அறுசுவை அறிமுகம்.

தோழிகளே!
நம் நட்பினை மீண்டும் மீண்டும் திரும்பி பார்ப்பது இனிமை தான் அல்லவா?
நம்மை இணைத்த அறுசுவை என்னும் இப்பாலம் நமக்கு முதலில் அறிமுகம் ஆனது எப்படி?
ஒவ்வோருவரும் சற்று பின்னோக்கி சென்று உங்கள் இனிய அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாமே?

ஆமினா அக்கா அஸ்லாமு அழைக்கும் நிங்களும் என்னை ப்ரெண்டா ஏத்துக்கோங்க

எனது அறுசுவை அறிமுகம், நான் முன்பு கூறிய அதே அறிமுகம்தான்.நான் வேலை பார்க்கும் இடத்தில் சமையல் பற்றி தோழிகள் எல்லோரும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போதுதான் அறுசுவையை பற்றி சொன்னார்கள்.நான் முதலில் சமையல் குறிப்பெடுத்து சமைப்பதோடு சரி.பின் தோழிகளின் அரட்டையை பார்க்கும் போது, எனக்கும் அதில் பங்கு கொள்ள ஆவல் ஏற்றபட்டது.(ஒன்றரை வருடங்களுக்கு முன்) பெயர் பதிவு செய்து ஒருவாறு உள்நுழைந்து விட்டேன். இப்போது அரட்டை அது இது என மன்ற பக்கம் வராவிட்டால் மனதில் ஒரு நெருடல்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அலைக்கும் சலாம் வரஹ்மத்துல்லாகி தாலா வ பரக்காத்துஹ்

என்னைய அக்கான்டு கூப்பிட கூடாது.(நான் 89 ல தான் பா பொறந்தேன். ப்ளீஸ் பா பெயர் சொல்லியே கூப்பிடுங்க! இல்லன்டா அழுதுருவேன்.)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நானாவே தான் வந்தேன்... 11/2year முன்னாலேயே அறுசுவை என்றுகூகுலில் சமையல் குறிப்பு தேடிய பொழுது கிடைத்தது தான் அறுசுவை.காம் ரொம்ப நாள் பெயர் பதிவு பண்ணாம சுத்திகிட்டு இருந்தேன் பிறகு பெயர் பதிவு செய்தேன்எல்லாப்பக்கங்களையும் பார்ப்பது வழக்கம் இடையில் நெட் சரியாக கிடைக்காததால் paassword மறந்துவிட்டது என் மகளின் பெயரில் loginசெய்த்ருக்கிறேன்
mahaa
self help is the best help

சரி சரி அழுகாதிங்க பெயர் சொல்லியே கூபிடுகிரன் நான் 87

ஹாய் தோழிகளே,

என்னையும் உங்க friends list ல சேர்த்துகோங்கபா.
இந்தியால இருக்குற வரைக்கும் அருசுவை தழத்த பத்தி எனக்கு தெரியாது.ஏன்னா நான் அப்பலாம் சமைக்கவே மாட்டேன்.அதுல interest um கிடையாது.US வந்ததுகப்புறம் தான் என்னோட பொழுதுபோக்கிற்காக சமையல் கத்துகலாம்னு முடிவு பண்ணினேன்.அப்ப என் கணவர் தான் சொன்னாங்க, அருசுவை நு ஒரு தழம் இருக்கு, நீ அதுல போய் பாருனு.அப்புறம் கொஞ்ச நாளா பெயர் பதிவு பண்ணாமலே பாத்துகிட்டு இருந்தேன்.அதுகப்புறம் நானும் பெயர்பதிவு பன்னிட்டேன்.இப்ப தினமும் பார்கிறேன்.ஏதோ அருசுவை புண்ணியத்துல, என் கணவர்க்கு கொஞ்சம் சுமாரான சாப்பாடாவது கிடைக்குது.(இப்பதான் கொஞ்சமா முன்னேறிருக்கேன்)அருசுவைக்கும், வித விதமா சமையல் குறிப்புகள் தரும் நமது பெரிய தோழிகளுக்கும் பெரிய்ய நன்றி.

nisarbanu
tanseem
nasreengani...............
மற்றும் பலர்.....(யாராவது வம்புக்கு வந்துர்ர போறாங்க)
சேத்துட்டேன் போதுமா?
இதோட விட்டுர்ர மாட்டோம். அடிக்கடி கூப்பிட்டு டிஷ்டப் பண்ணுவோம். ஓக்கேவா..........???????

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சரிப்பா.எந்த அளவுக்கு தொந்தரவு பண்ண முடியுமோ பண்ணிகோங்க.எந்த பிரசனையும் இல்ல.உங்கள பத்தி சொல்லுங்க ஆமினா?

சாரி பா. இந்த ஹிந்தி காரபயபுள்ளைங்க( பக்கத்து வீடு) நா வந்த பிறகு சப்பாத்தில இருந்து தோசைக்குத் தாவிட்டாங்க. சோ அவங்களுக்கு சுட்டுட்டு வரதுக்குள்ள உங்கள மிஸ் பண்ணிட்டேன்.
என்னைய பத்தியா கேட்டீங்க? விட்டா சொல்லிக்கிட்டே இருப்பேன். e-mail id அப்பறமா தரேன். அத பத்தி விரிவா சொல்லுறேன். இப்போதைக்கு சொல்லுறதுக்கு-
பரமக்குடில 11 வரை படிசேன்.உடனே மேரேஜ்( லவ் மேரேஜ்-பெத்தவங்க சம்மதத்தோட). பாசமான ஹஸ். 2 1/2 வயசுல ஒரு வாலு பையன். 12வது சென்னைல கரஸ்ல முடுச்சு மெட்ராஸ் யூனிவர்சிட்டில பி.ஏ-ECONOMICS(இருக்கும் படிப்புகள்ள இது மட்டும் தானே ஈசி) 2 இயர் போகப்போறேன். லக்னோ வந்து 3 மாசம் தான் ஆகுது. ஹிந்தி நகி மாலும். ஏதோ கால்குறை(அறைகுறையில் பாதி கால்குறை தானே) இங்கிலீஸ் வச்சு பொழப்ப ஓட்டுறேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ம்ம்ம்ம்ம்...... நல்லா தான் பேசுரீங்க.எனக்கு இப்படி பேசுறதுக்கு பக்கதுல யாரும் இல்ல.எப்பவும் தோழிகளுடன் நல்லா கடல போட்டு பழகிடுச்சு.us வந்தபிறகு அமைதியான பாப்பா வா மாறிட்டேன்.

மேலும் சில பதிவுகள்