பட்டிமன்றம் - 18 - தனிவீடா? அடுக்கு மாடி கட்டிடங்களா?

வணக்கம் தோழிகளே... காத்திருந்து யாரும் வராத காரணத்தால் நண்பர்கள் அலோசனைபடி நானே புது பட்டிமன்றத்தை துவக்கிட்டேன். அனைவரும் வந்து வாதிடுவீர்கள் என்று நம்புகிறேன். இம்முறை நம் தோழி திருமதி மனோகரி அவர்கள் தந்த தலைப்பு. இந்த காலத்தில் யோசிக்க வேண்டிய நல்ல ஒரு தலைப்பு தந்தமைக்கு மனோகரி'கு நன்றிகள் பல.

தலைப்பு இதுதாங்க...

நாம் வசிக்கும் வீடுகளில் எது பாதுகாப்பானது, சிறந்தது, இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றது? - தனிவீடா? அடுக்கு மாடி கட்டிடங்களா?

என்ன தயாரா?? ஓடி வாங்க... வரும் திங்கள் அன்று தீர்ப்பு வரும். அதுகுள்ள உங்க கருத்தை பதிவு செய்ய, வாதிட வாங்க தோழிகளே.

வாங்க வாங்க.. எல்லாரும் வாங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா அக்காவுக்கு பனிவான வணக்கங்கள்!முதல் ஆளாக நான் வந்துவிட்டேன்.டோன்ட் வொரி.தனிவீடுதான் என்பது எனது வாதம்.வேறு யாரும் வருகிறார்களா என்று பார்த்து பிறகு ஜாய்ன் பன்னிக்குறேன்.நன்றி

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அடடா பட்டி மன்றம் இன்னும் ஆரம்பிக்கலியேன்னு மனசுக்குள்ள வருத்தப் பட்டேன். உடனே நீங்க ஆரம்பிச்சுட்டீங்க வனி. நன்றிகள் பல.

நம்ப ஓட்டு அடுக்கு மாடி வீட்டுக்குத்தான். இருங்க இன்னும் கொஞ்ச நேரத்துல வாதத்தோட ஓடி வாரேன்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வனிதா குடியிருக்க என்ரால் தனிவீடு ஆனால் பாதுகாப்பு என்ரால் அடுக்குமாடி தான்

வாழ்க வளமுடன்

என்னை பொருத்தவரை என் ஓட்டு எப்போதும் தனி வீட்டுக்கு தான்.but
என் மகன் வளரும் இவ்வேளையில் அவனுடன் விளையாட ஆள் இல்லாததால் அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்திருக்கலாமோ என்று மனதுக்குள் சின்ன வருத்தம் உண்டு.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பிரியாவின் கூற்றை 100 சதவீதம் ஏற்றுக் கொள்கிறேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

"சின்ன வீடாக" இல்லாமல் எந்த வீடாக இருந்தாலும் சந்தோசம்தான் ...

பாதுகாப்புக்கு அடுக்குமாடி கட்டிடம்.ஒகே. அது கிராமத்துல மட்டும்தான் சரியாகும்.நகர வாழ்க்கையில் அல்ல.உதாரணம் நிறைய சொல்வேன்.ஒரு விமான பணிப்பெண் சென்னையில் மர்மமான முறையில் இறந்தது எல்லோருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.அது நடந்தது ஒரு அடுக்கு மாடி வீட்டில்தான்.பக்கத்துல ஆள்கள் இருந்தும் யாரும் கண்டுக்கல.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அனைவருக்கும் வணக்கம்!

மக்களே நல்லா கவனிச்சுக்கோங்க நாம் வசிக்கும் வீடுகளில் எது பாதுகாப்பானது சிறந்தது இன்றைய கால கட்டத்துக்கு ஏற்றது?

இதுல என்ன சந்தேகம் அடுக்குமாடி வீடுதான்னு நடுவர் மேல சத்தியமா அடிச்சு சொல்வேன். இப்போ நிலம் விக்கற விலையில இடம் வாங்கி தனி வீடு கட்டறதெல்லாம் சாத்தியமாகுமா? அட ஒரு கிரவுண்ட் வேண்டாங்க ஒரு கால் கிரவுண்ட் இடம் வாங்க முடியுமா நடுத்தர குடும்பங்களால்? இவங்க எல்லாருக்கும் கிடைச்ச வரப்பிரசாதம்தான் அடுக்குமாடி வீடுகள். இல்லேன்னு எதிரணியினர் சொல்லட்டும் பார்ப்போம்.

ஊருக்கு வெளியில் விலை கம்மிதானே அங்க வாங்கி தனி வீடு கட்டலாமேன்னு சப்பைக்கட்டு கட்டக் கூடாது. இப்படிப்பட்ட இடங்களில் பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக்குறி. உப்பு வாங்கக் கூட 10கிலோமீட்டர் போனத்தான் வாங்கமுடியும் இப்படிப்பட்ட இடங்களில்.

தனிவீட்டுல மரம் வைக்கலாம் செடிவைக்கலாம் சிலு சிலுன்னு காத்துவரும்னு பழங்கதை பேசக் கூடாது. மனசிருந்தா அடுக்குமாடியிலயும் செடி கொடிகள் வளர்க்கலாம். சரியான பில்டரிடமிருந்து பார்த்து வாங்கினா சும்மா காத்தும் வெளிச்சமும் சிலுசிலுங்குற மாதிரி அடுக்கு மாடி வீடு கிடைக்கும்.

இப்போ எல்லாரும் எனக்கு தனிவீடுதான் வேணும்னு அடம்புடிச்சாங்கன்னா நாளைக்கு பூவாவுக்கு சுவத்தைத்தான் பிராண்டனும். விளைநிலங்களெல்லாம் மனைநிலங்களாகாமல் இருக்கணும்னா அதுக்கு ஒரே வழி அடுக்கு மாடி வீடுகள்தான்.

இப்ப பாருங்க ஒவ்வொரு வீட்டுலயும் பெரும்பாலும் ஒரு குழந்தைதான். இந்த லட்சணத்துல இந்த குழந்தை தனி வீட்டுல வசிக்குதுன்னு வச்சுக்கோங்க அது யார் கூட விளையாடும்? இதே அடுக்கு மாடி வீடுன்னு வச்சுக்கோங்க அது பாட்டுக்கு பக்கத்து ஃப்ளாட் எதிர் ஃப்ளாட் குழந்தைகளோட கீழே இருக்கற ப்ளேகிரவுண்டில் ஜாலியா ஓடியாடி விளையாடும். வயதான பெரியவர்கள் பேச்சுத்துணைக்கு ஆளில்லாமல் கஷ்டப் பட மாட்டாங்க. அவர்கள் வயதொத்தவர்களோடு வாக்கிங் சாட்டிங் னு சந்தோஷமா இருப்பாங்க. ஒரு வீட்டில் அப்பா அம்மா வர நேரமாகுதுன்னா பக்கத்து ஃப்ளாட் காரங்க குழந்தையை கவனிச்சுப்பாங்க. தனி வீட்டுல இதற்கான சாத்தியம் குறைவு.

உடற்பயிற்சிக்குன்னு தனியா எங்கயும் போக வேண்டாம். லிஃப்ட்க்கு பதிலா படியிலேயே ஏறி இறங்கினால் உடற்பயிற்சி செய்தாச்சு. ஜிம்முக்கு தனியா பணம் கட்ட வேண்டாம்.

எப்படிப் பார்த்தாலும் அடுக்குமாடி வீடுதான் பெஸ்ட்டு கண்ணா பெஸ்ட்டு

திரும்பவும் வருவோம்ல :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

என் ஓட்டு தனி வீட்டுக்கு தான்.
அடுக்கு மாடி குடியிருப்புகள் அமைப்புகள் எல்லாமே நம்ம வீட்டு வாசல திறந்தாலே அடுத்தவங்க வீட்டு ஹால் தெரியும் அதே போல் வடிவைப்பு இருக்கு, நமக்குன்னு ஒரு ப்ரைவஸி இருக்காது.
ஒரு குழந்தையே வைத்திருந்தாலும் அதையும் பாதுகாப்பா தான வளர்க்க விரும்புவோம், அடுக்குமாடி குடியிருப்புகளில் கதவ திறந்த படி தானங்க இருக்கு குழந்தைகளுக்கு பாதுகாப்பு எங்கங்க இருக்கு. சின்ன குழந்தைகள் வச்சியிருக்கறவங்க எல்லாருமே இப்பலாம் யாருங்க அடுக்குமாடி குடியிருப்ப விரும்புறாங்க.
இப்ப இருக்குற வேகமா போய்ட்டு இருக்கற சூழ்நிலையில யாரு வந்து பக்கத்துவீட்லயும் எதிர்வீட்டுல உள்ளவங்க கிட்டையும் பேசி பழகிகிட்டு இருக்காங்க அவங்கவங்களுக்கு அவங்க வேலைய பார்க்கவே நேரம் சரியா இருக்கு. பக்கத்து வீட்டில் யாராவது இருக்காங்களான்னே தெரிய மாட்டேங்குது நிறைய பேருக்கு. இதுல என்ன பெருசா பாதுகாப்பு கிடைச்சுட போகுது சொல்லுங்க.
***உடற்பயிற்சிக்குன்னு தனியா எங்கயும் போக வேண்டாம். லிஃப்ட்க்கு பதிலா படியிலேயே ஏறி இறங்கினால் உடற்பயிற்சி செய்தாச்சு. ஜிம்முக்கு தனியா பணம் கட்ட வேண்டாம்***
இது வந்து கால் நல்லா இருக்குறவங்களுக்கும் சிறு வயதினருக்கும் ஓகே, லிப்ட் வேலை செய்யலனா வீட்டில் இருக்கும் பெரியவங்கள நினைச்சு பாருங்க, 3 மாடியோ 4 வது மாடியோ அவசரத்திற்கு இறங்கனுனா கூட முடியாது தானே. ஆனால் தனி வீட்டில் அப்படி இல்லையே.
மீண்டும் வந்து என் வாதத்தை தொடர்கிறேன். ஏதாவது தவற சொல்லி இருந்தா தவற எடுத்துக்க வேண்டாம்.

மேலும் சில பதிவுகள்