நினைங்க... கோவம் தானா காணாம போயிடும். சிரிங்க, சந்தோஷமா இருங்க. வாழ்கை வாழத்தான். நலமாக அழகான குழந்தையை பெற்றெடுக்க வாழ்த்துக்களும், பிராத்தனைகளும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்புள்ள சகோதரி,
நானும் இந்த stage ஐ சந்தித்து இருக்கிறேன் நான் என் கணவருடன் என் நான்காவது மாதத்தில் தனியே us வந்தேன் அப்போது climate ,ஊர் ,உணவு,hospital எதுவுமே செட் ஆகவில்லை அப்போதெல்லாம் பயங்கரமாக கோபம் வரும் நிறைய அழுவேன் என்னாலே புரிஞ்சிக்க முடியுது
இதெல்லாம் pregnancy mood swings ஹோர்மோன் மாற்றங்களாலும் ,உடல் உபாதையாலும் வருவது.இப்போ நீங்க கஷ்டபடுறது எல்லாம் பாப்பா முகத்தை பார்த்த சரியாயிடும்
நல்லா சாப்பிடுங்க,தூங்குங்க,இசை கேளுங்க,ரெஸ்ட் எடுங்க இப்போ கோபம் வேண்டாமே !
புது பாப்பாவுக்கு எதையெல்லாம் சொல்ல போறீங்கன்னு எழுதி வையுங்க அவங்களுக்கு ஸ்பெஷல் பரிசுகள் வாங்கி வைங்க உங்க கையாலே செய்து வைங்க
இந்த தளத்தை பாருங்க
http://www.mindpub.com/art332.htm
http://www.babycenter.com/0_depression-during-pregnancy_9179.bc
http://www.ahealthyme.com/topic/moodswings
உங்களுக்காக கண்டிப்பாக பிரார்த்தனை செய்கிறேன்

என்றும் அன்புடன்,
கவிதா

உங்கள் அன்பான ஆலோசனைக்கு மிக்க நன்றி நீங்கள் சொன்னபடி கோவ படாமல் இருக்க கண்டிப்பாக முயற்சி செய்வேன்.. நீங்கள் அனுப்பிய லிங்க் ரொம்ப ஹெல்பா இருந்தது... மீண்டும் நன்றி...

anbudan akeelu

Hai Akeelu
Romba thappu panreenga. Ippa neenga pesuradhu unga kulandhaiku kekadhu. Adhuku innum naal iruku. Then 1.5 month than aguthu nu solreenga,,,,, ippa neenga edhu patriyum ninaika kooda koodathu..... unga ninaivu fulla unga kulandhai patri than irukanum.. Indha visayathil enaku oru sogamana anubavam iruku. Ana adha solli ungala sangadapadutha virumbala...Analum en anubavathil solgiren,,,,,,,,, Always think POSITIVE of ur childs future..... B happy...Al ur anger wl b blown away if u feel free abt ur baby...........bye......... take care of u both

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

உங்களுக்கு உதவுவதில் சந்தோசம் அகீலு
இப்போது நீங்க அதிக கவனம் எடுத்துகோங்க குழந்தை நல்லபடியா பிறக்கணும் அதுக்கு கோபம் வேண்டாம் பா! டென்ஷன் ,அழுகை இதெல்லாம் மூட்டை கட்டி வையுங்க
சந்தோஷமா இருங்க
உங்கள் குழந்தைக்கும் அப்போதான் சந்தோஷமா இருக்கும்
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

மேலும் சில பதிவுகள்