செய்திகள்

இந்த வருடமும் நேஷனல் ஸ்பெல் பீ சாம்பியன் ஷிப் நம் இந்திய பென்னிற்க்கு கிடைத்துள்ள்ளது. இந்த கோப்பையை ஒகோயோ மாகானத்தில் இருக்கும் அனாமிகா வீரமனி என்ற 8த் க்ரேட் படிக்கும் பென்னிற்க்கு கிடைத்துள்ளாது.
அனாமிகாவை வாழ்த்தலாம். மேலும் மேலும் படித்து நிறய்ய புகழ் செர்க்க வாழ்த்துகிறேன்.

இன்று நடந்த நேஷனல் ஸ்பெல் பீ போட்டியில் ஏராளாமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டது, நிறய்ய பேர் இருந்தாலும் நம் இந்தியர்கள் வந்து கோப்ப்யை பெற்று கொள்கிற போது ஆனந்தமாக தான் இருக்கு.

நலமா இருக்கீங்களா?அனாமிகாவிற்கு என் வாழ்த்துக்கள்..

இப்போதைக்கு என் வீட்டிலும் ஒரு அனாமிகா உருவாகிகொண்டிருப்பதால்...அந்த அனாமிகாவின் முயற்சியும்,கோப்பை வாங்கிகொடுத்த பெருமையும் இந்தியப் பெண் என்ற வகையிலே சந்தோஷமாக உள்ளது..

அவளைபோன்ற நிறைய அனாமிகாக்கள் நம் அறுசுவை குடும்பங்களிலும் உருவாக என் வாழ்த்துக்கள்

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நேற்று நவம்பர் 3ம் தேதிக்கான ரயில் முன்பதிவு தொடங்கிய சில நொடிகளில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டனவாம்.ஆன்லைன்னில் முன்பதிவு செய்தோர் 70%. முன்பதிவு தொடங்கிய 8 நிமிடம் 10 வினாடிகளில் 3,196 பேர் ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்துள்ளனர். 8,729 பேர் தங்களுக்கான இடத்தை ரிசர்வ் செய்துள்ளனர்.

இந்த செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சி, சாதாரணமாவே தீபாவளி என்றால் பெரும் நெரிசல். தீபாவளி சிறப்பு ரயில்கள் இந்த மாத இறுதியிலேயோ, அடுத்த மாதம் முதல் வாரத்திலேயோ அறிவிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அறுசுவையில் தீபாவளிக்கு ஊருக்கு போக நினைக்கும் தோழிகள் இப்பவே டிக்கெட் முன்பதிவு செஞ்சுக்கோங்கப்பா.

நான் இதை செய்தித்தாளிலும், டிவி செய்தியிலும் பார்த்தேன்

அன்புடன்
பவித்ரா

ஏற்கனவே காஷ்மீர் என்றாலே பிரச்சினைதான், இதில் இப்ப ஒரு வாரமா நடந்து வரும் கலவரத்தோடு சேர்ந்து மழை வேறு, 115 பேர் மழையால் உயிரிழந்துள்ளனர். கிடைத்த சடலங்களின் எண்ணிக்கை மட்டும் 115, 500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

காஷ்மீரில வாழும் மக்களுக்கு எப்பொழுதுதான் விடிவுகாலம் என்பது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று, இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

அன்புடன்
பவித்ரா

காலைல தான் பவி அந்த செய்தியை பார்த்தேன்,

மழை தண்ணியின் அரிப்பால் பலவீடுகள் சரிந்தது. பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டதை செய்தியில் பார்த்தேன். மனம் பாரமாகி போனது.

இறந்தவர்கள் ஆதமா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா


115ங்கறது ஒருகணக்குதான் ஆனா கணக்கு இல்லாம செத்து போயிருக்கா

காஷ்மீரே! காஷ்மீரே!
கண்ணீரில் மிதக்கின்றாய்!

மழை நீர் அது செய்த
மாபெரும் பிழையதனால்
மண் அரிப்பு ஏற்பட்டு
மாண்டனரே மாந்தரெல்லாம்.

கண்ணீர் துடைப்பதற்கு அறுசுவையின்
கைகளை நீட்டுகிறோம்
எட்டவில்லை எமக்கிங்கே
எங்கோ இருக்கின்ராய்

ஆம் நீ அண்டை நாட்டினரால்
அதிதூரம் சென்றாயே

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு குளிர் சாதன வசதியுடன் மெட்ரோ ரயில்களை இயக்க அரசு முடிவு செய்துள்ளது. காலையிலும் மாலையிலும் 3 நிமிட இடைவெளியில் இயக்க தீர்மானிக்க பட்டுள்ளது. 1000 பேர் செல்லும் வசதியுடன் இந்த ரயில் இயக்கப்படும்.

எத்தனை ரயில் வந்தாலும் எல்லாமே சீக்கிரம் ஃபுல் ஆயிடும். கிட்ட்தட்ட எல்லாருமே சொந்த ஊர் விட்டு பிழைப்பிற்காக வேற இடத்தில்தான் வசிக்கிறோம், இந்த நிலையில் ரயில் மிக முக்கியமான ஒன்று. அதனால்தான் அதனை ஏழைகளின் விமானம் என்கிறோம்.

இவ்வளவு நமக்கு உதவும் ரயிலை நாம் பிரயாணம் செய்யும் போது சுத்தமா வச்சுக்க வேண்டியது நமது தலையாய கடமை இல்லையா. இதனை நம்மில் பெரும்பாலானோர் ஏனோ மறந்து விடுகிறோம்.

அன்புடன்
பவித்ரா

இன்று காலை எழுந்ததும் தினத்தந்தி பேப்பரில் இதை தான் முதலில் படிக்க நேர்ந்தது. அதுவும் படங்களுடன். பலி எண்ணிக்கை 120 என்று போட்டு இருந்தார்கள். படித்த உடனே மனத்துக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. இதுப் போல் இயற்கை சீற்றங்களை யாராலும் தடுக்க முடியாத ஒன்று தான். இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய பிராத்திபோம்.

பொறியியல் கல்லூரிகளுக்கான கவுன்சிலிங் நேற்றோடு முடிந்த நிலையில், த்ற்போதைய காலியிடங்கள் 12,000 என அரசு தெரிவித்துள்ளது, அதனால் நான்காம் கட்ட கவுன்சிலிங் வைக்க தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் 14 மற்றும் 16ம் தேதி வழங்கப்படுகிறது. இதில் துணை தேர்வு எழுதியவர்களும் பெற்றுக்கொள்ளலாம்.

(இது நாளிதழ் செய்தி)

பி.கு:
இப்போதெல்லாம் வீதிக்கு வீதி கல்லூரிகள் வந்துவிட்டதால் தான் இத்தனை காலியிடங்கள். இவர்கள் அனைவரும் கற்று தேர்ந்து அனைவருக்கும் வேலை கிடைக்குமா என்பது கேள்விக்குறியே?

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்