டேஸ்ட்டி மோர்

தேதி: June 5, 2010

பரிமாறும் அளவு: 2 அல்லது 3 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

புளித்த‌ தயிர் ‍ ‍- 300 மில்லி
தண்ணீர் ‍- 300 மில்லி
சீரகம் ‍ - 1 டீஸ்பூன்
மல்லி - 1 பின்ச்
சோம்பு ‍ -‍ 1 பின்ச்
கடுகு ‍ - 1 டீஸ்பூன்
ப.மிளகாய் ‍ ‍ - 1
இஞ்சி - 1 சிறிய துண்டு
கருவேப்பிலை ‍- 1 கொத்து
மல்லிக்கீரை ‍ - 1/2 கொத்து
புதினா ‍- 2 இதழ் மட்டும்
உப்பு - 1 டீஸ்பூன்


 

ப.மிளகாய், மல்லிக்கீரை, புதினாவை சுத்தம் செய்து, அத்துடன் தயிர், உப்பு, தண்ணீர் சேர்த்து, ப்ளெண்டரில் நன்கு அடித்து எடுத்துக் கொள்ளவும்.

வெறும் சட்டியை சூடாக்கி கடுகை போட்டு வெடுக்கவிட்டு, கலக்கிய மோரில் கொட்டவும்.

அதே சட்டியில் ‍‍‍‍சீரகம்,‍ மல்லி, சோம்பு மூன்றையும் தனித்தனியாக (தீயாமல்) வறுத்து, சற்று ஆறிய பிறகு மிக்ஸியில் கொரகொரப்பாக பொடித்து, அதையும் தயார் பண்ணி வைத்துள்ள மோரில் கொட்டவும்.

இஞ்சியை தோல் நீக்கி, மெலிதாக சீவி அல்லது கேரட் துருவலில் துருவி மோரில் போடவும்.

கருவேப்பிலையை பொடிதாக (தூள் போன்று) நறுக்கி மோரில் சேர்க்கவும்.

1/2 மணி நேரம் ஃபிரிஜ்ஜில் வைத்திருந்து சில்லென்று பரிமாறவும்.


பரிமாறும் முன் ஒரு முறை கலக்கிவிட்டுக்கொள்ளவும். கூலிங் தேவைப்படாதவர்கள்/ஒத்துக்கொள்ளாதவர்கள் ஃபிரிஜ்ஜில் வைக்காமல் அப்படியே அருந்தலாம். தயிர் சற்று புளித்திருந்தால்தான் சுவையாக இருக்கும். இது கோடை வெயிலுக்கு அருமையானது. நல்ல புத்துணர்ச்சியும் செரிமாணமும் தரக்கூடியது!

மேலும் சில குறிப்புகள்