தேதி: June 4, 2010
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
காபூலி சன்னா - ஒரு கப்
பார்ஸ்லே - அரை கட்டு
கொத்தமல்லி தழை - ஒரு மேசைக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 4 இதழ்
கொத்தமல்லி பொடி - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
சன்னாவை எட்டு மணிநேரம் ஊற வைக்கவும். மற்ற தேவையானவற்றையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.

பார்ஸ்லே மற்றும் கொத்தமல்லி தழையை நறுக்கி ஊறிய சன்னாவுடன் கலந்து கொள்ளவும். அதனுடன் பொடி வகைகள், பூண்டு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் இந்த கலவையை போட்டு வடைக்கு அரைப்பது போல் அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த கலவையுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து வடை போல் சுட்டு எடுக்கவும்.

இங்கு கூபூஸ் என்னும் ஒரு ரொட்டி கிடைக்கும். அதனுள் இதை வைத்து சாப்பிடுவார்கள். நாம் மசால் வடை போல் தேநீருடன் சாப்பிடலாம்.

Comments
மிக்க நன்றி.
அன்பு அட்மினுக்கு,
என் இந்த குறிப்பை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.
Save the Energy for the future generation
இந்திரா,
இந்திரா,
இன்று மாலை,உங்க ஃபலாஃபெல் செய்தேன்.ரொம்ப நல்லா இருந்தது.சென்னாவில் சுண்டல்,சென்னா மசால் தவிர வேறு எதுவும் தெரியாது.இன்று தான் உங்க ரெசிப்பி செய்தேன்.குறிப்புக்கு நன்றி.