motion blood loss

அன்பு தோழிகளுக்கு,
என் கணவருக்கு கடந்த ஒரு மாதமாக விட்டு விட்டு மோஷன் போகும் போது இரத்த போக்கு இருக்கிரது.. தயிர் மோர் வாழைபழம் அப்பிள் எல்லாம் கொடுத்து பார்தாச்சு சரியாகவில்லை.. என்ன செய்யலாம்.. வீட்டு வைத்தியம் கூறவும்...

சகோதரி.முதலில் ஆப்பிள் சாப்பிடுவதை நிருத்துங்கள்.ஆப்பிள் சிலருக்கு மலத்தைகட்டும்.வயிற்றுபோக்குக்கு ஆப்பிள் ஜூஸ் சாப்பிடலாம்முதலில் டாக்டரிடம் போகவும்

முதலில் ஒரு நல்ல மருத்துவரிடம் ஆலோசித்து காரணத்தைக் கண்டறியுங்கள். அதன்பின் வீட்டு வைத்தியம் பற்றி யோசியுங்கள்.

சாதாரண வயிற்றுப் புண்ணாகக் கூட இருக்கலாம்.

அன்புடன்,
இஷானி

மிகவும் நன்றி தோழிகளே..

நீங்கள் சென்னை வாசி என்றால் குரோம்பேட்டையில் இருக்கும் தேசிய சித்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும்.
என் அக்காவுக்கு இது போலவே இருந்த பிரச்சனை அங்கு குடுத்த லேகியம் சாப்பிட்ட பின் குணமாகி வருகிறாள்.

விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நிஞ்சுபப்பு.. மோஷனில் ரத்தப்போக்கு பல காரணத்தால் இருக்கலாம். அதனால் தாமதிக்காமல் முதலில் டாக்டரை பாருங்கள். வீட்டு வைத்தியம் இப்போ உடனே கை குடுக்காதுங்க. என்ன காரணம்'னு டாக்டரை பார்த்து தெரிஞ்சுக்கங்க. ஒன்னும் கவலை படாதிங்க, சரி ஆகிடும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்