முருங்கை கீரை எங்கு கிடைக்கும்?

<!--break-->வணக்கம் தோழிகளே, நான் US ல் இருக்கிறேன். இங்கு முருங்கை கீரை எங்கு கிடைக்கும். இங்கு நிறைய Indian Grocerry Stores உள்ளது.யாராவது இங்கு முருங்கை கீரை வாங்கி இருக்கிறீர்களா?.நான் இங்கு முருங்கை கீரை வாங்கியது இல்லை. Mrs. Moorthy அவர்களின் குறிப்பில் ராகி அடையில் முருங்கை கீரை சேர்த்து இருந்தார்கள். அதனால் கேட்டேன்.இங்கு உள்ள தோழிகள் தெரிந்தால் சொல்லவும்.Please.

HONGKONG MARKETஅல்லது ASIAN MARKET இல் கிடைக்கும்.நான் இங்கு(HOUSTON, HONKKONG MARKET) இல் வாங்கினேன்.

என்ன கேள்வி இது ?... எல்லா ஊர்லயும் கீரை கடைல தான் கிடைக்கும்....

nanri

ஹலோ sanpass ரொம்ப நன்றி. இங்கு உள்ள கடைகளில் பாலக் மற்றும் வெந்தய கீரை தான் கிடைக்கிறது.

ஹலோ shankar.n 1984
ஒருவர் கேள்வி கேட்டால், உங்களுக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கள். அடுத்தவரின் கேள்வியை tease செய்ய உங்களுக்கு என்ன உரிமை உள்ளது? நான் கேள்வி கேட்டது தோழிகளிடம் தான். உங்களிடம் அல்ல.

உங்கள் பிரச்சனை தான் எனக்கும்
லக்னோவில் தினமும் பாலக் தின்று போர் அடிக்குது.
இங்கே வேற கீரை எங்கே விற்பார்கள்?
யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
(ஊர விட்டு ஊர் போனா இதே பிரச்சனை தான்)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹெலோ நல்ல வேலை நீங்க முருங்க மரத்துலதான் கிடைக்கும்னு சொல்லாம போய்டிங்க... சொல்லி இருந்தா அவங்க மரம் எங்க இருக்கும்னு கேட்பாங்க ....

ஹிஹி யாரவது சிரிங்க ஜோக் சொல்ல ட்ரை பண்ணிருக்கேன்...

வாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

this s a verybad joke.dont hurt others feelings by replying lik dis.

Alhamthulillah

இங்கு முருங்கை கீரை சமர் சீசனில் மட்டுமே கிடைக்கும். எல்லா நேரமும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. கிடைத்தாலும் விலை கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
collard கீரை நல்லா இருக்கும். பொரியல் செய்து சாப்பிடலாம்.

சங்கரை மன்னித்து விடுங்கள். ஏதோ விளையாட்டாக சொல்லியிருப்பார். பாவம்.

வாணி

ஹலோ வாணி,
நன்றி. நான் மீண்டும் Grocerry Stores -ல் பார்க்கிறேன்.
<ஒரு உதவி கேட்டு கேள்வி அனுப்பும் போது பதிலுக்காக காத்திருப்போம். அப்போது இது மாதிரி கிண்டல்கள் அதிருப்த்தியை அளிக்கிறது.விளையாட இது தளம் இல்லை அல்லவா?>

மேலும் சில பதிவுகள்