பள்ளி கல்லூரி ஆசிரியர்களுக்கு மரியாதை பண்ணலாம் வாங்க...

அறுசுவை தோழிகளுக்கு வணக்கம்,
நான் லதாவிநீ. நான் பிறந்தது ஊட்டி-ல, வளர்ந்தது படிச்சது எல்லாமே சென்னை-ல. இப்ப இருக்கறது உடுமலைப்பேட்டை-ல. நாம வேற ஊருக்கு இல்ல வேற நாடுன்னு எந்த மூலைக்கு போனாலும் நாம மறக்க முடியாத விஷயங்கள்னு சிலது இருக்கும் அதுல நம்ம வீடு ஊரு சொந்தங்கள்-நு நெறைய சொல்லலாம். அதுல முக்கியமானதுன்னு நம்ம பள்ளி நாள்கள, கல்லூரி நாள்கள தான் சொல்லுவோம். நமக்கு எத்தன வயசானாலும் பள்ளி நாட்கள நெனச்சா ஒரு சந்தோசம் வரும். அங்க நமக்கு நல்ல தோழிகளும், தோழர்களும் ஏன் சிலருக்கு வாழ்க்கை துணை கூட கிடைப்பாங்க. நாம அந்த நாட்கள நெனைக்கும் போது கண்டிப்பா ஒரு முக்கியமானவங்கள கூட நினைக்காம விடமாட்டோம். முக்கியமானவங்கன்னு நான் சொன்னது நமக்கு பாடம் சொல்லி குடுத்த ஆசிரியர்கள தான். நாம கூட ஒருசில நாள்ள அலுத்துட்டு ச்ச எப்பதான் இந்த ஸ்கூல் முடியும்னு போயிருப்போம். ஆனால் ஒருநாள் கூட அலுக்காம வந்து நம்மகிட்ட கத்தி கதறி கஷ்டபட்ட ஆசிரியர்கள பத்தி இங்க பகிர்ந்துக்கலாமே? மாதா பிதா குரு தெய்வம் அதுல நமக்கு பாடம் சொல்லி குடுத்த குருங்களுக்கு இங்க நாம மரியாதை பண்ணலாமே? நாம எல்லாரும் இத ஒரு பிராயச்சித்தமா கூட நெனச்சுக்கலாம். என்ன தோழிகளே ரெடியா உங்க ஆசிரியரகள பத்தி எழுத?
-------------------------------------------------------------------------------------
இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.
அன்புடன்
லதாவிநீ.

ஆசிரியர்கள் பற்றி நெறைய சொல்ல இருக்கிறது கட்டாயம் வந்தது இதில் பதிவு போடுகிறேன்.இதுவும் நல்ல பதிவு. கண்டிப்பா நெறைய பேர் வந்து பதிவு போடுவார்கள் என்று நினைக்கிறேன்.

விசுவாசத்தினாலே எல்லாம் கூடும்

thank you very much for open this thread, we never forget our School & college teachers, I am from madurai, i studied in Holy Angles school in Pasumalai-madurai, there i like all teachers, especially Mrs. Rani, Mrs. Nagalakshmi mam, & my Principal. & my friends, maha, abi, thanu, karthick, saravanan, venkatesh, ramalingam etc.

in school days i never forget 11th annual holidays & 12th. i like my class room.

college: N.M.S Sermathai vasan college for women, there i like Amali mam, jeyalakshmi mam, Ganga mam, Bama mam, Jamuna mam, sumathi mam,i like my college bus, & Garden, & my friends.

Once again thank you latha, i cannot stop my words,

keep on touch,

take care, bye.

ஹாய் பாரதி
உங்க பதிவ பாக்கும் போதே நீங்க ஸ்கூல் அன் கல்லூரி ல எந்த அளவுக்கு சந்தோசமா இருந்துருபீங்கன்னு தெரியுது. இந்த சந்தோசம் என்னைக்கும் உங்களுக்கு இருக்கணும். அப்பறம் அட்மின் அண்ணாக்கு தான் முதல்ல நன்றி சொல்லணும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாம நமக்காகவே எல்லா எனர்ஜியும் போற அளவுக்கு கஷ்டபடர ஆசிரியர்களுக்காக இந்த thread -ட ஆரம்பிச்சதுல நான் பெருமை பட்டுக்கிறேன். நான் என் ஆசிரியர்கள பத்தி எழுதிட்டுருக்க. சீக்கிரமா அத நான் சேத்தரன்.
பாரதி உங்க பதிவ தமிழ்-ல போட்டீங்கன்னா நல்லாருக்குமே? கொஞ்சம் சிரம பட்டாது தமிழ்-ல எழுதுங்க. நான் இப்படி சொல்லறதுக்கு கோச்சுகாதீங்க. ப்ளீஸ்.
நன்றி grace அம்மா.
-----------------------------------------------------------------------------------------------------
இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.
அன்புடன்
லதாவிநீ.

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

ரொம்ப thanks இப்படி ஒரு பதிவு போட்டதுக்கு நான் படித்தது பள்ளத்தூர். எனக்கு maths teacher நா ரொம்ப பிடிக்கும் அவங்க வரக்கூடாதுனு class ஏ சாமி கும்பிடும் நான் மட்டும் வரனும்னு வேன்டுவேன் அந்த teacer எந்த studends கூடவும் நெருக்கமா இருக்கமாட்டாங்க என்னோட பழகிரதால யாருக்குமே என்னை பிடிக்கது அப்பவும் நான் கவலப்பட்டதே இல்லை இப்ப நினைத்தால் சிரிப்ப இருக்கு ஆன இப்பவும் அவங்கமேல தனிப்பட்ட(அம்மா ) பிரியம் ஏன்னுசொல்ல தெரியல ippa கூட தொடர்பு வைத்திருக்கிரேன்

ஹாய் தோழிஸ்,
நான் சொல்லனும்னா நெறைய டீச்சர்கள பத்தி சொல்லணும் ஆனா கொஞ்சமா சுருக்கமா சொல்லறேன்.

நான் 6th டு 8th ஒரே கிளாஸ் டீச்சர்-க கிட்ட தான் படுசேன். அப்ப எங்க கிளாஸ் மிஸ்(இங்கிலீஷ் மிஸ்) மோகனா மிஸ், தமிழ் மிஸ் சந்தான லக்ஷ்மி மிஸ், மேக்ஸ் டீச்சர் ராஜலக்ஷ்மி மிஸ், சயின்ஸ் டீச்சர் தேவகி மிஸ், சோசியல் டீச்சர் கஸ்தூரி மிஸ் இவங்கள என்னால மறக்கவே முடியாது. எனக்கு ரொம்ப புடிக்கும். இதுல தமிழ், இங்கிலீஷ், சயின்ஸ் டீச்சர் அடிக்கவே மட்டாங்க. ஆனா மாக்ஸ் மிஸ் செமைய அடிப்பாங்க. சோசியல் மிஸ் செமைய கில்லுவாங்க. அதுவும் வயுதையே புடிச்சு கில்லுவாங்க. நான் நெறைய கிள்ளு வாங்கிருக்கனே. ஹி ஹி ஹி.

அப்பறம் எப்படியோ தட்டுத்தடுமாறி 9th வந்தேன். அங்க கிளாஸ் மிஸ் அன் சயின்ஸ் மிஸ் நீலாஞ்சலி மிஸ், தமிழ்-கு வந்த தமிழ்கல்யாணி மிஸ்(இந்த மிஸ் பேரு கல்யாணி தான் ஆனா தமிழ் சூப்பரா எடுப்பாங்க சோ தமிழ்கல்யாணி ஆயிருச்சு) இவங்க எனக்கு 2 மாசம் தான் வந்தாக அவங்களுக்கு பதிலா மாரியம்மாள் மிஸ், இங்கிலீஷ் டீச்சர் க்ளோரி மிஸ், மாக்ஸ் மிஸ் சரஸ்வதி மிஸ்(இவங்க எனக்கு சைன் தீட்டா, காஸ் தீட்டா, தியரி சொல்லி தந்தே ஒரு வலி ஆகிருப்பாங்க, சோசியல் டீச்சர் தமிழ்செல்வி மிஸ்ஸ நாங்க படுத்துனதுக்கு அளவே இல்ல. ஆனாலும் எப்படி தான் இவங்கல்லாம் அவ்வளவு பொறுமையா இருந்தாங்கன்னே தெரியலங்க. ச்ச கிரேட்-க அவங்கல்லாம்.
கிளாஸ்-ச கட் அடிகரதுக்காக கண்டு பிடிச்ச ஒரு ஐடியா தான் கேம்ஸ். கேம்ஸ் டீச்சர்கள ஐஸ் வெச்சு அப்பப்ப வெளையாட எஸ் ஆகிருவோம். கேம்ஸ் டீச்சர்-ல சிவகாமி மிஸ்-நு ஒருத்தங்க என் அத்தை படிக்கும் போதுல இருந்து வொர்க் பண்ணவங்க.

நான் volleyboll பிளேயர்க. இத யாரும் நம்ப மாடீங்களே? ஏன் வினித்(என் கணவர் தான்) கூட இத நம்ப மாடீங்கறாங்க. பரவால்ல இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா.....

எப்படியோ ஒரு வழியா (இப்பவே மூச்சு வாங்குது) 11th வந்தாச்சு. அங்க ஹிஸ்ட்ரி டீச்சர் காசியம்மாள் மிஸ், தமிழ் மாஸ்டர் முருகேசன் சார், காமர்ஸ் மாஸ்டர் தனஞ்செயன் சார், அக்கவுன்ட் மாஸ்டர் முருகேசன் சார், இங்கிலீஷ் டீச்சர் உமையால் மிஸ், எகனாமிக்ஸ் டீச்சர் செந்தமிழ் செல்வி மிஸ் இவங்கள எல்லாம் மறக்கவே முடியாது என்னால. எகனாமிக்ஸ் டீச்சர்கு கொஞ்சம் காது கேக்காது. அதனால அவங்க பாடம் நடத்தும் போது நாங்க எல்லாரும் கவனிக்காம செமையா அவங்கள கஷ்ட படுதீருக்கோம். ஆனா என் தோழி ஒருத்தி 12th பீஸ் கட்ட முடியாம இருந்தப்ப அவங்க தான் கட்டுனாங்க, கட்டினது மட்டும் இல்லாம அவல நல்லா படிக்கவும் வெச்சாங்க. அவங்க மேல இருந்த மரியாதையை இப்பகூட கொறயவே இல்ல எப்பவும் கொறயாது.

இப்படி எனக்கு கெடச்ச ஒவ்வொரு டீச்சர்ஸ் ஒவ்வொரு விஷயத்துல உயர்ந்தவங்களா தான் இருந்துருக்காங்க. ஒருத்தர் கூட புடிக்காதவங்களா நடந்துக்கல. இவங்க எல்லாம் எனக்கு கெடச்சதுக்கு கடவுளுக்கு நன்றி சொல்லிகரன்.

இதெல்லாம் பகிர்ந்துக்க வாய்ப்பு குடுத்த அட்மின் பாபு அண்ணாக்கும் நன்றி சொல்லிக்கரன்.
-----------------------------------------------------------------------------------------------------
இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.
அன்புடன்
லதாவிநீ.

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

ஹாய் இந்தியன்

டீச்சர்-கள புடிகுதுன்னாலே நம்மள எனிமி லிஸ்ட்-ல சேக்கரவங்க எல்லா எடத்துலையுமே இருப்பாங்க போல இருக்கே? நான் 11th 12th படிக்கும் போது தமிழ் மாஸ்டர் எக்ஸாம் பேப்பர் மார்க்ஸ் add பண்ண என்னையும் என் தோழி பாலாவையும் கூப்பிடுவாரு. ஆனா அத தப்பா பேசுனாங்க சில தோழிகள். என்ன பண்ண இவங்கள எல்லாம்........ சரி விடுங்க பேசறவங்க பேசட்டும். நமக்கில்ல தெரியும் அவங்கள நாம எந்த எடத்துல வெச்சுருகம்னு?
-----------------------------------------------------------------------------------------------------
இருப்பதின் அருமை இல்லாத போது தெரியும்.
அன்புடன்
லதாவிநீ.

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

லதா மன்னிக்கவும் இனிமேல், தமிழில், டைப் செய்கிறேன், உங்க பள்ளி வாழ்க்கையை படிக்கும் போது ரெம்ப சந்தோசமாக இருக்கிறது.

9த் , 10த் படிக்கும் போது, மலர்கொடி மிஸ் தான் கணக்கு மற்றும் கில்ஸ் டிச்சர், என்க்கும் அவுங்கள ரெம்ப பிடிக்கும், அவுங்களுக்கும் என்னை ரெம்ப் பிடிக்கும், எப்பொழுதும் என்னை, மொட்டை என்று செல்லமாகத்தான், அலைப்பார்,டிச்சர் கல்யாணத்துக்கு அவுங்க தம்பி, வீட்டுக்கு வந்து இன்விடேசன் வைத்தார். ட்ச்சர் கல்யாண நாலை மற்க்க முடியாது.

தமிழ் டிச்சர் வசந்தி மிஸ், சுறுக்கமாக, என் தோழி. இருவருக்கும் உள்ள பிரச்சனைகளை பகிர்ந்துகொள்வோம்.

பள்ளி, கல்லூரி வாழ்க்கையை, நினைக்கும் போது, அழுகையாக இருக்கிறது,
கல்யாணம் வரை எல்லோருடையும் பேசுவோம், ஆனால் 4 வருடமாக யாருடைய தொடர்பும், இல்லை, ஏன்னென்றால், நான் குவைத்தில், இருக்கிறேன்.

பள்ளி, கல்லூரி வாழ்க்கையை நினைவு படுத்தியதுக்கு Latha & Admin sir மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அன்புடன்
மனோ பாரதி.
நினைக்க மறந்தாழும், மறக்க நினைக்காதே!

நானும் குவைத்தான்.நீங்க எங்க இருக்கீங்க? நாங்க பாஹீளில் இருக்கோம்.

விசுவாசத்தினாலே எல்லாம் கூடும்

எப்படி இருக்கிங்க, நான் ஷர்க், வத்தனியா டெலிக்காம் எதிரிலி, அமிரி ஆஸ்பத்திரி பக்கம்.
கணவர் - Alshamel Travel & Tourism ல Travel Consultant
நான் - Union Engineering co - Shuwaikh - Secretary.
பெண் - 2 years- going to baby sitting.

என்னை உங்க தோழியாக ஏற்றுக் கொள்ளவும்.

அட நானும் குவைத் ஹைத்தன்

மேலும் சில பதிவுகள்